<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, October 18, 2003
 
Autumn Color, New England(c) FreeFoto.com

Valaippoo Review - Sat

 
இனிய நண்பர்களே.. நேற்று வாத்தியார் வேலையை பார்க்கமுடியவில்லை. வேலை முடிந்து உடனேயே ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குப் புறப்பட்டுவிட்டேன். திரும்பிவர நேரமாகிவிட்டதால் வலைப்பக்கங்களை இன்று தான் பார்க்கமுடிந்தது.நேற்று ஆலயத்தில் நடந்த ஒரு சம்பவம். குருக்கள் பூஜையை முடித்து விட்டு எப்போதும் போல 'தேவாரம் பாடுக' என்றார். பாடுவதற்காகத் தயார் படுத்தப்பட்டிருந்த சிறுவன், உடனே தனது அம்மாவின் கையைப் பிடித்து மிகுந்த பதற்றத்துடன், அம்மா, "anfang என்ன?anfang என்ன?" என்று கேட்டான். அம்மாவிற்குப் புரியவில்லை. 'பாட்டைப் பாடு' என்று அதட்ட ஆரம்பித்து விட்டார். மீண்டும் விடாமல் அம்மாவிடம் 'anfang என்ன? சொல்றது" என நச்சரிக்க ஆரம்பித்தான். கூட்டம் இவர்களையேப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த அம்மாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நிலமையைப் புரிந்து கொண்ட குருக்கள், 'தம்பி திருச்சிற்றம்பலம் - தில்லையம்பலம் என்று சொல்லி ஆரம்பிச்சுடு - சீக்கிரம்' என்றார். அப்போது தான் அந்த அம்மாவுக்குப் புரிந்தது மகன் 'எப்படி ஆரம்பிப்பது' என்று தான் கேட்டுக் கொண்டிருந்தான் என்று. சில நேரங்களில் குழந்தைகள் எங்கே எப்படி நம்மை மாட்டி விடுவார்கள் என்பது ஒரு புரியாத புதிர்.

சரி, வலைப்பக்கங்களுக்கு வருவோம். காசி தனது வலைப்பக்கதின் வழி நம்மை எல்லாம் ஆப்பிள் பழத்தோட்டத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றார். அதில் ஒன்றில் பரங்கிக்காய்களின் படமும் இருக்கின்றது. இன்று காலை போப்லிங்கன் நகரில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்தபோது துருக்கியர்களின் கடை ஒன்றில் பெரிய பெரிய பரங்கிக்காய்களை விலைக்கு வைத்திருந்ததைப் பார்த்தேன். அதில் சில, பத்து வயது சிறுவனின் உயர அளவுக்கு இருந்தன. அவ்வளவு பெரிய பரங்கிகள்.

பத்ரியின் வலைப்பாக்கத்திற்கு வாருங்கள். ஜெயமோகனை எப்படியெல்லாம் கலைஞர் கருணாநிதி வர்ணித்திருக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.!

வின்வெளி அராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பரிமேலழகரின் வலைக்கிறுக்கலில் இருக்கின்றது. படித்து மகிழுங்கள்.

கண்ணனின் கோகுலம் சுவாரசியமாக வளர்ந்து வருகின்றது. இனிய தொடர்கதை இது!

வலைப்பக்கங்களைப் படிக்கும் போது பல புதிய விஷயங்கள் கிடைக்கின்றன. பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அதிகமான தமிழ் வலைப்பூக்கள் மலர வேண்டும்.சரி, இன்றைய பாடலுக்கு வருவோம். 'சாந்தி நிலவ வேண்டும்' என திலன் ராகத்தில் நித்யஸ்ரீ பாடுகின்றார். இந்தப் பாடலை நீங்கள் உங்கள் கணினியிலேயே download செய்து கேட்கும் படியாக வழங்கியிருக்கின்றோம். தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள். இங்கே இதே போல மேலும் பல பாடல்களை உங்களுக்காக வைத்திருக்கின்றோம். கேட்டு மகிழுங்கள்.

உங்களிடமிருந்து அன்புடன் விடைபெறுகிறேன்.

