<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, December 20, 2003
 

 
இன்னும் சில.

தங்கமணியின் எழுத்துக்களில் ஏதோ இருக்கிறது. பெரிதாக ஏதோ ஒன்று இவரிடமிருந்து வரப்போகிறது. 'நான் நடந்துகொண்டிருக்கிறேன்' என்றொரு சமாச்சாரம். படித்துப்பாருங்கள்.

சுபா.
ஜெர்மனியின் செய்திகளை அழகாக விவரிக்கிறார் இந்த வலைக்குறிப்பில். உலகம் சுற்றும் தாரகை போல. தென்கொரியாவில் இருக்கிறாராம். அடுத்து தென்கொரியா பற்றிய சிறப்புக்கட்டுரைகள் வரலாம். தயாராய் இருங்கள். சுபாவின் வீடு நல்லாயிருக்குங்க. மலேசியாவில் 'லா' என்று சேர்த்து பேசுவதைப்பற்றிச்சொல்லியிருக்கிறார். நம்ம ஊரில் பேசுகிறோமே, என்னடா, என்னலே, என்னப்பூ, என்னவே, என்னங்க....இப்படி 'என்ன'ன்னு கேக்கும்போது ஒரு மரியாதைக்கும் அன்னியோன்யத்துக்கும் இங்கே 'லா' சேர்த்துக்கொள்கிறார்கள். ஓகே லா, டோண்ட் ஒரிலா. (lah) இப்படி. இன்னும் விளக்கமாகப்படிக்க இங்கே போங்க.

சித்துவும் இலக்கியவாதி என நினைக்கிறேன். இவருடைய 'பிடித்த'வைகளைப்பார்த்தால் பயமாயிருக்கிறது. ஜெயமோகனின் அதி தீவிர ரசிகர் போல. சுவையாக விஷயங்களைச்சொல்வதில் வல்லவர்.

செல்வராஜ் அவரது ஆத்தா பற்றி எழுதியிருக்கிறார். படித்தவுடன் ஏதேதோ ஞாபகங்கள். கண்கள் கலங்கின. இவருக்கும் வலைக்குறிப்பு பெரியவீடு போல.

0.5 மதிப்பெண்ணில் கோட்டை விட்ட எம்.கே. எஸ், தான் படிக்கவேண்டிய நேரத்தில் படிக்காதது பற்றிச்சொல்கிறார். இப்போது சிங்கப்பூரில் பெரிய படிப்பு படிப்பது வேறு விஷயம். இன்னும் கொஞ்சம் சுவையாக எழுதலாம்.

நண்பர்களுக்கு, சபா சாரின் நினைவுத்தடங்களைப் படியுங்கள். காலத்தோடு இயைந்த அவரது நினைவுச்சுருளில் நாமும் கரைந்து போகிறோம். தி.ஜா, கணையாழி, கஸ்தூரி ரங்கன் என சுவையாகச்செல்கிறது.

ரவி ஸ்ரீனிவாஸ், திண்ணையில் அதிகம் காணக்கிடைக்கின்ற பெயர். நிறைய விஷயங்கள் எழுதுவார். வலைக்குறிப்பிலும் அறிவியலும் அறிவு சார் சொத்துரிமைகளும் பற்றிய விளக்கமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

ரமணிதரன் சார் ஒரு நல்ல விஷயம் செய்கிறார். ஒவ்வொரு இதழிலும் வெளியாகும் ஈழம் சார்ந்த பதிவுகளைப் பிரதிபலிக்கிறார் இங்கு.. மொத்தமாக படிக்க விரும்புபவர்கள் இங்கு வந்து தங்கி படித்துக்கொள்ளலாம்.

வலைபின்னுவதில் சிலந்தியை அடிக்க யாரால் இயலும்? அழகாகப்பின்னுகிறார். 'அம்மா' வைப்பற்றித்தெரியவில்லை இவருக்கு. பாத்து சார்.

ரஜினி ராம்கியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் இந்த வாத்தியார் வேலையின் ஆரம்பத்திலேயே அவர் பெயரைச்சொல்லிவிட்டேன். ஆளும் ரஜினிமாதிரிதான் இருக்கிறார். அரசியல் சார்ந்த விஷயங்களை நகைச்சுவையாக எழுதுகிறார்.

பவித்ராவின் பயணக்கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். கலக்குவார். இங்கும் கலக்குகிறார். தில்லானா மோகனாம்பாள் புத்தகம் பற்றி இவர் எழுதியதைப் படிக்கும்போது இப்போதே அதைப் படித்துவிட மாட்டோமா என்றிருக்கிறது.

பரிக்கு ஒரு ராயல் சல்யூட். படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் கடகடவென்று வாசிப்பு, ஓடுபள்ளத்தில் இறங்கும் சைக்கிள் போல ஓடுகிறது. லேசான ரசிப்புடன் கூடிய எழுத்து. நெறைய கதையெல்லாம் சொல்லுறார்ப்பா. இனிமே அடிக்கடி படிக்கணும்.

நவன் நிறைய எழுதுகிறார். நியூயார்க்கிலிருந்து சொந்த ஊரின் பொது நூலகம் வரையிலான எண்ணைங்களைப்பகிர்ந்துகொள்கிறார்.

ரொம்ப சந்தோசமான விஷயம். திருக்குறளுக்கு ஒரு வலைக்குறிப்பு வருகிறது.
இவர் ஆரம்பிக்கிறார். தனது வலைக்குறிப்பில் தமிழ் ஆங்கில ஒற்றுமை பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கவிதைகளில் நினைவுகள் பலிச்சிடுகின்றன.


எம்.கே.குமார்.


 
அல்வாவும் கேசரியும். தொடர்ச்சி.

மழையும் மழலையும் ஒன்று என்பதாய் ஒரு கவிதை இருக்கிறது பாருங்கள். எனக்குப்பிடித்திருக்கிறது. உதயாவின் கவிதைகளில் ஒருவிதமான மென்மை வழிந்தோடுகிறது.

தீட்சண்யன் கவிதைகளில் நெருப்பு பறக்கிறது. காலமாகிவிட்ட அவரது கனவு பலிக்க வேண்டுவோம்.

தமிழ் இலக்கிய விருந்தில் இறையன்புவின் ஐந்து கவிதைகள் இருக்கின்றன. ரொம்ப சிம்பிளாய் நன்றாயிருக்கின்றன. இது, பி.கே.எஸ் உங்களுடைய வலைக்குறிப்பா?

சங்கரின் சுவடு, பல்சுவை இதழ் மாதிரி இருக்கிறது. காத்திருப்பு கவிதையை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாமா சங்கர். பங்கஜ்- கண்டிப்பாய் வெற்றி பெறுவார்.

நளாயினி அழகாக கவிதை எழுதுகிறார். காதல் செய்து பார்த்திருப்பீர்கள், காதல் நெய்து? (உண்மையிலே அதானா?). நங்கூரம்சில வரிகளில் நச்சென்றிருக்கிறது. பெண்ணிலக்கியம் படைக்க முயலலாம்.

எம்.கே.குமார்.


 

 
அந்த மாலைப்பொழுது.

நோய் உடலுக்கு. மனம்? அந்த நாட்களில் நான் என் தனி அறையில் படுத்துக்கொண்டிருந்தபோது, அந்தி மயங்கும் நேரத்தில் வீணையின் சோக மீட்டல்கள் கேட்க ஆரம்பிக்கும். என் வீட்டிலிருந்து தெரியும் மலையின் பின்னிருந்து எழுவது போல் மிக மெல்லியதாய் மீட்டல்கள் எழுந்து என் அறையின் ஜன்னல் ஓரம் வரையிலும் வரும்.. 'லம்போதர' என்ற கீதம். நீங்கள் அதைக்கேட்டிருக்கிறீர்களா? ஒருதடவையாவது? என்ன அற்புதமான கீதம்! அது என் மனசைப்பிழியும். இருள் சூழ்ந்த அறையில், குத்து விளக்கின் ஒற்றைத்திரி நிமிர்ந்தெரிய, சுவர்களில் மாய நிழல்கள் அசைய, அந்தப்பெண், வீணையில் விரல்களை அசைக்கிறாள். வீணை ஒலியோடு ஒரு சூட்சுமமான கணத்தில் அவள் குரல் இணைவதும் மற்றொரு சூட்சுமமான கணத்தில் அவள் குரல் நழுவ, வீணை தனித்து ஒலிப்பதும் என்னை வாரிச்சுருட்டும். அவள் எனக்காக அங்கிருக்கிறாள். என் வருகையை எதிர்பார்த்து. என்னைப்பார்க்கவேண்டும் என்பதைத்தவிர அவளுக்கு வேறு துக்கம் இல்லை. நானோ துடித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் ஓடிப்போகமுடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நடந்துபோய்விட முடியும். அவள் இருப்பிடம் எனக்குத்தெரியவேண்டும். அந்த வீணை ஒலி மீதேறி நான் போக முடியுமா? தூரங்களை ஒலி மூலம் கடக்கமுடியுமா?

'ஜே.ஜே.சிலகுறிப்புகளி'ல் திரு. சுந்தர ராமசாமி.

எம்.கே.குமார்.

 
உறவுகள்.

"அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்."
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸ¤க்காய்
அம்மாவும்
அப்பாவும்!

கலாப்ரியா.

எம்.கே.குமார்.

Friday, December 19, 2003

என் வீட்டுக்கருகில் வந்தமைந்துவிட்ட குளம்

 


என் வீட்டுக்கருகில் வந்தமைந்துவிட்ட குளம்.

எனது கனவுகளையும் கழுவி
அவ்வப்போது புதுப்பித்துத்தரும்.

எனது ஏக்கங்களைத் தனக்குள்ளே
வழக்கம்போல முங்கிக்கொள்ளும்.

அவள் குளிக்கையில் மட்டும் அதிகமான
அசைவுகளாய் என்னை ஆட்டும்.

அவளது தாவணியைத்திருட்டுத்தனமாய்
என்னிடம் நனைத்துத்தரும்.

கண்ணை முழித்து நீருக்கடியில்
கனவு காணுகையில்
எருமை வாலால் சுகமாக சொறிந்துவிடும்.

புதுமழையில் என்னைப்போல நனைந்து
உள்ளுக்குள்ளே முத்தமிட்டுக்கொள்ளும்.

கெழுத்தி மீனின் முட்கள் தீண்ட
சுகமாய் என் ரத்தத்தில் கலக்கும்.

எழுபது எண்ணுவதற்குள் எதிர்க்கரையக்காட்டும்
இருபது எண்ணுவதற்குள் எங்களிருவரையும் சேர்க்கும்.

என்றைக்கும் மறப்பதற்கில்லை-
முதல் முத்தம் அதனடியில் அதன் தயவால்.

எம்.கே.குமார்.

 
முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடும் ஒரு படங்காட்டி.

எம்.கே.குமார்.

