<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, January 03, 2004

தர்பார் கலைந்தது!

 
ஒரு வாரமாக, நான் எழுதியதைப் படித்தவர்களுக்கும், உற்சாகமூட்டியவர்களுக்கும், feedback நாயகர்களுக்கும், 'என்ன நடக்குது இங்கே?' என்று தவித்தவர்களுக்கும், 'என்ன நடந்தா என்ன, நமக்கு ஜாலிதான்' என்று நினைத்தவர்கÙக்கும், எல்லாஆஆஆஆஆஆஅ ஜனங்களுக்கும்...ஒரு பெரிய வந்தனம்.

ஆங்...மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன், ஒரு சின்ன விஷயம்.

"கமெண்ட் செìக்ஷனில், பெயரில்லாதவர்கள் நடத்தின களேபரத்திற்கு உங்ககிட்டேயிருந்து எந்த reactionஉம் இல்லியே...ஏன்?" இப்படிî சில தனி மடல்கள் வந்து சேர்ந்தன. அவற்றுக்கு என் பதில்: இதோ!

சீனியர் ஒருத்தரே இப்படிச் சொல்லியிருக்கும்பொழுது...அதைக் கடைôபிடிப்பதுதானே நம் வேலை?

அப்ப, மக்களே...வர்ட்டா?

குப்பையும் கால்முறிவும்...!

 
குப்பை சேர்ப்பதால் என்ன தீமைகள் என்ற ஆராய்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். குப்பையினால் காலை முறித்துக்கொண்ட ஒருவரின் கதை தெரியுமோ? 'கொள்ளிடத்தில்' மூழ்கி எடுத்து வந்த செய்தி இது.

"...மருத்துவனையில் காலை சரிபார்க்க தங்கியுள்ளார் மூர். செவிலி காலையில் படிக்க கொடுத்த நாளிதழை கண்டு மூர் மூர்ச்சையடைந்தாக கேள்வி..."

அது சரி!

சினிமாச் செய்திகள்

 
"...இயல், இசை, நடிப்பு, மூன்றையும் தன்னகத்தே கொண்டு லளித கலைகளின் உயிர்நாடியாக விளங்கும் ‘சினிமா’ ஒரு கலைதான். அதை வளர்ப்பவர்கள் கலைஞர்கள் தான். அவர்களின் பொறுப்பு மகத்தானது. அதை உணரத் தவறிய குற்றத்தினால்தான் தமிழ்நாட்டின் சினிமாக்கலை, ஒரு தொழிலாகவும், வியாபாரமாகவும் மட்டும் நின்றுவிட்டது. கலைக்கான வளர்ச்சி பெறவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பம்பாய் அரசாங்கத்தார் சினிமாக்கலை முன்னேற்றத்திற்கான சில முக்கியமான சீர்த்திருத்தங்கள் செய்ய முன்வந்தார்களென்பதைக் குறிப்பிட்டபோது “தமிழ்நாடு முன்வருமா?” என்று எழுதி யிருந்தேன். நம் கலைஞரிடையேயும் விழிப்பு ஏற்பட்டுவிட்டது தெரிகிறது. அரசாங்கமும் இத்துறையில் பங்கு கொண்டு முன்னேற்றப் பாதை வகுக்க முன்வந்திருப்பதாக அறிகிறேன். சிறந்த ஒரு கலை, கொலை செய்யப்படுவதை எத்தனை நாட்கள்தான் சகிக்கமுடியும்?..."

- ரசிகன் [(‘சிவாஜி’, மார்கழி, 14. (டிசம்பர் 29, 1946)].

புது வருட அலைகள்...

 
புது வருடத்தில், அருணா ஸ்ரீனிவாசனின் பதிவு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.

"...உலகெங்கும், மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக ஒரு தினத்தில் மகிழ்ச்சியோடு ஒருவரையருவர் வாழ்த்திக்கொள்ளும் ஒரே "பண்டிகை" தினம் இந்த ஆங்கில புத்தாண்டுதான். ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண், எந்த எந்தவித வித்தியாசமும் இல்லாமல் நேசக்கரம் நீட்டுவது இந்த ஒரு நாளில்தான். என்ன சொல்கிறீர்கள்?..."

உண்மைதான்.:-)

Friday, January 02, 2004

ரசனையென்னும் வரம்...

