|
|
|
Tamil Bloggers Database |
|
| Enter Record |
|
Friday, February 06, 2004
இவ்வார வலைப்பூ ஆசிரியராக இருக்கப்போகிறவர்பற்றி நான் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. உங்கள் அனைவருக்கும் தெரிந்தவர். ஏறக்குறைய அனைத்து வலைபதிவாளர்களும் தங்களுக்குள் சிலாகித்துக்கொள்ளும் வலைப்பதிவிற்கு சொந்தக்காரர்.
ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் பயன்படுத்திய காலத்தில் தமிழ் இணையத்தில் உலாவிய இவர், மறுபடியும் தமிழ் இணையத்தில் கடந்த வருடம் நுழைந்தார். நாளையோடு இவர் வலைபதிய ஆரம்பித்து ஒரு வருடம் நிறைகிறது.
A humble beginning
I am starting a new blog - which will be in Tamil.
என்றும்
How can I start a tamil blog?
I am assuming that I can use Murasu to create the content. I will use the unicode font. If someone opens the page, if they do not have the font, it will get dynamically loaded, and hence they should be able to get the content in Tamil.
I will try it out tonight. I will need to change the blogger template.
என்றும் எழுதி வலைபதியத் தொடங்கிய இவரின் எளிமையும், சினேகமான அணுகுமுறையும் தமிழ் இணையத்தில் சிலாகிக்கப்படும் ஒன்று.
நீங்கள் கிரிக்கெட் ஆர்வலராக இருந்தால், கட்டாயம் இவருடைய http://www.cricinfo.com/ தளத்திற்கு சென்றிருப்பீர்கள்.
உங்களுடன் பத்ரி சேஷாத்ரி!
வலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்
இதுநாள் வரை நாம் எவ்வாறு செய்திகளைப் பெற்று வந்திருக்கிறோம்? இங்கு 'செய்தி' எனும்போது news, views, analysis, opinion என்று அனைத்தையும் குறிக்கிறேன். Reuters, AP, AFP, UNI, PTI போன்ற பல செய்தி சேமிக்கும் நிறுவனங்கள் உலகம் முழுதும் தங்கள் நிருபர்களை (reporters, stringers) வைத்துள்ளனர். அத்துடன் பல இடங்களில் புகைப்படக் காரர்களையும் வைத்துள்ளனர். மேற்சொன்னவற்றுள் Reuters, AFP, AP போன்றன உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் நிறுவனங்கள். UNI, PTI ஆகியவை இந்தியாவில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்கள். இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டிற்கான பிரத்யேகமான செய்தி நிறுவனங்கள் உள்ளன. மேற்சொன்ன செய்தி ஏஜென்சிகள், இணையத்தளங்கள் வருமுன்னர், தாங்களாகவே நேரடியாக செய்திகளை மக்களுக்கு வழங்கவில்லை. இந்த செய்தி ஏஜென்சிகளின் செய்தியோடையை பெறும் ஊடக நிறுவனங்கள் - செய்தித்தாள்கள், அச்சு இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவை - வரும் செய்திகளை தங்களுக்கேற்ற வகையில் மாற்றி எழுதி, தங்கள் ஊடகங்களில் பயன்படுத்துவர்.
அதைத்தவிர இந்த செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தங்களுடைய நேரடி நிருபர்களை சம்பவம் நடக்கும் இடத்திற்கு அனுப்பித்து செய்திகளை சேகரிப்பர்.
ஒரு செய்தி வெளியாகி வெடித்தவுடன், அதைப்பற்றிய வல்லுநர் கருத்துகள், பின்னணி விவரம், அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள், துறை வல்லுனர்கள், பொதுமக்கள் ஆகியோருடைய கூற்றுகள் ஆகியவை சேர்க்கப்பெற்று செய்தித்தாள்களில் பத்திகளை சாப்பிடத் துவங்கும். தொலைக்காட்சிகளில் பல நிமிடங்கள் இதற்கென ஒதுக்கப்படும்.