அழகி படத்தைப்பார்த்துவிட்டு நண்பர்களில் சிலர் 'ஓகேடா..'என்றவாறு போக நான், 'உன் குத்தமா' பாடலிலும் இன்னும் ஒரு இடத்திலும் கண்கலங்கினேன். மனதைப்பாதித்த சிறுவயது ஞாபகங்கள் அலைகளாய் ஓடிவந்து நின்றன. குழந்தைப்பருவத்தில் விளையாடியவர்களுக்கு மட்டும்தான் அந்த இழப்பின் வலி தெரியும். அதன் வீரியம் தெரியும்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தைக்கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச்செல்லும் கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள். செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும். காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப்புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக. தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன.
அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர்.

முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக.

மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை.

அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன.

இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான்.

கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல்.

மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை. பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.

தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை.

படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.

Thursday, December 18, 2003
 


ம்ஹ¥ம். கனவெல்லாம் காணாதே!
எவ்வளவுதான் அழகு என்றாலும்
உன்னைத்தூக்கி அவள் கூந்தலில் வைத்து...

கொடியிடை உடைந்தால்
எனக்கல்லவோ வலிக்கும்!

-வெண்ணிலாப்ரியன்.

 
பயணம்.

கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை.

கலாப்ரியா.

எம்.கே.குமார்.


 
உன்னைப்போல் ஒரு முரட்டுக்காளை.

நாவல் ·பிலிம்ஸ் சுந்தரம் என்பவர் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர். கல்கியில் உறங்குவது போலும் என்றொரு சிறுகதை நான் எழுதியிருந்தேன். அதைப்படித்தோ படித்தவர்கள் மூலம் கேள்விப்பட்டோ சந்திரபாபு என்னைப்பார்க்க விரும்பினார். சந்திரபாபு விரும்பினார் என்றால் அதற்குத்தனி அர்த்தம்.

சந்திரபாபு அக்காலத்தில் நடிகர்கள் எல்லாம் ரசித்துப்பார்க்கத்தகுந்த மதிப்பிற்குரிய பல சிறப்புகள் வாய்ந்த நடிகராய் இருந்தார். அவருடைய அங்க அசைவுகளுக்கு அவரது ரசிகர்கள் அவர் எண்ணாத புதிய அர்த்தங்களைக்கண்டு ஆர்ப்பரித்த காலம் அது.

சந்திரபாபுவின் நடிப்பில் எனக்கும் ஆர்வம் உண்டு. நான் மதிக்கிற நடிகர்களில் ஒருவரான அவர், என்னைப்பார்க்க விரும்பியதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றேன். ஆயினும், ' இன்று போய் நாளை வாருங்கள்' என்று நண்பர் சுந்தரத்திடம் சொல்லிவிட்டேன்.

மறுநாள் அதே நேரத்திற்கு ஒரு பெரிய காரை எடுத்துக்கொண்டு நாவல் ·பிலிம்ஸ் சுந்தரம் என் சிறிய வீட்டுக்கு வந்தார். நானும் வாசலில் அவருக்காக காத்திருந்தேன்.

கவர்ச்சிகரமான வரவேற்பறையில் வரவேற்பதற்கு கூட ஆளில்லாமல் நான் உட்கார்ந்திருந்தேன். இவ்வளவு அலங்காரத்திலும் அந்த வீடு வெறிச்சோடிக்கிடந்தது. சந்திரபாபுவிடம் நான் ஆசைப்பட்டது அவரது ரசனை மிகுந்த உள்ளத்தை மட்டுமே! ஆயினும் என்னை வரவழைத்துவிட்டு வரவேற்பு அறையில் உட்காரக்கூடச்சொல்லாமல் அவர் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தது நாகரிகமாக எனக்குப்படவில்லை.

அவர் குளித்து முழுகி அலங்காரம் செய்துகொண்டு பிறகு எனக்குக் கார் அனுப்பியிருக்கலாமே. மனதிற்குள் 100 எண்ணிவிட்டுப்புறப்பட்டு விடலாம் என காத்திருந்தேன்.

" I am very sorry mr. ............n ! உங்களைக்காக்கவைத்துவிட்டேன்." என்று என்னிடம் சொல்லிக்கொண்டு அவர் வந்தார். அதற்கு முந்திய வினாடி வரை நான் போக நினைத்துக்கொண்டதை எண்ணி வருத்தப்பட்டேன்.

சந்திரபாபுவின் தோற்றம் என்னை வசீகரிப்படுத்தியது. இவரை வசீகரிக்கவேண்டும் என்றே அவர் பலவகையான தோற்றங்கள் தருவார் எனபதை நான் தெரிந்துகொண்டேன்.

what do you like to have? என்று கேட்டார்.

what do you mean? என்றேன் நான்.

i mean anything you want என்றொரு ராஜதோரணயில் மறுபடியும் கேட்டார்.

அப்போது டெலிபோன் மணி அடித்தது. ஒரு பிரபல கவர்ச்சி நடிகை டெலிபோனில் பேசினார்.

அவர் பெயரைச்சொல்லி, Do you want her? என்று அவர் ஹாஸ்யம் பண்ணினார். பிறகு ரிசீவரை என்னிடம் கொடுத்து பேசச்சொன்னார்.

ஒரு பெண்ணுக்குத்தரவேண்டிய மரியாதை தவறாமல் அந்த நடிகையிடம் நான் பேசினேன்.

Whisky or Brandy என்றார் மறுபடியும்.

14 வயது முதற்கொண்டே நான் மதுவின் இன்பத்தை அனுபவித்தவன்தான் என்றாலும்...யோசித்தேன்.

மதுவை அளவோடு அருந்துவது எனக்குப்பிடிக்கும். மது அருந்தப்பிடிக்காதவர்களையும் பிடிக்கும். குடிப்பது ஒரு பாபமோ குற்றமோ ஒழுக்ககேடோ அல்ல என்று திடமாகத்தேர்ந்து தெளிந்தவன் நான். இது குறித்துத் திருவள்ளுவரிடமும் காந்தி அடிகளிடமும் வாய்ப்பிருப்பின் நான் வாதாடி எனது கட்சியை நிரூபிப்பேன்.

soda or water? prefer on the rocks..'ஆன் தி ராக்ஸ்' என்றால், வெறும் ஐஸ் கட்டிகள் மிதக்க விஸ்கியை அருந்துவது என்று நான் அன்றைக்குத்தான் தெரிந்துகொண்டேன். ஸ்காட்ச் விஸ்கியின் பெருமைகளைப்பற்றிப்பேச ஆரம்பித்துவிட்டார் சந்திரபாபு.

ஒரு சந்தோசத்திற்காக நான் குடித்து போலீஸ்காரர்கள் கையில் சிக்கி அவமானப்படுவதற்கு நான் அஞ்சியதை வெளிப்படையாகச்சொன்னேன்.

சோபாவில் இருந்து ஒரு துள்ளு துள்ளி இடி இடித்தது மாதிரிச்சிரித்தார் சந்திரபாபு.

டெலிபோன் ரிசீவரைக்கையில் எடுத்துக்கொண்டு நகரத்தில் இருந்த உயர் போலீஸ் அதிகாரியின் நம்பரை டயல் செய்தார்.
அந்த அதிகாரியிடம் மிகவும் நட்புரிமையோடு ' டேய்' என்று பேசினார். அவரிடம் என்னைப்பற்றிப்பெருமையாகப்பேசி அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை நான் எனது வீட்டில் மது விருந்து அளித்து உபசரிக்கப்போகிறேன் என்றார். டெலிபோனை என்னிடமும் கொடுத்து பேசச்சொன்னார். குடித்திருக்கும்போது போலீஸ்காரருடன் போனில் பேசமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்.

இப்படியாக ஆரம்பித்த நட்பு நாள் தவறாமல் மாலை நேரத்தில் மது இன்பத்தைத்தொடர்ந்து அனுபவிப்பவனாக என்னை ஆக்கிற்று.

"........"- என்னை அப்படி முதலில் அழைக்க ஆரம்பித்தது சந்திரபாபுவே. " நீங்கள் உண்மையிலேயே நான் இதுவரை சந்தித்திராத அரிய எழுத்தாளர் தான்." என்று ஆங்கிலத்தில் பாராட்டினார்.

அத்தகைய சந்திரபாபுவுக்கு படிக்கத்தெரியாது என்பதை இன்னொரு நிகழ்வின் மூலம் அறிந்தேன்.

சந்திரபாபுவிற்கு இயற்கையிலே நடிப்புத்திறன் பாட்டுத்திறன் ஆகியவை எல்லாரும் விரும்பும் வகையில் அமைந்திருந்தது.

அவற்றையெல்லாம் ஒரு ஊதாரி போல இந்தச்சினிமா உலகத்துக்கு வாறி இழைத்ததன் விளைவாய் அவருக்கு அதீதமான ஏற்றத்தையும் எதிர்பாராத வீழ்ச்சியையும் இந்தச்சினிமா உலகமே கொண்டு வந்துவிடும் என்று அக்காலத்தில் நான் அஞ்சினேன். என் அச்சத்தை உரிமையோடு பலமுறை அவரிடம் கூறினேன்.

மிகவும் உருக்கமான நேரங்களில் அவர் திடீரென்று சிரிப்பார். அதே போல சிலநேரங்களில் அழுவார். இப்படிக்கண்ணீர் விடுகின்ற அதே மனிதன் சில சமயங்களில் காலரை உயர்த்திப்பிடித்துக்கொண்டு 'I am Babu" என்ற வல்லமை பேசுகிற காட்சி இன்னும் ரசமாக இருக்கும்.

**********
1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் நாள் 'உன்னைப்போல் ஒருவன்' சென்சார் ஆயிற்று.

இந்த வருடத்திற்கான அவார்டுக்குப்படத்தை அனுப்ப வேண்டும் என்கிற அவசரத்தால் வருசக் கடைசி நாள் தேதியிட்டு சென்சார் சர்டி·பிகேட் வாங்கிவிட நாங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தோம்.

படமும் சென்சார் முடிந்து போட்டிக்குப்போயிற்று.

முதல் பரிசுக்கும் மூன்றாம் பரிசுக்கும் சத்யஜித்ரேயின் சாருலதாவும் உன்னைப்போல் ஒருவனும் போட்டிபோட்டன.
அந்தத்தேர்வில் எனக்கும் ஒரு ஓட்டு அளிக்கும் உரிமை தரப்பட்டிருந்தால் நானும் கூடச் சாருலதா படத்திற்குத்தான் எனது ஓட்டைப் போட்டிருப்பேன். உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு அல்ல.

எனவே மனத்தளவில் மூன்றாம் பரிசு பெறத்தயாராகி விட்டேன். ஆனால் நண்பர்கள் சிலரும் டெல்லி பத்திரிகை வாசிகளும் உன்னைப்போல் ஒருவன் முதற்பரிசை பெறவேண்டும் என்று என்னிடம் வாதிட்டார்கள். சிலர் டெல்லியில் இருந்து வெற்றிபெற்றதாக தந்தியும் அனுப்பிவிட்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தபடியே இது மூன்றாம் பரிசைப்பெற்றது. கவனிக்கவும் . அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசு பெற்ற படம் உன்னைப்போல் ஒருவன். கை கொடுத்த தெய்வம், பழனி, சர்வர் சுந்தரம் ஆகியவை எட்ட முடியாத முயன்று வீழ்ந்த பரிசு அது.

