<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, December 27, 2003

எல்லாரும் ஒரு ஓ போடுங்க...!

 தம்பி மீனாக்ஸ் உன்னை மறந்திட்டேன்னு நினைக்காதே ! கடைசியா உனக்கு ஒரு அட்வைஸ் தரேன் வயதில் பெரியவன் என்கிற முறையில்.
நான் ஒரு நாள் அவள் விகடனில் வரும் ரொமான்ஸ் ரகசியங்கள் படித்துவிட்டு ஒரு நல்ல மூடில், "ஜிங்கினாகச் ஜிக்கி ஜிக்கி ஜிங்கினாக்காதான்" என்னு பாடிக்கிட்டே சமையல் செய்துக்கொண்டிருந்த என் மனைவியிடம் "உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா ? என்று உன்னை மாதிரி செல்லமா கேட்டேன். என்னை ஒரு மாதிரியா பார்வை பார்த்துவிட்டு "உம்..தண்டச்சோறு" என்றாள். இது நடந்தது கல்யாணம் ஆகி பல வருடங்களுக்குப் பின்னால் தான். ஆனாலும் எதற்க்கும் தயாராக இரு.முக்கியமாக "அழகி" படம் உன் மனைவியுடன் பார்க்காதே. சீ சீ அது என்ன படமா? பொட்டை பசங்களோடு விளையடிண்டு கர்மம் என்று தவிர்த்துவிடு.அப்படி பார்க்க நேர்ந்தால், ரசித்துப் பார்காதே ! நீ பார்த்தீபன் பார்வையிலேயே படத்தை பார்பாய், அவுங்களோ தெய்வயானி பக்கம். ஏன் வீண் விவாதம். அப்புறம் தனியாக மொட்டை மாடியில் ஜாகை !

விடைப்பெறும் நேரம் வந்து விட்டது. அனைவருக்கும் நன்றி ! நான் அறியாமல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

இனி ஒரு "ஓ" போடுங்க பார்க்கலாம்.

இணைத்தளத்தில் வலைப்பூக்கள் செழிக்க உழைத்த அனைவருக்கும் ஒரு "ஓ" போடுங்க

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பல பூத்தொடுப்பவர்களை ஒருங்கிணைத்த மதி அவர்களுக்கு ஒரு "ஓ" போடுங்க

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

முரசுவின் சகோரன் எ-கலப்பையுக்கும், கள்ளத்தனமாக அலுவகத்திலும் தமிழை செலுத்தின சுரதாவுக்கும் ஒரு "ஓ" போடுங்க

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மறுமொழியில் பங்கேற்று எனக்கு உற்சாகமளித்த உங்களுக்கு ஒரு "ஓ" போடுக்குங்க.

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

நன்றி மதி ! அடையாளம் தெரியாத என்னை மேடையேற்றி ஊக்கமளித்தமைக்கு....

சரி போயிட்டு வரந்தோன் வீட்ல மதாம்,மிஸ்சியே எல்லார்கும் போன்ழுர் சொல்லுதோன்Merci beaucoup ! Au Revoir et A bientot ! !

ரவியா?? : ஏன் ரவியா !! "ஆத்தா ! நான் பாஸாயிட்டேன்" என்னு தலைப்பு போட்டிருக்கிலாமில்ல!

ரவியா!! : சீ ! சும்மா கிடடா ! இன்னும் ரிசல்டே வரல்ல !பத்த வைச்சீட்டிங்களே உஷா ! பாகம் (2)

 
பாஸ்டன் பாலாஜி "கம்பில்லா காசி" - சாரி ! "கங்கையில்லா காசி" என்று ஒரு கதையெழுதிக்கொண்டிருக்கிறார். நன்றக படிக்கலாம். கம்பிமேல் (மறுபடியும் கம்பியா ? ) நடப்பது போன்ற கதைக் கருவை ( ஜெயகாந்தனின் "பாரிஸுக்கு போ" வின் தாக்கமோ? ) தன் நகைச்சுவை திறமையால் சமாளிக்கிறார். பன்னிரண்டாம் அத்தியாயத்தில் நம்ம காசியை (கம்பியில்லா புகழ் ) பார்த்து கண்ணடிக்கிறார்.

பு.ரா. உஷா (1) இப்ப பெரிய ஆளாயிடாங்களாம் மதி சொல்லுறாங்க. வி.மு.உஷா (2) திண்ணையிலும் மரத்தடியிலும் விளையாடிவிட்டு இப்ப ஆனந்த விகடனில் வசிக்கிறார்களாம். ஆனாலும் என்னோ அடக்கம். வீட்டில் கடைக்குட்டியை அண்ணன்மார்கள் சீண்டுகிறமாதிரி மரதடியிலேயோ காப்பிகடையிலேயோ
இவர்தான் scape goat இல்லை இல்லை BUTT (of one's joke) . அவரை சும்மா உடுங்கப்பா ! டாக்டர் கோபிச்சுக்க போறாரு !

ஆண்பிள்ளையாக மாறி எங்கே என் காதலினு அலையும் போது Sudden Fiction என்று ஒரு புது முயற்சி செய்து ஜெயிச்சிட்டாங்கப்பா. ஆனால் பாதிக் கதையில் ( 851 வார்த்தை) "அந்த சத்யா" என்று எழுதி ஒரு க்ளு (Clue) கொடுக்கிறாங்க. வேண்டும் என்றேவா உஷா ? அல்லது தவறு நடந்து விட்டதா உஷா ? கராமா மாமிக்களாம் டிமிக்கி கொடுக்கும் நீங்கள் மிக மிக நன்றாறாறாறாக வருவீர்கள் உஷா. அப்பொழுது மீனா நவநீதகிருஷ்ணன் மாதிரி எங்களை மறந்துவிடாதீர்கள் உஷா!
ஆமா நீங்க கடைசியில் C.A. பண்ணீங்களா ?

1)புஜைரா ராமச்சந்திர
2) விடா முற்ச்சி

மற்றவர்கள் பற்றி பேசவில்லை என்று கோபிக்கவேண்டாம். நான் மூன்று மாதத்திற்க்கு முன்பு மாலன் திசைகளில் வலைப்பூகள் பற்றி எழுதுவதிற்க்கு முன்பு இணையக்குழுக்கள் பக்கம் கூட போனதில்லை. ஆகையால் மன்னிக்கவும்.

நான் சொன்னதை செய் ! நான் செய்வதை செய்யாதே ! ( Do what I say Not What I do )என்று இங்கு சொல்வார்கள். மாலன் வலையைப் பற்றி பேசி அனைவரையும் ஊக்குவித்துவிட்டு அவர் பதிவை பராமரிக்கவில்லை. நேரமில்லையோ ? ஒரே திசையில் பார்க்காதீர்கள் மாலன் சார்.


எங்க ஊருக் காரு நாகரத்தினம் கிருஷ்ணா திண்ணையில் நிறைய எழுதுகிறார். இங்கு வாழும் தமிழர் கதைகளும் எழுத்துகிறார்.அவருடய அன்புள்ள அப்பா கதையை படித்து பாருங்கள்.


தலைவர் நா.கண்ணன் பற்றி பேச எனக்கு அருகதையில்லை. வைகைக்கரைக காற்றே !! ஆஹா என்ன கற்பனை..எழுத்தாள்மை !! And he is so Humble !!!