சுபா

Thursday, October 16, 2003

Valaippoo Review - Thu

 

"ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்"! என்ன இது புரியாத மொழியில் எழுதுகிறேனே என நினைத்து என்னோடு சண்டைக்கு வரவேண்டாம். ராம்கியின் வலவுக்குச் சென்று பாருங்கள். இவர் பல புதிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு ஒன்று. காரி எனும் ஒரு சொல். என்னவென்று புரியவில்லை.

மதிக்கு மிகவும் பிடித்த மனிதரைப் பார்க்க வேண்டுமா? இங்கே சென்று பாருங்கள்!

கவிதை வேண்டுமா? மீனாக்ஸின் பக்கத்திற்கு விரையுங்கள். அங்கே ஒரு கவிதை அனுபவங்களைப் பற்றி பேசுகின்றது.

பவித்ராவின் Shangri-La வலைப்பக்கத்தில் விடுகதையும் பதிலும் தந்திருக்கின்றார். தொடர்ந்து பல விடுகதைகளைத் தந்தால் நன்றாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

சந்திரவதனாவின் மனவோசையில் லண்டனின் பல அழகிய இடங்களைப் படத்தோடு விளக்குகின்றார். Buckingham Palace படத்தைப் பார்க்கும் போது ஒரு செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது. பாவம் மகாராணியார். தற்பொழுது தனது மாளிகையை அனைவருக்கும் கட்டணம் வசூலித்து பார்க்க அனுமதிக்கின்றார் என்று எனது நண்பர் ஒருவர் சென்ற முறை அங்கேசென்றபோது குறிப்பிட்டார். shanghai night பாருங்கள். அதில் ஜாக்கி சானின் நன்பர், Buckingham Palace காவல் அதிகாரியைப் படுத்தும் பாடு, படு ஜோர்.

சென்ற மே மாதம் ஒரு அலுவல் காரணமாக லண்டன் சென்றிருந்தேன். அன்றைய subway mail பத்திரிக்கையில் ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகியிருந்தது. மகாராணியின் Buckingham Palace தோட்டத்து வெள்ளை அன்னங்களில் சில மாயமாக மறைந்துவிட்டனவாம். காரணம் என்னவென்று Scotland Yard தேடாமல் இருக்குமா..?:-) விசாரித்ததில் தெரியவந்தது என்னவென்றால், அகதிகளாக அங்கு வாழும் ஒரு சிலர் மாலை நேரங்களில் இருட்டிய பிறகு, காவலாளிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இந்த கொழு கொழுவென்றிருக்கும் வெள்ளை அன்னங்களைப் பிடித்துக் கொண்டு போய் சமைத்துச் சாப்பிட்டு விட்டனராம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அன்னங்களுக்கு பாதுகாப்பு கூடியிருக்கின்றது..!சரி, இன்றைக்கு எனக்குப் பிடித்த பாடல். "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே". பாடியவர் ஜெயசந்திரன். பாடல் இதோ!

அன்புடன், சுபா

Wednesday, October 15, 2003

Valaippoo Review - Wed

 
வாழ்க்கையே சில நேரங்களில் வெறுத்து விடுகின்றது உணவை நினைத்தால்...:) ரெஸ்டாரண்ட் சென்றிருந்தேன் மதிய உணவுக்காக.. நேற்று உருளைக்கிழங்கில் செய்த ஒருவித அவியல். அதனை 'kartoffel auflau' என்று ஜெர்மன் மொழியில் சொல்வார்கள். சீஸ் கலந்து செய்யப்பட்டிருக்கும். இன்று கிடைத்ததோ 'country potatoes'. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் உருளைக்கிழங்கில் செய்த ஏதாவது ஒன்றுதான் என்றால் வாழ்க்கையே வெறுத்து விடாதா என்ன..? (இந்த உருளைக்கிழங்கில் ஜெர்மானியர்கள் தயாரிக்கும் உணவைப் பற்றி நா.கண்ணனைக் கேட்டால் ஒரு பட்டியலே தருவார். கொரியாவிற்குப் போனாலும் மறந்திருக்க மாட்டர் என்று நினைக்கின்றேன் )