சிலர் எனது படத்தின் நோக்கத்தையே இழித்தும் பழித்தும் பேசினர். அவர்களில் ஒருவர் எம்.ஜி.ராமச்சந்திரன். அவர் கோவையில் தந்த பேட்டியன்றில் ' உன்னைப்போல் ஒருவன் படம் தமிழ்நாட்டின் தரித்திரங்களையும், அவலங்களையும், கேவலங்களையும் வெளிநாட்டில் போட்டுக்காட்டிப் பணம் பண்ணப்பார்க்கிறது' என்று தெரிவித்திருந்தார்.

அதே சமயம், கிருஷ்ணவேணி தியேட்டரில் அந்தப்படத்தைபார்ப்பதற்காக, 'நேரமாகிறது' என்கிற பதைபதைப்போடு கருப்பு மனிதர், குள்ளமான உருவத்தவர், வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, தோளில் இருந்த துண்டைக் கையில் வைத்துக்கொண்டு ஓடிவந்தார். எனது பட வினியோகதஸ்தரான மா. லட்சுமணன் அவர் பின்னாலேயே ஓடிச்சென்று அவரை உட்காரவைத்துவிட்டு என்னிடம் வந்து, சி.என்.ஏ படம் பார்க்க வந்திருப்பதாகச்சொன்னார். எனக்கும் அவருக்கும் பரிச்சயமோ பரஸ்பர ஈடுபாடோ இருந்ததில்லை. மேலும் தான் கடுமையாக விமர்சிக்கின்ற ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் அவர். எல்லாத்தலைவர்களைப் போலவே அவருக்கும் என் படம் ஈர்த்திருக்கிறது. இதற்காக நான் போய் அவரை அறிமுக செய்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

என்னை என் நண்பர்கள் அவரைச்சென்று வரவேற்கச்சொன்னார்கள். படம் பார்க்கும் அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கட்டும் என்று அவரிடம் சொல்லாமல் பணிகளில் நான் முனைந்துவிட்டேன்.

என்னை முரட்டுத்தனமானவன், பிடிவாதக்காரன் என்றுதான் எல்லாரும் கருதுகிறார்கள். அவ்விதம் கருதப்படுவதையே நான் விரும்புகிறேன் என்பதால் அவ்விதம் ஒரு தோற்றத்தை எற்படுத்திக்கொண்டேனேயல்லாமல் எனது சொந்த வாழ்க்கையில் நான் பிடிவாதக்காரனாகவோ, முரட்டுத்தனமான கொள்கை பிடிப்பு உடையவனாகவோ நடந்து கொண்டதே இல்லை.

த. ஜெயகாந்தன். 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்களி'ல்.

( "-------" - ஜே.கே.)

எம்.கே.குமார்.

 


துணைத்தலைப்பு.

நம் சந்திப்பு அன்று நிகழாமல் போனது

பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமோ என்னவோ
மரத்தடியை ஏற்கெனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து

புல்த்தரை
மீதமரந்த உடனேயே
கலையைத்தவிக்கும்
எறும்புப்புற்றைக்கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக்கொண்டிருந்த பக்கத்தை
உடனே எடுக்கத்தோதுவாய்
உன் சுட்டு விரலை
நெடு நேரமாய்- ஒரு
புத்தகத்துக்குள்ளேயே
வைத்திருந்தாய்.

துணைத்தலைப்புகளையே
பார்த்துக்கொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றதில்,
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிணாமங்களை
தவறவிட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று.

கலாப்ரியா.

Wednesday, December 17, 2003
 


ஊர் ஓரக்குளத்தில்

ஊற்று நீர்ச்சலசலப்பில்

எரிமனம் பறி போகும்

அதில் நீராட வரும்

அவள் இடையாடலைல்

என்னில் நான் போகும்

ஒன்றன் மேல் ஒன்றமுங்கும்

கரையோரத்தவளைகளில்

தோப்பிம் சிலுசிலுப்பில்

அவளின் கன்னி போகும்

பட்டணத்துச்சங்கரனை

பாவி அவள் மணந்த பின்னால்

எதுதான் போகாது?

- சுப்ரமணிய ராஜூ. செப்டம்பர்1971


  
ஆங்கிலத்திலும் வலைக்குறிப்பு வைத்திருக்கும் பெங்களூர் கண்ணன் அவரது வலைக்குறிப்பில் 'சுத்தமாக ஒன்றுக்கும் உதவாத விஷயத்தைத்தான் நீங்கள் பார்க்கமுடியும் எப்போதாவது சில நல்ல விஷயங்களைப்' பார்க்கமுடியும் என்கிறார். சாமிக்கு ரொம்பத்தான் தன்னடக்கம். விஜயபுரத்து விஜயம் படியுங்கள். நன்றாக எழுதுகிறார்.
மார்கழி மாதம் என்றதும் சிலபேருக்கு எப்படி சங்கீத ஞாபகம் வந்துவிடுகிறதோ அப்படி எனக்கு பொங்கல் சோறும் சுண்டல் கடலையும் ஞாபகம் வந்துவிடும். சும்மாவா? 'இம்பர்மேசன் ஈஸ் வெல்த்'தாச்சே! ஆஹா காலையில் பெண்கள் குளித்து முடித்து தலைமுடியைத்தவழவிட்டு அந்த சிங்கார மன்னனை பார்க்க ஆண்டாளைப் பாடிச்செல்கையில் நமக்கு அந்த சுகானுபவங்களையும் தாண்டி சுண்டக்கடலை வந்து நிற்கிறது மனதில். பெருமாள்கள் கொடுத்துவைத்தவர்கள். எத்தனை ஆண்டாள்கள்!

கார்த்திக் என்றாலே 'மௌன ராக' காலங்களில் பெண்களிடையே ஒரு கிக்கு இருந்தது நிறையப்பேருக்கு நினைவிருக்கலாம். இன்றைக்கு இரண்டாவது பிள்ளையை பத்தாம் வகுப்புத்தேர்விற்கு தயார் செய்துகொண்டிருக்கும் வேளையில் 'மிஸ்டர் சந்திரமௌலி' இளைமையான நினைவுகளாய் வந்துபோகலாம். எல்லாமே கனவுகள்தானே! ( இப்போதும் கார்த்திக்கை விரும்பும் சில வயதானவர்களும் இருக்கலாம்!)
இந்த கார்த்திக் பொ. செ யிலிருந்து வருகிறார். வரலாறு என்று எழுதிவிட்டு பாய்ஸ் படத்தை விமர்சிக்கிறார். சுவையாக இனிமேலாவது ஏதாவது எழுதுவாரா என்று பார்க்கலாம்.

கார்த்திக்கின் அந்த வலைக்குறிப்பு அப்படித்தான் இருக்கிறதென்றால் இதோ இதில்கலக்குகிறார் மனுஷர். எழுத்துப்பிழைகள் அதிகமாக இருக்கின்றன. பார்த்துக்கொள்ளுங்கள் கார்த்திக். அண்மையில் நடந்த ஒரு விபத்தைப்பற்றி எழுதியிருக்கிறார். ஒரு விபத்தை நாம் கண்ணால் பார்க்கும்வரை உலகம் இனிமையானது மனிதர்கள் நல்லவர்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருப்போம் தோழரே! உங்களையும் உங்கள் நண்பரையும் போல ஒருசிலர் இருக்கலாம். ஹரி அண்ணாவே, "பாண்டியா நீ புலவனடா!" என்று இவரது விருத்தம் குறித்து பாராட்டியிருக்கிறார்.

பொ.கருணா மிகத்திறமையானவர். நிறைய எழுதுகிறார். நிறைவாக எழுதுகிறார். காரின் சொகுசு பற்றி பரிபாடலில் வரும் பாடலைப்படித்திருக்கிறீர்களா? இங்கே படியுங்கள். சார், 'கூக்காட்டுகிறது' ன்னா என்ன அர்த்தம். உண்மையிலே நிறைய வார்த்தைகள் தெரிந்துகொள்ளலாம் இங்கே. கணையாழியிலும் எழுதியிருக்கிறார்.

காசி பெரியவீட்டுக்கு இன்றும் போயிருந்தேன். ரேடியோ பற்றியெழுதியிருக்கிறார். வாழ்க்கையில் நான் மிகவும் நேசிக்கும் பொருட்களில் ஒன்று ரேடியோ. சரோஜ் நாராயணசாமியோ, பி.ஹெச் அப்துல்ஹமீதோ அடிக்கடி காதுகளில் ஒலிப்பார்கள். (சரோஜ், பெண் என்பது சில வருடங்களுக்கு முன்னால்தான் எனக்குத்தெரிந்தது.)

குருவி செவ்வாய் வரை பறக்கிறது. செவ்வாயின் சில விஷயங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. எப்படியும் எனது பேரன் எனக்கு செவ்வாயில் இருந்து இ- அஞ்சல் அனுப்புவான் என்று நான் எதிர்பார்க்க முடியுமா குருவி?

மாலனின் வலைக்குறிப்பை என்னால் படிக்கமுடியவில்லை. அதற்குப்பதிலாக ஹைக்கூவை ஒரு நோட்டமிட்டேன். உதயாவும் எழுதியிருக்கிறார். சில ஹைக்கூ பூக்கள் கலக்கலாய் இருக்கின்றன.

குறள்வழி
மணிவண்ணன் ஜூலை 14க்கு அப்புறம் பிஸியாகிவிட்டார் போல. குறளைப்பற்றி யார் என்ன எழுதினாலும் நான் படித்துவிடுவேன் ஐயா. எழுதுங்கள்.

எம்.கே.குமார்.

 


மீன்குஞ்சுகளிருந்து
வண்டுகள் வரை!

இந்த ஆண்களுக்கு
விவஸ்தையே இல்லை.

வருத்தத்தில் உள்ளேயும்
வெளியேயும் நான்.

- வெண்ணிலாப்ரியன்.

 
நாளைய நாள்.

அவர்களுக்கென்று சில தனிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. இந்தியத்தமிழனை விட இன்னும் அதிகமான திராவிடக்கலர். கழுத்திலும் கைகளிலும் வித விதமான பாசி மாலைகள். காதுகளில் தினம் ஒரு பொத்தலில் புதிது புதிதாய் வளையங்கள். புதிதாய் வேலை கற்றவன் காட்டிய தொழில் நேர்த்தி தலைமுடிகளில். கிருதாக்களிலும் மீசைகளிலும் ஆங்கில எழுத்துக்கள் அத்தனையும் முடிந்து இப்போது புதிதாய் இன்னபிற மொழி எழுத்துக்களும் வடிவங்களாக. இப்போது விருமாண்டியும்.

சட்டைகளிலும் கால்சராய்களிலும் ஏகப்பட்ட கிழிசல்கள். ஏழ்மைக்கிழிசல்கள் அல்ல. இவை அத்தனையையும் தாண்டி அவர்கள் அருகில் பார்த்தால் கருப்பாயிருந்தாலும் களையான முகங்களோடு சரியான அளவுகளோடு லோ கட் மேலாடைகளோடு ஒயிலாக பெண்கள்.

