<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, December 06, 2003

Good Bye

 
வைகறையில் எழும் புள் புழுத்தின்னும் என்பது பழமொழி. என்ன புதுமொழியா இருக்குன்னு பாக்கிறீங்களா? The early bird catches the worm அம்புட்டுத்தான். உண்மையிலே இங்கே 7ந்தேதி ஆகிப்போச்சு. இருந்தாலும் பதவி ஆசை யாரை விட்டது? இன்னும் உங்களுக்கு சனிக்கிழமைங்கிறது தெரியும்.....எனது மற்ற ஆசிய நண்பர்கள் இன்னும் காலைக் குரட்டையில் இருப்பார்கள். ஆக, நான் சொன்ன பழமொழிப்பொருள் புரிகிறதா?

ஒரு வாரம் ஓடிப்போச்சு. ரொம்ப ஜாலியா இருந்தÐங்க. பின்னூட்டம் என்பது சுமக்கமுடியாத அளவு வந்து போச்சு! கட்டம் வெடித்துவிடும் போல :-) இவ்வளவு எழுதுறீங்களே, அப்பப்ப வந்து என் மடலிலும் ஏதாவது போட்டுடுப் போகக் கூடாதா? :-) பரவாயில்லை, புரியுது. இந்த இன½யம் என்ப§¾ ஒரு கவனச்சந்தை (attention trading). எங்கே நாம் கவனிக்கப்படுவோமோ அங்கே நாம் இருப்போம் :-) ஆனா, இதைத் தமிழர்களுக்கு முழுசா பொருத்த முடியலே. அரட்டை அடிக்கிறதிலே இருக்கின்ற இன்பம் வேறு இண்டராக்டிவ் விஷயங்களில் இல்லை. ஓட்டெடுப்பு நடத்தினாலும் குறைவான ஓட்டுக்களே விழுகின்றன. உங்கள் முகவரிதாருங்கள் (±ý Ó¾ø Á¼ø) என்றால் தருவதில்லை. மடலாடற்குழுக்களில் எல்லோரும் ம¨Èந்திருந்து பார்க்கவே ஆசைப்படுகின்றனர் (300 §À÷ þÕó¾¡ø ãÏ §ÀÕ¾¡ý ±Ø¾¢ðÎ þÕôÀ¡í¸). தமிழர்தம் உளவியல் அறிய கொஞ்ச காலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது.

கவிதை பற்றிய பேச்சிற்கு இந்த க்ஷணம்வரை 40 பின்னூட்டம். அதுவே கவிதையின் வெற்றி. தமிழில் கவிதை வாழும், இலத்திரன் (electronic) நூற்றாண்டிலும்!

மேடை போட்டுப் பேசிக்கிட்டு இருக்கும் போதே சில நேரங்களில் அறிவிப்புகள் செய்ய வேண்டியிருக்கு. சில நேரங்களில் சிறப்பு விருந்தினர் கவனத்திற்கு சில வலைப்பூக்கள் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இடையில் புகுந்து கரடி விடாமல் இதைச் செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. சின்னதாக பக்கத்தில் ஒரு தகவல் பலகை (notice board) வைத்துவிடுவது. இதில் அனைவரும் முன்னூட்டம் (இது முன்னால இருக்கிறதாலே!) செய்ய வசதி செய்து தரலாம். ஒரு சோதனைக்கு இன்று என் மடலில் ஒன்று வைக்கிறேன். நீங்க யாரும் வந்து எழுதப்போறதில்லேன்னு தெரிந்தாலும் (!):-)

வலைப்பூவர் வட்டம் (பதிவர் வட்டம்) சின்னது. ஒரு வாரம் மேடை கொடுத்துப் பேசச் சொன்னீங்க. வேலையை உருப்படியாச் செஞ்சேÉ¡ýÛ ¿£í¸¾¡ý ¦º¡øÄÏõ. இந்த வாரத்தில் என் மடலைக் கவனிக்க முடியலை. மீனா சூசகமாச் சொன்னார்கள். இருப்பது 24 மணி நேரங்களே. இதற்கு மேல் இழுத்தால் உடம்பு ஜவ்வுமிட்டாய் ஆகிப்போயிடும். மேடையிலே இருந்து பாக்கறது சுகமாத்தான் இருக்கு. வினோபா கார்த்திக் சொல்ற மாதிரி கொஞ்சம் 'மப்பா' கூட இருக்கு. ஆனாலும், கஞ்சி குடிக்க வீட்டுக்குத்தான் வரணும் :-) என் (மடல்) வீடு முக்குலேதான் இருக்கு. வந்துட்டுப் போங்க.

«øÄ¡ÕìÌõ ºÄ¡Óí¸! அடுத்து வருபவரை வரவேற்று இந்த இடத்தைக் காலி செய்கிறேன். அப்ப, வரட்டா?

அன்புடன்
நா.கண்ணன்

மேன்மைக் கலைகள் மெத்த வளருது இங்கே!

 
வலைப்பக்கத்திற்கு வாசனை உண்டா என்று கேட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் கொஞ்சம் கணினி முன் முகர்ந்து பாருங்கள் டுரியன் பழ வாசனை அடிக்கவில்லை? எல்லாம் இந்த சுபா பண்ணுகின்ற வேளை. பெரிதாக ஒரு டுரியனை பிரித்து வைத்துவிட்டார்கள். வலையெல்லாம் ஒரே வாசனை! இதை பழங்களின் அரசன் என்கிறார்கள் இதில் அபிப்ராயபேதம் எனக்குண்டு. இது கொஞ்சம் வித்தியாசமான பழம். சுவைக்கு பழக வேண்டும். கரடியைப் பழக்கிற வேலைததான் :-)

இந்த ஒரு வாரத்திலே எல்லோர் கதவையும் தட்டிப் பார்த்துட்டேன். இதைச் செய்யணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. தீர்த்தயாத்திரைன்னு போனாத்தானே காசியைப் பாக்கறோம்! இல்லை தஞ்சாவூர்க்காரராக இருந்து கொண்டே தஞ்சைப்பெரிய கோயிலைப் போய் பாக்காம இருக்கோம். அதுபோலத்தான் இதுவும்! கிட்டக்க இருக்கிறதாலே (சொடுக்கு தூரம்!) பாக்காம இருக்கிறதுதான் அதிகம்! மதிக்கு நன்றி சொல்லணும். ஆனாலும் ஒரு குறை, 50% வலைப்பூக்கள் வாசிக்கமுடியாமல் இருக்கின்றன. இது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். எல்லாத்தளத்திலும் இருப்போரும் வாசிக்க வகை செய்ய வேண்டும். சில பூக்கள் மலரவே மாட்டேங்குது, ஏன்னு தெரியலே!

பெண்கள் இதழ் நடத்தற அளவு பெண்கள் வலைப்பூவர்களாகிவிட்டனர்! வாழ்க. பவித்திரா வலைப்பூவிலே விளையாட்டெல்லாம் இருக்கு!


§º¡¸¦ÁøÄ¡õ ±ý¦ÈýÚõ
ÍÁôÀÅ÷ì§¸î ¦º¡ó¾õ
Å¡¸¡ö «¨¾ ¯¾È¢ Å¢ð¼¡ø
Å¡ú¨¸§Â ¿õ ¦º¡ó¾õ


என்கிறார்கள் உதயசெல்விதனது கவிதைப்பூவில். நான் நினைக்கிறேன் சோகமும் வாழ்வின் ஒரு கூறுதானென்று. அது போனால்தான் வாழ்வென்பதெல்லாம் கதை! சத்சித்தானந்தம் என்பது நடக்கும் காரியமா? அதுவொரு wishful thinking என்று தோன்றுகிறது. இதையே நினைச்சுக்கிட்டு இருந்தாக்கூட இதுவே ஒரு சோகமாப்போயிடும்! :-) ஆனா, சும்மா ரெண்டு வரியை எடுத்துக்கிட்டு கவிதை சரியில்லைன்னு சொல்லிட முடியாது (ஒரு கோஷ்டியே காத்துக்கிட்டு இருக்கு டோய்!). போய் நிதானமா வாசிச்சிட்டு வாங்க. உதயசெல்வி நல்லா கவிதை எழுதுவாங்க!