துரியான் சுபாவை நான் காப்பியட்டிக்கலாம். ஐரோப்பிய வாழ்கையைப் பற்றி எப்படி எழுதுவதென்று. சுபா மலேஷியாவில் ( இருமுறை சென்றிருகிறேன்) எப்படி "லா" போட்டு பேசுவார்களொ அதேப் போல் புதுச்சேரியில் "தோன்" (donc) போட்டு பேசுவார்கள்.போன்ஜுர்"தோன்" !(1) சா வா ?(2) இன்னா"தோன்" எங்க போயிட்டு வர ? "தமுழ்"(3) சின்மாவிக்குதான்"தோன்". "சன்க்கிழ்மை"(4) யாச்ச ஒரே "நெர்சல்"(5) லாருக்குமே"தோன்". ஆமா வேற இன்னாச்செய்றது(6)"தோன்" இன்னிக்குதான் நான் லீபுரு(7)


1) Bonjour (good morning)
2) (Comment) ca va ( how do you do)
3) தமிழ்
4) சனிக்கிழமை
5) நேரிச்சல்
6) என்ன செய்வது
7) libre (Free)


உங்கள் ரவியா

பத்த வைச்சீட்டிங்களே உஷா ! (பாகம் 1)

 
இரண்டு நாட்களுக்கு முன்பு ஷம்பாங் ஒரு கிளாஸ் அதிகமாகவிட்டது. நல்ல விருந்து வேறு. சிறிது மிதந்துக் கொண்டே ஆஹா கண்ணதாசன் ரேன்ஞ்க்கு கவிதை வரும் என்றெண்ணினேன். கவிதை வரவில்லை. கோபம் தான் வந்தது.

ஆம், நான் கோபமாய் இருக்கிறேன். ரொம்ப கோபமாய் இருக்கிறேன். நான் மதியின் மேல் ரொம்ப கோபமாய் இருக்கிறேன். மதி மட்டுமில்ல. எனக்கு முன்ன வந்த எல்லா வாத்தியார் மேலும் ரோம்ப கோபமாய் இருக்கிறேன். எல்லரும் சேர்ந்து என்னை பழிவாங்கி விட்டார்கள்.
ஆமாம், தேரியாமல் தான் கேட்கிறேன்.யாரவது ஒருத்தவராது சொன்னீங்களா ஆமாம் !சொன்னீங்களா வாத்தியார் வேலை இவ்வளவு கஷ்டம் என்று. சொல்லுங்கப்பா ! ஏண்டியம்மா ! உன்னையும்தான் ! காலையில் எழுந்ததும் கை வலிக்க எ-கலப்பையை சுமக்கனும் அல்லது சுரதாவை கெஞ்சனும். ஏன்னா எழுதறது என்னு யோசிக்கனும். வீட்ல திட்டு வாங்கனும் ( ஒர்தினாத்தர் (Computer )லையே பூந்துக்கிட்ருக்கேயே! அதையே கட்டிகிறது தானே). இருட்ல தூக்கம் வராம படுக்கையில் புரளும் போது எழுத யோசிச்சி வைச்சது எல்லாம் காலையில் மறந்து போகும்முனு யாராவது சொன்னீங்களா ? சொன்னீங்களா ? முக்கியமா இந்த வாரத்தில் தான் மற்ற வலைப்பூக்களுக்கு போய் படிக்க நேரமிருக்காதுனாச்சம் சொல்லியிருக்கனும்.
பல்லு விளக்காமக் கூட இருக்கலாம் பத்ரி படிக்காமல் இருக்கலாமா?
எல்லரும் சேர்ந்து என்னை ஏமற்றி விட்டீங்க !போங்க போங்க எங்க போயிட போகிடப்போறிங்க !

பதிரியின் எண்ணங்கள் படிக்கும்போது எனக்கு கண்கலங்கி விடும். அவர் என்ன மெகா சீரியலா எழுதுராரு என்று கேட்கிறீர்களா? படிக்கும் போது என் அம்மா ஞாபகம் வந்துவிடும். என் சிறு வயதில் மூள் மீன் சாப்பிட தயங்கும் போது என் அம்மா அழகாக மீனை முள்ளிலாமல் ஆய்ந்து என் தட்டில் வைப்பார்கள். அதே போல் எல்ல விஷயங்களையும் அலசுகிறார் தெளிவாக, சுருக்கமாக. மும்தாஜ் உள்பட ( ஒரு படம் போட்டிருக்க கூடாதோப்பா ?) சமுக சீர்வுக்காக ஒரு நல்ல இந்தியனாக பெட்டிசன் போடுகிறார். ஒரு பாசமுள்ள தந்தையாக பாதி கச்சேரியில் வெளியே வந்து விடுகிரார். Trop beau pour etre vrai ( Too beautifull to be real) என்று பிரன்ஜில் சொல்லுவார்கள். அவரை குளோன் செய்து தமிழ்நாட்டில் நிறைய நடமாட விடுங்கப்பா !

காசியின் பேர்ல எங்க வீட்டுக்காரம்மா ரொம்ப கோபமாயிருக்காங்க. பரி அவரை பார்த்தீங்கனா கொஞ்சம் நாளைக்கு பிரான்ஸ் பக்கம் தலையை காட்ட வேணாம்னு சொல்லுங்க ! கம்பியுடன் ஒரு இணைப்பு கொடுக்கலாம் என்று எங்கள் வீட்டு நிதி அமைச்சரிடம் பேசினேன்.
'அது ஒன்னு தான் கொறைச்சல். கண்ட இடத்தில் பொத்தல் (ஒட்டை) போடாதே !' என்று சொல்லி வாயை மூடிடாங்க. சும்ம இருந்த சங்கை ஊதித் கெடுத்தா மாதிரி கம்பி இல்லா தொடர்பை எனக்கே புரியரமாதிரி எழுதி என்னை தூண்டிவிட்டார் மனுஷன். கம்பி இல்லா தொடர்பா? அந்த பாழாய் போன மனுஷன் தொடர்பையே வெட்டறன் பாருன்னு காத்திகிட்டு இருக்காங்க என் சம்சாரம். பாத்து காசி!

வெங்கட் எப்ப பார்டி ? ஐயா இண்டிப்ளாக் முதல் பரிசு வாங்கியிருக்கிறார். டெக்னிக்கலா புரியும் படி பேசுகிறார். பொது விஷயக்களும் பேசுகிறார். வாலைப்பூக்களை வாழ வைக்க பாடுபட்ட பல ஜீவன்களில் இவர் ஒருவர்.

முறுக்கு வியாபாரி வினொபா வை ரொம்ப ரசித்தேன். எம்மர்ஜன்ஸி( அவசரநிலைமையா?) காலத்தில் துக்ளக் பத்திரிகையில் இம்மாதிரி கதைகள் வரும். அவர் எடுக்கும் போட்டோக்களில் நிறைய விஷயங்களிருக்கிறது.

ஹரிப்ரசன்னா வின் நிழல் பட்டால் நான் கூட எழுத துவக்கி விடுவேன் போலிருக்கிறது. கவிதை விட்டால் கதை. பெரும்பாலும் இணையில் பதிக்கப்பட்டது. தேவனை ரசிப்பதால் அவர் மேல் மதிப்பு கூடுகிறது. ஆனால் தேவன் கட்டுரைகளை தான் பிடிக்குமாம். எனக்கு தேவனின் துப்பறியும் சாம்பு பிடிக்கும். A Detective in spite of Himself என்று சொல்லலாம். பல வகை, பனாட்டு நகைச்சுவை பற்றி ஒரு நாள் பேச வேண்டும்.

சாம்பு என்றவுடன் ஜெயமோகன் திண்ணையில் எழுதின நான்காவது கொலை !!! என்ற கதை ஞாபகம் (நாபகமா?) வருகிறது. ஜெயமோகன் என்றவுடன் பயந்து விடாதீர்கள்.
அதே கலைஞரின் "கற்பூர" ஜெயமோகன் தான். ஆனால் இக் கதையில் விஷ்ணுபுர ஜெயமோகனை பார்க்க மாட்டீர்கள். தன் பணியை விட்டு விலகி மற்றவர்கள் பாணியில் Irony or Parady செய்து எழுதினது. A drill of (writing) Style என்பது பொறுத்தம்.
இக் கதையின் விஷேசம் என்னவென்றால் பல துப்பறியும் பாத்திரங்கள் ( கணேஷ்-வசந்த், சாம்பு, சங்கர்லால், பெரி மேசன்,மற்றும் பல..). முக்கியமாக ஷெர்லக் ஹோம்ஸ்- வாட்சன் .

மாதிரிக்கு இதோ !

