<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, November 08, 2003

இந்தப்புகைப்படம் எடுத்தது ஒரு தனிக்கதை!

 ivaraiththeriyathaa???


ஆள்மாறாட்டம் - 1

 


இட்லிவடை

டி·பன் என்று சொன்னதும் என் நினைவுக்கு வருவது இட்லிவடைதான். வலைப்பூக்களிலும் ஒரு இட்லிவடை உண்டு. இங்கு முக்கியமான செய்திகள் எதுவும் இடம் பெறாது என்பதை விட, ஒருவர் வலைப்பதிவுக்குபதில் சுஜாதாப்பதிவு செய்ய முற்படுகிறார் என்பது நிஜம். நான் சுஜாதாவின் எழுத்துக்கள் அதிகம் படித்ததில்லை... ஆனால் "கற்றதும் பெற்றதும்" இந்த வலைப்பூவில் இருந்து ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்... அவ்வளவு தன்னிலைப்பார்வைகள் & சாயல்கள்...இல்லையில்லை பதிவுகள்.

யார் சொன்னார்களோ இல்லையோ, "என்னை அப்படி உசுப்பேத்தினார்கள், இப்படி கெஞ்சினார்கள்" என்ற character build-up மிக நன்றாக வெற்றியைத் தந்திருக்கிறது. வலைப்பூ சிலந்தியாளர், "நீங்க யார்னு கண்டுபிடிச்சுட்டேன்... அந்த பையன்தானே " என்று கேட்டிருப்பதே இதற்குச் சான்று. இறுந்தாளும் எளுத்துப் பிலைகள் இவ்வலவு கூடாது அவ்வளைப்பூவிள். ;-)

"மரத்(அடி)தடி" (Monday, October 27, 2003) என்ற வலைப்பதிவைப்போன்றே அவ்விதக்குழு ஒன்றில் யாரோ இழப்புதேவதைகளில்
இருந்து எழுதிய messageஐ நீங்கள் படித்திருக்கலாம். இருவருக்கும் "க்ளப்"களின் மேல் இருக்கும் ஒரு "இது" மிகத்தெளிவாக பளிச்சிடுகிறது என்று சொல்வது எல்லாம் புத்திசாலித்தனமில்லை...இனிமேல் மாற்றி எழுத ஆரம்பித்துவிடக்கூடும். ஹ¥ஊஉம்...அது எந்த எல்லப்பராவோ ப்ரகாசமாக இருந்துவிட்டுப்போகட்டும், நமக்கென்ன. :P


Friday, November 07, 2003
 Rajaraja Cholan Samadhi 
வலைக்குறிப்பு தொடங்கி எழுதணுமா?

இதே வலைப்பூவில் இப்போ சின்னதா blade போடறதுல எனக்கு எந்த ப்ரச்சனையுமே இல்லை. ;-)

பொன்னியின்செல்வன்னு ஒரு யாஹ¥ குழுமம் இருக்கு. அங்கே கோகுல்ங்கர உறுப்பினர்தான் திடீர்னு அப்படி ஒரு ஆசையைக் கிளப்பி விட்டார், "பொன்னியின் செல்வனில் வரும் எல்லா இடங்களையும் போய் இப்போ எப்படி இருக்குன்னு ஒரு தடவைப் பார்த்துட்டு வந்தா எப்படி இருக்கும்...!"னு.

கமல் அதை வழிமொழிஞ்சார்... இதெல்லாம் 2002-இன் பிற்பகுதியில். அப்பறமா ஒரு வழியா ஒரு சின்ன குழு மாதிரி சேர்ந்தோம் பயணத்துக்கு. சென்னை மெரீனா கடர்கரை, கல்கி அலுவலகம் என்று ஒரளவு சிலரை மட்டும் நேரில் பார்த்துக்கொண்டாலும், முதல்முதலாக பயணம் தொடங்கும் சமயத்தில்தான் எல்லோரும் பார்த்துக்கொண்டோம்...