வெ.சபாநாயகம் மிக சுவாரசியமாக 'அந்தக் காலத்து'க் கதையெல்லாம் சொல்லறாரு. காலணாவை நானும் உபயோகித்து இருக்கேன். அரையணாவிற்கு ஜோதி கிருஷ்ணய்யர் ஹோட்டல் இட்லி சாப்பிட்டது நினைவிலிருக்கு. ஆனா சீக்கிரமே நயா பைசாவிற்கும், பின் பைசாவிற்கும் மாறிப்போய் கடைசியிலே ஒண்ணுமே மதிப்பில்லாம போயிடுச்சு. பிச்சைக்காரிக்கு 10 பைசா போட்டுப்பாருங்க! தெரியும் கதை!! ஓட்டைக் காலணா பார்க்க அழகாக இருக்கும். இவரோட நினைவுத்தடங்களை கவனித்து வர வேண்டும். சிட்டி சுந்தரராஜன் போல் இவரும் நமக்கு நிறையச் சேதிகள் தருவார் என்று தோன்றுகிறது!

அந்தக் காலத்து சிற்பிகள் அற்புதமாய் சிலை வடித்துவிட்டு பேர் கூடச் சொல்லாம போயிடுவாங்க. அதுபோலதமிழ் இலக்கிய விருந்து ஒன்றை யாரோ ஒரு பரோபகாரி நடத்துகிறார். இதுவும் தமிழ் மரபு அறக்கட்டளை கண்காணிக்க வேண்டிய தளம். ஒரு சின்ன மதுரைத்திட்டமே நடத்துகிறார். பாரதி மகாகவியா? என்று கோவை ஞானியின் கட்டுரையை பதிவு செய்து வருகிறார். இலங்கை, இந்திய விருந்து இந்தப்பக்கம். பெரிய ஆளுககூட நம்ம சந்திரமதியின் ஒரு படைப்பும் இருக்கு. வாழ்த்துக்கள் மதி!

இந்த வரிசையிலே நாம சேர்க்க வேண்டிய இன்னொருவர் திரு.மெய்யப்பன். எனது பார்வை என்று எழுதிவருது சீரிய இலக்கிய வகையைச் சார்ந்தது. இந்த கோஷ்டியிலே சேரும் இன்னொருவர் என் இனிய நண்பர் இரமணி. இவரோட மூணு தளமும் கண்ணாமூச்சி காட்டிவிட்டன. இவரது வலைப்பூவை வைத்துதான் இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்பதில்லை. இவரும் வைரமுத்து மாதிரி நோபல் பரிசை நோக்குகிறார் என்று தோன்றுகிறது :-) அங்கே, இங்கேயென்று அனுப்பிய கடிதங்களையெல்லாம் மனுஷன் கோர்த்து வைச்சிருக்கார். இது தற்காப்பா இல்லை 'கடித இலக்கிய சேவையா' என்று தெரியவில்லை (போற போக்கிலே ஏதாவது சில்மிஷம் செஞ்சுட்டுப் போனா பின்னால வரவரு தவிக்கட்டுமே! (என்ன நல்ல மனசு :-)

பத்ரி பற்றி நான் அதிகமா சொல்லப்போறதில்லே. அவர் ஒரு தேனீ. கொட்டாமல் தேன் கொடுக்கும் வலைப்பூ அது. அவர் சிறப்பான ஒரு விஷயம் செஞ்சுருக்காரு. நம்ம காசியோட கம்பியில்லா வலைப்பின்னல் கட்டுரைகளை மறுபதிப்பு செஞ்சிருக்காரு. ரொம்ப ஆரோக்கியமான போக்கு. வாழ்த்துக்கள் காசி.

மேன்மைக் கலைகள் இங்கே மெத்த வளருது! அதில் நாமும் கலந்து கொள்கிறோம் என்று எண்ணும் போது மகிழ்வாக இருக்குது!

Friday, December 05, 2003

Simran, getting ready for wedding!

 


மீனாக்ஸ் வலைப்பூவிலே ஒரு முக்கிய கிசு, கிசு. சொல்லாட்ட தூக்கம் வராது.

சிம்ரனுக்கு கல்யாணம் ஆகப்போறதாம். தீக்குளிக்க ரெடியா இருக்கிற வலைஞர்கள் எனக்கு படங்களை அனுப்பவம். கூட்டு அஞ்சலி ஏற்பாடாகிக்கொண்டிருக்கிறது!

சத்ஸ்ரீஅகால்

Errata: (Thanks Pavitra)
Simran ties knot with Deepak

Simran ties nuptial knot tonight, the 2nd of December with Deepak Bhaga in a traditional manner at Tharina Mahal, near her residence at Andheri (West), Bombay. The wedding ceremony starts with the procession of the bride and the groom from Simran’s place. Earlier in the evening, the bride and the groom will be taken in an open car procession to the wedding hall. After the wedding, the ‘Doli Ceremony’ will take place tomorrow early morning, where Simran will be carried in the Palanquin to the groom’s residence

Be a good Blogaritan ! (Blog + Samaritan)

 
நேற்று வலைத்தோட்டத்தில் கொஞ்சம் குறுக்கும் நெடுக்குமா போய் வந்த போது கிடைத்தவை. தட்டுத்தட்டினால் திறந்தவை, வாசிக்க முடிந்தவை மட்டும் கணக்கில்.

மீனாக்ஸ் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். எனக்கும் ஆங்கிலத்தில் ஒன்று வைத்திருக்க ஆசை. தமிழனின் ஆசா பாசங்களை, அவனது இரசனையை, அவன் பாடு பொருளை ஆங்கிலத்தில் பதிந்து வைத்தல் நல்லது. நாளப்பின்னக்கி ஏதாவது நோபல் பரிசுக்கு யாராவது நம்ம பேரை சிபாரிசு செய்ய வசதியா இருக்கும் பாருங்க. ஆனா, நேரமில்லை. ஏறக்குறைய ஒரு முழு நேர பத்திரிக்கை ஆசிரியர் போல் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்புறம் இந்த கம்பாசிடர் வேலையும் நாமே செய்யவேண்டியுள்ளது. அப்புறம் இந்த ஆர்ட் வொர்க் அதுவும் நாமே. பத்திரிக்கை அடிச்சிட்டு வீடு, வீடா நாமேதன் விக்க வேண்டிருக்கு. இத்தனையும் சும்மாச் செய்ய வேண்டிருக்கு. சக்கரவாகப் பறவைபோல் யாராவது நம்ம குடிலுக்கு வந்து ஒரு வார்த்தை நல்லதா சொல்லமாட்டாங்களான்னு காத்திருக்க வேண்டிருக்கு. எனவே இதிலே ரொம்ப முக்கியம் ஒருத்தரோட ஒருத்தர் ஆறுதலாக இருத்தல். சும்மா போய் ஒரு ஷொட்டு கொடுத்தா ஒண்ணும் நட்டமா போயிடாது. இந்த சுயப்பதிவு கலாச்சாரம் வளரனும்னா நாம ஒத்துமையான வலைஞர்களா இருக்கணும். கருத்திலே ஒத்துப் போகணும்ன்னு சொல்லலே. இருக்கற எல்லோருக்கும் முடிஞ்ச வரை இணைப்புக் கொடுத்து போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். நாமளே செய்யாட்ட வேற யாரும் செய்ய மாட்டாங்க. எனது வலைப்பதிவில் உங்க எல்லோருக்கும் கதவு திறந்திருக்கு. அங்க வந்து உங்க பூவிற்கு ஒரு முடிச்சு போட்டுட்டு போகலாம். எவ்வளவு பேரு வராங்கங்கிற தகவலும் அது தருது. இந்தச் சேவையை ஆரம்பித்ததிலிருந்து (4 மாதமாக) 500 பேருக்கும் மேலே என் வலைப்பூவின் மூலமாக வேறு பூக்களுக்கு வாசம் பிடிக்க போயிருக்கிறார்கள். ஏதோ என்னால முடிஞ்சது.