 
"...ரசனை என்பது ஒரு வரம்; ஒரு கொடை. எல்லோருக்கும் அது பிறவியிலயேயே வாய்த்துவிடுவதில்லை. பயிற்சியால் பலர் அதை அடையலாம். பாரம்பரியமாகக் கூட அனேகருக்கு அது சித்திப்பதுண்டு. பிறவியிலேயே ரசனை வாய்க்கப் பெற்றவர்கள் பாக்யசாலிகள். தி.ஜானகிராமன் ரசனை பற்றி எழுதும்போது, `மதுரைமணி ஒரு அற்புதம் என்றால் மதுரைமணியின் பாட்டைக் கேட்டு ஓடுகிறானே அவனும் கூட ஒரு அற்புதந்தான்` என்பார்....ரசனை இசைக்கு மட்டுமல்ல-பிற எல்லா கலைகளுக்குமே வேண்டும்தான். அதற்கு ஒரு மனலயம் வேண்டும். தொட்டதில் எல்லாம் தோய்கிற ஒரு மனம் வேண்டும். பார்ப்பதில் எல்லாம் பரவசம் கொள்ளுகிற ஒரு பக்குவம் வேண்டும்... "

'நினைவுத் தடங்கள்' சுகமாகப் பயணிக்கிறது. தான் ராஜா ராணிக் கதை கேட்டு வளர்ந்தது, தமிழ் கற்றுக்கொண்டது, சிற்றிதழ் அனுபவங்கள், காமராஜர் வருகை என்று திரு.சபாநாயகம் விவரித்துக்கொண்டே வருகிறார்.

"...`வெள்ளைக்காரனை புட்பாலை உதைக்கிற மாதிரி உதைத்து வெளியேற்ற வேண்டும் என்று புட்பால் உதைக்கிறமாதிரி வலது காலை முன்னோக்கி விசிறிக் காட்டினார். அப்போது என்னுள் குபீரென்று சுதந்திரக் கனல் மூண்டது. `வந்தேஏஏஏ மாதரம்` என்று எனையறியாமலே ஆவேசமாய்க் கூவினேன். கூடி இருந்த எல்லோரும் ஆவேசமாய் என்னைப் பின்பற்றிக் கூவினார்கள்...நான் ஆவேசமாய் காந்தியடிகளின் படுகொலை பற்றிப் பரபரவெனப் பத்துப் பக்கங்களுக்குமேலாக என் சோகத்தை இடம் மாற்றிய பிறகுதான் ஓய்ந்தேன். அதுதான் நான் எழுதிய முதல் படைப்பு. நான் எழுத்தாளன் ஆக முதல் விதை அப்போதுதான் ஊன்றப் பட்டிருக்க வேண்டும்..."

எழுத்தின் மேல் இவருக்குப் ஏற்பட்ட பிடிப்பு இன்றுவரை தொடர்கிறது...

பண்டிகை special!

 
arusuvai virunthu

கண்டதும் காதல்...!

 
"...அழகு என்றால் அப்படி ஒரு அழகு.. சங்க காலப் புலவர் இருந்தால், "உன் கன்னத்திலிருந்து கொஞ்சம் சதையைப் பிய்த்து எடுத்துத்தான் நிலவு செய்தார்கள்.."என்று கடினமான தமிழில் ஒரு பாடல் இயற்றியிருப்பார்.. அண்மைக்காலத் தமிழ் சினிமாப் பாடலாசிரியர் என்றால், "காதல் அரக்கியே.. கத்தி எடுத்து இதயம் குத்தி என்னைக் கணக்குப் பண்ணும் ரத்தக் குடிகாரியே..!!"என்று போற்றிப் பாடியிருப்பார்.. (ரத்தக் குடிகாரி என்றால் vampire)

இப்படி அழகாக இருக்கும் அந்தப் பெண் எங்களைக் கடந்து போனாள். எங்கள் கண்கள் சந்தித்தன.. கண்டதும் காதல் கொண்டோம் நாங்கள்
..."

எடுத்த எடுப்பிலேயே அமர்க்களமாகத் தொடங்குகிறது மீனாக்ஸின் லேட்டஸ்ட். ('ரத்தக் குடிகாரியே'...என்று அழைப்பவர், இன்னும் என்னவெல்லாம் பட்டப் பெயர் கொடுக்கப்போகிறாரோ, தெரியவில்லை.). சுவாரஸ்யமாகக் கதையை நகர்த்திக்கொண்டு போய்...தொங்கலில் வைத்துவிட்டார். எப்பொழுது தொடருவாரோ? (எல்லாம் சரி...இப்படிக் காதல் புராணம் பாடுகிறவர், ""என் அம்மா ஒரு கழுதையைக் காட்டி கல்யாணம் செய்து கொள் என்று சொன்னால் நான் கண்ணை மூடிக் கொண்டு கல்யாணம் செய்து கொள்வேன்.." என்றும் சொல்கிறார். Go figure! )

அதிக ரசனை படைத்தவர்கள் பொதுவாக சாப்பாட்டு விரும்பிகளாகவும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம்:

"...நெய்யிலே வறுத்த முந்திரிகள் எனைப் பார்த்துச் சிரிக்குமே
பொங்கலில் போட்டால் இஞ்சியும் கூட எனக்கு இனிக்குமே..!!