வாட்சன் தரையில் சிந்திக்கிடந்த அந்த நீரடையாளத்தை மீண்டும் கூர்ந்து பார்த்து ," சோடியம் குளோரைட் கலந்திருப்பது சுவையில் இருந்து தெரிகிறது . அமிலத்தன்மை சிறிது இருக்கலாம் . விஷத் திராவகமாக இருக்க நியாயமில்லை மிஸ்டர் ஹோம்ஸ் .காரணம் எறும்புகள் மொய்க்கின்றன. "
"மேலும் நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்கள் . " என்று ஹோம்ஸ் புகை விட்டார் " மிஸ்டர் வாட்சன் இதை கவனியுங்கள் ,அது ஒரு மிருகத்தின் சிறுநீர் ."
"அடக்கடவுளே , சரிதான் " என்றார் வாட்சன் " எப்படி கண்டுபிடித்தீர்கள் ஹோம்ஸ் ?"

"ஆரம்பப்பாடம் மிஸ்டர் வாட்சன், இந்த வராண்டா இக்கட்டிடத்தின் வடக்கு எல்லை . சில குறிப்பிட்ட வனமிருகங்கள் தங்கள் எல்லையை இவ்வாறு சிறு நீர் மூலம் அடையாளப்படுத்துவதுண்டு . "(பாஸ்கர்வீல் நாய்கள் இல்லை).

சரி தலைப்பு சேதிக்கு வரலாமா?

அடுத்த பகுதியில்...

உங்கள் ரவியா

Friday, December 26, 2003

குமுதம் ஸ்பெசல்

 
குமுதம் வாசகர்களே ! கீழ் காணும் படத்தில் யார் உண்மையான பிராமணப் பிள்ளையாண்டான் என்று சொல்ல முடியுமா?

விடை : 39 பக்கத்து மூலையில்....
இப் படம் ஒரு மாறுவேட விழாவில் (பார்ட்டி ! போட்டியல்ல !!) எடுத்தது.
என் அன்பார்ந்த குமுதம் வாசகர்களே ! இப் படத்தில் நான் எங்கு இருக்கீறேன் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.கண்டுப்பிடித்து விட்டீர்களா? சபாஷ்!! உங்கள் அபிமான சிம்ரனின் தொப்புள் போஸ்டர் உங்களுக்கு விரைவு தபாலில் நாளைக்கே !

ஹும் ! பொழச்சு போங்க உஷா !

 
இரண்டு நாளாக நல்ல சாப்பாடு. நேரமில்லை. அவ்வப்பொழுது பின்னுட்டதில் தலையை காட்டினதுடன் சரி - விருந்தினர்களை ஏமாற்றிவிட்டு.

நல்ல உண்ட மயக்கத்திலும் ( ஏய்! ஏன் பொய் சொல்லுர ! உண்ட மயக்கம் மட்டும் தானா) ஒரு சீரியஸான தபால் அனுப்பினேன். ஆனால் ஒரு விளக்கம். அந்த குறிப்பேடு ஆனந்த ரங்க பிள்ளையுடயது அல்ல. அவருடைய பேரனுடையது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், அவர் எழுதின காலம் (1794-1796)ஆங்கிலேயர்கள் புதுச்சேரியயை ஆக்கிரமித்திருந்த நேரம். பிரஞ்சுகாரர்களுக்கு அதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அத் தபாலில் குறிப்பிட மறந்து விட்டேன். இன்றே நிவர்த்தி செய்கிறேன். அப்புத்தகம் விற்கும் விலாசத்தையும் சேர்த்துள்ளேன். ( எனக்கு ஒன்னும் ராயல்டி கிடையாதுபா....மதி கேட்டாங்களேனு தான் சொல்லுரன்)

இன்று காலையில் எழுந்து நம்ம உஷா பத்தி பேசலாமா என்று யோசித்தக்கொண்டே கணனியை (ண னி ணி சரியான இடத்தில் போட்டுக்கொள்ளவும் ) எரித்தால் (Allumer = to burn or kindle in French- பிரஞ்சில் "ஆன்" செய்வதற்க்கு எரி என்று சொல்லுவார்கள் switch off the light க்கு விளக்கை அணை என்று தான் சொல்லுவார்கள் தமிழில் போல) நான் இங்கு போட்ட படம் அனைத்தும் காலி. என் போட்டோக்களை வைக்க இடம் கொடுத்திருந்த வீட்டுக்காரர் பழிவாங்கி விட்டார். வீட்டை சுத்தம் பண்ணுக்கிறராம்.
அட பாவி என்று ஏசிக்கொண்டு (ஓசியல இடம் கொடுத்தானில்ல) வேறு வீடு தேடி கண்டுப்பிடித்து உள்புகுந்து குடியேர்வதிர்க்குள் நேரம் ஆகி விட்டது. மற்ற பொருள்களை கொண்டு வந்து இன்னும் சேர்க்கவில்லை. என் கெட்ட நேரமோ ? உஷா வின் நல்ல நேரமோ ?ஹும் ! பொழச்சு போங்க உஷா ! ...

விரைவில் தொடரும்...Sweeter far than heavenly ambrosia is the porridge in which one's child has dabbled with its little handஇந்த படம் எங்கள் வீட்டு சலொனில் (ஹால்) மாட்டியுள்ளேன். புதிதாக வீட்டுக்கு வருபவர்கள் இப் படத்தைப் பார்த்து அடிக்கும் கமண்ட்டை வைத்து அவர்கள் ரசிப்புணர்வை புரிந்துக்கொள்ளலாம்.
தம்பி ப.பாலாஜி ! இப் படம் டேவிட் ஹமில்டனுக்கு (David Hamilton) ஒரு clin d'oeil என்று சொல்லலாம்.

ஐய்யெய்யோ ! மேல நான் இங்கிலீஸ்ல எழுதினதை திருவள்ளுவர் 2000 வருஷத்திற்க்கு முன்பே

அமிழ்தினும் ஆற்ற இனிதேசம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்


என்னு எழுதிட்டாராம். அதை அப்படியே என் மாதிரியே நம்ம ராஜாஜி இங்கிலீஸ்ல எழுதி ஒரு புக் வுட்டுட்டாராம்.

என்ன அநியாயமப்பா இது !

உங்கள் ரவியாThursday, December 25, 2003

தஸ்திரம்

 
சரியாக 290 வருடங்களுக்கு முன்னால்...

ஆனந்த ளூ-- மார்கழி மீ யச உ-- குருவாரம்: சதஎளகூயச ஆண்டு திசேம்புறு மீ-- உரு உ--

இந்தனாள் அதிகாலமே யெழுந்திருந்து, ஸ்ரீரங்கத்துக்கு போறவர்களை பயணப்படுத்தி யனுப்பிவிட்டு, னாம் வீடு வந்துசேரந்தோம். யிதன்றியே யின்றையே தினம் யிங்கிலீசுலகாறர்களுக்கு கிசுமுசு பண்டிகையானபடியினால் கற்னால் நிக்சன் வீட்டுக்குபோய் சந்திக்கும்படிக்கு பழையது சாப்பிட்டுபோட்டு, மேற்படி கற்னால் நிக்சன் வீட்டுக்குபோய் யெலுபிச்ச்சம்பழம் குடுத்து கண்டு சந்தித்துபோட்டு, வீட்டுக்கு வந்துவிட்டோம். அரியாகுப்பத்திலிருந்த றிசுமட்டு கோட்டைக்குள்ளே வந்துவிட்டு, உள்ளேயிருந்த பொம்பாய் றிசுமட்டு வெளியே காட்டுமேட்டில் யிறங்கி யிருக்குது. பண்டிகையான்படியினாலே பீரங்கி வேட்டு விஸ்தாரமாய் வழங்கினார்கள்.தினசரி நடைப்பெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது அடிப்படையில் தோன்றியது இந்த நாட்குறிப்புகளின் பண்பு. இத்தகையப் புதுவகை உரைநடை அமைப்பைத் தோற்றுவிக்கும் முயற்ச்சியில் பிரேஞ்சுக்காரர்களுடன் நெருங்கிப் பழகிய சில தமிழர்கள் ஈடுப்பட்டு இருந்துள்ளனர்.
அந்த காலத்தில் நாட்குறிப்பினை அவர்கள் தினசரி தஸ்திரம் என்று அழைக்கின்றனர்.