மலேசியாவில் விதம் விதமாகச் சாப்பிட்டு விட்டு இங்கே கிடைக்கும் இந்த உருளைக்கிழங்கு வகையாறாக்களை நினைக்கும் போது ஆத்திரம் தான் வருகின்றது. அங்கேதான் எத்தனை வகைகள்? மலாய், சீன, இந்திய, மற்றும் மேற்கத்திய உணவு வகைகள் என்று அசத்தி விடுவார்கள் அங்கு. சில நேரங்களில் நினைத்துக் கொள்வேன், இந்த ஜெர்மானியர்களை ஒவ்வொருவராக மலேசியாவிற்கு 6 மாதம் அனுப்பி வைக்க வேண்டும். உணவு என்றால் என்ன என்பதை அங்கே தானே தெரிந்து கொள்ள முடியும்....:-)

Vegetarian Tom Yam Soup. Recipe வேண்டுமா? >இங்கே பார்க்கவும்.


சரி வலைப்பூவில் என்ன புதிய செய்திகள் என்று பார்ப்போம்!

பத்ரியின் எண்ணங்களில் "இலக்கியவாதிகளும் துதிபாடிகளும்" என்ற தலைப்பில் ஜெயமோகனின் உரையைப் ப்ற்றி குறிப்பிட்டிருக்கின்றார். படித்துப் பாருங்கள்!

கண்ணனின் வைகைக்கறைக் காற்று தென்றலாக வீசிக் கொண்டிருக்கின்றது.

வெங்கட்டின் பகுதியில் எண்ணங்களால் இயந்திர இயக்குதல் என்ற ஒரு கட்டுரை ஒன்று வந்திருக்கின்றது. இதன் தொடர்பில் 2 நாட்களுக்கு முன்னர் New York Times பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி In Pioneering Study, Monkey Think, Robot Do படித்துப் பாருங்கள்!
இன்றைய பாடல்
**************
இன்றைக்கு எனக்குப் பிடித்த பாடல் ஒன்று உங்களுக்காக! பாரதியின் பாடல்; பாரதி படத்தில் இளையராஜா இசையில் ஜெயஸ்ரீ பாடியிருக்கின்றார். பாடலின் தலைப்பு "நின்னைச் சரணடைந்தேன்.. " மனதை வருடும் இனிய இசை. கேட்டு மகிழுங்கள்!

நேற்றைக்கு எனக்குப் பிடித்த பாடலை பற்றி எழுத மறந்து விட்டேன். இருந்தாலும் எனது Subas Musingsபகுதிக்குச் சென்றால் ஒரு பாடல் இருக்கின்றது. உங்களுக்காக!

Tuesday, October 14, 2003

Valaippoo Review - Tue

 
இன்று அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய நிர்பந்தம். 2 HP-UX சர்வர்களுக்கு மூளை மாற்று அறுவைச் சிகிச்சை (kernel rebuild & reconfiguration) செய்ய வேண்டிய வேலை. winter குளிர் மெதுவாக ஆரம்பித்து விட்டதைக் காட்டுவது போல காலை 6 மணிக்கெல்லாம் 3 டிகிரி குளிர். இலைகளெல்லாம் நிறம் மாறி உதிர ஆரம்பித்து விட்டன. அலுவலகப் பணியெல்லாம் முடித்து வீட்டிற்கு வந்த பின்னர் இன்று கொஞ்சம் ஏதாவது உருப்படியாக எழுதலாமே என்று "வையாபுரிப் பிள்ளையின் தமிழ்ப்பணி" நூலை புரட்டினேன். இவர் எழுதி அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூற்களின் பட்டியலை நாம் எல்லோரும் தெரிந்து கொள்வது நலம் எனக்கருதி அதனை உங்களுக்காகத் தருகின்றேன்.