செய்தி ஊடகங்கள் ஏதாவது விஷயத்தைப் பெரிது செய்ய விரும்பினால், அதை ஊதிப் பெரிதாக்க முடியும். எதையாவது அமுத்த விரும்பினால் வெளியே தெரியாத வகையில் செய்யமுடியும்.
இணையத்தில் செய்தி ஊடகங்கள் கால்பதிக்க ஆரம்பித்தவுடன் செய்தி ஏஜென்சிகளும் தங்களுக்கென பிரத்யேக இணையத்தளங்களை ஆரம்பித்தன. இணையத்தில் மட்டுமே இருக்ககூடிய சில செய்தித்தளங்களும் வர ஆரம்பித்தன. இந்தியாவில் ரீடிஃப், சிஃபி போன்ற செய்தித்தளங்கள் தோன்றின.
மேற்சொன்ன அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மூலதனத்தில் உருவான நிறுவனங்கள். பல்லாயிரக்கணக்கான நிருபர்கள், புகைப்படக்காரர்கள், கேமராக்கள், வீடியோ தொழில்நுட்பக்காரர்கள், ஒலிப்பொறியாளர்கள், செய்தி வாசிப்பவர்கள், எழுத்தர்கள், செய்தி ஆசிரியர்கள், இணையத்தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை வேலைக்கு வைத்திருப்பவர்கள்.
அப்படியிருப்பினும், தனிமனிதர்கள் ஒருங்கிணையாமல் ஆங்காங்கே உருவாக்கும் வலைப்பதிவுகள் பல ஒன்று சேர்ந்து மேற்சொன்ன 'organized' செய்தி சேகரிக்கும் நிறுவனங்களைப் பல இடங்களிலும் மிஞ்ச முடியும். அப்படி நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.
இது எப்படி சாத்தியமாகிறது?
1. பல நேரங்களில் கையில் மடிக்கணினியும், இணைய இணைப்பும், டிஜிட்டல் கேமராவும், வலைப்பதிவும் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நிருபர்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்களால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதனை அனைவருக்கும் முன்னதாக வெளியுலகிற்குக் கொண்டு செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தீவிபத்து ஒன்று நடைபெற்றது. அங்கு எதிர்வீட்டில் இருக்கும் ஒருவரிடம் மேற்சொன்ன உபகரணங்கள் இருந்தால் அவரால் உடனே இந்தத் தகவலை வலைப்பதிவு மூலம் தெரிவிக்க இயலும். எந்த organized செய்தி ஊடகத்தாலும் இதைவிட வேகமாக இந்தச் செய்தியை வெளியே சொல்ல முடிந்திருக்காது. முதலில் இந்தச் செய்தியை இரண்டு வரிகளில் தெரிவித்து விட்டு, நம் நண்பர் உடனடியாக தன் டிஜிட்டல் கேமராவில் ஓரிரண்டு படங்கள் பிடித்து அதனை அடுத்ததாகத் தன் வலைப்பதிவில் ஏற்றலாம். அதனை RSS செய்தியோடை மூலம் பார்க்கும் மற்ற செய்தி நிறுவனங்கள் இந்த வலைப்பதிவின் நம்பகத்தன்மையைப் பொறுத்து செய்தியைத் தாங்களும் பெற்றுக்கொண்டு தங்கள் ஊடகங்களின் வழியே பரப்புவர்.