ஆனந்த ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி நமக்கு தெரியும். ஆனால் மேற்க்கண்டது முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு ( 1794-1796). இவர் ஆனந்த ரங்கப்பிள்ளையின் பேரர்.
அவர் எழுதின காலம் (1794-1796)ஆங்கிலேயர்கள் புதுச்சேரியயை ஆக்கிரமித்திருந்த நேரமானதால் பிரஞ்சுகாரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சரியாக 290 வருடங்களுக்கு முன்னால்...

குறியீட்டு விளக்கம்.

ளூ-- = வருடம்
மீ = மாதம்
உ-- = தேதி

சத = 1000
எ = 7
ள = 100
கூ = 9
ய = 10
ச = 4
சதஎளகூயச = 1794

உ = 2
ரு = 5

----
திசேம்புறு = December

யிங்கிலீசுலகாறர் = Englishmen
கிசுமுசு = Christmas
கற்னால் = Colonel
றிசுமட்டு = Regiment
பொம்பாய் = BombayAuthor : Jeyaseela Stephen
Publishers :
Institute for Indo-European Studies
Annamalai Building, 1 st Floor
49, Selvaraju Chettiar Street
Vaithikkupam, Pondicherry - 605 012

விற்பனை :

சதர்ன் புக் ஹவுஸ்
40-ஏ நீல்ராஜ்ப்பய்யர் வீதி
புதுச்சேரி - 605 001

பிரஜன் புக் செல்லர்ஸ்
45, செல்வராஜி செட்டியார் தெரு
வைத்திக்குப்பம், புதுச்சேரி 605 012பாண்டிச்சேரியிலிருந்து வெளி வரும் "த்ரே துனியோன்" மாத பத்திரிக்கை
நான் ரசித்து எடுத்த எனக்கு பிடித்தமான படங்களில் இது ஒன்று.


Wednesday, December 24, 2003

பாண்டிச்சேரி சமையல்

 
மேசை போட்டாச்சி ! சாப்பிடலாமா ?பாண்டிச்சேரி சமையலே அலாதியானது. பிரஞ்சு சுவையும் நமது மண்ணின் சுவையும் கலந்து, சில புதிய சுவைகளும், சில புதிய உணவு வகைகளும் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. மேலும், பல பாண்டிச்சேரியர்கள் பிரஞ்சு இந்தோ-சைனாவிலிருந்து (தற்போதய வியட்நாம்) போர் முன்னிட்டு தாய் நாடு திரும்பினவர்கள். பலலாண்டு காலம் இந்தோ-சைனா வில் இருந்ததால் அவர்கள் சுவை சிறிது மாறுப்பட்டிருக்கலாம்.
ஆனால் உணவு விடுதிகளில் இந்த உண்மையான பாண்டிச்சேரி சமையல் சுவைக்க முடியாது.
பாண்டிச்சேரி ஆளை யாரவது புடிங்க

பாண்டிச்சேரி சமையலில் முக்கியமாக காரம் குறைவாக இருக்கும். காரம் குறைவாக இருந்தால் தான் சுவைக்க முடியும். இறச்சிகளின் தரம் புரியும். தரக் குறைவான இறச்சிகளை காரம் போட்டு சமைத்து ஏமாற்றிவிடலாம். ( சாரயக் கடையில் மாதிரி).

வரமிளகாய் அசாது என்பதில் 'அசாது' என்றால் எனக்கு அர்த்தம் தேரியாது. குர்மா, விந்தாலி(விந்தாலூ) போல் இது ஒரு வகை குழம்பு. முன் நாள் வைத்த புளிக் கொழம்பை (பரி க்கு ! நேத்து வெச்ச மீன் கொழம்பு மாதிரி) காலையில் இட்லியுடன் சாப்பிடவதுப் போல், ரொட்டியில் துவைத்து சாப்பிடலாம்.

ஒரிஜனல் பாண்டிச்சேரி ரொட்டி (பிரஞ்சு ரோல் ரொட்டி) சாப்பிட்டிருக்கீர்களா ?
அடுத்த முறைச் செல்லும் போது கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். ! ! ! (காசு கொடுத்துத் தான்).


வரமிளகாய் அசாது

தேவையான பொருள்கள் :

ஆட்டுக்கறி - 1/2 கிலோ
வேங்காயம் - 1 கப்
எண்ணெய் - 100 கிராம்
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் (கீறியது) - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 1 துண்டு
பெருஞ் சீரகம் - 1 சிட்டிகை
இஞ்ஞி (தோல் நீக்கி நசுக்கினது) - 1 துண்டு
தேங்காய் (1) - 1 மூடி
உப்பு - தேவைக்கேற்ப
வரமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சப் பழம் - 1 மூடி
மல்லித்தழை - சிறிது
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

(1) தேங்காய் முதலில் பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும்.
இரண்டாம் முறை பிழிவது இரண்டாம் பால் என்பார்கள்.படம் ஒன்னும் போடல்ல . என் Scanner (தமிழ்ல என்னாபா காசி?) ஆங் "ஒளி உணரியா?" என் ஒளி உணரி வருட மாட்டேங்கிறது என்றால் நானா பொறுப்பு ?

செய்முறை :

முதலில் கறியை கழுவி வைக்கவும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பெருஞ் சீரகம் (தட்டி போடவும்) வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக வடக்கவும். பாதி வதங்கியவுடன் வரமிளகாய்த்தூள், மஞள் தூள், உப்பு, கறி யாவும் போட்டு கிண்டி தண்ணீர், தேங்காய் இரண்டாம் பால் ஊற்றி மூடி வைக்கவும். குக்கரில் 3 சத்தம் (கூவுனோன பா) வந்ததும் இறக்கி வெங்காயத்தை போட்டு கடைந்து விட்டு, சுண்ட வைத்து ''தளதள'' (மும்தாஜ் மாதிரி) என்ற பதத்தில்லானதும் தேங்காய்ப் பால் ஊற்றி எலிமிச்சப் பழம் பிழிந்து, மல்லித்தழை போட்டு கொதித்ததும் இறக்கவும்.

பின் குறிப்பு : இது சாதம், இட்லி, ரோட்டிக்கு ஏற்றது. தேங்காய் பால் சோறு நெய் சோறு போன்றவற்றுக்கும் கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


நன்றி : திருமதி அமலோற்பவ மரி டி’சாமி
பாண்டிச்சேரி.

இவர்கள் உல்லாசம் மற்றும் விசில் பட இயக்கினர்களான ஜெடி-ஜெரி இரட்டையர்களில் ஒருவரான ஜேடி அவர்களின் தாயாராவர். அவர்கள் எழுதின புத்தகப் பதிப்பாளர் விலாசத்தை பிறகு தருகிறேன்.

(என்கேடி வைச்ச ? அந்த புஸ்தகத்த ? --ஆமா, கண்ட எடத்ல வச்சுட்டு என்ன கேளு! சே! உஷா ஊட்டுக்காரரோட மோசம்...எனக்கு வேற வேல இருக்கு.. ஹும் !ஆள பாரு)

ஆங் ! இதோ இருக்கு :

மதி நிலையம்
பிருந்தாவன் அபார்ட்மெண்ட்ஸ்,
4 தணிகாசலம் சாலை, தி. நகர்,
சென்னை 600017
mathinilayam@eth.net

உங்கள் ரவியா

மகளே வாழ்க !

 


பாட்டைக் கேட்டாலே என்னென்மோ ஞாபகமா? எங்களுக்கு சொல்லுவிங்களா மதி ?"

என்னடா தலைப்புக்கும் படத்துக்கும் சம்மந்தமே இல்லையே என்கிறீர்களா ? ஏ-கலப்பையை பிடித்த திமிரில் நகல் எடுக்காமல் நேராக blogger ல் தட்டினேன் (உள்ளுடரது பா). 30 நிமிட வேலை காலி. நம்ம ஹெட் மிஸ்டரஸ் அம்மாகிட்ட சொல்லியிருக்கேன் பாப்போம்.

ஏ-கலப்பை என்றதுடன் அலேக்ஸ் ஞாபகம் வருது. பாவம் முதல் தடவையா டவுன் காரன் கலப்பையை எடுத்து மாதிரி அவதிப்படுக்றார். Eiffel Tower படம் போட்ட பின்னுட்டத்தில் ( அதாங்க மறுமொழி) பாருங்க.)