நம்ம மதி வலைப்பூ வளர்ச்சிக்கு நிறைய செய்யறாங்க. பாருங்க அவங்க நண்பர் சுவாமிக்கு நகைச்சுவைக் கவிதைக்களமொன்று அமைத்துத்தந்திருக்கிறார்கள். இந்த "வலைப்பூ" கூட்டிதழ் யோசனை கூட நாங்கள் உருவாக்கியதுதான். இதே போல் ஆர்வமுள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கு ரெடிமேடா ஒரு வலைப்பூ செய்து தரும் யோசனையும் முன்வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அவங்களோட ஆர்வம் தொற்றிக் கொள்ளக்கூடியது. அவர்கள் பெயர் சரித்திரத்தில் நிற்கும், வாழ்க.

நம்ம ஹரண் பிரசன்னா ஒரு நல்ல காரியம் செய்யறாரு. தான் ஒரு படைப்பாளியாக இருத்தல் பெரிதல்ல. ஆனால் ஒரு நல்ல வாசகனாக இருப்பது பெரிது. பிரசன்னா சளைக்காமல் வாசிக்கிறார். அச்சு, இணையம் என்று. வாசித்துப் பாராட்டவும் செய்கிறார். இதுதான் வலைப்பூவாசிகளுக்கு அருமருந்தே. ஒண்ணுமே சொல்லாம ஊமைக்கொட்டானா இருந்தா "சீ இது என்ன பொழைப்பு" ன்னு தோணிப்போயிடும். நான் சுபமங்களாவில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கவிஞர் விக்கிரமாதித்தியன் புதுக்கவிதைகளுக்கு விமர்சன பாணியில் அறிமுகம் செய்து கொண்டிருந்தார். கொஞ்ச நாள்தான் வந்தது. புதுக்கவிதைக்கு என்னையா வியாக்கியானம்ன்னு யாராவது சொல்லியிருக்கலாம். ஆனா, அதுக்குதான் ரொம்ப தேவைப்படுகிறது என்று இப்போது புரிகிறது. அப்துல் ரகுமான் தனது பாடல்களுக்கு தானே வியாக்கியானமும் செய்வார். அதில் தவறில்லை என்று தோன்றுகிறது. கவிஞனின் பார்வை புரியும். அதற்கு மேலும் கவிதையை இட்டுச் செல்ல வேண்டியது வாசகன் கடமை. அதை பிரன்னா தனது கட்டுரைத்தளத்தில் செய்கிறார். இவர் இயற்றும் கவிதைகளுக்கென்று ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். அப்புறம் இவர் கதைகளுக்கென்று ஒரு தளம். நமது கதைகளை நாமே தொகுத்துவிட்டால் இந்த கம்பாசிடர் செய்யும் பிழைகளைக் குறைத்து விடலாம். எனது கதைகளெல்லாம் இனிமேல்தான் வலையேற வேண்டும். மூச்சு வாங்குகிறது!

சில பூக்களில் இனிமையான இளமைக்கால வாசம் அடித்தது. ஒருவர் குடு குடுப்பாண்டி பற்றி எழுதியிருந்தார். இன்னொருவர் பம்பரம் விளையாடுவது, கோலி, கிட்டிப்புல்லு பற்றியெல்லாம் எழுதியிருந்தார். நந்துவிடம் சொல்ல வேண்டும். நந்து பம்பரத்தில் சேம்பியன்.

இணைப்பெல்லாம் மதியின் இணைதளத்தில் இருக்கு. அங்கேர்ந்து நான் சொன்ன தளங்களுக்கு போய்ட்டு வாங்க. நாளைக்கு ஒரு நாள்தான் இருக்கு. ஒரு வாரம் ஓடிப்போச்சு!

Thursday, December 04, 2003

நிஜ நாடகங்கள்!

 
"It is hard to remain uninvolved" - இப்படி ஒரு வசனம் வருகிறது 'The Quiet American' (முக்கியமான படம். இதுபற்றி இன்னொரு நாள் பேசுவோம்.) திரைப்படத்தில். அது எத்தனை உண்மை தெரியுமா? நீங்கள் என்னதான் பட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் சில விடயங்கள் நம்மேல் வந்து விழுந்து பிராண்டும்.

என்று பேசுகிறார் வினோபா கார்த்திக் தனது வலைப்புலத்தில். இதுதான் எவ்வளவு உண்மை! சும்மா இருந்தாலும் வாயைப் பிடுங்கும் உலகம். வேண்டாத விவாதத்தில் ஈடுபட்டு மனம் வருந்துவது எனக்குப் புதுமையல்ல. யார் சொல்லியும் யாரும் திருந்தப்போவதில்லை. இருப்பினும் அபிப்பிராயம் சொல்லாமல் இருக்கவிடுவதில்லை நமது அகப்பாடு. வலைக்கருத்தாட்டத்தில் கலந்து கொண்டுதான் ஒருவனுக்கு ஞானம் ஒளிரவேண்டுமென்றில்லை. பக்குவப்பட்ட உள்ளங்களுக்கு பட்டாம்பூச்சி கூட ஞானஸ்னானம் கொடுக்கும்! நிற்க.

இவர் தேர்ந்த புகைப்படக்கலைஞர் என்று அவர் வலைப்பூ சொல்கிறது. சந்திரகிரஹணத்தை என்னமாய் படமெடுத்து இருக்கிறார்! குழந்தையில் பார்த்த சூரிய சந்திர கிரஹணங்களுக்கு தனிப்பெருமை உண்டு. மாந்தீரிகயதார்த்த உலகது! மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த காலத்தில் 'அறிவியல் மையத்தில்' அதிக ஈடுபாடு காட்டினேன் (அது இப்போ இருக்கா? போச்சான்னு தெரியலை). அப்போது முழு சூரிய கிரகணம். திண்டுக்கல் ரோட்டில் முதல் முறையாக 80 கிலோமீட்டர் வேகத்தில் பேராசிரியை குந்தலா ஜெயராமனுடன் போனது ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்ந்த படையெடுப்புகள் இந்தியர்களை பயந்தாங்கொளிகளாக மாற்றிவிட்டது என்று அன்று தெரிந்தது. இது கண்டுதான் பாரதி புலம்பியிருக்க வேண்டும்.வினோபா "சப்தர் ஹஷ்மியை" பற்றிப்பேசுகிறார். "1989, ஜனவரி 1ம் நாள். ஜந்தாபூர் முனிசிபல் தேர்தல் சமயத்தில் 'உரக்கப் பேசு' (halla bol) என்னும் நாடகத்தை வீதியில் நிகழ்த்திக் கொண்டிருந்த போது குண்டர் படையால் நடுவீதியில் அடித்துக் கொள்ளப்பட்டனர் ஹஷ்மியும் அவரது சக நடிகர் ராம் பகதூரும். சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தோர் அதுவும் நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்திருந்தனர் வெகு நேரம் வரையில்!"

இதுவும்தான் எவ்வளவு உண்மை! மதுரையில் அ.ராமசாமியின் 'நிஜநாடக இயக்கத்தில்' ஒரு குறு, குறுப்பான ஆர்வம்! அறிவியல் மாணவர்களெல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் கலந்து கொள்வதில்லை. ஏனோ நான் மட்டும் அதிசயப்பிறவி! இப்படித்தான் தெருநாடகங்களில் யார் நடிகன், யார் பார்வையாளன் என்ற மயக்கம் பல நேரங்களில் வரும். இதே பாணியில் எங்கள் உயிரியல் புலத்தில் பல புரட்சிகரமான நாடங்களை இயக்கியிருக்கிறேன். சில நாடகங்களில் இன்று அன்னைத் தெரசா பல்கலைக்கழகக்கழகத்தின் துணை வேந்தராக இருக்கும் பேரா.ஆனந்தவல்லி மகாதேவன் கலந்து கொண்டிருக்கிறார். அதுவொரு ஆக்ககாலம்!

வினோபா ஒரு மகாபாரதம் எழுதியிருக்கார் வாசிக்க நேரமில்லை!