ஒரு வாரத்திற்கு முன்னால் நண்பர்களிருவர் ஓவர்டைம் முடித்துவிட்டு கொஞ்சம் லேட்டாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் இனிமேல் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் டாக்ஸிக்காக அவர்கள் அங்கு காத்திருக்க, அவர்களில் பல்லிபோல ஒல்லியாய் இருந்தவன் வந்து ஒரு அதிகாரத்தோடு ஆரம்பிக்கிறான்.

தமிழுதானே? எந்தெ ஊரு?

அமைதியாய் இவர் இருக்க, ஏய்..ஒன் கேண்ட்போனைக்கொடு. ஒரு அர்ஜெண்ட் கால் பண்ணனும்.

பல்லியோடு வந்த அந்த பூசணிக்காய் முன்னால் வந்து, ஏய்..கேக்குறானுல்ல, தமிழுதானே. எந்த ஊரு. மதுரேயா..நா மதுரே. சண்டியரு மதுரே. கேண்ட் போனு கேக்குறானுல்லெ. கொடு.

நண்பருக்கு கடுப்பாகிறது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் என்று. முகத்தருகே குப்பென்று மது வாடை.

இல்லேங்க, நாங்க பண்ணிக்கிட்டு இருக்கோம். டாக்ஸிக்காக வெயிட் பண்றோம். சாரி. தரமுடியாது.

ஏய். எந்த ஊரு? நா மதுரே..மதுரே. மதுரே தெரியுமுல்லெ. மிரட்டல் தெளிவாகத்தெரிகிறது.

தெரியாதுங்க. நான் இங்கே பெர்மிட். வந்து 5 இயர்ஸ் ஆச்சி. ஹேண்ட் போன் நாங்க யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம். இப்போ தரமுடியாது.

பெர்மிட் ஹோல்டர்? நாங்க சிங்கப்பூ....ரியன்..யு நோ சிங்கப்பூ..பூரியன். ஊர்லெ இருந்து பொழக்க வந்துட்டு கேண்ட் போன் தரமாட்டேங்குறெ? என்னா? போலீசு கூப்பிடுவாயா? கூப்புடு. சிங்கப்பூரியன். வி ஆர் சிங்கப்பூரியன்...நோ?

நண்பருக்கு டாக்ஸி வர அதில் ஏறி கிளம்புகிறார்.

போலிசில் சொல்ல நிரம்ப நேரம் தேவைப்படாது. ஏதாவது பிரச்சனை என்றால் இரண்டு நாள் லீவ் போட்டால் நமக்கு சம்பளம் கட். லேசா ஏதாவது அடிபட்டால், ஹாஸ்பிட்டல் செலவு ஒரு மாத சம்பளத்தை அப்பளம் போல முழுங்கிவிடும். தேவையில்லாத வீண் பிரச்சனை நமக்கு என்றார் நண்பர், தாடையில் ஒன்று விட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லியபிறகு.

ஒரு மாதத்திற்கு முன் மாலை வேளையில் நான் இரவு வேலைக்குக்கிளம்பிச்சென்ற நேரம். வழியில் இரண்டு சரியான அளவு பெண்கள் என்னிடம் வந்தார்கள்.

நீங்க தமிழ்தானே...?

ஆமாம். என்ன விஷயம்?

நாங்க எங்க கூட்டாளியைப்பாக்க இங்கெ வந்தோம். நேரம் ஆயிட்டது. அவங்களைப்பாக்க முடியலை. சோ ச்சு காங் போகணும். ஒரு இருபது வெள்ளி தாரீங்களா?

இருபது வெள்ளி.? எதுக்கு? சோ ச்சு காங் அடுத்த ரயில்வே ஸ்டேஷன். வேணுன்னா வாங்க டிக்கட் எடுத்துத்தாரேன்.

அருகில் வந்த பெண்ணின் மூச்சில் மது வாடை பளீர் எங்க,

நான் சாரி சொல்லிவிட்டு கிளம்புகிறேன். நான்கு எழுத்து ஆங்கில கெட்ட வார்த்தையை அவள் சாதாரணமாக உபயோகப்படுத்த அது எனக்குத்தெரியாமலில்லை.

இன்றும் இந்தியர்கள் ( குறிப்பாகத்தமிழர்கள்) ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, பக்கத்து இருக்கையில் வந்து அமர நிறையவே பயப்படுகிறார்கள் சீனர்கள். குறிப்பாகப்பெண்கள் அரண்டு போயிருக்கிறார்கள்.

மலாய் இனத்தவன் நாலு குழந்தை பெற்ற பிறகும் இன்னொரு பெண்ணிடம் திருமண ஆசை காட்டி புதருக்குள் அழைத்துச்செல்கிறான்.

சீன இனத்தவன் பெட்டிங்கில் தன் உயிரை வைத்து விளையாடத்தயாராகிறான். அனைத்தும் முடியும் தருவாயில்.

தமிழினத்தவன் அதிகாலை ஐந்து மணிக்கு கையில் புலிக்குட்டியை பிடித்துக் குடித்துவிட்டு பொண்டாட்டியை நொறுக்குகிறான். ( புலிக்குட்டி= புலி மார்க் பியர்.)

இன்றைய தலைமுறை இங்கு இப்படித்தான் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதன் நிலையை நினைக்க 'பாவமாய்' வருகிறது.

எம்.கே.குமார்.


 


கொம்புலே பூவெ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சி
கன்னிப்பொண்ணை கைபுடுச்ச காலை மாடே
காம்பிருந்தா பால் கறக்கும் பசுமாடே!

"இந்தக்காளைய அடுக்குறவங்களுக்கு பதினெட்டுப்பட்டி ஜமீன் பொண்ணு கெடக்கிமாம்போய்! நா எறங்கிட்டேன். யாராவது வறீகளா?"


 
ஆ...ரம்பம்.

அசோகமித்திரனை ஒரு பிரபல கதாசிரியன் என்று விவரித்துக்கொள்ளவேண்டும் என்பதால்தான் நீங்கள் அடிக்கடி அவரது சிறுகதைகளைப்பற்றிப்பேசுகிறீர்கள். அவை கொஞ்சமும் தகுதி படைத்தவை அல்ல. கணையாழியின் அபிமான வாசகன் என்ற முறையில் அன்புடன் எச்சரிக்கிறேன். இடையிடையே கொஞ்சம் தரமாக எழுதும் ஒரு இரண்டாந்தர எழுத்தாளர்தான் அசோகமித்திரன்! பக்கத்திற்குப்பக்கம் அவரைப்பற்றி எழுதி, அவரை லா.ச. ரா விற்கு இணையாகவோ ஜெயகாந்தனுக்கு இணையாகவோ ஆக்கிவிட நீங்கள் முயன்றீர்கள் என்றால் முடிவு, கணையாழியைத்தான் இரண்டாந்தரப்பத்திரிகையாக்கிவிடும்.

மண்டல் பழனிச்சாமி. கணையாழி செப் 1971.

தரம் பிரிப்பதற்கும் ஒரு தரம் வேண்டும். கணையாழி இரண்டாந்தர பத்திரிகை ஆகிவிட்டால், தரத்தின் எல்லைக்குள் வந்தும் வராத புதியஎழுத்தாளர்களுக்கு முழு இடம் அளித்துவரும் கணையாழி முன்றாம் நான்காம் தர பத்திரிகை ஆகிவிடுமா?

பா. விஜயராகவன்

தண்ணீரை இன்னும் நாலு தரம் படியுங்கள். புரியும். ஒரு மகத்தான எழுத்தாளரை விமர்சிக்கையில், அவரது எழுத்திற்குப் பதிலாக தங்களுடைய முதிராத தன்மை விவரிக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ளட்டும்.

சென்னை. ஸ்ரீனிவாசன்.

(ஆக, என்கிட்டே தப்பு இல்லே. அப்போ வாசகர்கள் அடிச்சுக்கிட்டாங்க. இப்போ....:) )

எம்.கே.குமார்.

 


எவ்ளோதான் எட்டினாலும்
எல்லாப்பூக்கும்
முத்தா முடியாது போல.
இதுக்காவது முடிஞ்சதே!

சந்தோசத்தில்
பகலில் ஒதுங்கி
இரவில் மட்டும் ஒளிரும்
விளக்குகள்


Tuesday, December 16, 2003
 
நல்லார்க்கடியார்.

நல்லார்க்கடியார் நல்லவர். ' ஒற்றைக்கை'யால் எத்தனை விதமான அபிநயங்களை மேற்கொள்ளமுடியும் என்று படங்களின் மூலம் விளக்குகிறார்.
மொத்தம் 33 அபிநயங்கள் இருக்கின்றனவாம்.

இனி அந்த ஒற்றைக்கைகளின் அபிநயங்களைப்பார்ப்போம்.

1. கொடிக்கை: மேகம் மிதந்து செல்லல், காற்று வீசுதல், ஆசி வழங்குதல்.
2. முப்பாகக்கொடிக்கை: கிரிடம் விளக்கு போன்ற மங்களகரமான பொருட்களைத்தொடும் முறை. தலை கோதிவிடுதல்.
3. கத்திரிக்கோல் அலகுக்கை: வீழ்தல், விபரீதம், மரணம், வேற்றுமை ஆகியன குறிக்கும் வகை.
4. விளக்குக்கை: மங்கல நிகழ்ச்சி, அறிவு நிலை எய்துதல்.
5 வளைவுக்கை: நீர் வாங்கிக்கையில் குடிப்பது, புயலால் வளைவது.
6. இளம்பிறைக்கை: சோகத்தில் கன்னத்தில் கை வைத்து இருத்தல் போன்றது.( கொடிக்கையில் மோதிர விரலும் சுட்டு விரலும் முன் வளைந்திருத்தல்)
7. கிளி மூக்குக்கை: அம்பினை எய்தல், மார்பில் வைத்து ரகசியம் சுட்டுதல்
8. முஷ்டிக்கை: உறுதிப்பாடு, நிலைத்தன்மை, கொண்டையைப்பிடித்து இழுத்தல்.
9. நண்டுக்கை: வெற்றிலை மடித்து அளித்தல் மென்மையாகப்பேசுதல்
10. ஊசிக்கை: இந்தக்கை ஒற்றை என்னும் பொருள் குறிப்பது. பரம்பொருளைச்சொல்வது ஒன்றே என்று. எச்சரித்தல்.
11. தாமரை மொட்டுக்கை: தாமரை மொட்டு, பழங்கள், எறும்புப்புற்று, மாதரின் வட்டக்கொங்கை.
12. சிற்றுண்டிக்கை: சிறுவர்கள் அணியும்கிண்கிணி வடிவம், இளநங்கையின் நகில், சிறு குருவியாம்.
13. விளாம்பழக்கை: பால் கறத்தல், கூடை பின்னுதல்
14. விற்பிடிக்கை: கட்டை விரல் உயர்ந்து நின்று ஆற்றல் வல்லமை என்பதைச்சொல்வது.
15. குடங்கை: தேரின் குடங்கள், பெண்கள் தலையில் குடங்களைச்சுமந்துவருதல், கரக ஆட்டம்.
16. அலர்தாமரைக்கை: இது வட்டமான பொருட்களையும் அழகினையும் குறிக்க. முழுநிலவு, உதயசூரியன் ஆகியன.
17. தேனீக்கை: வண்டு மலரில் தேனுண்டு உறங்கிக்கிடக்கும் நிலையைக்குறிப்பதாம். அமைதியான தியான நிலையாம்.
18. சேவற்கை: கொக்கு ஒட்டகம் கோழி காக்கை முதலியனவும் மணலில் சிறுபிள்ளைகள் ஆட்காட்டி விரலால் எழுதுதல் போன்றதும்
19: பேய்க்கை: கட்டை விரல் கீழேயும் மற்ற விரல்கள் நீண்டு வளைந்து பேய்த்தோற்றம் தருதல்
20: மொட்டுக்கை: குமுத மலர், மன்மத பானம், வாழைப்பூ வடிவம்.
21. பிண்டிக்கை: கூட்டுறவு. ஐந்து விரல்களும் சேர்ந்த நிலை.
22. தெரிநிலைக்கை: மலர்ந்த மலர் குறிக்கும் வடிவம்
23. மெய்நிலைக்கை.: மூன்று நிலைகள், மூன்று கடவுள் மூவுலகம் என குறிக்கும் வடிவம். ( பாபா முத்திரைக்குப்பக்கத்திலே வருதுங்க)
24. உன்னக்கை: இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றைக்குறிக்கும்.
25. மண்டலக்கை: எட்டுக்கால் பூச்சி சுருண்டு கிடப்பது போன்றதாம்.
26. சதுரக்கை: இந்தக்கை சிறிதளவு என்பதை உணர்த்துவது. கொஞ்சம் கொடு கொஞ்சம் இரக்கம் காட்டு என்பதற்கு.
27. மான் தலைக்கை: மிருகத்தின் தலை போன்றதாம். (பாபா முத்திரையில் கட்டை விரலை நீட்டிவிட்டு ஆட்காட்டி விரலை மடக்கினால் வருகிறது.)
28. சங்குக்கை: வெற்றி, கோயில் வழிபாடு
29. கருவண்டுக்கை: வண்டு சுற்றிச்சுற்றி வருதல் போன்ற தோற்றம் தருவதாம்.
30. இலதை: வளைத்தல் போன்ற தோற்றம் தருவது.
31. புறவுக்கை: காதல் ஒன்றினைப்பு, சமாதானம், இணைபிரியாமை, தாயன்பு.
32. மகரமீனக்கை: மகரமீன் குறிக்கும் செய்திகள்.
33. வலம்புரிக்கை: வலம்புரித்தோற்றம்.