ஒரு அழகான கவிதை. என்னுது இல்ல..காப்பி அடிச்சதுத்தான். அந்த கவிதையை சொல்லிட்டு செய்தி வாசிப்பவர்கள் மாதிரி by the way சொல்லி நம்ம சந்திரவதனா க்கு வரலாம் என்றிருந்தேன். ஏழு வலைப்பூக்கள் எப்படித்தான் பராமரிக்கிறார்களோ ?

(உங்கள் பேரக் குழந்தை நல்ல வடிவு (புரியுதா உஷா) சந்திரா.)

அது மட்டும்மிலாமல் இந்த இடத்தில் கதைக் கதையாய் கதைக்கிறார். கனேஸ் மாமா வுடன் பருத்தித்துறை தோசைக்கு சாப்பிடாமலே நான் அடிமை. அவ்வளவு ருசியா சந்திரவதனா ?
சாப்பிட்டவுடன் சூடாக ஒரு 'றீ' குடித்தால் எப்படியிருக்கும்?
மதியுடன் சூள் கொட்டுன்ன மாதிரி இவர்க்கதைகளில் சப்பு (slurp slurp )கொட்டலாம்.

அவரின் பொட்டு கிளாஸ் கதையை படித்திருக்கிறீர்களா ? என்னை மிகவும் பாதித்த கதை. இலங்கையிலும் சாதி வேற்றுமையிருக்கும் என்று எனக்கு தேரியாது. அருமையான் கதை ! சினிமா இயக்கினர்கள் இரண்டு விரல்களை lens போல் பாவித்து angle பார்ப்பார்களே அதுப்போல் திரைப்பட (குறும் படம்) மாகவே ( கிரேன் ஷாட் உள்பட) படித்தேன். இல்லை பார்த்தேன்.

விமர்சன பகுதியிலும் எழுதியுள்ளேன். கதையை படித்து (பார்த்து) விட்டு படியுங்கள்.

கடைசி ஷாட்பா..

எல்லாம் ரெடியா பி.சி ?( நம்ம P.C SriRam தான்)

இந்த கிளாஸை Close-up ல காட்டி அப்படியே Blur அல்லது Fade out பண்ணி Zoom out பண்ணிங்கனா A film by Raviaa போட்டு அப்படியே ..Final Credits போட்டுலாம்...

ரவியா?? : மூலக் கதை சந்திரவதனா என்று கட்டாயம் போடனுமா ரவியா!! ?

(இன்னுமா தூக்கம்...ஏந்திரி ஏந்திரி... சரியான் துங்கு மூஞ்சி)


உங்கள் ரவியா


Tuesday, December 23, 2003

முத்தம்

 


பிரான்ஸில் இருந்துக்கிட்டு கன்னத்தில் முத்தமிடுற மாதிரி படம் போட நான் என்ன மணிரத்தினமா??
இந்த சிலையை செதுக்கினவர் RODIN. அவருடைய Thinker சிலை அனைவருக்கும் தேரியும். பாரிஸ் வந்தால் கட்டாயம் RODIN MUSIUM விசிட் செய்யுங்க!( Moulin Rouge அப்புறம் போகலாம்.)
ஆமா ! Rodin பற்றி தெரியாவிட்டாக்கூட Moulin Rouge தெரியுமே !Monday, December 22, 2003

THE GIRL IS MINE

 
நேற்று ஆர்வக் கோளாரினால் (எல்லாம் மதி செஞ்ச சதி) அதிக நேரம் கணனியில் செலவிட்டது, என் மனைவியின் அழகான ( உண்மையாத்தான்டீ !) கண்களில் தெரிவதால், இன்று சிறிது அடக்கி வாசிக்கிறேன். இதெல்லாம் நம்ம மீனாக்ஸ்க்கு புரியுனுமே !

Ma petite Priya


இப் படம் நம்ம மீனாக்ஸ் க்காக. இவர் இன்னும் ஒரு பிரம்மசாரியாம் (உண்மைத் தானா மீனாக்ஸ் ? ?) ஆனால் வரவிருக்கும் தன் வருங்கால மனைவியைப் பற்றியும், பிறக்கப் போகும் பிள்ளையைப் பற்றியும் பக்கம் பக்கமாக கவிதைகள் எழுதுகிறார். காதலி வெட்கப்பட்டு ’ கரண்டியால் என் தலையில் செல்லமாய் ஒரு தட்டு.. ’ ம் போது பூரித்துக் கொள்கிரார்.( திருமணமான பின் 'கரண்டி', ' ஒரு தட்டு ' எல்லாம் இருக்கும். அந்த ' செல்லமாய் ' என்ற சொல்லை என்ன செய்வது ?)

அவருக்கு பெண் பிள்ளைத் தான் பிடிக்குமாம்.( தமிழ் நாட்டினர் கவனிக்க). ஆண் பிள்ளை பிறந்தால் ? என்று கேட்டால், ‘எனக்கு பெண் பிள்ளைத் தான் பிடிக்கும் என்பார்.

அவரின் அருமையான கவிதையை அவருடய அனுமதியில்லாமல் கீழே தருகிறேன். கோபிக்க மாடார் என்று நினைக்கிறேன். வலைப்பூவில் இதுத் தான் வசதி. பெயர் சுட்டிக் காட்டி காப்பி அடித்து போட்டால் கோபிக்க மாட்டார்கள். நன்றி பாராட்டுவார்கள்.


என் மகள் குறித்த கனவுகள்இதயத்தில் பூப்பூக்க வைப்பாள் - எந்தன்
கவிதைக்கு அழகான பொருளாக வருவாள்

முதல்பார்வை என்மீதில் மோதும் - அந்த
நேரத்தில் என்னிதயம் சிறகாகிப் பறக்கும்

கைவிரலை பிடித்(து)அவள் சிரிப்பாள் - என்னைப்
பேரின்பக் கடலுக்குள் மூழ்கத்தான் அடிப்பாள்

கையென்னும் தொட்டில்மேல் நாளும் - அவள்
தூங்கிடும் அழகினில் என்னுள்ளம் வாழும்

முயல்குட்டி போல் எந்தன் மார்பில் - அவள்
முன்னாலும் பின்னாலும் தாவிக் குதிப்பாள்

இனிப்புக்கள் நான் வாங்கித் தருவேன் - அதனினும்
இனிப்பான முத்தங்கள் பரிசாகத் தருவாள்

விரல்பிடித்துப் பக்கத்தில் நடப்பாள் - என்னை
விளையாட்டுத் திடலுக்குள் வரச்சொல்லி இழுப்பாள்

கடற்கரையில் மணல்கோட்டை செய்து - தானே
இளவரசி என்கின்ற தோரணையில் அமர்வாள்

கோவிலாய்த் தாயைத் தொழுதிடுவாள் - இந்தத்
தந்தையின் சொல்கேட்டுச் சரியாய் நடப்பாள்

"என் அப்பா"என்கின்ற தலைப்பில் - நாலு
வரியெழுதிக் கவியென்று என்முன்னால் வைப்பாள்

எனைப்பற்றி பொய்நிறைய அதிலே - சொல்லி
ஆனந்தக் கண்ணீரில் என்னிதயம் நனைப்பாள்

சில நேரம் கோபத்தில் முறைப்பாள் - உணவை
வேண்டாமென மறுத்(து)அவள் பரிதவிக்க வைப்பாள்

சமாதானம் செய்திட்ட பின்னால் - எந்தன்
கழுத்தினில் கைச்சுற்றி ஏறிக் களிப்பாள்

தூக்கத்தில் அவள் மெல்ல சிரிப்பாள் - என்னைப்
பற்றித்தான் நினைக்கின்றாள் என்றிதயம் மகிழும்

இதுபோன்ற மகள் ஒருத்தி வேண்டும் - அவளுக்கு
இதுபோன்ற தந்தையாய் நானிருக்க வேண்டும்.!!