நம்ம காசி நிறைய அறிவியல் விஷயங்கள் பேசுகிறார். கலைக்கதிர் தோற்றுவித்த ஊர்க்காரர். இருக்காத பின்ன ஊர் வாசனை! இந்த மாதிரி முயற்சிகளெல்லாம் தமிழக மாணவர்களுக்கு சொல்லப்பட வேண்டும். வலைவலம் வரும் விகடன் போன்றவை இவைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். ஜெயா டிவியில் இதற்கென ஒரு நிகழ்ச்சியே உள்ளது. எத்தனை காலம் வால்ட் டிஸ்னி புகழ் பாடிக்கொண்டு இருப்பது?

Wednesday, December 03, 2003

Imagine what can Blogging do for you?

 
வலைப்பூ தமிழில் ஆரோக்கியமாக நாளொரு மொட்டும் பொழுதொரு பூவுமாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொழில்வளர்ச்சியை எப்படி ஒவ்வொருவரும் தங்களது தமிழ்த்திறன் வளர்க்க, தமிழின் திறன் வளர்க்க பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இதன் பயன் குறித்து முடிந்தவரை எல்லோருக்கும் சொல்லுங்கள். எல்லோருக்கும் பூக்கட்ட சொல்லிக்கொடுங்கள். பூக்கட்டுதல் கேவலமல்ல. நாறும், பூவும் கையின் நடனத்தில் கோர்ந்து சிரிக்க வேண்டும். தொடுத்த பூமாலையை சூடி விட்டே மற்றவர்க்குக் கொடுங்கள். சூடிக்கொடுத்த மலருக்கு சிறப்புத்தகுதியுண்டு என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமி நமக்குக் காட்டிச் சென்றுள்ளாள். வலைப்பூக்கள் மலர, மலர தமிழரிடம் ஒற்றுமை வளரும். ஏனெனில் சும்மா பூக்கூடை வைத்துக் கோண்டு உட்கார்ந்திருந்தால் யாரும் பூ வாங்க மாட்டார்கள். வீடு, வீடாய்ப் போக வேண்டும். அப்படி முடியாவிடில் கூட்டுறவுச் சங்கத்தில் மெம்பராகச் சேர வேண்டும். வலைப்பூ ஒரு கொத்தவால் சாவடி :-) இங்கு நடமாட்டம் அதிகம். இங்கு பேசப்படும் பூக்கள் விற்றுப்போகும் :-)

இப்படிச் சொல்லும் போது வலையகம் வைத்திருக்கும் ஒவ்வொருக்கும் தெண்டன் சமர்பித்து சேவித்துக் கொள்கிறேன். இந்த ஆளு நம்ம வலைப்பூ பற்றிப் பேசுவாரா என்று ஒவ்வொரு மடலாகப் படித்துக்கொண்டிருக்கும் எண்ணிக்கையற்ற நண்பர்களே (!). உங்கள் வலைப்பூ இருப்பதை நீங்கள் மதியம்மா கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்திருந்தாலே பாக்கியவான்கள். எப்படியும் ஆட்கள் வந்து சேர்வார்கள். ஒவ்வொரு பூவாகப் பார்த்துக் கோண்டு வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாகும். மூசிகல் சேர் மாதிரி நாற்காலியைப் பிடுங்க அடுத்த ஆள் காத்திருக்கும் போது இது சாத்தியமில்லை. அதற்காக பொத்தாம் பொதுவாகவும் பேசமுடியாது. இதுதான் மதி செய்யும் சதி என்பது (நான் யாரையும் 'குறிப்பாக'ப் பேசவில்லை என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் :-)

அடுத்த நபர் ஒருவரை நாம் காலி பண்ணும் முன் சிபாரிசு செய்யலாமென்று தோன்றுகிறது. அது மதியின் முதுகு வலியைக் குறைக்கும் :-) எனது ஓட்டு புன்னகை மன்னன், நகைச்சுவைச் சக்கிரவர்த்தி, இணையக் கலைவாணர் 'எல்லே' சுவாமிநாதன். சும்மா காரைக்குறிச்சி கச்சேரி போல் கல, கலவென்று இருக்கும்.

பழைய தமிழ் இணைய பனங்கொட்டைகள் எல்லாம் சேர்ந்து ஒரு இ-தழ் ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு சங்கமம் என்று பெயர். தீர்க்கமான பொட்டும், சுட்டும் சுடர் விழியும் கொண்ட பாரதி, மழித்தலும், நீட்டலும் வேண்டாத தாமரக்கண்ணன் வள்ளுவன், சுயம் மட்டும் இருந்தால் போதாது அதற்கொரு மரியாதை சுயமாய் வேண்டும், இல்லையெனில் தட்டிக் கேட்க வேண்டுமென்று சொன்ன வெண்தாடி வேந்தர் இவர்களின் திருவுரு (icon) கொண்டு புத்தாண்டில் மலரவுள்ளது. நண்பர் ஆல்பெர்ட் பொறுப்பேற்று நடத்துகிறார். என்னையும் ஒரு பனங்கொட்டையாக சேர்த்திருக்கிறார்கள் :-) அதில், வலைப்பூ பற்றிய தொடர் ஒன்று எழுதுகிறேன். அது தமிழக, இலங்கைக் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து எழுதுவது. அவர்கள் ஒரு மாபெரும் சக்தி. அந்த சக்தியின் பலமென்ன என்று 60களின் சரித்திரம் படித்து அறிந்து கொள்ளுங்கள். அச்சக்தியை ஆக்கவழியில் பயன்படுத்த வலைப்பூ உதவுமென்று நம்புகிறேன். அதிகார பூர்வமான அறிக்கைவரும் போது சங்கமத்தின் முகவரி தெரியவரும். நாம் திசைகளை ஆதரிப்பது போல் சங்கமத்தையும் ஆதரிப்போம்.

Tuesday, December 02, 2003

கவிதைப்பூக்களைக் கண்டு இரசியுங்கள்

 
நவன் கடைசியாக முடிக்கும் போது இந்த கவிதைகளுள்ள வலைப்பூக்களுக்கு யாராவது போங்கள், இல்லையெனில் அவை வாடிவிடும் என்று முடித்தார். நல்ல மனசு அவருக்கு. தனக்குத்தான் கவிதையை இரசிக்கத்தெரியாது இரசிக்கத்தக்கவரை அனுப்புங்கள் என்பது அடித்தொணி. இதே போல் முன்பு பரிமேல் அழகர் என் வலைப்பூவிலும் எழுதியிருந்தார்.

அப்படியென்ன கவிதையை இரசிப்பதில் சிக்கல்? என்றொரு கேள்வியைப் போட்டு வைப்போம். கவிதையை இரசிக்க என்ன வேண்டும்? என்றும் கேட்போம். கவிதை உருவாவதொரு மனோநிலை. பாரதிக்கு எப்படி அது கொட்டுமென்று பாரதிதாசன் மிக அழகாக விளக்கியுள்ளார். அருள் வந்தது போன்ற ஒரு மனோநிலை. சந்நதம் பிடித்தது போல் கவிதையின் ஆட்சிக்குள் இருந்த அனுபவமும் உண்டு. ஆனால் எல்லோருக்கும் இப்படித்தான் கவிதை வருகிறது என்று பொதுமைப்படுத்திவிட முடியாது. வ.ஐ.ச.ஜெயபாலனுடன் பழகியவருக்குத் தெரியும் அவர் பார்ப்பதற்கு முரடன் போல இருப்பார் (அவன் ஒரு 'காட்டான்' என்று செல்லமாக மு.நித்தியாநந்தன் சொல்லுவார்). ஆனால் கவிதை அவருள் புகுந்து வெளிப்படும்போது பலாச்சுளை போல இருக்கும். இதுவெல்லாம் ரிஷி மூலம், நதி மூலம் மாதிரி. தோற்றம் கணிப்பது கடினம்.

கவிதைக்குள் நெருங்க ஒரு மெல்லிய உணர்வு வேண்டும். நவனுக்குள் அந்த மென்மை இருக்கிறது. கவிதையில் ஒரு நேர்மை வேண்டும். சும்மாக்காச்சிக்கெல்லாம் கவிதை எழுத முடியாது. பரிமேல் அழகருக்குக்குள் அந்த நேர்மை இருக்கிறது. பிறகு இரசிப்பதில் என்ன தடை?