Nandi Gangaikonda chozapuram (c) PS grp

கல்லூர்¢ சிறுசுகள் கணக்காக கோடியக்கரை (அதான், பொ.செ. பூங்குழலியின் ஊர்) கடற்கரையில் அடித்த கொட்டங்களும், ஓடும் 'வேன்' மேல் ஏறி போட்ட ஆட்டங்களும், வழிநெடுக கலாய்த்தல்களும் தனிக்கதை. மூன்று நாள் பழக்கத்தில் மூன்று ஜென்ம உறவுகள் இப்பொழுது வளர்ந்துவிட்டதும் தனிக்கதை.

இன்றளவும் அடிக்கடி "யாத்திரைகள்" தொடர்கின்றன (நீங்க யாராவதும் வரர்துன்னா தாராளமா வெல்கம்... ஒரே களாசலா இருக்கும்).

பூங்குழலி ஊர்ன் கலங்கரை விளக்கம் இப்போழுது சில செங்கல் அடுக்காக மட்டுமே இருக்கு... குழகர் கோவில் இன்றளவும் சிறிதும் கெடாமல் அப்படியே... எல்லாருக்கும் தெரிந்த தஞ்சை பிரக்தீஸ்வரர் மட்டும் பிரபலமாக.

Kalangarai vizakkam - Kodikarai

மற்ற இடங்கள் பற்றியெல்லாம் சொல்வதற்கு இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு சேதப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சேதப்படுத்தியிருக்கிறார்கள் இருபதாம் நூற்றாண்டுப் பிரஜைகள். கோயில் புனரமைப்பு/பராமரிப்பு என்ற பெயரில் கல்வெட்டுக்களையும் ஓவியங்களையும் அழித்திருக்கிறார்கள். எத்தனையெத்தனை உண்மைகள் அறிய முடியாமல் இழந்தோமோ, யாருக்குத் தெரியும்.

Dilapidated Keezhkadambur(c)PS Grp

இன்னமும் "களப்பிரர்கள் ஆட்சி தமிழுக்கு ஒரு இருண்ட காலம்" என்றேதான் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனா அந்த "இருண்ட காலத்தில்" வெளிவந்த தமிழ் நூல்கள் பத்தியும், சொற்செறிவும் கருத்துச்செரிவும் நம்ம எல்லாருக்குமே தெரியும். வெள்ளையர்கள் எழுதி வைத்த நம் சரித்திரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டும் விட்டோம், ஆனால் அமெரிக்கர்களே அவ்வூர்ப்பழங்குடியைப்பற்றி எழுதியதை எதிர்த்து கேள்விகேட்க ஆரம்ப்¢த்து விட்டாதாக கேள்வி ஞானம் சொல்கிறது ;-). நிறைய ஆராய்ச்சி முடிவுகள் புதியதாக வெளிவந்து விட்டன... எனினும் பள்ளி/கல்லூரியில் படிக்கும் சரித்த்¢ரம் பல decadesகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பழந்தமிழர் சரித்திரம்தான் (நான் படிக்கும் வரை மட்டுமாவது, இப்போ எப்படியோ தெரியலை) அப்டீன்னு எல்லாம் நானே சொல்றது என்னோட அதிகப்ரசங்கித்தனத்தைத்தான் காட்டும், so no comments. ;-)

பொன்னியின்செல்வன் குழு பயணம் சென்ற ப்¢றகு, நிறைய புரிய ஆரம்பித்தது... பல "உண்மையான சரித்திர ஆராய்ச்ச்¢யாளர்களின்" தொடர்புகளும் கிடைத்தது... "ஜேபீ"சானும், ஐந்து அகவைகள் முடிந்துவிட்ட அகத்தியர்(http://groups.yahoo.com/group/agathiyar/) குழுவும் நம் எல்லோருக்குமே ஒரு போனஸ். :-) நெஜம்மாவே அங்க இருக்கற விஷயங்கள் படிச்சாலே "வேண விஷயம்" கிடைக்கும். எனக்குதான் அது முன்னாடியே தெரியாமப் போச்சு. :-(

கோவில்கள் வெறும் பக்த்¢/கலாச்சார ச்¢ன்னம் மட்டும் இல்லை, நம் சரித்திரத்தின் ஆவணக்கிடங்கு என்று அறியும்போது, இப்படி அதை அழிப்பவர்களைக் கண்டால்... வருந்துவதைத் தவிர வேற எதுவும் செய்ய முடியலை.

