|
Tamil Bloggers Database |
|
Enter Record |
|
Saturday, November 29, 2003
From Prasanna:
அன்புள்ள இரமணீ,
இலங்கைத் தமிழ் வாசகருக்கு, அக்ரஹாரத்துத்தமிழ் உள்ளிட்ட எந்தவொரு வழக்குப் புரியவில்லை என்றாலும் அதைக் கேட்க உரிமையுண்டு. சந்தேகமேயில்லை. இலங்கைத் தமிழ் (ஒட்டுமொத்தமாக இல்லை; எல்லாவர்க்கும் இல்லை. சிலருக்கு; சில வார்த்தைகள்) புரியாமல் போவதற்கான காரணங்களைப் பார்த்தால் முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுவது மற்ற வழக்குகள் மாதிரி தொடர்ந்து வெகுஜனப் பத்திரிகைகள் வழியாக அது ஊட்டப்படாதது. அக்ரஹாரத்துத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் வழக்குகள் திரைப்படங்கள் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும் இன்னபிற ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து செவிகளில் ஊற்றப்பட்டே வந்திருக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதன் பரீட்சயம் இருந்தே தீரும். அதனால் இந்த வழக்குகளை உள்வாங்கிக்கொள்வதிலே சிரமம் இருந்ததில்லை. கிராவின் வட்டார வழக்கு வந்தபோதும் பெரும்பாலும் சிக்கலேதும் இல்லாமல் போனதன் காரணம் அந்த மக்களைக் கண்டு, பழகும் வாய்ப்பு ஏதோ ஒரு கட்டத்தில் - ஊர்விட்டு ஊர் செல்லும்போதும் பயணத்தின் போதும் உடன் வேலை பார்க்கும் நண்பர்களில் ஒருவர் அந்த வட்டார வழக்கைப் பேசுபவராக இருந்த காரணமும் அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றாக - ஏற்பட்டிருந்தது. இவை எல்லாமே இலங்கைத் தமிழுக்கில்லை. நான் வாசிக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகளில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான வாசகர்கள் வெகுஜனப்பத்திரிகைகளோடு தங்கள் படிப்புவழக்கத்தை நிறுத்திவிடுவதால், அவை சொல்லும் விஷயங்கள் மாத்திரமே அறிந்த விஷயமாகியிருக்கிறது. வெகுஜனப்பத்திரிகைகள் எந்தவொரு இலங்கை எழுத்தாளரையும், இலங்கை தமிழிலக்கியத்தின் சரித்திரத்தையும் வரிந்து கட்டிக்கொண்டு சொல்லவில்லை என்பது மட்டுமல்ல; ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக, லேசாகக் கூடச் சொல்லவில்லை. இதனால் இலங்கைத் தமிழ் பற்றிய அறிவு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அத்தனை இல்லை. இதனால்தான், விஜயாலயன் அங்கலாய்த்துக்கொண்ட மாதிரி, மலையாளம் மாதிரி இருக்குதென்னும் குறிப்பும் சிங்களம் கலந்தது மாதிரி இருக்குதென்னும் குறிப்பும் ஏதோ ஒரு (சிங்களம் மலையாளம் தெரியாத!!!) அக்காவிடம் வந்தது. விஜயாலயன் அந்த அக்காவின் குறிப்புக்கு அத்தனை முக்கியத்துவம் தந்து வருந்தியிருக்கவேண்டாமென்பதும், பேச்சு சுவாரஸ்யத்தில் பக்கத்துவீட்டு, எதிர்வீட்டு அக்கா/அம்மாக்கள் சொல்லும் வார்த்தைகளில் அத்தனைத் தீவிரம் இருக்காதென்பதும் என் எண்ணம்.(அவரின் மன உளைச்சலைப் புரிந்துகொள்ளாமல் போனேன் என்பது இதற்கு அர்த்தமல்ல)
