<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, January 10, 2004

பிரிவின் கடைசி கணம்.

 
"காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்

பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே

இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதுவும் இல்லை."

- மனுஷ்ய புத்திரன் (இடமும் இருப்பும்).


ஒரு வாரம். எப்படி போச்சுன்னே தெரியல. முதல்ல, இந்த வாய்ப்ப தந்த மதிக்கு நன்றி. நிறைய எழுதனும்னு நெனச்சேன். 4 நாள் கிட்டதட்ட ஆஃபிஸ்லயே தங்க வேண்டிய நிலைமை. அப்பப்ப நேரம் கெடைச்சப்ப பதிவு செஞ்சேன். உங்க மறுமொழி தான் எனக்கு ஊக்கம் தந்தது. thanks everybody.

இன்னைக்கு இணையத்துல தமிழோட நிலைமைய பாத்தா பெருமையா இருக்கு. போக வேண்டிய தூரம் நிறைய இருந்தாலும், போகற திசை சரியானது. ஒரு பக்கம் பழைய இலக்கியங்கள் மின் படுத்தப்பட்டு இணையத்துக்கு வருது. இன்னொரு பக்கம் இணையத்துக்காகவே பா.ராகவன் ஒரு புதினத்த (அலகிலா விளையாட்டு) எழுதறார். ழா கணினி, பாரதியார்.நெட், ந்யூக்லியஸ், தமிழா! ன்னு பட்டியல் நீளுது. நாம இந்த இடத்த அடைய உழைச்ச எல்லாருக்கும் நன்றி. செய்ய வேண்டிய வேலைங்க நிறைய இருக்கு. எல்லாரும் ஒரு கை கொடுத்தா சீக்கரம் போய் சேரலாம்.

நான் முன்னமே ஒரு பதிவுல சொன்னேன். உணர்ச்சி வசப்பட்டு எழுதற விஷயங்கள்ல ஒரு செயற்கைதனம் வந்துடும்னு. இது அதுக்கு உதாரணம் :)) இன்னும் விட்டா பேசிகிட்டே இருப்பேன். so, good bye friends.

முதுகு சொரிய ஓர் ஏவுகணை.

 
"சினிமா ஒரு ஏவுகணை.
அதை வைத்து நாம் முதுகு சொரிந்து கொண்டிருக்கிறோம்."


- வைரமுத்து (வைரமுத்து கவிதைகள் தொகுப்பில்)

எனக்கு பொதுவா தமிழ் படங்கள்னா அலர்ஜி. இது பந்தாக்காக சொல்லற வார்த்தை இல்ல. கிரிடம், மதுர நொம்பர காட்டு, பொன் முட்டையிடுன்ன தரவு, அபுர் சன்சார்(பெங்காலி). இது எல்லாம் சமீபத்துல நான் ரொம்ப ரசிச்சு பாத்த படங்க. தமிழ்ல இந்த மாதிரி படங்களே இல்லைன்னு சொல்ல மாட்டேன். இன்னும் சொல்லனும்னா, நம்ம அளவுக்கு நிறைய திறமையானவங்க வேற எந்த மாநிலத்துலையும் இல்ல.

ஆனாலும் குப்பைங்க தான் ஏராளமா வருது. சமீபத்துல ஒரு படம் பாத்தேன். திவான். சரத் குமாரோட படம். இது, பள்ளிகூட டிராமா மாதிரி இருந்துதுன்னு சொன்னா அது பள்ளிகூட டிராமாக்கு தான் கேவலம்.

சினிமா விமர்சன வலைப்பூக்கள் ஏதாவது கெடைக்குதான்னு தேடினேன். மாட்டினது இது.

மீனாட்சி ஷங்கர். தலைவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். தென்னவனுக்கும், ஆஞ்சனேயாவுக்கும் இவர் எழுதி இருக்கற விமர்சனத்த படிச்சிட்டு வயிறு வலிக்க நானும் என் தங்கச்சியும் சிரிச்சோம். நீங்க கதை எழுத முயற்சி பன்னலாம் ஷங்கர்.

இது நான் தேடினப்ப கெடைச்ச சினிமா விமர்சன வலைப்பூ. வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க.

அடிப்புல் பிரியர்கள் - 2

 

mu'sic - The art of arranging sounds in time so as to
produce a continuous, unified and evocative composition,
as through melody, harmony, rythym, and timbre.



சத்தம், ஒரு அமைப்புல இருக்கு. அந்த அமைப்பு நமக்கு புடிச்சா அது நமக்கு இசையா படுது. இது தான் என்னோட வரைமுறை. போன வருஷம் வரைக்கும் எனக்கு eminem பாட்டு வெறும் சத்தம் தான். அத இசையா நான் கேட்க ஆரம்பிச்சது மனுஷ்ய புத்திரனோட, "இந்த நகரத்தை தூங்க வைக்க வேண்டும்" கவிதைய படிச்சதுக்கு அப்பறம் தான். ஒரு சமூகம் உஷ்னப்படும் போது வெடிக்கற கொப்பளம் தான் eminem, 2 PAC எல்லாம்.