2. செய்திகளை உடனுக்குடன் ஏற்றுவது மட்டுமல்ல. மேற்கொண்டு செய்திகளை அலசுவது. செய்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு துறையில் அதிக விஷய ஞானம் இல்லாத 'அரைகுறைகள்'தான்! இவர்கள் பொருளாதாரம், அறிவியல், குற்றவியல், கணினியியல், கணிதம், அரசியல்(!) ஆகியவற்றில் வரும் விஷயங்களை அலசி, ஆராய்ந்து அது பற்றி எழுதக்கூடிய முழு அறிவு பெற்றவர்கள் அல்ல. அதனால்தான் இவர்கள் எழுதும் பல செய்திகள் தப்பும் தவறுமாக உள்ளது. ஒரு செய்தி வெளியானவுடன், அதனை அலசக்கூடிய திறமையுள்ளவர்கள் அவ்வாறு ஆராய்ந்து தம் வலைப்பதிவில் எழுதினால், அது செய்தி ஊடகங்களில் வரும் செய்தி அலசல்களை விட அதிக உபயோகமாக இருக்கும்.
3. 'fact-check-your-ass' என்று அழகான(!) அமெரிக்க ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைப்போல் ஒரு செய்தி ஊடகத்தின் செய்தியை அலசி, அது உண்மையா, புருடாவா என்பதைக் கண்டு, அதை வெளியிட்டு, ஒரு தவறான செய்தியை வெளியிட்டவர்களின் மானத்தை வாங்கலாம். தி ஹிந்து ஈழத்தமிழர்கள் பற்றித் தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்ற ஒரு கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. அப்படியானால், உடனடியாக எங்கெல்லாம் தவறு செய்துள்ளார்கள் என்பதனை ஆதாரத்துடன் வெளியிட்டு அவர்களது தோலை உரிக்கலாம்.
4. எந்தச் செய்தி ஊடகமும் கண்டுகொள்ளாத சிற்றூர்களில் உள்ள பிரச்சினைகளை, செய்திகளை வெளிக்கொணரலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 'பின்கோடு'க்கும் ஒரு வலைப்பதிவாவது இருந்தால் அங்குள்ள செய்திகளை ஒன்று சேர்க்கலாம். இந்த இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை வெளியிடலாம். இதற்கு இந்த சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களையே செய்தி சேகரிக்கும், வலைப்பதியும் இடங்களாக மாற்றலாம்.
இதனாலெல்லாம் வலைப்பதிவுகள் ஒன்றுசேர்ந்து செய்தி ஊடகங்களைத் துரத்திவிடும்/ஒழித்துவிடும் என்றில்லை. ஆனால் இரண்டும் (unorganized வலைப்பதிவுகள், organized செய்தி நிறுவனங்கள்) இணைந்து ஒரு புதிய "Media Ecosystem" ஒன்றினை உருவாக்கும். ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்கும்.
References:
1. A New News Architecture - Rajesh Jain's blog
2. A New Architecture for News - Dan Gillmor's blog
3. The click heard 'round the world - Jeff Jarvis's blog
4. Blogosphere: the emerging Media Ecosystem - John Hiler
Monday, February 02, 2004

கூட்டு வலைப்பதிவு: டயலாக்நௌ.ஆர்க்
இந்த நுட்பம் பல வலைப்பதிவுகளில் உள்ளது. ஆனாலும் நமக்கருகே உள்ள ஒன்றை உங்களுக்கு எடுத்துக்காட்ட விழைகிறேன். டயலாக்நௌ.ஆர்க்: டிசம்பர் 2001இல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் அணுகுண்டை வீசித்தாக்கும் அபாயம் இருந்த நிலையில் ரஷ்மி சின்ஹா, ஜோனாதன் பொடெல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த வலைப்பதிவின் நோக்கம் கிழக்காசிய நாடுகளின் மக்கள் அனைவரும் தங்களுக்கான ஒரு பரஸ்பரப் புரிதலை, கண்ணியமான விவாதங்களின் மூலம் உருவாக்கிக் கொள்வதே.
இந்தத் தளத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரலாம். உடனடியாக பதியவும் ஆரம்பிக்கலாம். ஒருவர் 24 மணிநேரத்தில் இருமுறை மட்டுமே பதியமுடியும்.