இப்படி இலங்கைத் தமிழுக்கு எந்தவொரு திறப்பும் இல்லாத காரணத்தால் முதன்முதலில் அதை வாசிப்பவர்களில் சிலருக்கு மிகப்பெரிய ஈர்ப்பும், சிலருக்கு அதிலுள்ள வார்த்தைகளின் புரியாத்தன்மையும் ஏற்படுகிறது. சிலருக்கும் இரண்டும் ஒருங்கே ஏற்படுகிறது. இது இலங்கைத் தமிழுக்கு மட்டும் ஏற்படுவதல்ல என்பதுதான் முக்கியம். ஜெயமோகன், சுந்தரராமசாமி, மௌனி எல்லாம் இலங்கைத் தமிழில் எழுதாமலேயே இந்தப் புரியவில்லை என்கிற வாதத்தைச் சந்தித்தார்கள்/சந்திக்கிறார்கள். ஆக, புரியவில்லை என்பது இலங்கைத் தமிழுக்கு மட்டுமே ஏற்படக்கூடியதல்ல. வாசகரின் உள்வாங்கும் திறனையும் அதுவரை அவர் வாசித்திருக்கிற எழுத்துகளையும் மட்டுமே சார்ந்ததே ஒழிய இலங்கைத்தமிழைப் புறக்கணிக்கும் முயற்சியல்ல. லாசராவின் எழுத்துகளைப் புரிந்தவனுக்கு இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட எழுத்தின் நடை அத்தனைக் கடுமையானதாக இருக்காதென்பதை ஏற்கிறேன்.இது நானுள்ளிட்ட பலருக்கும் பொருந்தும். அதே சமயம் சில பிரயோகங்களில் தடுக்கி நிற்க நேர்கிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். இது இலங்கைத் தமிழர்களுகே நேர்கிற ஒன்று. இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட ஒரு கதை/கட்டுரையில் சில வார்த்தைகள், இலங்கைத் தமிழர்களுக்கே புரியாமல் போயிருக்கிறது. அதற்குக் காரணம் இலங்கைத் தமிழில் காணப்படும் வட்டாரத்தமிழாயிருக்கலாம். இதே பிரச்சனை தமிழ்நாட்டு வட்டார எழுத்துக்கும் நேர்ந்திருக்கிறது. கிராவின் எழுத்தைப் புரியவில்லை என்று சொன்ன நிறையப் பேர் உண்டு.
சராசரிக்குக் கொஞ்சம் அதிகமாய் வாசிக்கும் பழக்கமுடைய, ஒரு தமிழ்நாட்டு வாசகன் என்கிற முறையில் நான் சொல்ல வருவது இதுதான். இலங்கைத் தமிழ் புரியவில்லை என்று யாராவது சொல்ல முனையும்போது, அதை இலங்கைத் தமிழைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகக் காணாதீர்கள். (இது மற்றப்புறத்திற்கும் பொருந்தும்தான்) சில வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் கேட்பது கூட (பரிமேலழகர் எந்த ரீதியில் கேட்டார் என எனக்குத் தெரியாது. பொதுவாகச் சொல்கிறேன்) தெரிந்துகொள்ளும் நோக்கில்தான். இஸ்லாமிய வழக்கிலான கதைகளை எழுதிவிட்டு சில கடினப் பதங்களுக்கு பொருள் கொடுப்பது மாதிரி இலங்கைத் தமிழ் வட்டார வழக்கிலான கதைகளுக்கும் தருவது நல்லது என்பது என் எண்ணம். இஸ்லாமிய பிரத்யேக பதங்களுக்கு, நாகூர் ரூமி, அபிதீன், தோப்பில் உள்ளிட்ட பலர் இதைச் செய்கிறார்கள். மரத்தடியில் எழுதும் ஆசாத்தும் இதைச் செய்கிறார்.
வெகுஜனப்பத்திரிகைகள் சொல்லத் தவறிய, இலங்கைத் தமிழை/அதன் சிறப்பை, இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றை சில சிறுபத்திரிகைகள், சிறிய அளவில் சொல்லின. சொல்கின்றன. ஆனால் அவற்றின் வீச்சும் வாசக வட்டமும் சிறியது. இது தமிழ்நாட்டுக்கு நேர்ந்துவிட்ட சோகம். தரமான வெகுஜனப் பத்திரிகைக்கும் ஒரு தரமற்ற சிறுபத்திரிகைக்குமான வேறுபாடே மலை போன்றது. இத்தனைக்கும் சில இலக்கியவாதிகள் இந்த வெகுஜனப்பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். முன்பிற்கு இப்போது பரவாயில்லை என்றாலும் இன்னும் வேறுபாடு நீடிக்கத்தான் செய்கிறது. ஆக, கிடைத்திருக்கின்ற இலங்கை பற்றிய அறிமுகம், க்ளப்பில் இராமுவின் தொடர் கட்டுரை முன்னிடுதல்களாலும் (இவருக்கும் எதிர்வினை அதிகமில்லை என்கிற வருத்தமிருக்கிறது) மரத்தடியில் மதியின் முன்னீடுகளலாலும் (குறும்பா பற்றிய ஒரு அறிதலும் தெளிதலும் வந்ததே அந்த இடுகைகளுக்குப் பின்னர்தான். மதி நண்பர் ஒருவரின் வலைப்பூவிலிருந்து வெட்டி ஒட்டினாராம். அவருக்கு நன்றி