என்ன சொல்ல வரேன்னா, எல்லாமே இசை தான். நம்ம காத கொஞ்சம் பழக்கப் படுத்தினா. கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணா. நம்ம கண்ணன் இத பத்தி விரிவா பேசறாரு. எனக்கு பிடிச்ச புஷ்பவனமும், சுதா ரகுனாதனும் இவருக்கும் பிடிச்சிருக்கு. எடுத்த விஷயத்த ரொம்ப தெளிவா பேசறாரு. இவரோட மத்த பதிவுகளும் நல்லா இருக்கு. எல்.சுப்ரமணியம் மேல ஒரு ஆர்வம் வந்திருக்கு. நன்றி கண்ணன்.

Friday, January 09, 2004

அடிப்புல் பிரியர்கள் - 1

 
"எனக்கே தெரிகிறது. மேய்வது நுனிபுல்லையென்று.
அடிப்புல்லில் இத்தனை சுவை இல்லையே"


நான் அப்படிதான். எனக்கு ரொம்ப இஷ்டமான விஷயங்களான இலக்கியம், சினிமா தவிர மத்த எல்லா விஷயத்துலையும் நுனிப்புல் தான் மேய்வேன். அதனால விஷயங்கள ஆழமா அலசறவங்கள மேல ஒரு மரியாத. அப்படிதான் ஜெயமோகன் கூட அறிமுகம் ஆனாரு. மத மாற்றத் தடை சட்டத்த எதிர்த்து அவர் எழுதின கட்டுரைய படிச்சு பாருங்க. டார்வின் தியரியையும் மதத்தோட வளர்ச்சியையும் இணைச்சு எழுதி இருந்தாரு. நடுவில கொஞ்சம் காலம் அவரு எழுதல. இப்போ நடுவுல வந்த எல்லா வசைகளுக்கும் பதில் சொல்லி இருக்காரு.

சரி. விஷயத்துக்கு வரேன். ஆழமாக விஷயங்கள அலசர பல வலைப்பூக்கள் இங்க இருக்கு. அந்த மாதிரி சில பூக்கள பாக்கலாம். பத்ரி ஷேஷாத்ரிய, ஜெயமோகனோட காடு, நாவல் வெளியீட்டுல சந்திச்சிருக்கேன். பத்து நிமிஷம் பேசிகிட்டு இருந்தோம். அவரோட வலைப்பூல, எனக்கு நெருக்கமான விஷயங்கள் எதுவும் இல்ல. எல்லாம், உலக அரசியல், பொருளாதாரம் (உவ்வே) மாதிரி. ஆனாலும் நான் ரெகுலரா படிக்கற வலைப்பூல அதுவும் ஒன்னு. அவர் எடுத்துக்கற விஷயத்த சொல்லற விதம் அழகு. யோசிச்சு பாருங்க... "கடந்த காலாண்டில் GDP வளர்ச்சி". b.com பொருளாதார பாடத்தோட தலைப்பு மாறி இருக்கு. ஆனாலும் தூக்கமே வராம முழுசையும் படிக்க முடிஞ்சுது.

Wednesday, January 07, 2004

இறந்தவனின் ஆடைகள்

 
இன்று கொஞ்சம் வேலை அதிகம். என்னோட பாஸ், இன்னைக்கு வேலைய கொடுத்து, நேத்து வேணுமுங்கறார். மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்னு.

இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்து கொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்து போலாகிவிடும்

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்து விடலாம்தான்
இறந்தவனைத்
திரும்ப திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது

(அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு)

மனுஷ்ய புத்திரன்


ஹரி கிருஷ்ணனோட வென்பாவ பத்தின பதிவ படிச்சேன். typical hari krishnan. தெளிவா, அதே சமயம் சுவாரஸ்யமா எழுதறதுல தலைவர் கில்லாடி. இவரு சிஃபில பாரதிய பத்தி எழுதின கட்டுரை தொடர படிங்க கட்டாயம். இவர பத்தி இன்னும் எழுதனும். நாளைக்கு எழுதறேன். good night.

Tuesday, January 06, 2004

யாரோ வீசிய விதை

 
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே.