ஆராய்ச்சியுரைத் தொகுதி 1930
சிறுகதை மஞ்சரி 1944
இலக்கியச் சிந்தனைகள் 1947
தமிழர் பண்பாடு 1949
கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு 1950
உரைமணி மாலை 1951
இலக்கிய தீபம் 1952
இலக்கிய உதயம் 1 1950
இலக்கிய உதயம் 2 1952
கம்பன் காவியம் 1955
இலக்கணச் சிந்தனைகள் 1956
திராவிட மொழிகளில் ஆராய்ச்சி 1956
சொற்களின் சரிதம் 1956
சொற்கலை விருந்து 1956
காவிய காலம் 1957
இலக்கிய விளக்கம் 1958
ராஜி 1958
தமிழ்ச்சுடர் மணிகள் 1959
அகராதி நினைவுகள் 1959
தமிழின் மறுமலர்ச்சி 1960
Research in Dravidian Languages 1946
History of Tamil Language and Literature 1956

இது மட்டுமல்லாமல் இதுவரை பதிப்பிக்கப்படாத மேலும் சில நூல்கள் இருப்பதாக இந்த நூல் கூறுகின்றது.அதில் ஒன்று இவருடைய கவிதைத் தொகுப்பு. கணினி இல்லாத அந்தக் காலத்திலேயே இவர் இவ்வளவு நூற்களை எழுதியிருப்பது போற்றுதலுக்குறிய ஒரு விஷயம் தான்.

அதோடு சில வலைப்பூக்களையும் பார்த்து வருவோமே!


அமலா சிங் தனது Ms Shrin Ebadi வலைப்பக்கத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இரானியப் பெண்மனியைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

வெங்கட் தனது ஒரு நாடோடியின்
வட துருவ வலைக்குருப்புக்களில்
ஓப்பன் ஆபிஸ் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார். அவருடைய Japanese Toilet படித்துவிட்டீர்களா?..:)

அடுத்து பரிமேலழகரின் சில எண்ணங்களில் விஷயங்களைத் தேடினேன் உங்களோடு பகிர்ந்து கொள்ள. (உங்க பெயரைப் பார்த்தாலே இலக்கியப் புலி போல இருக்கு.. :) 12ம் தேதிக்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை இவர். எல்லா குழுக்களுக்கும் ஒரே படைப்புக்களை சிலர் அனுப்புவதைப் பற்றி கொஞ்சம் வருந்தி எழுதியிருக்கின்றார். மேலும் எழுதுங்கள் பரிமேலழகரே..!

சந்திரவதனா பெண்களில்மகளிர் தமிழ் தேசியத்தில் கையாள வேண்டிய முறைகளைப் பற்றி விபரிக்கின்றார். அருமையான் தமிழ் நடை. இவரும் சில நாட்களாக எழுதாமல் இருக்கின்றார். கொஞ்சம் மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு எழுதுங்கள் சந்திரவதனா!

Monday, October 13, 2003

Valaippoo Review - Mon

 

கண்ணனின் வலைப்பகுதியில் இனிமையான தனது பழைய நினைவுகளை "வைகைக்கறைக் காற்றே நில்லு.." என்று கூறி நம்மை அவரது எழுத்தால் கவர்ந்து விடுகின்றார். மிக சுவாரசியமான தொடராக இது வந்து கொண்டிருக்கின்றது. இப்போது நமக்கிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் அப்போது இல்லை. இருந்திருந்தால் எல்லா நிகழ்வுகளையும் digital camera- வில் பதிவு செய்து வைத்திருக்கலாம்..:-( நாம் பார்ப்பதற்காக. ஆனாலும் அந்தக் குறை தெரியாமல் இந்தக் கதை இனிமையாகச் செல்கின்றது.

பத்ரி தனது "எண்ணங்களில்" வாரக்கடைசியில் செய்த சிலவற்றை பாட்டியலிட்டிருக்கின்றார். இவர் குறிப்பிடும் புத்தக வரிசையில் சுந்தர ராமசாமியின் "குழந்தைகள், பெண்கள், ஆண்கள்" நூலை அவரது மகன் காலச்சுவடு கண்ணன் சென்ற முறை நான் அவரை நாகர் கோவிலில் சந்தித்த போது கொடுத்திருந்தார். நீண்ட நாட்கள் எடுத்தது எனக்கு அதனை படித்து முடிக்க. ஒரு வகையில் தமிழகத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமை வருவதுண்டு. பக்கத்திலேயே உங்களுக்கு புத்தகக் கடைகள்..எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை.. எனக்கெல்லாம் அப்படியில்லையே..ஒரு முறை இந்தியா /மலேசியா வந்து திரும்பும் போது 30 kg மேல் weight ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக நான் எவ்வளவு தியாகம் ..:) செய்ய வேண்டியிருக்கின்றது தெரியுமா?