போய்ச்சேரட்டும்) பதிவுகள் தளத்தில் கிடைக்கும் வ ஐ ச ஜெயபாலன் எழுத்துகளாலும் (இதிலும் இலங்கைத் தமிழ் வாசக வட்டம் மற்றும் தமிழ்நாட்டு வாசகனையும் உள்ளடக்கிய வாசக வட்டம் என்ற இரண்டு மாறுபாடு காரணமாக வித்தியாசப்படும் இலங்கைத் தமிழ் என்கிற அச்சுறுத்தல் வேறு இப்போது சேர்ந்திருக்கின்றது), சுஜாதா (சுஜாதா பற்றி உங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், சுஜாதாவிற்கு ஈழத்து எழுத்துகள் மேல் நல்லதொரு அபிப்பிராயமும், அவர்கள் இலக்கியத்தின் பலம் உணர்ந்து எழுதுவதுதான் என்கிற எண்ணமும் இருக்கின்றது என்பதுதான், நானறிந்தவரையில் சுஜாதா கட்டுரைகளைப் படித்து புரிந்துகொண்டது) சொல்லிப் பின் தெரிந்துகொண்ட சேரன் கவிதைகள்/கட்டுரைகளினாலும், லண்டன் பத்மநாப ஐயரின் (இவையும் இராமு உள்ளிட்டவைதாம்) கட்டுரைகளினாலும் தாம். இவை போக, சேரன் பிடித்துப்போய் படித்த நீ இப்போது இறங்கும் ஆறும், உயிர்கொல்லும் வார்த்தைகளும். (சேரன் சேகுவேரா அளவிற்கு மோசமில்லை. கொஞ்சம் கருணையுண்டு. ;-))
தோல்பை/தோற்பை நான் ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொன்னது. தோல்பையைத் தோற்பை எனத்தான் எழுதவேண்டும். "கப்பற்றொழில்வல்லமை"யைச் சொல்லலாம். (கப்பல் தொழில்வல்லமை என எழுதியிருக்கலாம். எழுத்தாளரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமுடியாது/கூடாது.) ஆனாலும் ஒன்று.. பூரணத்துவத்துடன் கப்பற்றொழிற்வல்லமை என எழுதியிருக்கலாம். ;-). "தோற்பை"யைத் தெரிந்துகொள்ளாதவனல்ல படைப்பின் இலக்கு என்று சொல்லும் உரிமை படைப்பாளிக்கு இருக்கிற மாதிரி, வாசகனுக்கும், புதுமையான ஒரு எழுத்தை அணுகும்போது மட்டும்(நேர்மையான) புரியவில்லை வாதமும் அவனளவில் சரியே. மற்றபடி நீங்களுள்ளிட்ட சிலர் (இல்லை.. பலர்) நினைக்கிறமாதிரி அது அலட்சியமல்ல. அறியாமை. அதன்வழியான ஒரு கருத்து. மற்றப்புறம் பற்றிப் பேசினால், தமிழக வாசகர்களை விடக் கொஞ்சம் கூடுதலாகவே இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு எழுத்துகள் பற்றிய ஒரு அறிமுகம் கிட்டியிருக்கிறது. புலம்பெயர்ந்தது, வெகுஜன ஊடங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்குண்டு. இதனால், இலங்கைத் தமிழர்களின் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பற்றிய அறிவைக்கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழர்களில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிவை எடை போடுதல் சரியல்ல என்று படுகிறது.
நீங்கள் பல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். பிரமிள் (நன்றி:செல்லப்பா), சேரன் (நன்றி சுஜாதா) தவிர ஒன்றிரண்டு பெயர்களைக் கேட்டிருக்கிறோமோ ஒழிய முற்றிலும் அறிந்ததில்லை.
தமிழ்நாட்டு சஞ்சிகைகள் செய்யத் தவறிய ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தை எந்த ஈழத்து எழுத்தாளர் செயதார் என அறிய ஆவல். நீங்களாவது, குறைந்த பட்சம் குழுமத்தோழர்களுக்குச் செய்வீர்களா என அறியவும் ஆவல்.
நகுலேஸ்வரதாஸ் கதையை நீங்கள் அனுப்பாமலிருக்க யாதொரு முகாந்திரமுமில்லை என அறிவேன். அதை விட்டுவிடலாம். விளையாட்டாகச் சொன்னது அது. மடலிய இலக்கணப்படி ஒரு சிரிக்கும் குறியோ, பேந்த பேந்த முழிக்கும் குறியோ இட்டிருந்தால் பிடிபட்டிருக்கும். விட்டுவிட்டேன்.