பின் குறிப்பு:எனக்குப் பெண்குழந்தையென்றால் ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்.. இன்னும் திருமணமே ஆகாத போது இது என்ன வெட்டிப் பேச்சு என்று சிலர் கூறலாம்.. ஆனாலும், இது போன்ற கனவுகளும் எனக்கு ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்..!! ;-)

இது எப்படி இருக்கு ?

சினிமா படம் பார்க்கும் முன் இவருடய விமர்சனங்கள் படித்துவிட்டுச் செல்லுங்கள். ஏமாற மாட்டீர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம். முதலிரவில் அவர் மனைவி ' எனக்கு ஆண் பிள்ளைகள் தான் பிடிக்கும் அத்தான்! ' என்று ' செல்லமாக ' சொன்னால், ’’ எனக்கும் தான்’’ என்பாரா ?

Title curtsey : Michael Jackson - Thriller Album

உங்கள் ரவியா
புதுச்சேரி மீன் கடையில்...

 
புதுச்சேரி மீன் கடையில்...

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புதுச்சேரி மக்களில் பலர் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் வருடந் தோரம் புதுச்சேரிக்கு விடுமுறைக்கு வருவார்கள். பள்ளிச் செல்லாத வயதில் பிள்ளைகள் வைத்திருப்வர்கள் வருடத்தில் எம் மாதமும் வருவார்கள்.
ஆனால், மற்றவர்கள் ஜூன் கடைசியிலேயோ அல்லது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் புதுச்சேரி வந்து சேர்வார்கள். துணி மற்றும் நகைக் கடைக் காரர்களுக்கு கொண்டாட்டம் தான்.

காலையிலேழுந்து ஒரு ஒரு France Returned ( FR) கடைக்கு போய் காய்க்கறி மற்றும் முக்கியமாக அசைவ உணவு - மீன், இறைச்சி- வாங்கும் போகும் போது ஒரு காட்சி:

ஒருவர் (1) : இந்தாமா ! இந்த மீன் (ஒரு பெரிய மீனை காட்டி) இன்னா விலை ?

மீன்க்காரி : தோ வந்துட்டார்பா, விலை கேக்க. தெ பார் நீ இதயெல்லாம் வாங்க மாட்ட. எங்க சொல்தா (2) அய்யா வருவாரு. இது அவருக்குத் தான். எடத்த காலி பண்ணு!

சட்டைக்காரி (3): த பாரு இது இன்னா வெல?

மீன்க்காரி : மதாமு! (4) அந்த கடையிலெ நீ வாங்கற மாரி இருக்கு. இஙகள்ளாம் பெரிய கைய்ங்க சரக்குதான் இருக்கு. இந்த விலை எல்லாம் உனக்கு கட்டுபடியாகாது.

France Returned : என்னா வள்ளி ! எப்படியிருக்க ?


மீன்க்காரி : அட அண்ண ! எப்பா வந்த? என்க்கு பரித்தி (5) கொண்டாந்தியா ? ஒரு சுத்தி சுத்திட்டு வா. என்கிட்ட வஞ்சனை மீன் இல்ல. அந்த சாண்டால புடிச்சிவக்கிட (பக்கத்து மீன்க்காரி ) வாங்கி வைக்கிறைன். உன்க்கு இல்லாததா! ஊட்ல்ல புள்ள, அக்கா எல்லா சவுக்கியமா? அக்காவை கடைக்கு இட்டாறது தானே! அண்ண! அப்டியே அண்ணியே என்னக்கு நல்ல புடவ ஒனு குடுக் சொல்லு.

France Returned : சரி! ஒரு சுத்தி சுத்திட்டு அப்றம் வரன். ( மனதில்- சரி தான்! அது ஒன்னு தான் குறைச்ச! ஏற்கனவே "வேலைக்காரி இருக்கும் போது நீங்கள் ஏன் மீன் கடைக்குப் போறீங்க" ன்னா. வள்ளிக்கு ஒரு பொடவை குடுனா, அவளோதான்)


உஷா விற்க்காக :

(1) ஒருவர் - இவர் புதுச்சேரியில் வசிப்பவர். ஒரு நடுத்தர குடும்பஸ்தர். கோடை விடுமுறை நாட்களில் தவிர மற்ற நாட்களில் திறமையாக பேரம் பேசுபவர்.

(2) Soldat- Soldier in French - பிரஞ்சு பென்சன் வாங்கிக் கொண்டு நடுத்தர மேலே ஒரளவுக்கு வசதியாக வாழ்பவர்.

(3) Franco-Indian தமிழ் நாட்டில் ரயில்வே காலனிகளில் பார்ப்பீர்களே? அதேப் போல் தான். சென்னை தாமஸ் மவுன்ட் பகுதியிலும் ராயபுரத்திலேயும் "ஆ..பை" என்று சொல்லும் ஜாதி. பலர் ஏழ்மைக் கோட்டுக்கருகில் வாழ்பவர்கள்.

(4) Madame - Madam in English

(5) Barette in French - A sort of broach for hair Style.

P.S: Merci Kumar

ரவியா?? : காவேரிப் போலிருந்த என் கற்பனை வலத்திற்க்கு (sic) நீர்ப் பாய்ச்சின என் நண்பர் குமாருக்கு நன்றி.

ரவியா!! : ஆமா குமாரு, அந்த வள்ளி எப்படியிருப்பா?
- அட பாவி! அவ என்ன அண்ண்னு கூப்பிடறாடா!
- அதனாலேன்ன ?
- டோய்! அடிங்க....

உங்கள் ரவியா

அவளும் நானும்

 
namma veetukkaara ammaa thaan

ஒரு புதுச்சேரிக்காரனின் கவிதை...


நானும் அவளும், உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
திங்களும் குளிரும், கதிரும் ஒளியும், --நானும் அவளும்

மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்,
அம்பும் வில்லும், பாட்டும் உரையும், --நானும் அவளும்

நானும் அவளும், அமிழ்தும் தமிழும்,
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்,-- நானும் அவளும்

அவலும் இடியும், ஆளும் நிழலும்,
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்--நானும் அவளும்

எப்படியிருக்கு நம்ம புதுச்சேரிக்காரனின் கவிதை ? சத்தியமாக நான் அவனில்லை...எல்லாருக்கும் தேரிந்த ஒரு புதுச்சேரிக்காரர். புரட்சி கவியின் தாசன்.
அதாங்க... நம்ம பாரதிதாசன் தான்.

உங்கள் ரவியா

மதி மட்டும் தான் Tour Eiffel படம் போடனுமா??

 


உங்கள் ரவியா

comment allez-vous?

 
வணக்கம் ! வணக்கம் ! எப்படியிருக்கீங்க? யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லுவாங்களே. அப்புறம் மதி மட்டும் என்ன விதி விலக்கா? மூன்று மாசமா வித விதமான திற¨மெயுள்ள வாத்தியார்களை அறிமுகப்படுத்திவிட்டு நாளும் கிழமையுமா பண்டிகை நேரத்தில் போய் என்னை வலிக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்து விட்டார்கள். விதி யாரை விட்டது !ஹூம்.

மதி சொல்லியிருப்பாங்க! நான் பாண்டிச்சேரிக்காரன். பாண்டிச்சேரி என்றதும் அது என்ன நமட்டு சிரிப்பு ? பாண்டிச்சேரியில் 'அது' மட்டும் இல்லை. ஒரிஜினல் பாண்டிச்சேரிக்காரர்கள் "அது"க்காகவே வெளியூரிலிருந்து வருபவர்களைப் பற்றி ஒரு மாதிரி சொல்லுவாங்க. அதனால ஜாக்கிரதை ! என் வாயைக் கிண்டாதீங்க ! ஆமாம் !
சரி, விஷயத்துக்கு வருவோம். எனக்கு தமிழ் ரொம்பவே தகராறு. (சில சமயம் பேசும்போதுக் கூடத்தான்.) ஒன்னு தெரியுமா? பல ஒரிஜினல் பாண்டிச்சேரிக்காரர்களுக்கு "ழா" வராது. அட பாக்கியராஜ் ''வாலைபலம்'' போல இல்லீஙக. ''ழா'' வை French ''ja'' என்று உச்சரிப்பார்கள். நானுந்தான். சில தமிழ் வாத்தியார்கள் சுட்டிக் காட்டியப் பிறகு தான் எனக்கே தெரியும்.( ஐந்தாம் வேற்றுமை உருபு தெரியாமல் 7 ம் வகுப்பில் விரல்களில் அடி வாங்கினதிலேந்து தமிழ் வாத்தியார்களை கண்டாலே ஒரு பயம்.)