இந்த முயற்சியால் பரஸ்பரப் புரிதல் அதிகரித்துள்ளதா என்பதை நோட்டமிடுவது என் நோக்கம் அல்ல. ஆனால் இம்மாதிரியான ஒரு கூட்டு முயற்சி ஒத்த கருத்துடையவர்களை ஓரிடத்தில் கொணர்ந்து அதன் மூலம் அவர்களது பரந்த அறிவு, கல்வி, சிந்தனையோட்டம் ஆகியவைகளை ஒருங்குபடுத்தி, ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு அளிப்பது.
வலைப்பூவே அப்படிப்பட்ட ஒரு முயற்சியாக இருந்திருக்க வேண்டும். பலரால் ஒரே நேரத்தில் பதிவு செய்யக்கூடியதாகவும், அதே நேரத்தில் ஒரு காலவரையறையில் இத்தனை முறைதான் பதிய முடியும் என்றதொரு கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்களிடையே பரஸ்பர நல்லெண்ணம் உருவாக்குதலை விட, அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதாரப் புரிதல்களை அதிகமாக்கும் வகையிலும், தனியாக அரசியல், சமூகம் சார்ந்த எண்ணங்களைத் தொகுத்தளிப்பதற்கும் கூட்டு வலைப்பதிவுகள் தேவை.
இப்படிப்பட்ட கூட்டு வலைப்பதிவுகளுக்கும், யாஹூ! குழுமங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் கேட்கலாம். யாஹூ! குழுமங்களைப் படிப்பது அயர்வைத் தருவது. அவை ஒழுங்காக வடிவமைக்கப்படாத, பழங்கால newsreader (rn, xrn, trn anyone?) போன்றவை. இணையத்தளத்தின் முழுப்பயன்பாட்டையும் குழுமங்களில் கொண்டுவராதவை. மேலும் யாஹூ! குழுமங்களில் உறுப்பினர்களாக இருக்கும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்: மொத்த உறுப்பினர்கள் 300 என்றால் அஞ்சல் அனுப்புவது 30 பேர்தான். அதிலும் 15 பேர் "சபாஷ்!", "பேஷ், பேஷ்" என்று ஜிங்-சக். எந்தக் குழு 1000 பேரைத் தொடுகிறதோ, அந்தக் குழுவில் குழப்பம்தான் நிலவும். இந்தக் கூட்டு வலைப்பதிவு முறையில் என்ன நன்மை?

- ஒருவரது கருத்துகள் பத்தி (கட்டுரை அல்லது post), பின்னூட்டம்/விமரிசனம் என்று பிரிக்கப்படுகிறது. யாஹூ! குழுமத்தில் எல்லாம் ஒரு அஞ்சல்/post
- பத்திகளை பல தலைப்புகளில் பிரிக்க முடிகிறது
- படங்களை உள்ளடக்கித் தர முடிகிறது
- hello, this is a test mail, please ignore போன்ற குப்பைகளைத் தவிர்க்க முடிகிறது
- மட்டுறுத்தலாம், அல்லது சுய-மட்டுறுத்தலுக்கும் விட்டுவிடலாம்.
- நல்ல தேடல் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்
- RSS செய்தியோடை வசதிகளைக் கொடுத்து படிக்கும் அனுபவத்தை உயர்த்தலாம்
- கண்களுக்கு இதமான வகையில் பக்கங்களை நேர்த்தியாக வடிவமைக்கலாம்
- படிக்க மட்டுமே விழைபவர்களுக்கு எழுத்துரு பிரச்சினை வராமல் செய்யலாம்
ஜூலியா ராபர்ட்ஸ், நம்மூரு ஸ்டாருங்க...
நான் சினிமாவைப் பற்றி எழுதுவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார் மயிலாடுதுறை ரஜினி ராம்கி.