இப்பொழுது கிடைத்திருக்கும் (ஆனால் எல்லோருக்கும் தெர்¢யாத) கல்வெட்டுச் செய்திகள், ஆதாரங்கள் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முயற்சில ஈடு பட்டுருக்கோம்... domain name பதிவு பண்ணி webspaceஉம் வாங்கியாச்சு-ஒன்று பொன்னியின்செல்வன்/கல்கி-க்கு, இன்னொன்னு வரலாறுக்கு.

தஞ்சை பெரியகோவில் (c) பொ.செ குழு

இன்னமும் "பாக்கி இருக்கும் வெளிக்கொணரப்படாத" கோயில் கல்வெட்டுக்களும், ஓவியங்களும் சொல்லும் செய்த்¢கள் நிறைய இருக்கு, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டவைகளில் ignore செய்யப்பட்ட /தவறவிடப்பட்ட உண்மைகளும் நிறையவே இருக்கு. அடுத்த தலைமுறையாவது சரியான சரித்திரத்தை உணரணும் இல்லையா...இன்னமும் "தஞ்சைக்கோயிலை தொழுநோய் குணமாகும் பொருட்டு
ராஜராஜன் கட்டினான்" போன்ற உண்மைகளை எவ்வளவு நாள்தான் நம்பிக்கொண்டிருப்பது....!!! :-))

இதுவரை பார்த்தவை/கேட்டவைகளை Archeological Society of Indiaவின் ஒப்புதல் இல்லாமல் வெளியில் சொல்லக்கூட முடியாது.;-) சம்மதம் வந்தவுடன் எல்லா தமிழர்களும் சட்டைக்காலரை இப்பொழுதைவிட இன்னனும் அதிகமாக தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

க்ருபா


Thursday, November 06, 2003
 
>br>

Krupa & Coஹரன்ப்ரசன்னா_கவிதைகள்.

 
மொத்தமாக தர்ம அடி வாங்குவது என்று முடிவாகிட்ட அப்பறம், யாரைப் பற்றி சொன்னால்தான் என்ன?

அதனால... பிரசன்னாவின் ஹரன்ப்ரசன்னா_கவிதைகள்.

கவிதைகளைப் பற்றி எனக்கு அவ்வளவு ஞானம் பத்தாது என்பதால், ஒரு வலைப்பூ என்ற கோணத்திலேயே படிக்கிறேன் ('அப்போ மிச்ச எல்லாத்தையும் பத்திமட்டும் 'அவ்வளவு ஞானம்' இருக்காக்கும்?"னு யாரும் கேட்டுடாதீங்க.. ஒவ்வொரு விஷயம் பத்தி சொல்லும் போதும் அதைப் பற்றி இப்படியே சொல்றேன்...அவசரம் வேண்டாம்).

"பாம்புப்புடலைத் தோட்டத்தின் வழி வீசும்
ஈரக்காற்றிலிருந்தும்
மீண்டு
படியிறங்க
கண்ணை உறுத்துகிறது
எதிர்வீட்டுக்கொடி"

என்ற இவரின் வரிகள் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். ('எனக்கு ஒண்ணுமே சொல்லலையே'னு யாராவது சொன்னால்...ஸாரி, நான் எஸ்கேப்!)


அப்பறம்...அந்த தீப்பெட்டி கவிதை இருக்கே...வண்டை தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்த வண்டு என்ற கருவும் ரொம்ப புதுசாதான் இருக்கு, வரிகளும் அப்படியே.

"விடுதலை வேண்டும் வண்டு
இணைகூடாமல்
மூச்சுமுட்டி இறக்குமானால்
சொர்க்கம் சேரும்
நிச்சயம்."