பயிற்சி, பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம். இது பழகிக்கொள்ளக்கூடியதே. ஒரு மிரட்சி கூட இருக்கலாம். யாராவது கவிதைக் குரளி காட்டி பயமுறுத்தியிருக்கலாம். அப்படியெனில் அந்தப் பேயை ஓட்ட வேண்டும்.

நான் படிக்கின்ற காலத்தில் தமிழ் பாடத்தில் வரும் கேள்விகள் கூட கவித்துவமாக இருக்கும். சிவன் தன் அடியார்களை ரொம்பப்படுத்துவார். ஒருமுறை பிள்ளைக்கறி வேண்டுமென்று அடம் பிடித்திருக்கிறார். எங்களை இந்தக்கதை சொல்லுங்கள் என்னும் கேள்வி எப்படியிருக்கிறது பாருங்கள்:

சட்டியிலே பாதி,
அந்தச் சட்டுவத்தில் பாதி
இட்ட கலத்தில் பாதி இட்டிருக்க,
திட்டமுடன் நாடி வந்த சொனேசர்
வா! வா! என்றழைத்த போது
பிள்ளை ஓடிவந்தது, எவ்வாறுரை?

இதுதாங்க கேள்வி. சில பேர் இப்படிக் கேள்வி கேட்டா பரிட்சை ஹாலை விட்டு ஓடிப் போயிடுவாங்க :-) ஆனா, அந்த ஓசை நயத்தைக் கவனியுங்கள். இளையராஜா ஒரு படத்திலே மியூசிக் போட்ட மாதிரி கரண்டி ஓசையிலே இசையிருக்கு, சொம்பு உருளற போது இசையிருக்கு, பசு கத்தும் போது இசையிருக்கு, ஒலை அசைவிலும், வேணுவின் தலையசப்பிலும் இசையிருக்கு. தமிழில் இந்த இசையிருக்கு. சந்தம்தான் தமிழ் இசை என்னும் வீணையின் நரம்பு. மீட்ட, மீட்ட இசை வரும். எனவே கவிதைக்கு முக்கியம் சொல் நயம், சந்தம். கவிஞனுக்கு சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் ஓசை கேட்க வேண்டும். தியானத்தின் ஆழத்தில் ஓங்கார இசையிருக்கும்.

சங்க காலத்துப் பாட்டுக்குப் போவோம்...

"நாராய் நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!"எப்படி வார்த்தை விழுகிறது பாருங்கள். ஓடையில் நிற்கும் உணர்வு வரவில்லை? சல, சலவென்று?

"நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு"

சும்மா ஒத்தை நாரையிடம் அவர் பேசவில்லை. ஜோடியாய் இருக்கும் நாரையிடம் பேசுகிறார். காரணம் என்னவென்று அடுத்தவரியில் புரியும்.

"எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!"

இங்கே ஐயா குளிரிலே நடுங்கிக்கொண்டிருக்கிறார். எப்படி? "கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழீயி". இது கிராமத்தில் காணக்கூடிய காட்சியே. ஜெயமோகன் தனது இளமைக்காலத்தில் குளிர் தாங்காமல் தெருவில் கிடக்கும் நாயுடன் ஒண்டிக்கிடந்திருக்கிறாராம்.

இதப்போய் அவள்ட்ட சொல்லுங்கிறார் புலவர். பாவம், அவ கிழிஞ்ச புடவையோட, நனைந்த சுவர், பொத்தலுடைய கூரை, கூவும் கவுளி இதைப் பாத்துக் கொண்டு உக்காந்திருக்கா? ஏதாவது நல்ல சேதி வராதான்னு? அவள்ட்ட போய் இதைச் சொன்னா என்ன பாடுபடுவா? இதெல்லாம் அப்படியே காட்சிப்படுத்துகிறார் புலவர்.

கவிதையை இரசிக்க நல்ல இரசிகர்களின் பழக்கம் வேண்டும். இல்லை நல்ல வாத்தியார் வேண்டும். திமுக ஒரு காலத்தில் எங்களையெல்லாம் செந்தமிழை வைத்தே கட்டிப்போட்டிருந்தது.

தமிழ் அள்ள, அள்ளக் குறையாத வளமுடைய மொழி. கவிதை தமிழின் மகுடம். அத்துடன் பரிட்சயப்படுத்திக்கொள்வோம்!

When do you teach your child about sex?

 
நம்ம நோட்டீஸ் போர்டிலே தைர்யமா ரெண்டு பேரு 'வீட்டுக்கு வாங்கன்னு' அழைச்சிருக்காங்க. நான் வாக்குக்கொடுத்தபடி அவர்கள் இல்லம் சென்றேன்.

தமிழ்நாட்டில் 'வாங்க' என்பதுதானே இயல்பாக வரும். ஆனால் வலைப்பூவகத்திற்கு வாங்க என்று கூப்பிட ஏன் இவ்வளவு கூச்சப்படுகிறார்களென்று தெரியவில்லை.

மீண்டுமொரு அநாமதேய வலைப்பூ. ஜே.கிருஷ்ணமூர்த்தி "பருந்தின் வழித்தடம்' என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வானில் பறக்கும் பருந்து தடம் பதிப்பதில்லை. அதுபோல் 'நான்' என்பது தடம் போடாத வாழ்வு வாழவேண்டும் என்பார். அதனால் எனக்கு இந்த அனானிமிட்டி பிடிக்கும். ஆனால் பலர் இதை பயங்கோளி யுத்தியாகப் பயன்படுத்தி மற்றவர்களை வசைபாடித் தீர்க்கின்றனர். இதில் பிரபலமான இலக்கியகர்த்தாக்களும் அடக்கம் என்று காலச்சுவடு சொல்கிறது! அது இருக்கட்டும்.

சுவடு என்ற வலைப்பூ சுவடு பற்றிப் பேசுகிறது. ஆனால் யார் நடத்துகிறார் என்ற சுவடுதான் இல்லை :-) ஜனரஞ்சகமாக சுவடு பதிக்கிறார். அதில் எனக்குப் பட்டது இந்த 'நாராய், நாராய்' பாடல். பள்ளியில் படித்தது. ரொம்ப அருமையான பாடல். இந்தப்பாடற் பின்னணியில் சிவசங்கரம் அவர்களும் ஒரு பாடல் எழுதியுள்ளார். ஈழத்தின் போர் அவலக்குரலாக. நாரையை நம்மாழ்வாரும் தூது விடுகிறார். நாரை என்பது சில நேரங்களில் தாதி, தோழிக்கு ஆகிவருவதுமுண்டு. வலசை போதல் என்பதைப்பற்றி இந்த சங்கப்புலவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. நல்லவேளை இந்தக்காலப் புலவர்களுக்கு சன்ஸ்கிருதி காசோலையெல்லாம் கிடைப்பதால் நிலமை முன்னேறியுள்ளது என்று கருத்தில் கொள்க.

கருப்பு நிலவின் மனசு காதல் மனசு என்று ஒரு கருப்பு நிலா பாடுகிறது. யாழ் இணையத்தில் தொடராக எழுதப்பட்ட காதல் கவிதைகள். காதல் கொஞ்சம் இவரைக் கடித்திருப்பது தெரிகிறது. காதலின் வேதியியல் பற்றி டைம்ஸ் தலைப்புக்கட்டுரை வெளியிடுகிறது. இந்த உணர்வுகள் வெறும் அரூபமானவை மட்டும்தானா? இல்லை அதற்கு பௌதீகக்காரணங்கள் உள்ளனவா? ஆசிய வேதியியல் கருத்தரங்கில் பேசிய நோபல் விஞ்ஞானி 'உயிரியல் என்பது அடிப்படையில் வேதியியல்தானே!' என்றார். அது பார்க்கும் பார்வையைப் பொறுத்தது. காதலில் தோல்வியுற்று மரணிப்பவர் உண்டு. எது, யாரை எப்படிக் கட்டுபடுத்துகிறது என்பது ஒரு இயங்கு கேள்வி. கேள்வியுடனே மரணித்துவிடுகிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முற்றுப் பெறாத தேடலின் தற்காலிக முடிவாக மரணம் வாய்க்கிறது. மானுட வாழ்வென்பது ஒருமையா பன்மையா?