அன்புடன்
பிரசன்னா
Venkat Wrote: Click Here
From Ramanitharan:
அன்பின் கண்ணன், வெங்கட், காசி,
இரண்டு விடயங்களை இங்கே குழப்பிக்கொள்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். எனது தமிழகப்பிராமணர்கள் தொடர்பான அபிப்பிராயம் என்னவென்று இருக்குமென நீங்கள் எண்ணினாலுங்கூட, இங்கே நான் பேசிக்கொண்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல் கலந்த விடயத்தினை அல்ல; தமிழிலே பதிப்பிலக்கியம் வந்த வரலாற்றினை. அதனாலே, அரசியல் கலந்த கருத்திலே உங்கள் எதிர்வினையிலே கண்டதிலேயிருந்து என் நிலைப்பாட்டினைப் பற்றிய சில தவறான புரிதல்களையும் மயக்கங்களையும் சுட்ட வேண்டிய அவசியம். அதன் பின்னாலே சொல்லப்போவது,
இதுவரை நான் சொன்னதின் தொடர்ச்சியானது.
முதலிலே தெளிவுபடுத்தவிரும்புவது, கண்ணன் & வெங்கட் முதல் எந்த மொழி, நிறம், மதம் தொட்ட எவராயினும், தனிப்பட்ட நண்பர்களின் குடுமியையோ கடுக்கனையோ நெற்றி நாமம், நீறு, தலைக்குல்லா, கழுத்துச்சிலுவை, உடற்சீவரம் கண்டு பழித்தலுக்கும் துதித்தலுக்கும் உணர்வினையும் தர்க்கத்தன்மையையும் இலேசிலே நான் இழந்துவிடுவதில்லை. ஆனால், பொதுப்பட்ட அளவிலே, எண்பத்தி நான்கிலே விளையாட்டிலே ஈடுபாடே இல்லாத நான் (உம் என்னைப் போன்ற பல என் வயதொத்த இலங்கைத் தமிழ் இளைஞர்களும்) என்ன காரணத்துக்காக கிரிக்கெட்டினைக் கவனிக்கத் தொடங்கினேன் என்றால், காரணம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்ற தமிழனின் இலங்கை அணிக்கெதிரான ஒவ்வொரு நான்கும் ஆறும் எங்களின் நிறைந்த ஆத்திரத்துக்கு இதம் தருகின்றன என்பது மட்டுமே காரணமாகும். ஆனால், இணையத்திலே பெரும்பான்மையான தமிழகத்துப்பிராமணர்களின் இலங்கைத்தமிழர்கள் பற்றிய எதிர்பார்ப்பும் கருத்துக்களும் இந்துவும் தந்த அனுபவத்தின்பின்னால், தனிப்பட நெருங்காத அளவிலே பொதுப்பார்வை இருப்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது; எட்டியிருப்பதும் இயலாதவிடத்துக் குத்துவெட்டுப்படுவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது; 1997-1998 இலே தமிழிணையத்திலே கண்ணனும் 2000-2001 இலே மையமன்றிலே வெங்கட்டும் இவை தொடர்பான பதிவுகளைக் கண்டிருக்கின்றீர்கள். (1997 இலே அமெரிக்கா ஹாவார்ட்டிலிருந்து ஒருவர் (பெயரெதற்கு?), கண்ணன், இன்னோர் இணையத்தமிழ்த்திட்டத்தலைவர் இருவரையும் ஜாதி குறித்து எனத் தாக்கியபோது, நான் தமிழ் இணையத்திலே மாற்றாக எழுதிய அஞ்சல் திருபுவனம் நாராயணன் கண்ணனுக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கின்றது :-))