நன்றி: HAND BOOK OF TAMIL CULTURE & HERITAGE.

எம்.கே.குமார்.

 

 
வெறுமை.

விரிந்த பொழுதினெல்லாம்
வெறுமையே பொங்கித்தள்ள
கழிவிரக்கத்துடன்
நிரந்தரமாய்
சுருங்க ஆரம்பித்தது
அது.

எம்.கே.குமார்.

 
நீண்ட பயணம்.

இந்தியாவுக்கும் மேற்கிந்தியத்தீவுக்குமான ஐந்து கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன. சென்றமுறை இந்தியா மேற்கிந்தியத்தீவுகளுக்கு விஜயம் செய்தபோது ஆட்டங்களின் இறுதி முடிவாக ரப்பர் வெற்றி பெற்றுத்திரும்பியது. இப்போது மேற்கிந்தியர் இந்தியாவுக்கு விஜயம் செய்து ரப்பரை அவர்கள் திரும்ப ஜெயித்துப்போகிறார்கள்.

மேற்கிந்தியத்தீவுக்காரர்கள் 1974 ம் ஆண்டு இறுதியில் தங்களது இந்திய விஜயத்தைத்துவக்கியபோது இந்திய ஆட்டக்காரர்களும் ஆட்டப்பிரியர்களும் மிகுந்த மனச்சோர்வில் இருந்தார்கள். அதற்குத்தகுந்தாற்போல மேற்கிந்தியத்தீவுக்காரர்களுடன் ஆடிய முதல் இரண்டு ஆட்டங்களும் இந்தியாவுக்குப்படுதோல்வியை அளித்தன. அனேகருக்கு மேற்கிந்திய ஆட்டக்காரர்களின் விஜயம் மிகச்சாதாரணமான உற்சாகத்தைக்கூட அளிக்கவில்லை. உற்சாகப்படுவதற்கு என்ன இருக்கிறது?

அப்படிப்பட்ட தருணத்தில்தான் இந்தியா கல்கத்தாவில் ஆடப்பட்ட மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தை ஜெயித்தது. மேற்கிந்தியத்தீவு பெற்றது போன்ற அமோக வெற்றியாய் இது அமையாவிடினும் வெற்றி தோல்வி எண்ணிக்கையில் மேற்கிந்தியருக்கு தோல்வி என்றே அமைந்தது. அடுத்து நடந்த சென்னை ஆட்டம் அப்படியே தமிழ் சினிமா முறையில் அமைந்தது. இந்திய ஆட்டக்காரர்கள் சரிவாய்ச்சரிந்து 190 க்கு ஆட்டமிழந்தால் அடுத்து ஆடிய மேற்கிந்தியர்கள் அதற்கு இணையாக 192க்கு ஆட்டம் இழந்தார்கள். அவர்களுடய இரண்டாவது இன்னிங்க்ஸில் அந்த அளவு ஓட்டங்களைக்கூட எட்டவில்லை. இந்தியா சரியாக நூறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மீண்டும் வெற்றி தோல்வி கணக்குப்பார்த்தால் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இணையாக 2 -2 என்று இந்தியா சம அந்தஸ்து பெற்றிருந்தது. ஆனால் பம்பாயில் நடந்த கடைசிப்போட்டி சந்தேகமின்றி எது சிறப்பான கோஷ்டி என்று காட்டிவிட்டது.

பொதுவாக நம் நாட்டில் காணப்படும் ஒரு போக்கு - வெற்றியடைந்தால் நிலை தெரியாமல் போவது, தோல்வியடைந்தால் ஏறக்குறைய , தற்கொலை செய்து கொள்ளப்போவது போன்ற சோர்வை மேற்கொள்வது - அப்படி இது எழுதப்படவில்லை. இந்திய ஆட்டக்காரர்கள் அவர்களால் முடிந்த அளவு நன்றாகவே ஆடினார்கள். ஆனால் ஓட்டங்கள் எடுப்பது என்னும் அம்சத்தில் மேற்கிந்திய ஆட்டக்காரர்கள் அசகாய சூரர்களாக இருந்தார்கள். மேற்கிந்திய ஆட்டக்காரர்களின் தலைவரான லாயிட் ஒருவரே திரும்பத்திரும்ப தன் கட்சியைத்தொடமுடியாத உயரத்திற்குத்தூக்கியும் இந்திய ஆட்டக்காரர்களைக்கலங்கடித்தார். 1930 - 1950 ஆம் ஆண்டுகளில் பிராட் மேன் என்னும் ஆஸ்திரேலியா ஆட்டக்காரர் பற்றிக்கதை கதையாகச்சொல்வார்கள். இங்கிலாந்துப்பத்திரிகைகளில் 'அவன் அவுட்' (He's Out) என்று தலைப்பு வந்தாலே பிராட்மேன் அவுட் என்று அர்த்தம், அந்த அளவுக்கு பிராட்மேன் அவுட்டாவது செய்தியாக இருந்தது. லாயிட்டின் (திராவிட்டின்) ஆட்டத்தைப்பார்க்கும்போது பிராட்மேன் காலத்தைக்கற்பனை செய்துகொள்வது எளிதாகிறது.

இந்தியா சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இதுவரை மகத்தான அல்லது பிறர் பொறாமைப்படும் படியான நிலையை வகித்ததோ அடைந்ததோ கிடையாது. சில டெஸ்ட் பந்தயங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்த போதிலும் வெகு பல பந்தயங்களில் மிகவும் பரிதாபமாகத்தோற்றிருக்கிறது. நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் இந்தியர்கள் வெற்றிக்கென ஆடுவதில்லை, முதலிலிருந்தே இரண்டாவது இடம் மூன்றாவது இடம் என்பதை நினைவில் கொண்டே ஆடிவருகிறார்கள். இது நமது மரபின் கலாச்சாரத்தொடர்ச்சியோ எனத்தோன்றுகிறது.

பல லட்சம் கோடி ரூபாய்கள் போட்டு நமது நாட்டில் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் கட்டப்படுகின்றன. ஆட்டம் பார்க்க இப்போது நூற்றுக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் தேர்வும் கூட மிகவும் சிக்கலும் பலர் குற்றம் சாட்டும் விதத்திலும் நடக்கிறது. ஆட்டக்காரர்களிடம் ஒருவரோடு ஒருவர் விளையாட்டான போட்டி இல்லாமல் வெட்டுப்பழி குத்துப்பழி மனப்பான்மை இருப்பதையும் நாம் உணராமல் இருக்கமுடியவில்லை. கிரிக்கெட் ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது.

நாட்டின் பல பகுதிகளில் வறட்சியாலும் வறுமையாலும் மக்கள் வேர்களையும் தழைகளையும் இன்றும் தின்னக்காணும்போது கோடிக்கணக்கில் செலவும் கோடிக்கணக்கில் உழைப்பு மணியிழப்பும் உண்டு பண்ணும் இந்த கிரிக்கெட் ஆட்டத்தை நாம் ஆடத்தான் வேண்டுமா என்றும் தோன்றுகிறது. நம் நாட்டில் இன்னும் ஒழுங்கான ரஸ்தாக்கள் எவ்வளவோ இல்லை. ரயில் பிரயாணம் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. தண்ணீர் வசதி, கல்வி வசதி, மருத்துவ வசதி முதலியனவும் முன்னேறுவதற்கு மிக மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தச்சூழ்நிலையில் இந்த 'பெரிய வியாபார' ஆட்டங்கள் தேவைதானா, சில ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்தால் என்ன என்று பலருக்குத்தோன்றுவது நியாயமே.

- அசோகமித்திரன். 1975 பிப்ரவரி.

இந்தச்சூழ்நிலையில் 'ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ' என நாம் குதிக்கவும் வேண்டுமா என்று அசோகமித்திரனோடு நானும்
இணைந்துகொள்கிறேன்.

எம்.கே.குமார்.2003 டிசம்பர்

பி.கு: திராவிட் வாழ்க.

 
ரொம்பச்சின்ன விஷயமுங்க.
கணக்கு வழக்கு சம்பந்தப்பட்டது.

"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்கின் சட்டெனத்தெரியும் குழி."

வட்டத்தரை = வட்டத்துலே பாதி. வட்டப்பங்கின் பாதி. 2¡r/ 2 = ¡r
விட்டத்தரை = விட்டத்தில் பாதி. D / 2 = r

ரெண்டையும் பெருக்கினால் (தாக்கினால்), உடனே தெரியவரும் வட்டமப்பரப்பு. (குழி). இது 'பை' யின் மதிப்பு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி கணக்கு பண்ணுனது.