பாலசுப்ரா தனது இரண்டு பதிவுகளிலொன்றில் அஞ்சு வயதிலும் காதல் வரும் என்று சொல்கிறார். அந்த வயதிலேயே காதல் வருகிறது என்றால் அது வேதிமங்களின் சூழ்ச்சிதான். கருவில் இருக்கும் போதே காதல் ஆசைகள் வந்துவிடுவதாக வாசித்த ஞாபகம். உயிரியல் வல்லுநர்களைப் பொறுத்தமட்டில் உயிர் தன்னை புதிப்பித்துக் கொள்ள தனி மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்கு இந்த பாலியல் இச்சை (செக்ஸ் டிரைவ்)தான் எஞ்சின். அது இல்லையெனில் வாழ்வோட்டம் இல்லை. நம்ம ஊர் சினிமாவும் இல்லை!

சரிங்க இதெல்லாம் யோசிச்சு வையுங்க! மேற்கிலே இருக்கிறவங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும். கிழக்கிலே உள்ளவங்க நிம்மதியாய் போய் தூங்குங்க.

Monday, December 01, 2003

Name your child meaningfully

 
காலையில் எழுந்தவுடன் கண்ணன் பெயர் சொல்லுங்கள்! நாள், கிழமையென்றால் நாராயணன் பேர் சொல்லுங்கள்!

இருங்க! அதுக்குள்ள கம்பைத் தூக்கிக்கிடு வந்தா எப்படி? இதெல்லாம் நான் சொல்லலீங்க! தமிழுக்கு பிள்ளைத்தமிழைத்தந்த எம் எந்தை பட்டர்பிரான் பெரியாழ்வார் சொல்கிறார். அது சரி, இப்ப எதுக்கு இந்த காஸ்பல் அப்படீங்கிறீங்களா? காரணமிருக்கு.

என்ன பெயர் வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்? அப்படின்னு 'உயிர்ப்பு-ºó¾¢Ã§Ä¸¡' அலசி ஆராய்ஞ்சு இருக்காங்க. மூன்று கட்டுரைகள். வாசிக்க வேண்டியவை. இந்தப் பெயரிடுதலில் பெரிய உளவியல் சமாச்சாரங்கள், சமூகக் காரணகங்கள், இன அடையாளம் எல்லாம் ஒளிந்திருக்கின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லையெனினும் முதலாளியின் குடும்பப்பெயர் கிடைத்தது (அதுகூட இந்தியச் சாதி அடிமைகளுக்கு இல்லை என்பது வேறு விஷயம்). மூன்று தலைமுறைக்குள் இவனது வேர்கள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டுவிட்டது. "வேர்" என்று ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுத வேண்டிய நிலமையாகிவிட்டது. தமிழ் மண்ணில் சாதீயம் போகவேண்டுமென்பதற்கு எல்லோரும் 'பாரதி' என்னும் பெயரைக் குடும்பப்பெயராக வைத்துக் கொள்ள வேண்டுமென கண்ணதாசன் ஒருமுறை சொன்னார். இது குறித்து நான் 2001 ஆண்டில் லண்டன் பி.பி.சியில் பேசிய உரையை 'என் மடலில்' இட்டுள்ளேன். இதையும் சேர்த்து வாசித்துப் பயன்பெறுங்கள்!

எல்லோரும் சுபாவை 'ஊர் சுற்றி' என்று அழைப்பதால் கோபம் கொண்டு மூன்று நாளாக எதுவும் எழுதாமல் இருக்கிறார்கள். எனவே இப்படி கன்னாபின்னாவென்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் (வம்பு: அடுத்து தூரக்கிழக்கு தேசங்களுக்கு பயணிக்கப் போவதாய் வதந்தி! "ஜெர்மனி இன் போகஸ்" (இதற்கு இரண்டு அர்த்தம் வந்து விடுகிறது இப்படி எழுதினால்) என்று சொல்லி விட்டு வேறு நாட்டுக்கதைகள் அதில் இனியும் வரும்! ஜாக்கிரதை! பராக், பராக்!)

இப்போதைக்கு இவ்வளவுதான். வேலைக்குப்போணும்..மீண்டும் மாலையில்...

Website, Blog, Forum - all in one!

 
வெண்ணிலவு வீசி வர இரவில் பயணிக்கப்பிடிக்கும். ஒரு பார்ட்டியில் என் முகத்தைப்பார்த்து எனக்கு சூரியோதயம், சந்திரோதயம் பிடிக்குமென்று ஒரு இத்தாலிய மாது சொன்னாள். அது பற்றி பின்னொரு சமயம் பேசுவோம்.

13 வருடங்களுக்குப்பிறகு எனது ஜப்பானியப் பேராசிரியரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது இன்று - ஒரு கருத்தரங்கில். பார்த்துவிட்டுத் திரும்பும் போது நள்ளிரவாகிவிட்டது. சில விஷயங்களைச் சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கலாமென எண்ணம்.

கருந்தரங்கிற்கு முன் கொஞ்ச நேரம் இணையத்தில் உலாவ நேரம் கிடைத்தது. தமிழ் வாசனையில்லாத கொரியன் கணினி. நம்ம வலைபூக்கள் அதில் எப்படித் தெரிகின்றன எனச் சோதனை செய்து பார்த்தேன். முதல் முறையாக வெங்கட்ரமணனின் வலைப்பூ என்னைக் கண்டு சிரித்தது. அவர் இங்கு நடந்த விவாதம் குறித்து தன் கருத்தை எழுதியிருக்கிறார். அவர் சொல்வது எனக்குப்புரிகிறது. குரொசவா பற்றி எழுதியிருக்கிறார். அப்பாடி! இந்த 'அகதிகள் உருவாகும் நேரம்' கருணாகரமூர்த்தி அகப்பட்டுவிட்டார்! அவர் மிகவும் பொறுப்புள்ள ஒரு காரியம் செய்து வருகிறார். தனது கதைகளை ஒவ்வொன்றாய் மின்பதிவாக்கி வருகிறார். இதைத்தான் நான் முன்பு என் திசைகள் கட்டுரைத்தொடரில் சொன்னேன். வலைப்பூக்கள் தமிழருக்கு வசப்படும் போது, எழுத்தாளர்கள் சுயமாகவே தங்களது படைப்புகளை மின்பதிவாக்குவர். மதுரைத்திட்டத்தில் தொண்டூழியத்திற்கு ஆள் தேடி அலைய வேண்டியதில்லை. இதுதான் நான் சொன்ன 'சுயமுடை ஜீன் கோட்பாடு'. வாழ்க, வளர்க. மூன்று கவிஞர்கள் (ஐயையோ! என்னை விட்டுட்டேன்!) தங்களது ஆக்கங்களை இது போல் மின்பதிவு செய்து வருகிறார்கள். தூக்கக்கலக்கத்தில் கவிதை பற்றிப்பேசக்கூடாது. அதுவொரு தவம். நாளை வருவோம். கொரியக்கணினியிலும் 'வளவு' வளைந்து கொடுக்கவில்லை. கொடுப்பினை இல்லை! நவன் சொன்னாரே என்று கண்ணனின் (இவர் வேறங்க!) வலைமொட்டு மலரும் என்று காத்திருந்து கண்கள் பூத்ததுதான் மிச்சம். அந்தப்பூ பூக்கவே இல்லை!

இட்லி வடை!தமிழன் அடையாளம் இழந்து அலைகிறான் என்று யார் சொன்னது? அவனது அடையாளமே இந்த இட்லி வடைதான் என்று சொல்கிறது இந்த வலைப்பூ! இட்லி, வடை உண்மையில் தமிழன் சொத்தா? இல்லை தோசை மாதிரி அதுவும் ராயர்கள் கொண்டுவந்ததாவென ஒரு பட்டிமன்றம் வைக்கலாம் (தலைப்பூ கொடுத்தாச்சு. யோசனை கீழே..). இந்த வலைப்பூ பதிவர் யார் என்பது ஒரு சுவாரசியமான கேள்வியாக இருக்கிறது. இது பற்றியும் நான் நிரம்ப தமிழ் டாட் நெட்டில் எழுதியுள்ளேன். ஆறாம்திணையின் அதிசய குணங்களில் இந்த 'மாயாவித்தனமும்' ஒன்று. நேரமிருந்தால் இது பற்றிய என் கவிதைதயை (¦ÀÂ÷-!) படியுங்கள்.