என்ற வரிகள், நிச்சயம் படித்து முடித்ததும் என்னவோ செய்யும்.

இங்குள்ள கவிதைகளின் adjective அதிகம் பயன்படுத்தப்படவ்¢ல்லை..."நீலவானம்" என்று ஒரு சில கவிதைகளில் மட்டுமே adjective பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தெரிந்த பொருட்களுக்கே வேஷம் எல்லாம் போட்டுச்சொல்லும் blade சமாச்சாரங்களெல்லாம் அதிகம் இல்லை. அதற்கு அவசியம் ஒரு 'நன்றி' சொல்லியே ஆகவேண்டும். ;-)

ம்ம்ம்ம்... அப்பறம், இவ்வலைப்பூவில் இருக்கும் எல்லாகவிதைகளுமே (அனேகமாக எல்லா கவிதைகளுமே என்று திருத்தி வாசிக்கவும்) தன்னிலையில் எழுதப்பட்டது மாதிரி இருக்கு, அல்லது ஒரு குறிப்பிட்ட பார்வையாளனின்/பொருளின் கோணத்தில் இருக்கு... எடுத்துக்கொண்ட கருவைப் பற்றி இன்னும் தெளிவாக/விரிவாக விவரிக்க இது உதவும்.

அங்கங்கே எல்லையைமீறும் பொருட்களை கவிதையில் சேர்த்துவிடுகிறார். 'அது எனது எல்லையை மீறவில்லை'னு சொல்ல பிரசன்னவுக்கு முழூழூழூழூழூ உரிமையும் இருக்கு;-) ஆனால், கவிதைக்களத்துடன் சரியாகப் பொருந்திவிடுவதால், அவ்வளவு தூரம் விமர்சனத்திற்கும் அதில் வாய்ப்பில்லை... இருந்தாலும் 'சேர்க்கவேண்டியதை' கொஞ்சம் கவனமாகச் சேர்க்கணும்...இல்லாட்டி கதை கந்தல்தான்.

'கூகுல்' தேடுபொறியில் மின்ன எல்லாம் "தமிழ்"னு அடிச்சு தேடினா மொதல்ல அதிகளவு தென்படறது நம்ப பிரசன்னாவின் வலைப்பூதான்?... இப்போ என்ன மாற்றமோ தெரியலை, தேடல் முடிவுல அவரோட வலைப்பூ காணாவே காணும்.

க்ருபா


Wednesday, November 05, 2003
 எண்ண அலைகள்

 


கதை, கவிதை, இலக்கியம் என்பதைக் கருவாகக்கொண்டு இயங்கும் வலைப்பூக்களின்றும், சற்றே வித்யாசமாக சமூகப்பார்வை, அரசியல்செயல்பாடு ஆகியவற்றை அலசி கருத்தாக்கும் ஒரு குடில் அமலா சிங்கின் எண்ண அலைகள்.

"அண்ணாநகரில் மோட்டார் சைக்கிளில் துணிகரக்கொள்ளை", "பழவந்தாங்களில் வீடுபுகுந்து பட்டப்பகலில் திருட்டு", "பேருந்துநிலையத்தில்
பிணம்-கொலைகாரன் யார்" என்பது போன்ற தினத்தந்தியிசத்தைப் படித்து படுத்து அலுத்தவர்களுக்கு அமலாவின் வலைக்குறிப்புகள் ஒரு ஆறுதலான விஷயமும் கூட.

இந்திய அரசியலோ இலங்கை அரசோ...யாரைப்பற்றிய செய்தியாக இருந்தாலும் அதன் பின்னனி, அதன் பலாபலன்களை நம்முடன் சேர்ந்தே பார்த்து ஆராயும் ஒரு அலைவரிசை இவர் எழுத்தில் இருக்கும்.கருத்து மட்டும் இல்லாமல், தீர்வுகள் எடுக்கவும் இவர் முயல்கிறார் என்பது இவரது குடிலின் பதிவுகளிலிருந்து அறியலாம்...

இவர் ஒரு முன்மாதிரியான 'எறும்பு'(groups.yahoo.com/group/erumbugal)தான்...சந்தேகமே இல்லை.