ரொம்பவும் சாதாரணமான வரிகள். ஆனா கல்யான்ஜியோட இந்த வரிகள் தான், வைரமுத்துவையும் தாண்டி ஒரு பெரிய கவிதை உலகத்துக்கான கதவ திறந்தது. இவரோட ஒவ்வொரு வரியிலையும் திருநெல்வேலி மணக்கும். மனுஷ்யபுத்திரன போல சிக்கலான வரிகள் இருக்காது. பல சமயங்கள்ல இது எப்படி கவிதை ஆகும்னு கோவம் கூட வரும். ஆனா உண்மை இருக்கும். எங்கையோ போய் தொடும். அது தான் கல்யான்ஜி.

சிறுவனாக
பென்சில் சீவும்போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்துவிட்டது வயதுடன்.
எஞ்சியது என்ன?
காயம் படாத கைவிரல்.
நிஜம் கசியாத கவிதை.


ஹரன் பிரசன்னா தன்னோட வலைப்பூல, கல்யான்ஜியோட சிறுகதை தொகுப்ப பத்தி எழுதி இருக்காரு. ஹரனுக்கு நல்ல ரசனை. கதைகள அலசன விதம் என்ன ரொம்பவே impress பன்னிச்சு. அந்த பதிவ இவர் முடிச்சு இருக்கற விதம் நல்லா இருக்கு.

"விமானதளத்தில் காத்திருக்காமல், எமிக்ரேஷன் செக்கிங் இல்லாமல், காசு செலவில்லாமல் என் வீட்டுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு."

கையில் தண்டோராவுடன் ஒரு சுய மதிப்பீடு...

 
* உன்னோட வேலை என்ன?
* உன்னால எங்களுக்கு என்ன உபயோகம்?
* உன்னோட திறமைகள் என்ன? ஒரு பிரச்சனைய கொடுத்தா ஒழுங்கா முடிப்பியா?
* நீ அழகா இருப்பியா?(பெண்களுக்கு)
* உனக்கு girld friend இருக்கா?(ஆண்களுக்கு)

இப்படி எல்லாம் கேட்டு போன வாரம் ஒரு மெமோ வந்தது ஆஃபீஸ்ல. (கடைசி ரெண்டும் இல்ல. ஆனா, அத கேட்டிருந்தாலும் ஆச்சர்யம் இல்ல ;) ) விஷயம் இது தான். self-appraisal. தமிழ்ல சொன்னா, சுய-மதிப்பீடு. வேலைக்கு எடுக்கும் போதே இத எல்லாம் கேட்டாச்சு இல்ல.. பொறவென்ன வருஷா வருஷம் இந்த கேள்வி? எங்க வங்கியோட மனித வள(?) துறையோட கைங்கர்யம் இது. சின்ன வயசுல இருந்து 'அடக்கி வாசிக்கறது' பழகி போச்சு. பெரிய நிறுவனம் எதுலையும் வேலை செஞ்சதும் இல்ல. இப்போ, நான் அது, நான் இது ன்னு பேச கூச்சமா இருக்கு. ஆனா கூட வேலை செய்யறவங்கள பாக்கனுமே... இதே மாதிரியான அனுபவம் நம்ம வினோபாவுக்கும் .அவர் அருமையான கேள்விய முன்வைக்கறாரு.சுய மதிப்பீடா அல்லது சுய தம்பட்டமா? scott adams ன் டில்பர்ட் தான் ஞாபகம் வந்தது.விளையாட்டுக்கு சொல்லல. நீங்க ஒரு பெரிய நிறுவனத்துல வேலை செய்யறீங்களா? ஆடம்ஸோட Dilbert and the Way of Weasles புத்தகத்த படிச்சிட்டு, உங்கள சுத்தி இருக்கறவங்கள பாருங்க. எல்லாரும் மூக்கு நீண்டு, வால் வளந்து தெரிவாங்க ;-)

இவரோட வலைப்பூ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.
உதாரணமா, அந்த அமெரிக்க கதை...

- சித்தார்த்.

Monday, January 05, 2004

பொறியில் மாட்டிய அனில்...

 








 


"எத்தனை கேட்டாலும், எத்தனை கற்பனை செய்தாலும் இந்த வேகம், இந்திய
தமிழனுக்கு புரிவதே இல்லை."

- ஜெயமோகன், சங்கச்சித்திரங்கள்.



சத்தியமான வார்த்தை. எனக்கு இலங்கை தமிழர்களோட உணர்ச்சிகள புரிஞ்சிக்க முடிஞ்சதே
இல்ல. "கன்னத்தில் முத்தமிட்டால்"ல அமுதா சொல்லுமே, அந்த மாதிரி, சென்னையும்
வண்ணியும் வேற வேற உலகங்க.  ஆனா பல சமயங்கள்ல, அவங்களோட சேர்ந்து கொவப்படற
வாய்ப்பு கதைகள் மூலமா கெடச்சு இருக்கு. அப்படி என்ன பாதிச்ச முதல் கத, "சரணபாலாவின்
பூனைகுட்டி". சே. யோகனாதன் எழுதினது. ஒரு சிங்கலவனுக்கும், தமிழனுக்கும் நடக்கற
சந்திப்பு தான் கதை களம். அருமையான கத.