கி.மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காக்கைப்பாடினியார் ( பெண் புலவருங்க! அம்மாவுக்கு ஜெ!) சொன்னதாம். இதற்குப்பிறகு சுமார் 1000 ஆண்டுகள் கழித்து வந்த ஆரியப்பட்டர் சொன்ன இன்னொரு சமாச்சாரம் என்ன தெரியுமா? '¡ யின் மதிப்பு: 62832 / 20000. (இதை வகுத்தால் 3.1416 கிடைக்கும். கிடைக்குதா?

பரிக்கும் காசிக்கும் வாழ்த்துகள்.(பரிக்கு தலைவலித்தைலமும்.)

எம்.கே.குமார்.

Monday, December 15, 2003
 
Makkan

 
அல்வா& கேசரி.

அல்வாவும் கேசரியும் எனக்கு எப்படிப்பிடிக்குமோ அப்படிப்பிடிக்கும் கவிதைகளும். விடாமல் போட்டி போட்டு ஒரு கிலோ அல்வா தின்று சாதனை புரிந்திருக்கிறேன் (என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். ஆகவே எதிர்க்கட்சிக்கார அல்வாக்கடைக்காரரைக் கேட்கிறேன்..உங்களுக்குத்துணிவிருந்தால் என்னோடு......போச்சுடா! தமிழனாச்சே. படக்குன்னு ஓடிவந்துருது.) கவிதைகளையும் தான்!. புரியாத கவிதைகள் என்று ஒன்று இல்லவே இல்லை என்னைப்பொறுத்தவரை. ஒன்று படிப்பவருக்கு புரியாமல் இருக்கலாம். அது எழுதியவரின் பிரச்சனையில்லை. எழுதியவருக்கே புரியவில்லை என்றால் அது படிப்பவருக்குப்புரியாது என்பதில்லை. எப்படியோ இந்தமாதிரி என்னிடம் இருந்து சிலர்:) எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இளங்கோவின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. பட்டங்களோடு முகவரி அற்றுப்போகும் இளைஞன், தாய்மொழியின் சுவையறியாது சபிக்கப்பட்ட வாழ்வு, விழிநீரும் வியர்வையும் கலக்க, இதமாய் விரியும் முதற் கவிதை, சுயத்தை விழுங்கி ஏப்பமிடும் தேர்வுகள், வசந்தங்களில் கைகோர்த்த தோழி என விரிவாக விரிகிறது. ரசித்து வாசித்தேன்.

உயிர்ப்பறவை மட்டும் படித்தேன். தேடல்கள்தானே வாழ்க்கை. இங்கே கவிதைகளை மட்டுமே எழுதவேண்டும் என ஆரம்பித்தாலும் இதை விட்டுவிட்டு மேலே செல்ல யோசனையில்லை. பாரியின் பக்கத்தில் நம்மிடையே வாழ்பவர்கள் இருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. தொடருங்கள் பாரி. ஒரு உண்மையைச்சொல்லட்டுமா? இதே போன்றதொரு விஷயத்தை நான் இங்கே எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். உங்களைப்பார்த்ததும் ஆச்சரியம் வந்தது.

தம்பியுடையான்படைக்கஞ்சான் என்பார்கள். அருமைத்தம்பியை இழந்த ஒரு அண்ணனது வேதனை. நெஞ்சை உருக்குகிறது.

புது வீட்டுக்கு பழைய சரக்குகளையும் அள்ளிப்போட்டுக்கிட்டு வந்திருக்காரு.
நல்ல வெயில் நேரத்தில் நடந்துகொண்டிருக்கும்பொழுது திடீரென காலில் ஒருதுளி பனிக்கட்டி தீண்டினால் என்னவாகுமோ அந்த நிலை பிரசன்னாவின் கவிதைகள் படிக்கையில் நேரும். சிலசமயம் பனிக்கட்டி. சிலசமயம் நெருப்புத்துண்டு. சிலசமயம் பாம்புன்னு தெரியாத பழுதுன்னும் புரியாத மேட்டரா இருக்கும்.
உள்ளங்கையிலும் உன் வாசம், இயல்பான மனத்தூண்டலின் பார்வையில் எதிர்வீட்டுக்கொடி, வானம் பார்த்து ஒண்ணுக்கிருக்கும் சிறுவன் என ( மத்ததெல்லாம் போடலியா சார்?) நன்றாக வந்திருக்கிறது. ஆனால் கண்ணில் நிற்கும் துளிகள் எனக்கு கலக்கலாய்த் தெரிகிறது.

எனக்குப்பிடித்த சாப்பாடு சார் இது. நல்லா சுடச்சுட தட்டுலெ வெச்சி, ரெண்டு அதையும் சாம்பாருக்குள்ளெ போட்டு ஊறவெச்சி பத்து நிமிசங்கழிச்ச சாப்பிட்டா அதாங்க சொர்க்கம். நிலாக்கவிதை ஒண்ணு எழுதியிருக்காரு பாருங்க. அசத்தல். மறக்க முடிந்த கவிதையா அது? இன்னொரு விஷயம் தெரியுமா? வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்னு வான்நிலாவோட குழுமையை நினைச்சி ஏங்கிக்கிட்டு இருக்கும்போது இந்த விஷயத்தையும் இவர் சொல்றபடி தெரிஞ்சுக்குவோம். நிலாவோட மேற்பரப்பு வெப்பநிலை 123 டிகிரி செ.யாம்.

இவரது கவிதைகளை எங்கோ படித்திருக்கிறேன்..மரத்தடியிலா? ஜோதிராமலிங்கம் நல்ல கவிஞர். பார்வைக்கும் மவுனத்துக்கும் உள்ள தொடர்புகள் அழகாயிருக்கின்றன. ஆண்டிமடத்தின் அழுக்குக்கிழவனை பாலா பார்த்தால் அடுத்த படம் ரெடி. நீ இங்கு நலமே.. நான் அங்கு நலமா? பாணியில் 'நீன்' என்றொரு கவிதை. தலைப்பைப்பாருங்கள். கவிதையைப்படிக்கப்படிக்கவேண்டுமா என்ன?

அல்வாவும் கேசரியும் தொடரும்.

எம்.கே.குமார்.

 


saalai: tuticorin to tirunelveli

நெடுஞ்சாலை

நகர நெரிசலில் ஊர்ந்த உந்துகள்
வெளி கிடைத்தவுடன்
விண்வெளிக் கலங்களாகி விரையும்

பின்னே கட்டடங்கள் சிறிதாகி மறைய
முன்னே
வாய் பிளந்து விழுங்கக் காத்திருக்கும்
பாலையின் கருநாக்கு!

முந்தும் பிந்தும் வண்டிகள்
மஞ்சள் விளக்கு பரிபாஷையில்
பேசிக்கொள்ளும்

பரமபதப் பாம்புகளென
கிளைச்சாலைகள் பிரிய
நேரே
தொடுவானம் வரையில் நீண்டு
தூரத்தில்
கானலில் நெளிந்து
மீண்டும் நீண்டு
பாலைவனத்தை
இரண்டாகப் பிரிக்கும் கருப்புக்கோடாக
செல்லச் செல்ல இன்னும் நீளும்!

எச்சரிக்கை அறிவிப்பில்
ஒட்டகத்தின் உருவ நிழல்

விரட்டி விரட்டி மூச்சிறைத்த வாகனங்கள்
வழியில்
`ஆ'வென வாய் திறந்து
வெப்பத்தை வெளியேற்றும்

எப்பொழுதாவது தோன்றி மறையும்
எரிபொருள் நிலையங்கள்
சிற்றூராய் விரிந்திருக்கும்

இமைப்பதற்குள்
காற்றைக் கிழித்துக் கடந்து
சிறிதாகிப் புள்ளியாய் மறைந்த உந்துகள்
நகரின் எல்லை தொட்டதும்
வேகம் குறைந்து
கடிவாளம் இழுபட்ட குதிரையென
நுரைதள்ளி மிரளும்

எதிர்ப்புறத்தில்
வாய் பிளந்த
கருநாக்குகளில் வண்டிகள் விரையும்!

நன்றி: திரு.அபுல் கலாம் ஆசாத்

 
தாடியாரு.

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறக்கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம். ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.

ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே....ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

"The whole world is his who chooses the right time and right place."

எம்.கே.குமார்.

பி.கு: இன்னும் விரிவா அறியணுமுன்னா, 49ம் அத்தியாயத்துக்கு போங்க.:)

 


அண்ணன் பையன்.

"என்னைத்தெரியுமா? சிரித்து மகிழ்ந்து கருத்தைக்கவரும் ரசிகன் என்னைத்தெரியுமா?" - செல்வ வெங்கடேஷ்.

"சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?"- சித்தப்பா எம்.கே.குமார்.

 
அடிச்சா மொட்டை.

சமீப காலத்தில்தான் இந்தப்பழக்கம் எனக்கு வந்திருக்கிறது.

ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கூட பேசிவிட்டேன். 'இது இன்றைய சூழ்நிலையில் மிகச்சாதாரணம், வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்திருக்கிறது' என்கிறார். அடப்பாவி, போலி டாக்டரா இருப்பார் போலயிருக்கேன்னு டவுட்டுபட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்து நண்பனுக்கிட்டே விஷயத்தைப்பகிர்ந்துக்கிட்டேன். அவனுக்கு இருக்கும் வியாதிகள் போக இப்போது திண்ணையையும் படிக்க ஆரம்பித்துவிட்டானாம்.

அவன் வாயிலும் டாக்டர் சொன்ன பதிலே வருகிறது.

பயப்படாதீர்கள். என்ன வியாதி என்று கேளுங்கள். நீங்களும் எழுத்தாளர் இல்லை எனும் பட்சத்தில் உங்களோடு சண்டை போடமாட்டேன். நீங்கள் எழுதுவதெல்லாம் இலக்கியமில்லை என்று வாதிடவும் மாட்டேன்.

எம்.கே.குமார்.

 
நிஜ நோய் .

நோயாளி மெதுவாகத்தலையைத்தூக்குகிறார். அவசர உதவி தேவைப்படுகிறது. அவருக்குக்குரல் எழும்பவில்லை. கையைத்தூக்குகிறார். அப்பக்கமாக நர்ஸ் ஒருத்தி போகிறாள். நோயாளி கையைச்சொடுக்கியமாதிரி நர்ஸின் கவனத்தைப்பெறுகிறார். நர்ஸ் புயலாக அவரிடத்தில் வருகிறாள். "என்னை என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?"

நோயாளி பரிதாபமாகப்பார்க்கிறார். நர்ஸ¤க்கும் இன்னும் கோபம் வருகிறது.

"இங்கே வந்து படுத்து விட்டால் நீ எனக்கு எஜமானன், நான் உனக்கு வேலைக்காரி என்று நினைத்துவிட்டாயா? மரியாதையாக நடந்துகொள்!"

நோயாளி கையைத்த் தன் வாயிடம் தூக்கித்தன்னால் பேசமுடியவில்லை என்று சைகை காண்பிக்கிறார். பெரும் முயற்சியுடன் சொல்கிறார். "அதனால்தான் அப்படிக்கூப்பிட்டேன்"

"பேச முடியவில்லை என்றால் கையைச்சொடுக்குவாயா? நான் என்ன உன் வேலைக்காரியா? ஜாக்கிரதை! வயதானவனாக இருக்கிறாய், இன்னும் ஒழுங்கான பழக்க வழக்கம் இல்லை!"