தேவர் பற்றி இவர் எழுதிய வலைப்பதிவு (கட்டுரை) நிச்சயம் இந்த ப்ரச்சனை பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று... எனக்கு அதைப் படித்ததும்தான் இவ்விஷய அடிப்படைகளே தெரியும்.

ஹ¥ஊஊஊம்...அப்பறம், இவர் நம் எல்லோருக்கும் ஜாவாவில் செய்திருக்கும் யூனிகோட் தமிழ் எழுத்துச்செயலியைப் பற்றி இவரின் அனுமதி இல்லாமல் இங்கே பொதுவில் கொடுப்பது அவ்வளவு உகந்த செயல் இல்லை... எனவே, http://www.thamizh.pwp.blueyonder.co.uk/anjal.html என்ற பக்கத்தைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லப்போவதில்லை நான், அமலா சிங் சம்மதிதாலொழிய.

க்ருபா

Tuesday, November 04, 2003
 
சிதறிக்கிடக்கும் தகவல்களை தேடி எடுக்க தேடுபொறிகள் இருக்கவே இருக்கு. அந்தந்த தளங்களை ரெண்டொரு வரிகளில் அறிமுகப்படுத்த மெகாதேடுபொறிகளும் இருக்கவே இருக்கு.

இருந்தாலும், அப்படிப்பட்ட 'சுட்டிக்காட்டுதல்', 'அறிமுகங்கள்' போன்றவற்றில் எல்லாம் ஒரு உணர்வு பூர்வமான அறிமுகம் இருப்பதில்லை. "அட... இது நம்ப மேட்டர்றா" என்று படித்த உடனேயே உணர்வுபூர்வமாகத் தோன்ற பின்பு வேறு என்னதான் வழி? ஒரு தனித்துவமான தீண்டுதல் (personal touch?!) இருக்கணும்னு வெச்சுக்கலாமா?

தகவல்கள் எப்படியோ... தமிழ் இணையக்குழுமங்கள், தமிழ் இணைய இதழ்கள், போன்ற இணையம் சார்ந்த தமிழுக்கு ஒரு சாளரம் போன்று இருக்கவும் ஒரு பொறியோ, முகப்போ அவசியம்.

"வலைப்பூ...தமிழ்ப்ளாக்" என்று சொல்லலாமா?

எனக்கு என்னமோ "mathy's musings" அந்த தகுதியைப் பெறுவதாகத் தோன்றுகிறது. செய்திகள், கருத்துக்கள் இருக்கும் ஒவ்வொருநாள் பதிவுகளிலும், ஏதோ ஒரு மனிதர்/குழு/படைப்பு போன்றவற்றை அறிமுகப்படுத்துவதாகவும் இவ்வலைப்பூ இருக்கும்.

கணினி தொடங்கி சமயம் வரை பலவித தலைப்புகளைப் பார்க்கலாம்... (அப்போ சமையல்? "மதிக்கு அப்போ சமையல்..." என்று யாராவது ஆரம்பித்து வைத்து, அதனால் மதிக்கு வரும் கோபத்திற்கோ, தொடுக்கப்படும் வழக்குக்கோ க்ருபா எந்நாளும் பொறுப்பாக மாட்டான்).

இவ்வலைப்பூவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்... சென்னையில் மெட்ரோவாட்டர் லாரி தென்படுவதைப் போன்று அத்திப்பழத் தகுதியுடன் அவ்வப்பொழுது தென்படும் இலங்கைத் தமிழ்தான். மதி இலங்கைத் தமிழில் எழுதுவதைப் படித்து படித்துதான் இரண்டொரு வாக்கியங்கள் கற்றுக்கொண்டேன். சென்னைத் தமிழ், கோவைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ் என்று பல தமிழ்களும் அறிமுகப்படுத்தப் பட்ட அளவுக்கு இலங்கைத் தமிழ் பரிச்சயம் கூட இல்லை (அதாவது எனக்கு..ஹீ, ஹீ, ஹீ).