எல்லாம் கிடக்கட்டும். இந்தப்பண்டம் என்ன என்று கண்டுபிடியுங்கள்.

"இது
மண்ணிலிருந்து பிரித்தெடுக்கும் தங்கமல்ல..
எண்ணையிலிருந்து பொறித்தெடுக்கும் தங்கம்..!!"

ஆத்தீ...இவுக ரேஞ்சே தனி!!!

கவிதையே தெரியுமா...

 
நேற்றுதான் 'பாரதிபுரஸ்கார்' ஹரியண்ணாவின் வலைப்பதிவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வெண்பா அறிமுகத்தின் முதல் மூன்று பகுதிகள் இருக்கின்றன. வெண்பா அறிமுகம் இருக்கட்டும். மன்றமையத்தில் இந்தக் கவிமன்னர் எழுதிய வெண்பா எனக்கு மிகப் பிடித்தது:

"தான்போட்டு வைக்கும் தளிகையின் பேரென்ன?
தான்போடா தெந்தச் சமையல் - தான்தான்
பசிக்கின்ற போதெல்லாம் பாட்டுக்குள் வந்து
ரசிக்கும் குழம்பு ரசம்."

குழம்பு, ரசம், கூட்டு இதை வைத்து மட்டும்தான் பாட முடியுமா? 'பேய்'யை வைத்துக் கூடப் பாடலாம். அவருடைய ஜாலியான மடல் ஒன்றின் பகுதி இது...

"...நீங்க பேய்மேலழகர் உரை பாத்ததே இல்லியா?

பேய்நாடி பேய்முதல் நாடி **அதுவிரிக்கும்**
வாய்நாடிஇஇஇஇஇ

இன்னோரு குறளி 8-#

தெய்வம் தொழாஅள் (பூத)கண-வன் தொழுது எழுவாள்
பேயெனப் பேயும் மழை."

:-)))))) அதிருக்கட்டும். கம்பரும், பாரதியும் அல்லவா ஹரியண்ணாவின் speciality? கத்தும் குயிலோசையை இவ்வளவு அழகாகக் கூடச் சொல்லமுடியுமா என்ன? Truly, a masterpiece. கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பும் அப்படியே.

மொழிபெயர்ப்பைக்கூட விட்டு வைக்கவில்லையே? 'செத்துப் போனவனின் சட்டைப் பையில் இருந்தவை' என்னவென்று அவரே சொல்கிறார், படித்துப் பாருங்கள்.

'முசல கிசலயம்', பழைய பாடல்கள், இலக்கண வகுப்புகள், கர்ணன், கல்லா மா, 'கற்பின் கனலி', (கூவத்தைப் பற்றிக்கூட!) என்று கணக்கு வழக்கில்லாமல் இலக்கிய விருந்து படைத்திருக்கிறார்...அவை எல்லாவற்றையும் வலைப்பதிவு செய்வார் என்று நம்புகிறேன்.

Thursday, January 01, 2004

கோபுர தரிசனம்

 
Darasuram('snapped'by me)


'கோபுர தரிசனம் கோடி புண்ணிய'மாம் - புத்தாண்டிற்குக் கோயிலுக்குப் போக முடியாதவர்கள், தாராசுரத்தில் இந்தக் கோயில் கோபுரத்தைத் தரிசித்து, புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு, திருப்தி அடைவீர்களாக.

சிறப்பு விருந்தினர்

 
இந்த வருடம், புத்தாண்டிற்கு Lord of the Rings வருகை தந்தார். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சியைக் கோலாகலமாக மக்கள் கொண்டாடினர்.


Scribblings...

 
'தமிழ்க் கிறுக்கல்கள்' என்று கொட்டை எழுத்தில் தலைப்புக் கொடுத்திருக்கிறாரேயழிய, நம்ம பாஸ்டன் பாலாஜியின் வலைப்பதிவில் கிறுக்கல் எதுவும் இல்லை. அவரது அம்மாவின் (திருமதி. ஆர். பொன்னம்மாள்) முதல் கதை பிரசுரமானதை எழுதியிருக்கிறார் பாருங்கள்...