அவள் அப்படி நடந்துகொண்ட விதத்தில் நோயாளி படுக்கையில் அப்படியே குறுகிப்போய் படுத்துக்கொள்கிறார். அவர் எதற்காகக் கூப்பிட்டாரோ அது ஒரு பொருட்டாக இல்லை.

நோயாளியின் பக்கத்துப்படுக்கையில் படுத்திருந்த சிறுமி நடந்த எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள். அவளுடைய தகப்பனார் வரும்போது இதெல்லாம் சொல்கிறாள். அவரின் மூலமாக எனக்குத்தெரிய வருகிறது.

அந்த நோயாளி அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள் இறந்துவிடுகிறார்.

இது தி.ஜானகிராமனுக்கு மட்டுமல்ல. யாருக்கும் நடக்கக்கூடாது.

"அசோகமித்திரன், காலக்கண்ணாடி கட்டுரைத்தொகுப்பில்."

நெஞ்சு பொறுக்குதில்லையே,

எம்.கே.குமார்.

 
I resemble everyone
but myself, and sometimes see
in shop - windows,
despite the well- known laws
of optics,
the portrait of a stranger,
date unknown,
often signed in a corner
by my father.

ஏ.கே.ராமானுஜன்.

 
ஒரு கருப்பு பூனை மேட்டரு கேளுங்க.

பாரதிராஜாவின் வெற்றிப்பட 'ரா' வரிசைக்கதாநாயகிகள் மாதிரி , வலைப்பதிவுகளில் 'ப ' வரிசைக்காரர்கள் ராஜாங்கம் நடத்துவது தெரிந்தவிஷயம்தான். இந்த வரிசையில் இந்திய மேற்கு மாநில முக்கிய நகரில் இருந்து ஒரு கருப்புக்கோட்டு போட்டவரு கூடிய விரைவில் 'சட்டப்பூர்வ விஷயங்களுக்காய்' வலைப்பதிவு ஆரம்பிக்கப்போவதாக மரத்தடிப்பக்கம் செய்தி உலவுகிறது.

இவருக்கு மேலிட செல்வாக்கு உள்ளது என்பதை நான் சொல்லற்று அறிக. :)

எப்படியோ என் ஆட்சிக்காலத்திலே ஆரம்பிச்சாருன்னா, சிறப்பா அறிமுகம் கொடுத்துடலாம்.

எம்.கே.குமார்.


 
Bruce Willis Just for Usha maami

Sunday, December 14, 2003
 
இந்தக்கதை ஒரு ரிலாக்ஸ¤க்கு.

அந்த ராஜாவுக்கு ரொம்ப நாளா கொழந்தை இல்லை. வெரக்தியிலே அப்பப்போ காட்டுக்குப்போயிருவாரு வேட்டைக்கி. ராணி அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம். ஏதாவது யாக பூசை நடத்திப்பாக்கலாமான்னு மந்திரியைக்கேட்டுக்குட்டே இருந்தா. ராஜாவைக்கேக்காமெ எதையும் பண்ணமுடியாது ராணியம்மானுட்டாரு அவரு.

காட்டுக்குப்போன ராஜாவுக்கு ஒரு நா நல்ல வேட்டை. பொணைஞ்ச நெலையிலெ ஒரு மான் சோடியைப்பார்த்துட்டாரு. படக்குன்னு அம்பு விட அது ரெண்டும் பட்டுன்னு அடிபட்டு கீழே விழுந்தது. கிட்டெ போயிப்பாத்தா மானு ரெண்டும் மானா இல்லை. ஏதோ முனிவரும் அவரு பொண்டாட்டியும்.

முனிவருக்குத்தாங்கலை. நாங்க இந்த நெலையிலெ இருக்கும்போது கொன்னுட்டெயில்லெ. உனக்கும் அப்படி ஏதாவது தாரேம் பார்ன்னு சொல்லிட்டு அந்த மேட்டரைச்சொன்னாரு.

"ஒனக்கு கொழந்த பொறக்கப்போகுது. கொழந்தை பொறந்து யாரைக்கூப்பிடுதோ அவுக எங்களை மாதிரியே படக்குன்னு செத்துப்போவாக"

ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். முனிவர் சொன்ன மாதிரி ராணி கர்ப்பமா இருந்தா. பத்து மாசம் கழிச்சி கொழந்தை பொறக்கவும் ஊரே தயாரா இருந்தது வாழ்த்துறதுக்கு. ராஜாவுக்கும் மட்டும் பயங்கர கிலி. எங்கெ நம்ம பேரைச்சொல்லி நமக்கு ஏதாவது ஆயிருச்சுனா?

கொழந்தை செக்கச்செவேல்ன்னு இருந்துச்சி. யாரைக்கூப்பிடப்போவுதோன்னு ராஜா பயந்துகிட்டே இருந்தாரு. கொழந்தை திக்கித்திணறி, தத்தித்தத்தி அம்மான்னுச்சி. அவ்ளதான். படக்குன்னு அம்மா மயக்கம் போட்டு விழுந்தா. செத்துட்டா. அடுத்து த்தா.த்தா..ங்க, தாத்தா காலி. எல்லாம் கிலியில் இருக்க, கொழந்தை அடுத்து அப்பான்னுச்சி. அவ்ளோதான். படக்குன்னு செத்து விழுந்தார் ...........மந்திரி.

For lighter side only. ரிலாக்ஸ் ஆகிக்குங்க.

எம்.கே.குமார்.

 
ரோச்சஸ்டரில் இருந்து சித்தூர்க்காரன்.

என்னைப்போன்ற சில பேருக்கு வலைக்குறிப்புகள் சின்னவீடுதான். ஆனால் காசி, பரி, பத்ரி, மீனா, சுரதா இன்னும் பலபேருக்கு பெரியவீடு போல. அங்கேயே கிடக்கிறார்கள். பின்னூட்டம் எழுதிக்கலக்குகிறார்கள். 23 பின்னூட்டம் வந்திருக்கு ஒரு மேட்டருக்கு. மேட்டரு தாய்க்குலத்தைப்பற்றியது. ஆணோ பெண்ணோ கதையை நீங்கள் படித்தீர்கள் என்றால் உங்களுக்கும் புரியும். வாயுள்ள புள்ள பொழச்சிக்குமாம். ஜோசியரும்தான்.

நேற்று இவர் எழுதியிருக்கிற ஒரு டெக்னிகல் விஷயம் மாறி வரும் சூழலில் அரசாங்கமும் கல்வித்துறையும் யோசிக்கவேண்டியது பற்றியது.

அனுசரணையுடன் எழுதுகிறார். ஆக்கப்பூர்வமாக எழுதுகிறார்.

 
வடதுருவ நாடோடி.

பீலா விடுவதற்கு தில் இருந்தால் மட்டும் போதுமா? வலைக்குறிப்பு நக்கீரரின் கேள்விக்கு நா.சு.ராமசாமிகளே பதில் சொல்லும்போது பீலா விடுபவர்கள் தப்பிக்கமுடியுமா என்ன?

திசைகளில் படித்த அந்த விவகாரத்துக்குப்பிறகு மனிதரை படிக்கும் ஆர்வம் எனக்கு வந்துவிட்டது. முழுமையாகப் படிக்க நான் ஆரம்பித்துவிட்டபடியால் நீங்களும் படிக்கவேணுமாய் அன்னார் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்.

 
வெற்றிமுரசு கொட்டும் சத்தம் எனக்குக்கேட்கிறது. உங்களுக்கு?
குழந்தைகளும் பூக்களும் உட்கார்ந்து பேசுவதில்லையாம். நல்ல கவிதை. நாம் நடனமாடுவோம் என்பதைப்படிக்கும்போது என்னமோ மனதில் தோன்றியது. என்ன என்பதை சரியாக என்னால் உணரமுடியவில்லை. ஆனால் மிக நன்றாக சில விஷயங்களை இவர் வர்ணிக்கிறார். அனுபவித்து எழுதுகிறார்.

 
கைவேலை வாத்தியார்.

சரி, ஒரு பழமொழி மாதிரி என்னமோ ஒண்ணு கண்ணுலே மாட்டுச்சி. தட்டி விட்டுட்டேன்.

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி நானே கடைசியா சொல்லிடுறேன்.

"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்கின் சட்டெனத்தெரியும் குழி "

ஏதோ பட்டினத்தார் பாட்டு மாதிரி இருக்கா?

எம்.கே.குமார்.

 
naan edukalai!!

சரஞ்சரமா பூத்திருக்கு சாமந்தியும் மல்லிப்பூவும்
வெத வெதமா பூத்திருக்கு வெலைக்கி விக்க வந்திருக்கு
தொட்டுப்பாத்தா போதுமுங்க தொந்தரவு இல்லேங்க
வாங்காமெ போகாதீங்க வளர்ந்த மனசு தவிக்குமுங்க.
கன்னி கழியாத பூக்களுங்க காதலிக்க ஏத்ததுங்க
மொத்தமா நீங்க வாங்கி மொதலிரவெ ஆரம்பீங்க
குழி விழுந்த பாட்டிமொத குமரிகளும் ஏங்குவாக
அழியாத நெனைவுகளெ அசைபோட்டு பாக்குறேங்க.
வெலை கொடுத்து வாங்கிப்போக மகராசா யோசனையா
மணம் வாங்கப்பணம் கொடுத்தா தப்பில்லே மவராசா
பணம் கொடுத்து வாங்கிச்சூட பருவமும் போயாச்சி
பணமுமில்லே பருவமில்லே கனவு மட்டும் வாழுதுங்க.

எம்.கே.குமார்.

 
வந்ததும் வருவதும்.

முதலிலேயே நான் சொல்லிவிடுகிறேன். நான் கமல் ரசிகன். அப்படி மட்டுமே இருந்திருந்தால் இந்தளவுக்குப்பிரச்சனை வந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகமே.

சாமி கும்பிடும் போது இன்றைக்கும் 'நல்லா படிப்பக்குடுப்பா..'ன்னு சொல்றது வழக்கமா ஆயிருச்சி. படிப்பு முடிச்சி பல வருஷம் ஆனாலும் அந்த வேண்டுதல் என்னையுமறியாமல் வந்து விழுந்து விடுகிறது. இது மாதிரி எல்லோருக்கும் வரும்னு நினைக்கிறேன்.

கடந்த வாரம் சங்கட ஹர சதுர்த்திக்கு அப்படி சாமி கும்பிடுகையில் எப்படி வந்ததோ தெரியவில்லை, 'விருமாண்டி படம் நல்லா ஓடணுப்பா..'ன்னு ஒரு எண்ணம் வந்து மனசுலே நிக்குது.

ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன். என்னாச்சு நமக்கு? ரொம்பத்தான் கெட்டுப்போயிட்டோமோன்னு ஒரு திகைப்பு.

இது இப்படி இருக்க, நேற்றிரவு நல்ல தூக்கம். நல்ல தூக்கத்தில்தான் ஆழமான கனவுகள் வருமாம்.