சினிமா வலைப்பதிவுன்னா, இப்படி இருக்கணும் சாரே! ஜூலியா ராபர்ட்ஸ் அம்மையாரோட விசிறி வச்சிருக்கிற இந்த வலைப்பதிவைப் பாருங்க. ஜூலியா நடிச்ச படம் பத்தின தகவல் வேணுமா? அவுங்களப் பத்தி பத்திரிகைல என்ன சொல்றாங்கன்னு தெரியனுமா? அங்கங்க கலர்ப்படம் வேற போட்டு ஒட்டிருக்காரு இந்த விசிறி. அப்படியே ஒரு வாக்கெடுப்பு, பல வீடியோ கிளிப், லைவ் சாட் லின்க், அருமையான டிசைன் அப்படின்னு கலக்கியிருக்காரு. அந்த முகப்புப் படத்தக் கொஞ்சம் சின்னதா செஞ்சிருக்கலாம். RSS செய்தியோடை வசதி கண்ணுல படல. அத்தக் கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்!
இதுமாதிரி நிச்சயமா நிறைய ஹாலிவுட் ஆக்டர், ஆக்டிரஸுங்களுக்குனு வலைப்பதிவு இருக்கு. வேறெந்த ஆக்டர்/ஆக்டிரஸுக்கு இல்லாட்டியும் நிச்சயமா ரஜினிகாந்துக்கு ராம்கி செஞ்ச வலைப்பதிவ ஜூலியா ராபர்ட்ஸ் வலைப்பதிவு கணக்கா கொண்டு வருவீங்கன்னு நம்பறேன்? யாருப்பா அது ரம்பா, ஜோதிகா, அஜீத், விஜய், ஸ்ரீகாந்த், புச்சு புச்சா மும்பைலேர்ந்து இறக்குமதி ஆன பொண்ணுங்க, ஸ்நேகான்னு யாரோ கூவுறது காதுல விழுது, மீரா ஜாஸ்மின்? சாமில கலக்கின த்ரிஷா...
போடோ சுடறது பிரச்சினையே இல்ல, இருக்கவே இருக்கு சினி சவுத்! சேச்சே, தப்பெல்லாம் பண்ணாதீங்க... இந்த சைட்ட நடத்துறது நம்ப நண்பர்கள்தான். வேணும்னா எங்கிட்ட சொல்லுங்க, நானே இவங்களோட ஒரு கனெக்சன் போட்டுக் கொடுக்கறேன், குறைச்ச செலவில(?) இல்லாட்டி இலவசமா கொஞ்சம் ஸ்டில் போடோ உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் (வடிவேலு, கோவை சரளா கூட செய்யலாம்!), இயக்குநர் எல்லோருக்கும் போட்டுத் தாக்கிடலாம்!
என்ன சொல்றீங்க?

ராஜேஷ் ஜெயினின் எமர்ஜிக்.ஆர்க்
ராஜேஷ் ஜெயின் ஒரு தீவிர வலைப்பதிவர். வலைப்பதிவு செய்வதை ஒரு தவம் போல் செய்து வருகிறார். இவரது வலைப்பதிவில் 'frivolous' செய்திகளுக்கு இடம் கிடையாது. தன் வலைப்பதிவில் புதிதாக முளைக்கும் தொழில்நுட்பங்கள், நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் பற்றி எழுது முயற்சிக்கிறார். நான் தினமும் முதலில் படிப்பது இந்த வலைப்பதிவையே.