"...கரு.முத்து. தியாகராஜன் செட்டியார் நடித்தி வந்த 'தமிழ்நாடு' ஞாயிறு மலரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தது. 'இரட்டைப் பரிசு' என்று ஒரு கதை எழுதி அனுப்பினாள். திடீரென்று ஒரு மாலை... 'போஸ்ட்' என்று அவள் மடியில் விழுந்தது 'தமிழ்நாடி'ன் ஞாயிறு மலர். அதில் 'இரட்டைப் பரிசு' பிரசுத்துக்க்குரிய கதையாக வெளிவந்திருந்தது. அவளுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று தெரியவில்லை. பறந்தாள். அதன்பின், மாதமிருமுறை அவளது கதைகள் பிரசுரமாயின. 'அன்பு மனம்', வழிகாட்டி, இன்ப ரகசியம், விதி சிரித்தது, கண் திறந்தது, சந்தேகப் பேய் இவைகள் குறிப்பிடத் தக்கவை. வாசகர்களின் கடிதங்களையும் பெற்றவை..."

புத்தாண்டிற்கு இவர் கேட்டிருக்கும் பத்து வரங்களும்.......................................................................:-))))

Wednesday, December 31, 2003

2004 பராக்! பராக்!! பராக்!!!

 


நுங்கையின் வீதிகளில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. நாளைக் காலையில் தெரு முழுவதும் வித விதமான ரங்கோலிகளால் நிரம்பிவிடும் (அவற்றை ஜாக்கிரதையாகக் காவல் காக்கும் சிறுவர் பட்டாளத்துடன்). தெருக்கோடியில் இருக்கும் கோயிலில், மார்கழி அமர்க்களங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களும் சேர்ந்து இப்பொழுதே களை கட்டிவிட்டது. தெருவின் மறுகோடியில் ஸ்டேஜ், ஆட்டக்காரர்கள் சகிதம் ஒரு டீமே ரெடியாகிவிட்டது. விடிய விடிய ஆட்டம், பாட்டம்தான்.

நீங்களும் புத்தாண்டை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். ஜமாயுங்கள்!
கொரியா அனுபவங்களும், மற்றவையும்...

 
நான் அடிக்கடி எட்டிப் பார்க்கும் வலைப்பதிவுகளில், 'சுபாவின் எண்ணங்க'ளும் ஒன்று. லேட்டஸ்டாக, கொரியாவைப் பற்றிய பயணக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறார். பயங்கர 'adventure' விரும்பி. நான் ரசித்த ஸாம்பிள் ஒன்று...

"...மங்கோலியப் பேரரசர் ஜெங்கிஸ் கான் கொரியாவில் மீண்டும் பிறப்பார் என்று ஒரு நம்பிக்கை கொரிய மக்களுக்கு இருந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் 1206ல் Temujen என்ற ஒருவரை ஜெங்கிஸ் கான் என்று தேர்ந்தெடுத்து மகுடாபிஷேகம் செய்வித்து மகாராஜாவாக்கியிருக்கின்றனர். அரசர்களுக்கான அரண்மனைகள், அதனைச் சேர்ந்தார்போல அமைந்திருக்கும் பூந்தோட்டங்கள் ஆகியவை சியோல் நகரத்தின் பல மூலைகளில் காண முடிகின்றது. ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் இந்த அரண்மனைகளைச் சிதைக்காமல் இருந்திருந்தால் மேலும் பல கலை நயம் மிக்க அரண்மனைகளை இப்போது காண முடியும்..."

ஜெங்கிஸ் கானைப் பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்தவுடன், எனக்கு 'The Shadow' என்ற படம் நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தின் வில்லன், ஜெங்கிஸ் கானின் வழித்தோன்றல் :-)

பார்க்கும் இடங்களை, துல்லியமாக, நுணுக்கமாக வர்ணிக்கிறார் ( Bibimpab என்று வாயில் நுழையாத பெயருள்ள உணவைச் சாப்பிட்டுவிட்டு, 'clinical analysis' (:-) ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.) நாமே நேரில் சென்று பார்த்த உணர்வு வருகிறது. புகைப்படங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் பாருங்கள்...ஒவ்வொன்றும் அருமை (animated picsஐ எங்கு பிடிக்கிறீர்கள்?). எத்தனை இடங்களைப் பார்த்திருக்கிறார், எவ்வளவு ரசனையுடன் அவற்றை குறித்து எழுதுகிறார்? Hats off, Suba!