சரி, விஷயத்துக்கு வருவோம். எனக்கு தமிழ் ரொம்பவே தகராறு. ( தமிழ் மட்டுந் தானா ? -இது என் வீட்டுக்காரம்மா) ர்-ற், ல-ள வில் உள்ள வித்தியாசம், எழுதிப் பார்த்தால் தான் தெரியும்.(உச்சரிப்பில் வித்தியாசம் தெரியாததால்). ''க்'' ''ச்'' எப்பொ போடனும் என்றும் தெரியாது. ஆத்தி(ச்)சூடியில் "ச்" போடக்கூடாது என்று சிட்டிசன் பத்ரி பா.பா க்கு சொன்ன மாதிரி நீங்களும் "Comments" பகுதியில் சொல்லலாம். சொல்லவேணும். ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம். அப்படி ''அனைவரும்'' செய்தீர்கள் என்றால் பின்னுட்டதில் (சாரி பத்ரி, பின்னுட்டமில்லை -விமர்சனம்.) தலைவர் நா.கண்ணன் சாதனையை முறியடித்துவிடுவேன். (சரி சரி சுய விமர்சனம் போதும்-இது என் வீட்டுக்காரம்மா).

(என்ன மதி? இப்பவே வருத்தப்பட்டா எப்படி? ''வறுத்து'' எடுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கே)

நான் ஏன் மதி? எனக்கு என்ன தகுதி இருக்கு? நான் மழைக்குக்கூட மரத்தடிப் பக்கம் போனதில்லையே என்று சொன்னால், வாத்தியார் ஆவதற்க்கு மரத்தடியில் அடிச்சசுக்குனோம் என்று அவசியமில்ல கொஞ்சம் ''ஊர் மேய்ந்தால்'' (அட! இணையில் தாங்க) போதும்னு சொல்லுறாங்க. நான் என்னா செய்ற்து சொல்லுபா. அது மட்டுமில்ல ''உங்களை மாதிரி ஒரு "சோதனை எலி" கிடைப்பாரான்னுதான் நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்." என்று பயமூத்தினாங்க. சோதனை எலிக்கு பிரஞ்சில் " இந்திய பன்னி" என்று சொல்லுவார்கள். தோக்கமே(துவக்கம்) சரியில்லடா! அதனல வேற வழியில்லாம ஒத்துக்கிட்டேன். புள்ள குட்டிகாரன்பா நான்.

யார் இந்த ரவியா? நான் காரைக்காலில் பிறந்து பாண்டிச்சேரியில் வளர்ந்து பிரான்ஸில் பல வருடமாக வாழ்கிறேன். பாண்டிச்சேரி பற்றியும் ப்ரான்ஸ் பற்றியும் அப்ப அப்ப சொல்லுகிறேன்.
பின்னுட்டத்தில் ஒரு முறை எழுதியபோது ,உங்கள் பெயர் "ரவியா??" என்கிற மாதிரி இருக்கு என்று ஒருவர் சொன்னார். "அய்யா! எனக்கு ஒரு உண்மைத் தெரிஞ்சாவனும்" என்று சொன்ன மாதிரி இருந்திச்சு. இருங்க சொல்லறேன்.

நான் ஜெமினி ராசி (ஆமாம் ஆமாம் சரியான் ரெட்டை வேஷம்--என் வீட்டுக்காரம்மா). எனக்குள் இருவன். "ரவியா??" இது சரி என்று சொன்னால் "ரவியா!!" இது சரியில்லை என்பான். "ரவியா!!" ஒன்றை அழகாயிருக்கிறது என்றால் "ரவியா??" சகிக்கவில்லை என்பான்.( அது தான் சொன்னேனே ரெட்டை வேஷமுன்னு- என் சம்சாரம்தான்) இப்படித் தான் எங்க வீட்டுகாரம்மா அடிக்"கடி" வருவாங்க! கண்டுக்காதிங்க!

நான் திருப்பி திருப்பி காசி, பரி, வினோபா பற்றியே சொல்லுவேன் என்று நினைத்தால் ஒரு வாரம் வலைப்பூ பக்கம் தலையை காட்டாதீர்கள்.என்னத்தான் இணையில் மேய்ந்தாலும் புதுசா என்ன சொல்லிவிடப்போகிறேன். அவ்வப்பொழுது என் முன்னோடியர்கள் (அதான் ! முந்திய "வாத்தியார்கள்" எழுதினதை "சுட்டிக்" காட்டுவேன். காப்பி ரைட் பிராபலம் இருக்காதே!! ஹி! ஹி)

மதி சொந்தக்கதை சோகக்கதையெல்லாம் எழுதலாமென்றார்கள். எழுதலாம். ஆனால் இந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வாரமாக இருப்பதால் சாப்பாட்டு விஷயங்கள் பற்றி நிறைய எழுதலாம்.( வினோபா வுக்காக). இந்த வாரம் முச்சுடும் ( பழைய தீபாவளி மலர் விகடன் ஜோக் மாதிரி -பட்ச்சணம் வயிற்று வலி ஜோக்) வீட்டுக்கு வீடு சென்று இங்கு பிரான்ஸில், உண்டுக்களித்து அவதிப் படுவோம். அப்புறம் பிரான்ஸ் வாழ்க்கை, பாண்டிச்சேரி பாஷை ( உஷா! புரியில்லைன்னு சண்டைக்கு வரக்கூடாது. இப்பவேயே சொல்லிப்புட்டேன் ஆமா!) மற்றும் இத்யாதி.. இத்யாதி..

அப்ப நாளைக்கு பாப்போமா ? ஆங்! மறந்துட்டேனே ! தலைப்பை பிரஞ்சில் எழுதியுள்ளேன். அதனை தமிழில் பின்னூட்டதில் எழுதுபவர்களுக்கு 1 கடலை மிட்டாய் இலவசம் (தம்பி கிருபாவுடயது).

உங்கள் ரவியா

Sunday, December 21, 2003

ஈ·பல் டவரிலிருந்து...

 இவ்வார ஆசிரியர்

 
இந்த வார வலைப்பதிவு ஆசிரியர் யாரென்று நீங்களெல்லாம் ஆர்வத்தோடு காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். யாராய் இருக்கும் என்று நகம் கடிக்காதீர்கள். :)

இவரை நீங்கள், இதுவரை உங்கள் வலைப்பதிவுகளிலும், இங்கேயும் *மறுமொழி* தருபவராகவே பரிச்சயப்பட்டிருப்பீர்கள். ஏழாம்வகுப்பு வரை மட்டுமே தமிழ் இரண்டாம் மொழியாகப் படித்ததாகச் சொல்லும் இவர் நமது புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்போது வசிப்பது ·பிரான்சில்! ஐரோப்பாவில் இருந்து மூன்றாவது ஆளாகவும், வலைப்பதிவாளர் அல்லாத மூன்றாவது ஆசிரியராகவும் உங்களுடன் ரவியா.


 
aduththu varupavarai varavERkum mun innoru pani photo. ithuvum naanillai. :D


 
அறந்தாங்கியிலிருந்து புறப்பட்டு சிங்கையில் அமர்ந்துகொண்டு நம்மை எங்கேயெல்லாம் அழைத்துக்கொண்டு போய்விட்டார் எம்.கே. குமார். பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி குமார்!

ஹ்ம்ம்ம்ம்..... இவரே நிறைய போட்டோ போட்டு இருக்கார். நாம என்ன போட்டோ போடுறது??? இங்கே பொழிந்து தள்ளிக்கொண்டிருக்கும் பனி உங்களுக்காக!

last Monday in Montreal... btw, that's not my car! Thank God!!

 

நன்றிக்கான நேரமிது.

 
அப்பாடா!

