|
Tamil Bloggers Database |
|
Enter Record |
|
Saturday, March 06, 2004
அடுத்து வருபவர் யார் என்று நீங்கள் எல்லோரும் ஆவலாகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள். (அல்லது நானாவது அப்படி நினைத்துக்கொள்கிறேன் )
இது நாள்வரை வலைப்பூவில் நான் மட்டுமே நண்பர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் வலைபதிவதற்கு உதவி வந்தேன். இனிமேல் என்னுடன் சேர்ந்து உங்களைப் 'படுத்த' இன்னுமொரு நண்பர் முன்வந்திருக்கிறார். அவரை இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். அறிமுகமே தேவையில்லாதவர் அவர். இவருடைய வலைப்பதிவுகள் உலகமெங்கும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் (Read France, think wireless) தெரிவிக்கின்றன.
வலைப்பதிவுகளை ஆரம்பித்த போது யாரோ ஒருவராக உள்ளே வந்த இவர் 'யாரோ? இவர் யாரோ?' என்று மக்கள் விசாரிக்கும் அளவு பிரபலமாகியிருக்கிறார். வலைப்பதிவுகள் பற்றி இணைய இதழ்களில் எழுதுகிறார். தமிழ் வலைப்பதிவுகளுக்காக தொழில்நுட்பரீதியான சோதனைகளை மேற்கொள்ளுகிறார். தமிழ் வலைப்பதிவுகள் போகவேண்டிய தூரம் நிறைய இருந்தாலும், அதை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வலர்களுள் இவரும் முக்கியமானவர். ஆர்வம் ஒன்றே இவருடைய சொத்து. 'சந்திரமண்டலத்துக்குப்போனாலும் தனக்கு உதவி செய்யுறதுக்கு ரெண்டு பேரு இருப்பாங்க' என்று சொல்லும் இவர், புதிதாகத் தமிழ் வலைபதிய வருபவர்களுக்கு ஓடோடி வந்து உதவுபவர்.
என்ன? கேக்கலை! கொஞ்சம் சத்தமாப் பேசுங்க.
ஓஓஓஓஓ....
இல்ல்லை..... நீங்க எழுதித் தந்ததைத் தானே இங்க பேசிட்டு இருக்கேன்?
என்னது?
நீங்க எழுதித் தந்ததுன்னு பொதுவில சொல்லிக்கக்கூடாதா? மன்னிச்சுக்கோங்க. வருங்கால போக்குவரத்துத் துறை அமைச்சரின் புகழில் களங்கமேற்படுத்துவது என்னுடைய நோக்கமல்ல. மன்னிச்சுக்கோங்க அண்ணாச்சி.
நண்பர்களே, இதோ காசி அவர்களே உங்களுடன் பேச வருகிறார்.
<கோஷம்>
அண்ணன் காசி வாழ்க! தலைவர் காசி வாழ்க! வருங்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாழ்க. வருங்காலப் பிரதமர் வாழ்க.
அண்ணன் காசி
New Co-moderator for Valaippoo