பயணக்கட்டுரைகள் தவிர்த்து எக்கச்சக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார். ஜே.கே கடிதங்கள் பற்றிய தன் உணர்வுகள், அலுவலகத்தில் வேலைப்பளு...நட்பு பற்றி அவர் எழுதிய கட்டுரை மனதை மிகவும் கவர்ந்தது. ("...புத்தகங்களும் கூட நமக்கு நல்ல நண்பர்களாகலாம்; மனதிற்குப் பிடித்த விஷயங்களை அவை தெளிவுபட நமக்கு விவரிக்கும் போது!" )

மீண்டும் ஒரு காதல் கதை

 
ரவி.கேவின் முதல் பதிவில் காதல் மணக்கிறது. மனிதர் வாழ்த்து அட்டை, கடிதம் என்று எதையும் விட்டுவைக்கவில்லை.:-) Sci-fi பிடிக்கும் போலும் - கொசுறாக ஆர்தர்.சி.க்ளார்க்கின் பேட்டிக்கு லிங்க் கொடுத்திருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமான பேட்டி.

 
Hands Up!

Tuesday, December 30, 2003

Agenda or Myth?

 
கிரேக்க புராணத்தின் ஐகாரஸ்ஸைப் பற்றித் தெரியும். க்ளப்பிலும், மரத்தடியிலும் இதுவரை தூள் பரத்திக்கொண்டிருந்த இன்றைய ஐகாரஸ் ஜெயப்பிரகாஷ், லேட்டஸ்டாக வலைப்பதிவு ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். (தனது பட்டப்பெயருக்குக் காரணமும் வைத்திருக்கிறார்.).

செய்தி : இகாரஸ் பிரகாஷ் தன் வலைப்பூவைத் துவக்கினார்.

சென்னை நிருபர், 23-12-2003

இகாரஸ் பிரகாஷ் தன் வலைப்பூவை துவங்கினார். ரிப்பன் வெட்ட ஆள் கிடைக்காத காரணத்தால், அவரே அந்தக் காரியத்தை செய்ததாகச் சொன்னார்.


சூட்டோடு சூடாக, 'இணையத்தில் தமிழ்', கச்சேரி ஸீசனுக்குக் தோதாக அசோகமித்திரனின் இசை அனுபவங்களின் மொழிபெயர்ப்பு, க்ரிக்கெட் கலாட்டா என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார்.

ஐகாரஸ்ஸின் எழுத்தைப் பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? :-) வலைப்பதிவு உலகத்திற்கு அவர் புதுசு என்றாலும், தமிழ் இணையத்தைப் பொறுத்தவரை, he has carved a niche for himself. தீவிர வாத்தியார் (சுஜாதா) ரசிகர். அவ்வப்பொழுது கதை எழுதுவார். காரசாரமான விமர்சகர் கூட. "நல்ல தீர்க்கமான சிந்தனை. நறுக்குத்தெறித்தாற்போன்ற நடை." என்று இணையப் பெரியவர் ஒருவரிடம் பாராட்டுப் பெற்றவர்.:-)

அடுத்தது என்ன, Icarus?

கருப்புக் கோட்டுக்காரர்

 
கடினமான துறையில், புரிந்துகொள்வதற்குக் கரடு முரடாக இருக்கும் விஷயங்களை எளிமையான தமிழில் விளக்குவது ஒரு தனி கலை. இயல்பாக, உள்ளது உள்ளபடி, புரியும் விதத்தில் எதையும் எடுத்துரைப்பது எல்லோருக்கும் சுலபத்தில் வருவதில்லை. இந்தக் கலை கைவரப்பெற்றவர்களில் ஒருவர்தான் நம் வக்கீலய்யா.சட்ட நுணுக்கங்களை, சுவாரஸ்யமான கட்டுரைகள் மூலம் எடுத்துச் சொல்பவர். செல்லமாகக் 'கருப்புக்கோட்டுக்காரர்'.

இப்பொழுது நீதியின் பாதையில் நம்மை அழைத்து செல்ல, கம்பீரமாகத் தோன்றியிருக்கிறார்.

பாவத்தின் சம்பளமா? இதோ, அதற்கு ஒரு அருமையான விளக்கம் தயார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உங்கள் கருத்தா? அதற்கும் ஆர்க்யூமெண்ட் ரெடி. அட போங்கப்பா, நான் விருமாண்டி பத்தி பேசணும் என்கிறீர்களா? இருங்கள் - இவர் அது பற்றியும் வெளுத்து வாங்கியிருக்கிறார். பெர்ரி மேஸன் கதை ஆர்வலரா நீங்கள் (என்னை மாதிரி) ? அதற்கும் விஷயம் இருக்கிறது. இது தவிர, 'வித்தியாசமான வழக்குகள்' என்று எழுதிக் குவித்திருக்கிறார் - 'நடந்தது நாடகமா?' அதற்கு ஒரு ¯¾¡Ã½õ. (வலைப்பதிவை கவனித்துக்கொண்டே இருங்கள்: அவ்வப்பொழுது ரிலீஸ் ஆகும்). தமிழ் வலைப்பூக்களையெல்லாம் நூலகத்தை அலங்கரிக்கும் புத்தகங்களாகக் கற்பனை செய்து கொண்டால், இவருடைய வலைப்பூ, சட்டத்திற்கு அருமையான reference sectionஆக அமையும்.:-)


சட்டநுணுக்கங்கள் மட்டும்தான் இவரது forte என்று எண்ணிவிடாதீர்கள். மனிதர் சிறுகதை சாம்ராஜ்யத்திலும் கோலோச்சுபவர். 'யாரோ' எழுதி ராயர் காப்பி க்ளப்பிலும் பரிசு வென்றிருக்கிறார்!

