|
Tamil Bloggers Database |
|
Enter Record |
|
Saturday, September 20, 2003
இத்தனை வலைப்பதிவுகள் இருக்க, இந்த வலைப்பதிவையும் 'வலைப்பூ' என்ற பெயரில் தொடங்கிய காரணம் என்ன? இந்த வலைப்பதிவில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றியும், அவற்றை நிர்மாணித்துப்பேணுவதில் இருக்கும் பிரச்சனைகளையும் வலைப்பதிவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் அலசலாம் என்றுதான் ஆரம்பித்தேன். என்னுடைய நேரமின்மையால், அதை உடனே செயல்படுத்த முடியவில்லை.
இந்த வாரம் மூன்று நண்பர்களைத்தொடர்பு கொண்டு, ஒவ்வொரு வாரம் ஒருவர் வீதமாக இந்த 'வலைப்பூவை' தத்தெடுத்துக்கொள்ளுமாறு கேட்டேன். அவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள். காலப்போக்கில் தமிழில் வலைப்பதிபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வாரம் ஒருவராக இந்த வலைப்பதிவின் ஆசிரியர் ஆகலாம். ஆசிரியராக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், அந்த வாரம் வெளிவந்திருக்கும் பதிவுகளில் உங்களுக்குப்பிடித்ததைப்பற்றி கொஞ்சம் எழுதி, மக்களுக்குத்தெரியப்படுத்த வேண்டும். கூடவே, உங்கள் படைப்போ, உங்களின் நண்பர்கள் தெரிந்தவர்களின் படைப்போ, நீங்கள் படித்த, பார்த்த விஷயங்களோ இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். ஆக மொத்தம் குறைந்தது, வாரம் இரண்டு பதிவுகள் இங்கு இடம் பெறும்.
கூடவே, சில வலைப்பதிவுகளை சிலரால் படிக்க முடிவதில்லை. எழுத்துருப்பிரச்சினைகள் என்று பல இருக்கின்றன. இது பற்றியும் இங்கோ, அல்லது வேறு நல்ல இடம் இருந்தால், அங்கோ பேசிக்கொள்ளலாம்.
உங்களின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.
Statcounter
புதிய முயற்சி