ஒரு வழியாய் (கல்லடி எதுவும் பெரிதாய் வாங்காமல்) முடித்துவிட்டேன். படித்த, ரசித்த, பதிலெழுதிய, பாராட்டிய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. எல்லாவிதத்திலும் தன்னுடைய வேலைப்பளுவின் நடுவிலும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிய மதிக்கு மனம் நிறைந்த நன்றிகள். பார்ப்போமா. இன்றிரவாவது நான் முழுமையாகத்தூங்குகிறேனா என்பதைப்பார்க்கவேண்டும். :)

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,

எம்.கே.குமார்.


 

தேவை மாற்றான் நிழலிலும் ஒரு கண்.

 
கடந்த ஐம்பதாண்டுகளில் சுணங்கிக்கொண்டிருந்த சில விஷயங்கள் எதிர்பார்த்ததை விட தெளிவாக வெளியே வருகின்றன. நமது உழைப்பின் அருமையை நாமும் மற்றவர்களும் உணரத்தொடங்கிவிட்டோம். யாரைப்பிடித்தாலும் ஒளித்தாலும் சிலருக்கு எல்லாமே பிரச்சனைதான். நமக்கு அப்படியில்லை. சிற்சில ஜூடோ, ஜோகித்தனமான வேளைகளில் நாம் சறுக்கியிருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் சீரிய தலைமையின் செயல்பாடுகள் அதிசயிக்கவைக்கின்றன. 2020 என்பதை நாம் வென்றுவிடமுடியும் என்றே தோன்றுகிறது.

இந்த நிலையில், நெடுநாளைய நமது பிரச்சனையில் நம் மாற்றானின் உறவுகளில் அதிசயிக்கத்த வேகம் காட்டுகிறோம். ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே எல்லாவிஷயத்திற்கும் முடிவு காண விழைகிறோம். தவறில்லைதான். ஆனாலும் கடந்துபோன அல்லது தாக்கிவிட்டுப் போன சில அம்புகளை நாம் மறந்துவிடக்கூடாது. அவை நமது பலமின்மையான பகுதிகளைக் குறிபார்த்து எப்போதும் எரியப்படவில்லை. நமது நம்பிக்கையின் மீது எறியப்பட்டிருக்கிறது. நம்பிக்கைகளைத் தகர்ப்பது எந்தவிதமான ராஜாங்க விஷயத்திற்கும் ஏற்றதல்ல.

மாற்றான்கள் 'ஈ' என்றதும் நாம் இரங்கிவிடுகிறோம். நமது பிடியிலிருந்து இறங்கியும் விடுகிறோம். பதிலுக்கு அவர்கள் தனது புத்தியைக் காட்டிவிட்டுச் செல்கின்றனர். எல்லாரும் நமது இத்தகைய குணங்களை நமது பலமின்மையாக அறிந்துகொண்டிருக்க, நாம் அதை அறிந்துகொள்ளாமலிருப்பதோ கண்டுகொள்ளாமல் விடுவதோ புத்திசாலித்தனம் ஆகாது. ரயில் விடுதல், போர் நிறுத்தம், விமானச்சேவை, கிரிக்கெட் பயணம் என எல்லாவற்றையும் தாண்டி, ஜெனரலின் ஆளுமைக்கு, கீழேயும் மேலேயும், நிழலிலும் எப்போதுமே தூங்காத கண் ஒன்று இருக்கவேண்டும். அது அவசியம்.

எம்.கே.குமார்.


 


என்ன செய்வது?
தொந்தரவு தாங்க முடியவில்லை.

நிரந்தரமாய்
அந்த
அறிவிப்புப்பலகையை வைத்துவிட்டேன்!

"இங்கே பூக்கள் விற்பனைக்கல்ல"

" பட்டாம்பூச்சிகள்
நுழைய அனுமதி இல்லை"

" எம்.கே.குமார்- ஜாக்கிரதை" 
தொட்ட குறை.

அமலாசிங்கின் எண்ண அலைகளில் நேற்று எழுதிய விஷயத்திற்கு இன்று தீர்ப்பு வந்துவிடுகிறது. தி.மு.க, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியே போய்க் காத்திருக்க முடிவெடுத்துவிட்டது. காத்திருப்பது வெட்டியாகவும் முடியலாம். அமலாசிங்கின் எண்ண அலைகள் எனக்கு இந்தியா டுடேயில் தவ்லீன் சிங்கின் 'எதிர்ப்பாட்டை' அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.(!)

சதாம் ஹ¤சேன் பிடிபட்டதில் யாருக்கு என்ன கவலையோ தெரியவில்லை. இந்தக்குடும்பத்தலைவிக்கு இப்படியும் ஒரு பிரச்சனை. படித்துத்தான் பாருங்களேன்.

என்ன? அரசியல் செய்திகள் வேண்டுமா? தலைவர்களின் பேட்டி பற்றிய செய்தித்தொகுப்பு வேண்டுமா? கண்ட கண்ட பேப்பரையெல்லாம் படிக்காதீர்கள். பத்ரியின் வலைக்குறிப்பைப் படித்துவிட்டு வாருங்கள். தினத்தந்தி, தின மணி, தின மலர் மாதிரி 'தின வலைக்குறிப்பு' என்று இதற்கு பெயர் சூட்டிவிடலாம். தெளிவாக எழுதுகிறார்.

முத்தாரம் படிப்பது மாதிரி இருக்கிறது பாலாஜியின் வலைக்குறிப்பு படிப்பது. ஏகப்பட்ட தகவல்கள். லிங்கையும் கொடுத்திருக்கிறார்.

மழைபற்றிய கவிதையும் படமும் சூப்பர் பாரி.

பெற்றோர் - பிள்ளைகளின் உறவுகளில் உயிர்ப்பு காட்டுகிறார் சந்திரலேஹா. நன்றாக இருக்கிறது.

சந்திரவதனா.

நிறைய விதவிதமான வலைக்குறிப்புகள் வைத்திருக்கிறார். அவ்வப்போது எழுதுகிறார்.

கனம் மிகுந்த விஷயங்களை எழுதுகிறார் இராம.கி ஐயா ஐயா அவர்கள்.

நா.கண்ணன் அவர்களின் எல்லா வலைக்குறிப்புகளிலும் விஷயம் இருக்கின்றது. திருப்பதி தரிசன கதை எழுதியிருக்கிறார். சியோல் பற்றிய கட்டுரை ஒன்றும். நன்றாயிருக்கிறது.

மீனாக்ஷி சங்கர் மூன்று வலைக்குறிப்புகள் வைத்திருக்கிறார். தனது கவிதைகளைஅவற்றில் ஒன்றில் போட்டுவைத்திருக்கிறார். கவிதை நன்றாக இருக்கின்றன. எனக்கு 20 உனக்கு 18 விமர்சனம் சொல்கிறார். அப்பாடி, ஓஸி வி ஸி டியில் பாக்கவேண்டியதுதான்.

வாசன் சார், அடுத்த தடவை இங்கே வரும்போது கண்டிப்பா சொல்லிட்டு வாங்க.

வலைக்குறிப்பில் எல்லா விஷயங்கள் பற்றியும் எழுதுகிறார். எம்.எஸ் உதயமூர்த்தி விஷயம் சம்பந்தப்பட்டதாய் உங்களுக்குப்பிடித்தவை எனக்கும் பிடித்திருந்தது.

ஏதோ தெரிந்த வீட்டிற்குள் நுழைவது மாதிரி இருக்கிறது மதியின் வலைக்குறிப்புகள்.. மற்ற விமர்சனமெல்லாம் ஒரு விமர்சனமா என்கிற வகையில் சினிமா விமர்சனம். கலக்குகிறார். அந்தப்பக்கம் பார்த்தால் வேம்படி மகளிர் கல்லூரியின் கதைத்தல்கள். ஆர்க்கேவ் பாகத்தை ஒரு தட்டு தட்டுங்கள். ஏதோ மலை மாதிரி ஏதாவது தெரிகிறதா? அவ்வளவு எழுதியிருக்கிறார். வாழ்த்துகள்.


எம்.கே.குமார்.

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com