"இன்னா டாப்பிக்குபா பேசினுகுறீங்கோ?" என்று கேட்பதில் உள்ள அதே கிக்

"இங்கே என்ன கதைக்கிறீயள்?" என்று கேட்பதிலும் இருகிறது நண்பர்கள் மத்தியில்.

அடிக்கடி இலைங்கைத் தமிழில் எழுதி அருள் பாலிக்க சந்திரமதி அம்மனைப் ப்ராத்திக்கிறேன். (வேறு யாராவதும் எழுதினாலும் மிக்க மகிழ்ச்சி... சென்னைத் தமிழ் மாதிரி 'சோக்கா சொன்ன' கவர்ச்சி இலங்கைத்தமிழும் மிக ரசிக்கப்படும் ஒன்று... பேசிக்காட்டி கற்றுக்கொடுக்கதான் ஆட்கள் குறைவு... யார்னாச்சும் மேட்டர ஒரு குஜால்ஸா நைனா).


க்ருபா

வலைக்கிறுக்கல்

 


இதுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி Boys பட விமர்சனம் படிச்சுட்டுதான் (படிச்சும் கூட?!) அந்த படத்துக்கே போனேன்... :-)

"எல்லாம் கலந்து கட்டிய பொட்டலம்தான் சீக்ரெட் ஆ·ப் சக்சஸ்" கோட்பாடுல நிறைய நம்பிக்கை இருக்கும் போல நம்ப பரிமேலழகர்க்கு... கலந்துகட்டிய "கிறுக்கல்கள்". ரொம்ப உஷாராவே பேரும் வெச்சுட்டார். அப்பறம் படிச்சுட்டு எதுவும் திட்ட முடியாதுல்ல? ;-)

ஓபரா பத்தி இவர் எழுதின அன்னிக்கு, ஆரம்பத்தில் இன்னும் அதிக ஆவலோட படிக்க ஆரம்பிச்சேன்... ஓபரா இணைய உலாவி பத்தி என்னமோ சொல்றார்ன்னு. அப்பறம் பாத்தா..ஓபரா-ன்னு ஒரு இசை நாடகம் இருக்காம். அதிலும் வகைகளைச் சொல்லி, அதற்கான் சிறுவரி விளக்கமும் குடுத்துட்டார்... புதியவார்ப்புக்கள். ;-)

இதுல நான் விரும்பிப் ரசிக்கற இன்னொரு விஷயம்...comments பகுதி. நிறைய "நண்பர்கள்" இருப்பாங்க போல... பாதி கமெண்ட்ஸ் ஒரே கலாட்டாவா இருக்கும். :-) கமெண்ட்ஸ் பகுதியைப் படிக்கும்போதுதான் ஒரு பதிவு வடிவம் பெற்று முழுமை பெறுவதாகவேத் தோன்றுகிறது... அதிலும் இந்தமாதிரி கலாட்ட கமெண்ட்ஸ் இருந்தால் கேக்கவே வேணாம். களாய்ச்ச
மாதிரியும் ஆச்சு, இன்னும் ஆழமா கேட்டு தெளிஞ்ச மாதிரியும் ஆச்சு. நாலு பேர் ஒரே விஷயத்தைப் பேசினா கேக்கறவங்களுக்கும் இன்னும் கொஞ்சம் மேட்டர் தெளிவாகும் இல்லையா... (ஆனாலும் அந்த பிரமிட்/ப்ளேட் கலாய்த்தல்
கொஞ்சம் ஓவர்).