வக்கீல் சார், நிறைய எழுதுங்க. இங்க ஒரு ரசிகர் கூட்டம் ஆவலா காத்துகிட்டு இருக்கு.

Monday, December 29, 2003

பாட்டுக்குப் பாட்டு...

 
மார்கழி மஹா உத்சவம்.
சாயுங்காலம் ஆறரை மணி.
மேடையில், ஒரு மாதிரி பச்சை நிறப் பட்டுப்புடவை ஜொலிஜொலிக்க, ¦ºÇம்யா பாடிக்கொண்டிருக்கிறார். காதில் சக்கரவாகம் மென்மையாகப் பாய்கிறது. பாட்டுக்கிற்கேற்ப, மிருதங்கம் ஒலிக்கிறது. அதில் லயித்துப் போய்விட்டால், அதன் இனிமையை விட்டு வெளிவர மனம் வருவதில்லை.
¦ºÇõயாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று:
கேள்வி: காலையில் பாட வேண்டிய ராகம், மாலையில் பாட வேண்டிய ராகம் என்று இருப்பது போல், பருவத்திற்கேற்ற மாதிரி...குழந்தைப் பருவம், இளமைப் பருவம் என்று... பாட வேண்டிய ராகங்கள் இருக்கின்றனவா?
சௌம்யா: அப்படியிருக்கிறதாகத் தெரியலை. பழங்காலத்தில கூட காலைப் பண், மாலைப் பண் அப்படீன்னு சொல்லுவாங்க. பொதுவா, நம் இசையைப் பொறுத்தவரையில், இது subjective என்றுதான் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, 'முகாரி'ங்கிற ராகம்னாலே, 'ஒப்பாரி'ன்னு முடிவு பண்ணிடறாங்க. நிஜம் அதில்லை. இதே முகாரியை வேற எத்தனையோ உணர்ச்சிகளுக்கும் பாடலாம். இப்ப ஷெனாய் வாத்தியம் இருக்கு. அதைக் கேட்டாலே, 'ஐய்யோ, யாரோ இறந்துட்டாங்க'ன்னு நெனைக்கிறோம். ஆனா, வடக்கில் அதுதான் மங்கள வாத்தியம். அதனால, பருவத்துக்கேத்த ராகம் எல்லாம் நாம் பாடற விதத்தில்தான்.
[பாடகர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைக்கூட, ஜெயா.டி.வீயின் சுபஸ்ரீ தணிகாசலம் குழுதான் வடிகட்டி அனுப்புகிறதாம். சிறந்த மூýறு கேள்விகளுக்கு பரிசும் உண்டு!]

(சென்ற வருடம், 'ஹயக்ரீவாஸ் ஸில்க் ஹவுஸ்' செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் அருமையான கச்சேரி நடத்தியபொழுது, நேரில் போய் வந்தேன். இந்த முறை டி.வீயின் புண்ணியத்தில்:-)...


கடவுளின் காதலர்

 
புதிதாய்ப் பிறந்த வலைப்பூக்களை 'கண்டுகொள்ள' நகர்வலம் வந்துகொண்டிருந்த பொழுது, ஒரு அதிசயக் காட்சி தென்பட்டது. அதை என்னவென்று சொல்வேன்? எப்படி எடுத்துரைப்பேன்?

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்பொழுதே கடவுளின் உண்மைச் சொரூபத்தைக் கண்டுகொண்டவர் எவரோ, ரிக்-வேதத்தில் அக்னி மற்றும் இந்திரன் குறித்துப் பாடிய மஹரிஷி எவரோ...அவர் Harry Potter குறித்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவத்தை கலைக்கவும் மனம் வராமல், பார்த்துப் பேசிப்போகவும் முடியாமல் தவித்து, கால் மாறிக் கால் நின்றுகொண்டிருந்தபொழுது...வாமதேவராகப்பட்டவர் தாமே மனம் கனிந்து கண்திறந்தார். அவருடன் அளவளாவிக்கொண்டிருந்த பொழுது....