மதியின் Movie Talk பகுதில் சில சினிமா படங்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. மதியின் எழுத்துத் திறமையில் வர்ணனைகளைப் படிக்கும் போது உடனே அந்தப்படங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது. என்ன மதி? நேற்று பார்த்த படங்களைப் பற்றி ஏதும் செய்தியில்லையா?

சித்தூர்க்காரர் காசியின் வலைப்பூ அழகு. சுத்தமாக மிக அழகாக இந்த வலைப்பகுதியை அமைத்திருக்கின்றார். படங்கள் எல்லாம் மிகக் கவர்ச்சியாக (I mean, கண்ணைக் கவரும் வகையில்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் தோசை இட்டலியின் படத்தைப் பார்த்ததும் இப்போதே பசிக்கத் தொடங்கி விட்டது. Oct 7ம் தேதிக்குப் பின்னர் ஒன்றுமே எழுதாமல் இருக்கின்றார் இந்த மனிதர். காசி, உங்கள் விரதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சுவையாக (I mean, சுவாரசியாமக) எழுத ஆரம்பியுங்கள்.

ரமனீதரனின் "Ealam Literature and Arts Archives" பகுதியில் 10 oct தேதியிட்ட வலைப்பூவில் வந்திருக்கும் ஒரு அழகிய புதிக்கவிதை கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது. இந்த பதிவுகள் வலைப்பகுதி அமைப்பு ம்ம்ம்ம்ம்ம்ம்.. மிக அசத்தலாக செய்திருக்கின்றார் ஆசிரியர் கிரிதரன். பாராட்டுக்கள். அதில் வரும் ஒரு கவிதையில் வருகின்ற ஒரு வரி..
"வேலையில் தொலைந்து போகிறது பகல்..வேலைக்காய் தொலைகிறது இரவு" ரொம்ப ரொம்ப உண்மையான் வரிங்க இது.. எனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது சில வேளைகளில் இதைத்தான் சொல்லி நாங்கள் அலுத்துக் கொள்வோம். Winter காலங்களில் அலுவலகத்திலேயே பகலில் மாட்டிக் கொண்டு கணினிகளோடேயே காலம் தள்ளும் எனக்கு சில வேளைகளில் சூரியனையும் பகலையும் பார்க்கமுடியவில்லையே என ஏக்கம் வருவதுண்டு.. கவிதையில் இதனை ஜீவன் மிக நன்றாக எழுத்தில் வடித்திருக்கின்றார்.

இதோடு எனது Germany in Focus வலைப்பூவில் எனது இத்தாலியப் பயணத் தொடர் வந்து கொண்டிருக்கின்றது. Subas Musisng's பகுதியில் J.K பற்றிய சில எண்ணங்கள் தொடர்கின்றன....

எனக்குப் பிடித்த சில பாடல்களை தினம் ஒன்றாக உங்களுக்குத் தரலாம் என்று நினக்கின்றேன். அன்பே சிவம் படம் பார்த்தீர்களா..அதில் ஒரு இனிமையான பாடல் வருகின்றது.. பாடலின் தலைப்பு "பூ வாசம்". இந்த பாடலை நேற்று download செய்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்.. இனிமையான பாடல். நீங்களும் Download செய்து Cool Goose கேட்டு மகிழுங்கள்.

Sunday, October 12, 2003

Hello Valippoo Readers..!