யாழ் சுதாகர் பதில் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். அவர் தன்னை குமுதம் அரசு போல் பாவித்துக் கொண்டு அனுப்பும் கேள்விகளுக்கு அங்கு பதில் தருகிறார். இப்படி கேள்வி கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருந்தல் பள்ளிப் பருவத்துடன், அம்புலிமாமா படிக்கும் காலத்துடன், சங்கர்லால் துப்பறிகிறார் காலத்துடன் முடிந்து விட வேண்டியது! ஆனால் பலர் இன்னும் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! (இதை இன்னும் இண்டராக்டிவ்வாகச் செய்யலாம்!) பதிலுக்கு வலைப்பூ வந்தாச்சு அடுத்து பட்டிமண்டபத்திற்கும் ஒரு வலைப்பூ அமைக்கலாம்.

இப்படியெல்லாம் வலைப்பூவின் எல்லை கூடும் போது ஒரு ஒருங்கிணைந்த தளம் தேவைப்படுகிறது. இதைச் சும்மாத் தருகிறேன் என்கிறார்கள் புளாக்கி டாட் கம். ஒரே தளத்தில் நீங்கள் வலையகம், வலைப்பூ, மடலாடற்குழு, பின்னூட்டம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம். என் யோசனைகளுக்கும என்று செவி மடுக்கும் மதியும், காசியும் இங்கு போய் சோதனை செய்து பாருங்கள்! வலைப்பூ வளம் பெறும்.

சரிங்க ரொம்பத் தூக்கமா வருது. நாளை மீண்டும் மலரும், பூவின் வாசனை தொடரும் என்று கூறி விடை பெறுவது....

நா.கண்ணன்

 
இடையில் குறுக்கிடுவதற்கு கண்ணன் மன்னிக்கவேண்டும். திரு.மாலன் அனுப்பியிருக்கும் கடிதத்தை இங்கு படிக்கலாம்

Sunday, November 30, 2003

The Blog Matrix!

 
இங்கு விடிந்து விட்டது! மாலையும் ஒரு தபால் அனுப்பலாம். மடலாடற்குழுக்களில் பரிட்சயமுள்ளவர்களுக்கு 'எல்லே' சுவாமிநாதனைத் தெரியாமல் இருக்காது. சமீபத்தில் எனக்கு எழுதியிருந்தார். முன்பெல்லாம் தமிழ் டாட் நெட் என்னும் தமிழ் இணையம்தான் இருந்தது. எல்லோரும் அதில் எழுதிக் கொண்டிருந்தோம். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தன, கலந்து கொள்ளவும் முடிந்தது. இப்போது அகத்தியர், தமிழ் உலகம், இ-சுவடி, உயிரெழுத்து என்று வாசிக்க வேண்டியுள்ளது. காலையில் பேப்பர் படிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது. போதாக்குறைக்கு தனி மலர்களாக வலைப்பூக்கள் மலர்ந்துள்ளன அவைகளில் எதை விடுவது, எதைப்படிப்பது என்று குழப்பமாகவுள்ளது என்று.

உண்மைதான்! கையில் நேரமில்லாத நேரத்தில் இத்தனை சுவாரசியமாக பல்வேறு வலைத்தளங்கள், ஓசியாக கொறிக்க பல விஷயங்களைத்தரும் போது வாசிக்கமுடியவில்லையே என்ற ஆதங்கம் வராமல் போகாது. வேலையெல்லாம் விட்டுப்புட்டு இதையே வேலையென்று வைத்துக் கொண்டால் கூட இந்த வலைப்பூக்களை மட்டும் வாசிக்கமுடியாது. இது தகவல் புரட்சியின் பொங்கும் வளர்ச்சி. தகவல் மேறிக்ஸ் மாதிரிக் கொட்டிக்கொண்டு இருக்கிறது. எதை எடுப்பது? எதை விடுவது?

பல வலைப்பூக்களை வாசிக்க முடியாமல் இருப்பது "மறைவான ஆசீர்வாதம்' போலத்தோன்றுகிறது. இருந்தாலும் ஏன் என்று புரியவில்லை! நண்பர் கருணாகரமூர்த்திக்கு நான்தான் அமைத்துக் கொடுத்தேன். பாவி மனிதர் என்ன செய்தார் என்று தெரியவில்லை, வாசிக்கமுடியவில்லை :-) வளவு எல்லோருக்கும் செல்லப்பிள்ளை எனக்கு மட்டும் பெப்பே! வெங்கட்ரமணனனும்-ஆமென்! மாலனுடையது உண்மையில் மேட்றிக்ஸ் மாதிரியே எண்களாக விழுகின்றன:-)அகரவரிசையில் ஆரம்பித்துப் பார்த்தேன். ஐந்தில் மூன்று பழுது :-) மாலையில் வரிசையாக வலம் வருகிறேன். நான் நேற்றுப் போட்ட பொட்டியைத் திறந்து பார்த்தேன். ஒருவரும் வீட்டு முகவரி தரவில்லை. இரண்டு விலை மாதர் இல்லங்கள் திறந்திருந்தன. காலங்கார்த்தாலே இந்த கர்மகாண்டம் வேண்டாமென்று விட்டு விட்டேன் (அப்போ மாலையில் பார்பதாக உத்தேசமோ -இது மனசாட்சி :-)

சரி, மீண்டும் மாலையில்......நா.கண்ணன்

Let me hear you! by N.Kannan

 
எல்லோருக்கும் சலாமுங்க!