கமல் மீசையை முறுக்கி விட்டபடி முன்னே வர, 'விரு..விரு..மாண்டி, விருமாண்டி' பாட்டு பின்னால் ஒலிக்க, சந்தான பாரதியும் நாசரும் அவரைப்பின்தொடர்ந்து வருகிறார்கள். மேடையில் ரஜினியும் பாலசந்தரும் அமர்ந்திருக்கிறார்கள். மேடைக்குப்பின்னால் மின்னும் தங்க எழுத்துக்களில் 'விருமாண்டி பட வெள்ளிவிழா' என்று பெரிய பேனர்.

எங்கோ ஒரு முலையில் நான் உட்கார்ந்துகொண்டு தலைவர் வாழ்க, உலக நாயகன் வாழ்கன்னு நான் கத்துறேன்.

என்னடா ஆச்சு நமக்குன்னு பாத்தா, சரி குஷ்புகளுக்கு மட்டுந்தான் கோயில் கட்டணுமா? ஏன் கமலுக்குக்கூடாதான்னு ஒரு எண்ணம். அயோத்தி கோயில் பூசாரி மாதிரி நான் முன்னாடி நிக்கிறேன், கமலுக்கு கோயில் கட்டுற வேலையிலே.

கெட்டுப்போயிட்டோமுன்னு முடிவே பண்ணிட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். இளையராஜா பின்னியிருக்கார்.
கமலுக்கு எப்போதுமே ஆசை அதிகம். அதிலும் தங்கத்தமிழ் ரசிகர்களின் ரசனை 'விக்ரம்'லே வருகிற ராக்கெட் மாதிரி முன்னேறணுங்கிற அளவுக்கு ஆசை அதிகம். அதெல்லாம் இப்போ நடக்குமா?

எல்லாப்பாட்டையும் அவரே பாடியிருக்கார், அங்கே இங்கே மானே தேனே போட்டுக்க, திப்பு, இளையராஜா, பெரியகருப்பத்தேவர்ன்னு சில பேரைக்கூட்டிக்கிட்டார். ஸ்ரேயா அதுலே நுழைஞ்சி வந்துட்டாங்க. தேனி குஞ்சரம்மாவும்.

ரெண்டு பாட்டு மனசுலே நின்னு தவிக்கவைக்குது. ரெண்டு பாட்டு வேட்டிய மடிச்சிக்கட்டி ஆட வைக்குது. மத்த பாட்டுங்க ரசிக்கவைக்குது.

'ஒன்னைவிட'ன்னு ஒரு பாட்டு. ஸ்ரேயா அசத்தியிருக்காங்க. அடுத்து மாட வெளக்கே..அப்படின்னு கமல் தனது கட்டைக்குரலில் கலக்கி இருக்கார். அம்மா என்றழைக்காத பாடலுக்குப்பிறகு இந்தப்பாடலுக்கு நான் கொஞ்சம் கண்கலங்கினேன்.

'கர்ப்பக்கிரகத்தைவிட்டு' பாட்டைக்கேட்டு சாமி வருவது போலிருக்கிறது எனக்கு. 'கொம்புலே பூவெ சுத்தியும்' 'சண்டியரே சண்டியரே' யும் ரசிக்க வைக்கின்றன.

கமல் பாடிய பாட்டுகளில் உன்னைவிடவும் மாடவெளக்கேயும் அட்டகாசம். 'உன்னைவிட' பாட்டு ஜெயிலுக்குள் இருந்து, கமல் நினைத்துப்பார்க்கும் ·பிளாஷ்பேக் காட்சியில் வருவதாய் இருக்கவேண்டும்.

விருமாண்டியும் கடவுளாய் ஆன அல்லது ஆகப்போகிற ஒருவனாய் இருக்கவேண்டும்.

மிச்சத்தைப் படத்தைப்பாத்துட்டுச் சொல்லுறேன்.

பாஸ்டன் பாலாஜிக்கு ஒரு பெரிய ஓ. நிஜமாவே அந்த போஸ்டர் அமர்க்களம்.

எம்.கே.குமார்.

 
இது வருத்தமான செய்தியாகவும் இருக்கலாம்; சந்தோஷத்துக்குரியதாகவும் இருக்கலாம்.

ஆனால் நாட்டில் புலி மாதிரி இருந்தவரை எலி மாதிரி வளைக்குள் வைத்துப்பிடித்த கதையும் வனவாசம் முடிந்து வந்ததுபோன்ற தாடியோடும் அவரைப்பார்க்க 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்பது போன்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

எம்.கே.குமார்.

 

 
ஊரார் உறங்கையிலே...

தி.மு.கவுக்கு ரொம்பத்தான் கொழுப்பு. சாராய வியாபாரத்தைக்கவனிப்பதில் காட்டும் கவனம் மற்ற விஷயங்களில் இல்லை. இதை யார் பொறுத்தாலும் நாம் பொறுக்க முடியாது. ஏனெனில் நாம் ஜெ.வுக்கு நெருங்கியவர் என்பதில்லை. அதைவிட முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.

பின்னாலும் முன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன், எதுக்கு வம்பு? முழுக்கதையைப்படிக்கவேண்டுமானால் கொஞ்ச நேரம் பரிசலில் பயணித்து விட்டு வாருங்கள். தமிழின் நிறைவான வார்த்தைகள் இருக்கின்றன வினோபா எழுத்தில்.

தனித்த மரத்தின்
ஒற்றைக்கிளையில்
தொங்குகிறது
என் அறுந்த கவிதை.
(சிலரின் வாழ்க்கை போல.)

நல்லாயிருக்குல்ல..!

எம்.கே.குமார்.

 
ஹிந்து இதழைக்கடைசியில் இருந்து படித்துத்தான் பழக்கம். அதுவே எல்லா இடங்களிலும் தொற்றிக்கொள்ள எனது வாத்தியார் வேலையும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது.

கேள்வி பதில்கள் என்றதும் சோ, மதன், அரசு, தமிழன், பாக்யராஜ் என ஞாபகம் வருவதை விட, அயன்புரம் த. சத்தியநாராயணன், அரவக்குறிச்சிபட்டி அசோக்ராஜா, மயிலாடுதுறை ஜெ. ரஜினி ராம்கி, சீர்காழி வி. ரேவதி, சென்னை வந்தியக்குமாரன் இப்படித்தான் எனக்கு ஞாபகம் வருவது வழக்கம். நடிகைகளின் தொடைகளைப்பொருத்திப்பார்ப்பதிலும் முன்னாள் இந்நாள் கணவன்களையும் காதலர்களையும் ஒத்திப்பார்க்கிற தலைபோகிற விஷயங்களுக்கிடையே எப்போதாவது வாஜ்பாயையும் நேருவையும் ஒப்பிட்டுக்கேள்வி கேட்பார்கள்.

கேள்வி கேட்பதிலே எப்படிப்பார்த்தாலும் நான்கு வகைகள்தான் உண்டு என்று 'ஏன் எதற்கு எப்படி'க்கு பதில் அளிக்கும் சுஜாதா சார் சொல்கிறார்.
யாழ் சுதாகர், பி.யூ சின்னப்பா- கண்ணாம்பா ஜோடி முதல் இன்றைய ஜோடி வரை ·பிலிம் நியூஸ் ஆனந்தன் வகையில் பதில் தருகிறார்.
டி.எம்.எஸ்சின் ஒரு பாடல் தொகுப்பைத்தருகிறார் பாருங்கள், அருமை.

அது சரி. பதில்கள் ஏன் பாதியில் நிற்கின்றன?


எம்.கே.குமார்

 
உலகமும் ஒரு பிடி மண்ணும்.

புலி வருது புலி வருதுன்னு கடைசியில் புலி வந்துருச்சி. நான் எடிட்டர் ஆகிவிட்டேன். யாருப்பா அங்கே. வேலையைப்பாருங்கப்பா. எடிட்டர் 'மூட்' லே இருக்கும்போது காச் மூச்சுன்னு கத்தக்கூடாது. தலைக்கு மேலே வேலை இருக்கு. இதுலே தலையங்கம் வேற எழுதணும். எடிட்டருன்னா சும்மாவா?

பத்திரிகை எடிட்டர் என்றாலே பொடா பயமும் கைது பயமும் சூறாவளியாய்ச்சூழ்ந்துகொள்ள மதியிடம் நான் இரண்டாம் முறை தப்பிக்கமுடியவில்லை. இந்த வாரத்தில் வரும் ஐந்து நாட்கள் இரவுப்பணியைக்காரணம் காட்டி இன்னும் ஒருவாரம் தள்ளி கேட்டுப்பாக்கலாமா என்றால் பூமித்தாயை விட பொறுமையான பெண்களிடம் அந்தப்பொறுமையைச்சோதிக்க விரும்பவில்லை. சரி வந்தது வரட்டும் என்று வேலையில் இறங்கியாச்சு.

எனது வலைக்குறிப்பு எனக்கு சின்ன வீடு மாதிரி. அப்போ அப்போத்தான் வரமுடியும். ( ஒரு பாட்டை ஞாபகப்படுத்தியாச்சி.) ஆனால் அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வாசித்து வாழ்த்திய சக எடிட்டர் நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

கணினியைக்கண்டுபிடித்தவர்களில் இருந்து, தமிழில் எழுத எனக்குக் ( எழுதமட்டுமல்ல, வலைக்குறிப்பு அமைத்து அதற்கு வாத்தியார் வேலை கற்றுத்தந்தது வரை) கற்றுத்தந்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி சொல்லி இந்தவாரம் உங்களோடு நான்.

எம்.கே.குமார்.


 
Meera checking out her 'do'

 

கடந்த வாரம் போஸ்டனில் இருந்து பாலாஜி வந்தாரென்றால், இவ்வாரம், உலகின் மறுகோடியில் இருந்து ஒருவர் வலைப்பதிவுகள் சஞ்சிகைக்கு ஆசிரியராகிறார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், தற்போது வாழ்வது சிங்கையில். பல சிறுகதைகள் எழுதியிருக்கும் இவர், 'வெண்ணிலாப்பிரியன்' என்ற பெயரில் கவிதைகளும் எழுதுகிறார். கிராமிய நயம் மிகுந்த சிறுகதைகள் இவருடையவை. திணறல்கள் -திசைகள் இணைய இதழ், புன்னகைச்சன்னதி - மானசரோவர், தோணி ஏத்திவிட்ட தொக்கம்பய - அம்பலம்.காம் (இவ்வார அம்பலம்.காம்). இது தவிர, இவர் மரத்தடி, இராயர்காப்பிகிளப் குழுக்களிலும் எழுதுகிறார்.

உங்களுடன் எம்.கே.குமார்.

 
Kasi veetukku munnaadi(c)Kasi
Click on the photo


நன்றி காசி

 
நன்றி சொல்லவேண்டிய இன்னொருவர்: இனிமேல் இங்கே மறுமொழிகளும், எதிர்வினைகளும், காமெண்டுகளும் கொடுப்பவர்கள் வசதியாக கொடுக்கலாம். Backblogஇன் Proவை இங்கே நிர்மாணித்துள்ளார் திரு.காசி அவர்கள். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 
Balaji likes Blue color

 

வலைப்பதிவுகள் சஞ்சிகைக்கு இவ்வாரம் வந்த அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று, பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி பாலாஜி.


 
What Can I say! I LOVE automn (c)Suletzki

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com