நான்: முனிவரே...பிரம்மத்தைக் கண்டறிந்த நீங்கள், ஹாரி பாட்டர் குறித்தும் பேசியிருக்கின்றீர்களே?

வாமதேவர்: ஹாரி பாட்டர் ஒரு தெய்வக் குழந்தை. பெயர்-குறிப்பிடக்-கூடாதவனை அழித்து, உலகை உய்விக்கப் பிறந்தவன் அவன். அவனது கதையை ரௌலிங் என்ன அருமையாகக் கூறியிருக்கிறார்?

நான்: ஹாரி பாட்டரை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டிருக்கிறீர்களே? சுவாரஸ்யமாக இருந்தது.

வா.தே: உண்மை. அந்தக் கதையை நீயும் படித்திருக்கிறாயே? ஐந்தாம் பாகம் வெளி வந்தபொழுது, இரவு பகல் பாராது நீ அதைப் படித்து, இரண்டு நாட்கள் கண்கள் பூத்துப் போயிருந்தாய் என்பதையும் நானறிவேன்.

நான் (பயபக்தியுடன்): தாங்கள் அறியாததா? (வேறு எதையாவது அறிந்துகொள்ளப்போகிறாரே என்ற கலக்கத்துடன்)...நீங்கள் சொன்னதைப் படித்தவுடன், எனக்கும் ஒரு ஒப்புமை தோன்றியது. இந்த 'Wheel of Time' என்று ஒரு series இருக்கிறதே? அந்தக் கதையின் கதாநாயகனும் உலகத்தை உய்விக்கப் பிறந்திருக்கிறான் அல்லவா? நம் கல்கி அவதாரம் போல் தோன்றுகிறதே? என்ன கற்பனை, என்ன சொல்லாட்சி! தலையணை தலையணையாகப் பத்து புத்தகம் எழுதியும் கதையின் கவர்ச்சி குறையவில்லையே? இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வா.தே (முகத்தில் பிரகாசத்துடன்): அப்படியா? ரௌலிங் போல், ராபர்ட் ஜோர்டானும் நம் புராண இதிகாசங்களால் கவரப்பட்டவர் போலும். அது கிடக்கட்டும்...நான் சில கவிதைகளை எழுதியிருக்கிறேனே...? நீ படித்ததுண்டோ?

நான்: படித்திருக்கிறேன், குருவே. எனக்குக் கவிதைகளைப் பற்றி அதிகம் தெரியாது...படித்தவரை, தங்கள் ஆன்மீகத் தேடல்களை கவிதையாக வெளியிட்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். (தயக்கத்துடன்) அவ்வப்பொழுது "பஸ்ஸின் உடைந்த ஜன்னலின் வழியே டிசம்பர்க் குளிராய் நீ..." என்றும் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்.

வா.தே (புன்னகையுடன்): அவற்றைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

நான்(அவசரமாக): அதையெல்லாம் நாரதர் சொல்வார். அதிருக்கட்டும். உங்கள் வலைப்பதிவின் புகைப்படங்கள் அருமை. எழுதும் எழுத்திற்குப் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. தொடருங்கள் - படிக்க ஆவலாக இருக்கிறேன். தங்கள் ஆசி கிடைத்ததில் மிக மகிழ்ச்சி. வருகிறேன்.

வாமதேவர்: அடுத்து யாரைச் சந்திக்கப் போகிறாய்?

நான்: நீதிமன்றங்களில் கோலோச்சுபவர் ஒருவர் இருக்கின்றாராம். 'மிலார்ட், மிலார்ட்' என்று பேசும் இவரே ஒரு lordஆம்! பேச்சில் அவரது வல்லமை உலகறிந்ததாம். அப்பேர்ப்பட்டவர் யாரென்று பார்த்து வரப்போகிறேன்.

வா.தே(ஆச்சர்யத்துடன்): நீதிமன்றமா? lordஆ? யாரவர்?

நான்: சற்றுப் பொறுங்கள். இதோ, நீதியின் பாதையைத் தொடர்ந்து சென்றால் தெரிந்துவிடும்!:-)


Sunday, December 28, 2003

தந்தனத்தோம் என்று சொல்லியே...