மத்தவங்க பேசறத வேடிக்கை பாக்கறது சுகம். மைக்கைப் பிடிடாடான்னா கொஞ்சம் உதறும். அதுவும் நீங்க புகுந்து விளையாடியிருக்கிறத பாத்தா, நாம என்ன இவங்களுக்கு புதுசா சொல்லப்போறோம்ன்னு தோணுது.
என்னடா இப்படி சொல்லறேன்னு பாக்கறீங்களா? ஒரு கதை சொல்லறேன். (ஒரு ஆசாமி, பாவாடையைச் சுருட்டிண்டு என் முகம் பார்த்து ஆர்வத்துடன் அமர்வதைக் காண்கிறேன் - மன்னிச்சுடுங்க இந்த நந்து அப்பப்ப உள்ளே வந்துடறான்!)
அப்ப சங்கராபரணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது - அது தமிழ்ப்படம் இல்லையென்றாலும்! 'மதுரை' கிருஷ்ணன் மதுரைக்கு வந்திருந்தார். அவர் வந்த சேதி நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகருக்கு வந்தது.
மதுரை கிருஷ்ணன் அரியக்குடியின் சீடர். இன்று கர்நாடக சங்கீத பந்தா என்று ஒன்று உண்டென்றால் அதை உருவாக்கியவர் அரியக்குடி. அந்தக்காலத்து கதை கேட்க எனக்கு பிடிக்கும். ஹரிகதா காலாக்ஷேபம் மிகவும் பிடிக்கும். கிருபானந்த வாரியார் ரொம்ப பிடிக்கும் (எல்லோரும் அவங்கவங்க பத்தி சொல்லணும்ன்னு போன எடிட்டர் நவன் சொல்லியிருக்கார் :-)
மதுரை கிருஷ்ணன் வந்தா டவுன் ஹால் ரோடு காலேஜ் ஹவுஸ்ஸிலேதான் தங்குவார். டிவிஎஸ் கார் போர்டிகோவில் நிற்கும். நினைச்சா உடனே கிளம்ப தோதா.
"வாங்க கண்ணன்!" என்று அன்பாக அழைத்து, உடனே ஒரு டிகிரி காபி ஆர்டர் பண்ணுவார். தொட்டுக்கொள்ள பஜ்ஜி, வடையென்று ஏதாவதொன்று வரும். இதை சுவைத்துக் கொண்டே அவர் சொல்லும் கதைகளைக் கேட்பது சுகம். அவருக்கு வெத்திலைப் பொட்டி தூக்கவென்று ஒருவர் இருப்பார். அந்த பந்தா ரொம்ப சுவாரசியமா இருக்கும்.
"கண்ணன் நீங்க சங்கராபரணம் பாத்திட்டீங்களா?" என்று கேட்டார். நான் ஏற்கனவே பார்த்தாச்சு. இருந்தாலும் இவரோட போனா பர்ஸ்ட் கிளாஸிலே பாக்கலாம் (அப்போ எங்களுக்கு 400 ரூபா தாங்க ஸ்காலர்ஷிப்). "இன்னும் பாக்கலே!"ன்னு பொய்க்காச்சும் சொல்லி வைத்தேன். ராத்திரி செகண்ட் ஷோ போறோம். வரேளா? என்றார். அவர் சினிமாவிற்கு போகும் ரகமல்ல. அந்தக்காலத்தில் முக்காடு போட்டுக்கொண்டு சினிமாக் கொட்டகைக்கு போகும் ஆட்கள் உண்டு. அது விடலைச் சமாச்சாரம் என்பது போன்ற ஒரு கருத்து. இவர் அந்தக்காலத்து ஆசாமிதானே.
ஆனா, ஏன் பாக்கணும்? அது சங்கீதம் பற்றிய படம் என்பது ஒன்று. அவர் சென்னையில் பரதாலயா என்ற நிறுவனத்தின் இயக்குநர். இவரது பிரதான சிஷ்யை சுதாராணி ரகுபதி ஒரு தேர்ந்த பரதக்கலைஞர். புதிய காட்சி அமைப்பிற்கு புதிய புதிய யுத்திகளை எதிர்பார்ப்பவர். சினிமா பார்த்துவைத்தால் ஏதாவது புதிய ஐடியா கிடைக்காதா? என்ற எண்ணமாக இருக்கலாம். எது எப்படியாயினும் அன்று அடிச்சுப்பிடிச்சு பஸ் ஏறி யுனிவர்சிடி போகவேண்டாம். வாகன பிராப்தி உண்டு :-) மேலும் கச்சேரிக்குப் போனாலும், சினிமாவிற்குப் போனாலும் ஹோட்டல்/கேண்டீன் டிபன் கிடைக்கும் (இதெல்லாம் மாணவர்களுக்கு முக்கியம்ங்க!)
இடைவேளையில் திடீரென்று 'சங்கீதம் பாடறது அவ்வளவு லெகு (இலகு) அல்ல!' என்றார். ஒவ்வொருமுறை மேடையிலே ஒக்காரும் போதும் புதுசா பரிட்சை எழுதற மாணவன் போல கவனமா இருக்கணும். ஒருமுறை தவறு விட்டாலும் தொழிலில் கெட்ட பெயர் வந்துவிடும்" என்றார்.

இந்த வாத்தியார் உத்தியோகம் வந்தவுடன் அதுதான் ஞாபகத்துக்கு வருது! ஏதோ பரிட்சைக்கு உக்காரும் மாணவன் போல். இவங்க வேற (நம்ம வாத்தியாரம்மா சந்திரமதி:-) புதுசா எதாவது சொல்வார் அப்படின்னு ஒரு எதிர்பார்ப்பை விதைத்து விட்டார். இன்னும் கஷ்டமாப்போச்சு நிலைமை!

முதல்லயே சொல்லிடறேங்க! பாதி வலைப்பூ இன்னிக்கு வரைக்கும் என் காதிலே பூ வைச்சுக்கிட்டு இருக்கு! என்ன தகிர்தித்தோம் போட்டாலும் வெறும் கட்டம்தான் வருது. இதுக்கும் நான் மத்தவங்க மாதிரி விண்டோஸ் எக்ஸ்பி (ஹோம் எடிசன்)தான் வச்சிருக்கேன். ஆபீஸ் மெக்கிண்டாஸ் வச்சுப்பாத்தா இதுகூட கிடையாது. அன்னிக்கு ஜாம்பவான்கள் முத்து, கல்யாண் இரண்டு பேரோட பேசினப்புறமும் மெக்கிண்டாஸ் தண்ணி காட்டிடிச்சு. தமிழ் இன்னும் சித்தர்பாணியிலே பரிபாஷையாகவே பல கணினிகளுக்குத் தெரியுது. அதுனால ரொம்ப மேய முடியும்ன்னு தோணல.

இருக்கிற வலைப்பூக்களை பல்வேறு வகையில் வகைப்படுத்தி பாத்தாச்சு. புதுசா ஏதாவது செய்யலாவென யோசிச்சா இந்த ஷவுட் பாக்ஸ் ஞாபகத்துக்கு வருது. இதை வச்சு வலைப்பூவிலே ரியல் டைம் சாட் செய்யமுடியும். அதிலேயும் பிரச்சனை இருக்கு. உங்களுக்கு முன்னால நான் முழிச்சுடறேன். ரொம்ப சுறு, சுறுப்புன்னு இல்ல. இங்க சீக்கிரம் விடிஞ்சிருது. அதனாலே நியூயார்க்கிலே சுப்ரபாதம் பாடறபோது நான் பள்ளியறையில் இருக்கேன். அப்புறம் எப்படி சாட் செய்யறது? சரி இதை முயற்சி செய்து பார்ப்போம்:

Linkliste

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். எவ்வளவுதான் நாமாகத் தேடினாலும் பல வலைப்பதிவுகள் விட்டுப்போக வாய்ப்புண்டு. நானிருக்கும் இந்த வாரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி பேச வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதன் முகவரியையும், அது பற்றிய சிறிய அறிமுகத்தையும் இங்கு பதித்து வையுங்கள். தினம் வீட்டுப்பாடம் போல் முதலில் உங்கள் வலைப்பூவை வாசித்துவிட்டு (வாசிக்க முடிந்தால்) எழுதுகிறேன்.

இன்னொன்றும் செய்யலாம். உங்களுக்கு Blogger-ல் வலைப்பதிவு (பூ) இருந்தால் இலவசமாக ஒரு Audioblogging செய்யலாம். உங்கள் முகம் தெரியாவிட்டாலும் உங்கள் குரலைக் கேட்கலாம் பாருங்கள்! எப்படி பேச்சுப்பதிவு செய்வது என்றால் நம்ம காசி இருக்கவே இருக்கார்!

சரிங்க! மீண்டுமொரு சலாம்! அதுக்குள்ளாற வேறொரு வேலை வந்துடுச்சு. அப்ப வரட்டுங்களா.....

நா.கண்ணன்

 
Sharon Pothigai, Prabhu's daughter, Mumbai (c)Prabhu @ Maraththadi

 
இந்த வாரம் வலைப்பதிவுகள் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருக்கப்போகிறவர் உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் டாக்டர் நா.கண்ணன். இணையத்தில் பலவித விஷயங்கள் பற்றி எழுதிவரும் இவர் தமிழ் மரபு அறக்கட்டளை, முதுசொம், மின்-சுவடி, மதுரைத்திட்டம், இப்போது வலைக்குறிப்புகளில் பல புதிய முயற்சிகள் என்று எப்போதும் நவீனமயமாக்கலை தமிழுலகம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்திப்பவர். இத்தனைக்கும் தமிழ்த்துறையையோ, கணினித்துறையையோ சார்ந்தவர் அல்ல இந்த விஞ்ஞானி.

வரும் சனிக்கிழமைவரை, இங்கு அவர் ரசித்த வலைப்பதிவுகள்பற்றியும், புதிதாக உருவாகும் வலைப்பதிவுகள்பற்றியும் சுவையாகக் கூற உங்களுடன் முனைவர் நா. கண்ணன்.

 
வலைத்தொடர்பு பிரச்சினைகளினால், தானே வந்து உங்களிடம் விடைபெற முடியவில்லையென்றும் இன்னொரு சமயத்தில் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் உங்களிடம் கூறச்சொல்லி மடல் அனுப்பி இருந்தார் நவன். தமிழில் முதன்முதலில் வலைபதிந்த அவருக்கு உங்கள் சார்பில் நன்றி கூறிக்கொ'ல்'கிறேன்.


 
Central Park, NY(C)Bobono

 

Dr. Kannan's mail abt the ongoing Discussion could be read here

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com