"Font Problem?" என்று முகப்பில் கேட்கும் சுட்டியை ஆவலுடன் சொடக்கினால், "விண்டோஸ் 98 & IE 5.5 வெச்சுக்கோ, இல்லாங்காட்டி லினக்ஸ் வெச்சுக்கோ... ·பாண்ட் ப்ரச்சனையே வராது" என்று கலாய்த்திருப்பார். அதனால் என்ன... அந்தச் சுட்டியின் கீழேயே "தங்க்லீஷ்லயோ இங்க்லீஷ்லயோ போடுங்க பதில்..இல்லாட்டி எனக்காகிடும் திகில்.."னு கட்டுப்பாட்டில் இல்லாத வலைப்பூ feedback மெக்கானிசத்தைச் சொல்லி புலம்பியிருக்காரே... அது போதாதா. ஆசைதீர டிஸ்கிலயோ,
யூனிகோட்லயோ feedback குடுத்து, சந்தோஷப்பட்டுக்கலாம். "இன்னாபா எழுதிக்குற? இன்னா மேட்டர்னு சொல்லுபா..ஆசையாசையா கீது கேக்க" என்று தனி மடல் அனுப்பி அவர் கேட்டால், பதில் சொல்லாமல் அலைகழிப்பது நம்
சாமர்த்தியம்.


க்ருபாவருக கிருபா!

 


சில எதிர்பாராத பிரச்சினைகளால், இந்தவாரம் சற்றே காலதாமதமாகிவிட்டது. நண்பர்கள் மன்னிக்கவேண்டும். ஆபத்பாந்தவராக வந்து என்னைக்காப்பாற்றியவர் மரத்தடி நண்பர் கிருபாஷங்கர். உங்களில் பலருக்கு முன்பே அறிமுகமானவர்தான். இவருடைய யூனிகோடு கட்டுரையை திசைகளில் படித்து சிரிக்காதவர்கள் ஒருவரும் இல்லையென்றே நினைக்கிறேன். இங்கும் நம்மை சிரிப்புவெள்ளத்தில் ஆழ்த்தவந்திருக்கிறார், கிருபா. நான் முதலில் நினைத்தபடி, வலைக்குறிப்பு வைத்திருக்காத, முதலாவது எடிட்டர் இவர்.

கிருபா, வந்து கலக்குங்க!

Monday, November 03, 2003
 
Carved Pumkins - Halloween

 
நன்றி சிலந்தியாரே!

Sunday, November 02, 2003
 
Carved Pumpkins - Halloween

வலைப்பூக்களில் கவிதைகள்

 
இன்றுடன் எனது தற்காலிக ஆசிரியர் வேலை முடிவடைகிறது. இன்று நம் வலைப்பதிவர்களில் கவிஞர்களின் படைப்புகளில் எனக்குப்பிடித்த சில வரிகளைப்பார்ப்போம்.

மீனாக்ஸின் யதார்த்தக்கவிதைகள் மற்றும் ஹைக்கூகள்

படுக்கையை உதறினேன்
விழுந்து நொறுங்கின
கனவுகள்


ஹரன் பிரசன்னா

அருவியில் நீரில்லாத நேரங்களில்
குற்றாலநாதர் எங்கு குளிப்பார் என்பதை விட
எனது கவலை
செண்பகாதேவிக்குச் செல்லும் வழியில்
வாழும் குரங்குகள்
எந்தக் கூடையிலிருந்து
பழம் பறிக்கும் என்பதே.


ஜோதிராமலிங்கம்

கண்ணாடியின் இரு புறமும்
பிம்பங்களே நிற்கும்.
நிஜத்தின் பிம்பம் பிம்பம்
பிம்பத்தின் பிம்பம் நிஜம்.

இதைத்தவிர தமிழ்ஹைக்கூ எனும் ஒரு வலைப்பூ மே மாதத்தோடு நின்றுபோய்விட்டது. என்னைப்போன்ற சிலருக்கு ஹைக்கூவில் உள்ள சுருக்கம் பிடிக்கும். இந்த வலைப்பூ தொடர்ந்தால் நன்றாக இருக்கும். சரி, உங்களிடமிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. என் பட்டியலில் நான் சில வலைப்பூக்களைத்தான் சுட்டிக்காட்ட முடிந்தது. மற்றவற்றிலும் கட்டாயம் படிக்கவேண்டிய எவ்வளவோ பதிவுகள் உள்ளன என்று சொல்லிக்கொண்டு என் இருக்கையை காலிசெய்கிறேன்.

இப்படிக்கு,
சிலந்தி

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com