 

தமிழ்-இணையம் ŨÄôâ பப்ளிக் ஹாலில்28 – 12 -2003 -உ ஞாயிற்றுக்கிழமை முதல்
ஏராளமான ‘கற்பனை’ மற்றும் ‘மண்டை காய்த’லுக்குப் பிறகு, உங்கள் முன் உருவெடுக்கும் மகத்தான தமிழ் படைப்பு.*******வலைப்பூ தர்பார்*******


(¬சிரியர்: பவித்ரா)******* வலைப்பதிவு விமர்சன சபா*******


தமிழ்-இணையத்தின் இணையற்ற தலைவி, எங்கள் தங்கச் செல்வி, ஈழத்துப் பைங்கிளி, மாண்ட்ரீல் மதியக்கா [ a.k.a – ‘Nokia’ Mathy (‘Connecting people’)] அவர்கள் தலைமையில் மிகவும் குதூகலத்துடன் ¬ரம்பமாகிறது.‘வலைப்பூ தர்பார்’ சிறப்புக் காட்சிகள்:

1. இணையத்திற்கு வந்து சில நாட்களே/வாரங்களேÂ¡É புத்தம்புதிய வலைப்பூக்கள் விமர்சனம் செய்யப்படும்.

2. பழம் தின்று கொட்டை போட்ட (அ) முட்டை உடைத்து ¬ம்லெட் போட்ட இணையப் பெரியவர்களின் வலைப்பதிவுகளும் எடுத்துக்கொள்ளப்படும்.

3. சென்னைச் செய்திகள் அவ்வப்பொழுது வழங்கப்படும்.

4. சுயபுராணப்பகுதிகள் சமயத்திற்கேற்றவாறு அள்ளித் தெளிக்கப்படும்.

5. எல்லாம் புத்தம்புதிய வண்ணங்கள், கண்ணைக் கவரும் வார்த்தைகள், விறுவிறுப்பான (வ)சனங்கள், உணர்ச்சி தரும் கட்டங்கள், விசேஷ எலக்ட்ரிக் கலர் விளக்குகளுடன் (‘புகைப்படம்’ என்றும் மாற்றிப் படித்துக் கொள்ளவும்), டர்னிங் சீன்கள் உதயமாகும் காட்சி பிரமிக்கத்தக்கது.

குறிப்பு: நாரதர் வேடத்தில் அவ்வப்போது தோன்றி பின்னூட்டம் கொடுக்கும் விசேஷ வலைப்பதிவாளர் கூட்டம் அடிக்கும் லூட்டிகளைக் காணத் தவறாதீர்கள்!

*********************************************************
நேரம்: பிரதி திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை இரவு, பகல், சாயங்காலம், மற்றும் விடிகாலையில் ¾÷À¡÷ நடைபெறும்.

அலைகடலென திரண்டு வாரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈர்!!!!!!!!
 


I can smell the fragrance! Can you???


 

புத்தாண்டு வலைப்பூ சிறப்பிதழை இழைத்து இழைத்து உருவாக்கப்போவது யார்?இவர் தமிழ் இணையத்துக்குப் புதியவர் அல்ல. கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வசித்தாலும் இந்த இளவரசி எழுதிக்குவிப்பது மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களை செய்கிறவர். சிவகாமியின் சபதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகட்டும், சைமன் விஞ்செஸ்டரை தமிழில் மொழிபெயர்ப்பதாகட்டும், ஆங்கிலத்தில் வலைபதிவது, வயலின் வாசிப்பது, உழவாரப்பணி செய்வது, பயணக்கட்டுரைகள் எழுதுவது, பொன்னியின் செல்வனிலும் இன்னபிற வரலாற்று நூல்களிலும் அமிழ்ந்துபோவது, பொன்னியின் செல்வன் வலையில் கிடைக்க தன்னாலான அணிற்பிள்ளை வேலை செய்வது, Georgette Heyer வாசிப்பது, பத்திரிகைகளில் எழுதுவது என்று பன்முக ஆற்றல் படைத்த இளவரசி குந்தவை நாச்சியார் இந்த வாரம் உங்களுடன் இருக்கப்போகிறார். இளவரசியாரா? குந்தவையா? அவர்தான் பல நூறாண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாரே என்று குழம்புகிறீர்களா? பவித்ராவிடமே கேட்போமே! 


(c)Ama

 

ஏழாம் வகுப்புவரையிலுமே இரண்டாவது மொழியாகத் தமிழை படித்திருக்கும் ரவியா மிகவும் அருமையாகப் பல புதிய விஷயங்களை நமக்குத் தெரியப்படுத்தி, கூடவே வந்த வேலையையும் அழகாகக் கவனித்திருக்கிறார். எங்கே அவருக்கு ஒரு 'ஓ' போடுங்கள் பார்க்கலாம்! இன்னும் எழுதமாட்டாரா என்று எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்திய ரவியா, விரைவில் வலைப் பதிக்கத்தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியே உங்க வீட்டு மாதாமும் சமையல் குறிப்புகளை கொடுத்தாங்கன்னா, என்னை மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.

நன்றி ரவியா! மெர்சி புக்கூ!


 


Merci Ravia, Louvre_Paris


This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com