 
என் இனிய நண்பர்களே, [ சே..! இன்று பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படத்தைப் பார்த்தேன்.. அவரின் அறிமுக உரை தொற்றிக் கொண்டு விட்டது..:-) ]

வணக்கம். எப்படி இருக்கிங்க? நானும் மாலேசியாவிலே இருந்த போது உண்மையான வாத்தியார் வேலையை கொஞ்ச நாள் பாத்திருக்கேன். ஆனாலும் இந்த வலைப்பூவிலே வாத்தியாரா இருக்கிற வேலையேல்லாம் செஞ்ச அனுபவம் சுத்தமா இதுவரைக்கும் இல்லை.. அதனால.. என்னால முடிஞ்ச வேலையை செய்யறேன்.. பிழையிருப்பின் பொறுத்துக் காத்தருள்க...!

தமிழ் இணையக் கருத்தரங்குகளில் பங்கு கொள்வதன் வழி எனக்குக் கிடைத்த பல நல்ல நண்பர்களின் பெயர்களை ஒரு நீண்ட பட்டியலே போடலாம். அந்த வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறிமுகமானார் பேராசிரியை ராதா.செல்லப்பன் அவர்கள். இந்த வருடம் தமிழகத்தின் சென்னையில் நடந்த கருத்தரங்கின் போது அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு அவர் ஏற்பாடு செய்திருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கருத்தரங்கில் சொற்பொழிவாற்றச் சென்றிருந்ததும் ஒரு மறக்க முடியாத இனிய அனுபவம்... அந்த அனுபவத்தின் போது கிடைத்த மற்றொரு மறக்க முடியாத செய்தி ராதா அவர்கள் தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளயின் பேத்தி என்ற விஷயம்.

இன்று 12. Oct இந்த இலக்கியவாதியின் பிறந்த நாள். நான் தமிழைப் படிக்க ஆரம்பித்த காலங்களில் கல்லூரி ஆசிரியர்கள் எங்களுக்குத் தேர்வுக்காக சில புத்தகங்களையும் கட்டுரைகளையும் கட்டாயமாக்கி அதனை கண்டிப்பாக படிக்க வைப்பார்கள். அந்த வகையில் தான் திரு வையாபுரிப்பிள்ளையின் கட்டுரைகள் எனக்கு அறிமுகமாகின. அதற்குப் பின்னர் அவரது கட்டுரைகளை நானே தேடி எடுத்துப் படித்திருக்கின்றேன். அப்படி இருக்கும் போது அவரது பேத்தியை நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா?

இதுதான் நல்ல வாய்ப்பு என்று அவரிடமிருந்த சில குறிப்புக்களையும் சில புத்தகங்களையும் பெற்று வந்தேன். நேற்று சனிக்கிழமை அல்லவா? சரி ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கலாமே என்று நினைத்து எடுக்க ராதா அவர்கள் கொடுத்த
"வையாபுரிப்பிள்ளயின் தமிழ்ப்பணி" என்ற இந்த நூல் தட்டுப்பட்டது. இதனைப் படிக்கப் படிக்க வையாபுரிப்பிள்ளையைப் பற்றி இதுவரை நான் அறிந்திராத பல விஷயங்கள் தெரிய வந்தன. மிக மிக சுவாரசியமான மனிதராகவே இவர் திகழ்கின்றார். உத்தியோகத்தால் இவர் ஒரு வக்கீல். இருந்தும் தமிழின் மேல் கொண்ட தீராத காதலால் தன்னுடைய வாழ்க்கையை தமிழுக்காகவும் தமிழ்ப்பணிக்காகவும் அற்பணித்த ஒரு சிறந்த மனிதராகவே இவர் திகழ்கின்றார். இவரை இன்று நினைவில் கொள்வது சிறந்த செயல் தானே..!

[உங்களில் யாருக்கேனும் இவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் எனக்கு எழுதுங்கள். இந்த வலைப்பூவில் இந்த செய்தியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்]

நாளை உங்களை மீண்டும் சந்திக்கிறேன்...

மதியிடமிருந்து...

 
சிறப்பான முறையில் வாத்தியார் வேலை பார்த்ததற்கு நன்றி பரி.இவ்வார வலைப்பதிவு வாத்தியார், சே..... ஆசிரியர் சுபா


Yahoo! Groups for Tamilbloggers

 

http://groups.yahoo.com/group/tamilblogs/
This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com