கூகிளில் ராஜேஷ் ஜெயின் பற்றி
ராஜேஷ் ஜெயின் பற்றி உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இந்தியாவில் டாட்.காம் பற்றி இளைஞர்களைப் பரபரப்பாகப் பேச வைத்தது, 'நானும் என் வாழ்க்கையில் ஒரு டாட்.காம் உருவாக்கி மில்லியன் டாலர்களை அடைவேன்' என்று கனவுகளைக் காணவைத்தது இருவர்: சபீர் பாடியா, ராஜேஷ் ஜெயின். முதலாமவர் தன் கூட்டாளியுடன் சேர்ந்து (எத்தனை பேருக்கு இவரது கூட்டாளியின் பெயர் ஞாபகம் இருக்கிறது?) ஹாட்மெயில் என்னும் இணைய வழி மின்னஞ்சல் சேவையினைக் கொண்டுவந்து அந்த நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட்டிடம் விற்றார். பெரும்பணக்காரர் ஆனார். ராஜேஷ் ஜெயின் இந்தியாவோர்ல்ட் என்னும் நிறுவனத்தை உருவாக்கி அதன்மூலம் சமாச்சார்.காம் என்னும் இணையத்தளத்தை நடத்திவந்தார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் இந்தத் தளத்தினை தங்கள் உலாவியின் தொடக்கப் பக்கமாக வைத்திருந்தனர். இந்தியர்களின் இணைய உலகின் சாளரமாக இந்தத்தளம் விளங்கியது. இந்த நிறுவனத்தை ராஜேஷ் ஜெயின், சிஃபி (SIFY) என்னும் நிறுவனத்திற்கு விற்றதன் மூலமாகப் பெரும் பணம் ஈட்டினார்.
ராஜேஷ் ஜெயின் தற்பொழுது ஈடுபட்டிருப்பது கிராமப்புறத்திற்குத் தேவையான தகவல் தொழில்நுட்பங்களை வளர்ப்பதில். நெட்கோர் என்னும் நிறுவனத்தின் மூலம் தளையறு மென்பொருட்களை ஒருங்கிணைத்து இந்தியர்களுக்கு வழங்குகிறது. க்னூ/லினக்ஸ் ஹிந்திப்படுத்துவதில் இவரது நிறுவனத்தின் ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். தீஷா என்னும் நிறுவனத்தின் மூலம் பல கிராமங்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் இணைய இணைப்புடன் கூடிய ஒரு பெரிய கணினி மையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்ற வலைப்பதிவு ஒன்று (பல) தமிழில் வரவேண்டுமென்ற ஆசை எனக்கு. எளிதாக, சாதாரணத் தமிழர்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிதாக வரும் தொழில்நுட்பங்கள், அவை எந்த வகையில் தமிழர்களுக்கு உதவக்கூடும் என்ற விளக்கத்துடன், ஒரு தவம் போல, பொறுமையாக, ஒன்று விடாமல் ஒருவர் வலைப்பதிவு செய்தால் அவர் மண்ணுலகை விடுக்கும்போது, முப்பத்துமுக்கோடி தேவர்களும் பூச்சொறிந்து சுவர்க்கத்திற்கு வரவேற்பர்.
Sunday, February 01, 2004

அனைவருக்கும் வணக்கம்
நண்பர்களே, தமிழ் வலைப்பதிவு உலகில் கடந்த சில மாதங்களில் தொழில்நுட்ப அளவில் சில மாறுதல்கள் நடந்துள்ளன. ஆனால் 'சரக்கைப்' பொறுத்தவரை அதிகம் இல்லை. மற்ற வலைப்பூ ஆசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ள அதே வலைப்பதிவுகளைத் திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டுவதைவிட வேறுவகையில் இந்த ஒரு வாரத்தைச் செலவிடலாம் என நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களின் வழியே என் முயற்சி பற்றி அறிய ஆவல்.
மதியம் ழ கணினி நடத்திய விழாவிற்குச் சென்றிருந்தேன். அதுபற்றி என் வலைப்பதிவில் நிறையப் பதியவேண்டியதுள்ளது. இப்பொழுது நேரமில்லை.
இன்று பிரகாஷின் தங்கை திருமண வரவேற்புக்குப் போகிறேன். இரவு வந்ததும் இங்கு எழுதுகிறேன். ஒருநாளைக்கு ஒருமுறையேனும் எழுத எண்ணம்; முடியுமானால் ஒருநாளைக்குப் பலமுறை (ஐந்து முறையாவது) சிறு சிறு பதிப்புகளாக எழுத விரும்புகிறேன்.