அதே மாதிரியான ஒரு கதைய
சந்திரவதனாவோட
வலைப்பூல படிச்சேன். கூண்டுல மாட்டின அனிலுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஒரு கோடு
போட்டு பேசற கத. உணர்ச்சிவசப்பட்டு எழுதற கதைகள்ல பொதுவா ஒரு செயற்கைத்தனம்
வந்துடும்(இந்த பதிவுல தெரியுதே, அந்த மாதிரி :D). ஆனா இந்த கதைல அது missing. கட்டாயம் படிங்க.


"வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே,

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே"


- சித்தார்த்.



வாசல்

 

"எடுத்த காரியம் யாவிலும் வெற்றி
எங்கு நோக்கிலும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கெனும் வெற்றி
வேண்டினே னெனக் கருளினள் காளி"


பாரதியோட பாடல்கள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது. இந்த பாட்டுல கொப்பளிக்கர optimism என்ன, என்னவோ பன்னும். இத எழுதும் போது, அனேகமா, இந்த பக்கம் செல்லம்மா அரிசி இல்லன்னு நின்னு இருப்பாங்க. அந்த பக்கம்

வீட்டு வாடகை கேட்டு ஆள் வந்து நின்னிருப்பான். ஆனா ஒரு துளி தெரியனுமே!! உஹும். அருளினள் காளி !!

பாரதிய பத்தி ஏதாவது எழுதி, இந்த இதழ ஆரம்பிக்கனும்னு ஆசை. எழுதியாச்சு. சரி, விஷயத்துக்கு வருவோம்.

நான் பேசப் போற விஷயம் வெளி நாட்டுல வேலை பன்னற இந்தியர்களுக்கு புரியும்ன்னு நினைக்கறேன். அதாவது, வெளி

நாட்டுல வேலைக்கு போயிட்டா, இந்தியாவ பத்தி, ஒரு அதீத அக்கரை வந்துடும். free advice நெறைய கொடுக்க ஆரம்பிப்போம்.

"இந்த லஞ்சம் வாங்கற அரசியல்வாதிகள நடு ரோட்டுல நிக்க வெச்சு சுடனும்"
"நம்ம ஆளுங்களுக்கு சுத்தமே இல்ல. ரோட்ட பாரு... சிங்கப்பூர் மாதிரி எச்ச துப்பனா ஜெயில்ல போடனும்"

இப்படி போகும் இலவச அட்வைஸ்...

இந்த மாதிரி ஆளுங்க,நெனச்சா நிச்சயமா ஏதாவது பன்னலாம். இதோ
அருணாவோட வலைப்பூல ரமேஷ் ராமனாதன் சொல்லாறா மாதிரி.

மறுபடியும் சந்திக்கலாம்.

சித்தார்த்.

Sunday, January 04, 2004
 

Madras nalla Madras, (c)Prabhu Rajadhurai


 

இந்த வார வலைப்பூ நாயகன் சித்தார்த் வெங்கடேஷ். சென்னை வாசியான இவர் இப்போது வசிப்பது குவைத்தில். பிடித்த விஷயங்கள் பாரதி, ஹாரி பொட்டர், கமலஹாசன், மணிரத்னம், பாலச்சந்தர், ஜெயமோகன், கிரிக்கெட், சச்சின், ஜாவா, ஸ்பீல்பேர்க், லியோன் யூரிஸ், இஸ்ரேல், அய்ன் ராண்ட்.

இவருக்கும் *இலக்கியவியாதி* புடிச்சிருக்குப் போலத் தெரியுது. வாருங்கள். வந்து அசத்துங்கள் சித்தார்த்!


 
Thanjai, (c)Anand


 

பழமையில் ஊறித்திளைக்கும், இருபதுகளின் ஆரம்ப விளிம்பில் இருக்கும், இளவரசி குந்தவையின் ரசிகை நான். :) பவித்ராவைப் பற்றி நிறையச் சொல்லலாம். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்களைப் பற்றி நிறையப் பேசவராது எனக்கு. :( உங்களில் பலர் அவருடைய வலைப்பதிவுகளையும், குழுக்களில் படைக்கும் கட்டுரைகளையும் படிப்பவர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். psst... காதோட ஒரு ரகசியம். பயணக்கட்டுரை எழுதுவதில் திறமை படைத்த பவித்ரா, அவரின் பயணக்கட்டுரைகளூக்கென்று ஒரு தனி வலைப்பதிவு அமைக்கப்போவதாக பட்சி சொல்கிறது.

பல்சுவை விருந்து படைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்த பவித்ராவிற்கு நன்றி.

 
(c)Prabhu


This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com