கண்ணன்: "ஈழத்தமிழரிடம் ஒரு மூடமான பிராமண எதிர்ப்பு உள்ளூர வளர்ந்து வருகின்றது" .... ஒரு திருத்தத்துடன், றுக்கவில்லை. "ஈழத்தமிழரிடம் ஒரு மூடமான தமிழகப்பிராமண எதிர்ப்பு உள்ளூர வளர்ந்து வருகின்றது." அ. மார்க்ஸ¤டடான நட்பின் காரணமாக சேர்ந்து தமிழகப்பிராமணர்களுக்கு ஈழத்திலே ஒரு பிரதியீட்டைத் தேடித் திட்டும் கண்ணன் அறிந்த ஓரிரு ஐரோப்பியப் புலம்பெயர்ந்த இலக்கியத்தமிழர்களைவிட்டால், இலங்கைத்தமிழர்களின் இலங்கை-அகிலச்சமூகங்களிலே இலங்கைப்பிராமணர்களிலே (ஐயர்களிலே.. ஐயங்கார்கள் ஈழத்தமிழர்களிலே இல்லை; கண்ணன், ஆறுமுகநாவலரைப் பிடிக்கப்போகிறார்;-)) எவரும் ஆத்திரம் கொள்ள ஏதுமில்லை; ஈழத்தமிழ் இலக்கியங்களைப் பேண (தமிழக ஐயங்கார் கண்ணனுடன்) வண்ணார்பண்ணை இரத்தின ஐயர் பத்மநாப ஐயர்தான் பனியிலும் இதயநோயுடனும்
முறியவேண்டியிருக்கின்றது; திசைகளிலே மாலன் இந்துவின் 125 ஆம் ஆண்டு விழா (§)ப(¡)ற்றி எழுதியபோது, "இந்து" நரசிம்மன் ராமின் இலங்கைத்தமிழர்மீதான வாமன விரலழுத்தத்தினைச் சுட்டிக்காட்டிக் கடிதம் எழுத சுப்பிரமணியஐயர் ஸ்ரீதரன்தான் முன் வருகின்றார். (இந்து நரசிம்மன் ராம் ஐயங்கார் என்று எழுத நான் தயங்கமாட்டேன். ஏனென்றால், சீனத்து மாசேதுங்வாதி என்று சொல்லிக்கொண்டு திபெத்தினை எதிர்க்கின்ற, பாலஸ்தீனத்தினை ஆதரிக்கின்ற, ஈராக் உள்ளான அமெரிக்க உள்நுழைவினை ஆதரிக்கின்ற அவர், புலிகளைப்
பொல்பொட்வாதிகள் என்று இப்போது சொல்வதும் (1985 இலே பிரபாகரனைக் கண்ட செவ்வியிலே அவர்களை மார்க்ஸியவாதிகள் என்கிறது புரொண்ட்லைன்) ஈழத்திலே இந்திய அமேதிப்படையின் செயற்பாடுகளை அப்படியே ஆதரிப்பதும் அவருடைய தமிழகத்திலேயான அந்த ஐயங்கார் என்ற என் நம்பிக்கை; அதற்கான ஆதாரங்களைச் சுட்டுவது இங்கே அவசியமில்லாததாலே விட்டுவிடுகிறேன்). சொல்லப்போனால்,
பஞ்சமர் எழுதிய டானியலும் ஈழத்தின் சாதிப்படிக்காகப் பிடித்துக்கொண்டது, வேளாளரையே (இந்த வேளாளச்சாதித்தடிப்பினைக் குறித்துச் சுட்டுகையிலே மேற்குக்குப் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர் ஒருவரை இன்னோர் எழுத்தாளர் எனக்குப் போன ஆண்டு சுட்டினார்... வெங்கட், இலங்கையிலும் சாதிப்படிமுறைக்கொடுமை இருந்ததாக நிறைய வாசித்திருக்கின்றேன். நகரத்திலேயே வாழ்க்கை கழிந்துவிட்டாதாலே வாசிப்புக்கப்பால், தெரிந்தது குறைவு). ஆனால், கண்ணன் குறிக்கும் முடமான பிராமண எதிர்ப்பு - "ஈராக் யுத்தத்துக்கும் பிடிடா பி
ராமணன் குடுமியை" - என்பது மிகைப்படுத்தப்பட்டதென்பது என் கருத்து. நிச்சயமாக, இந்திய இராணுவத்தின் இலங்கையிலான அத்துமீறலான செயற்பாட்டினை முழுக்க இந்தியத்தமிழ்ப்பத்திரிகைகள் மறைத்ததும் ராஜீவ் காந்தி கொலையைச் செய்ததிலே ஒவ்வோர் இலங்கைத்தமிழனுக்கும் பங்கு என்று அந்தப்பத்திரிகைகளும் கோடம்பாக்கம் திரைப்படத்துறையும் செய்ததிலே இந்தப்பத்திரிகைகளுக்கும் திரைப்படத்துறைக்கும் அரசியலுக்கும் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் என்ற அளவிலே வந்தவர்கள் சோ, ராம், கி. ராஜேந்திரன், கமல்ஹாஸன்-பாலசந்தர்
("புன்னகைமன்னன்" மறக்கக்கூடியதா, என்ன?), ஜெயலலிதா, சுப்ரமணியசுவாமி, மணிசங்கர ஐயர், மாலினி பார்த்தசாரதி, நிருபமா சுப்பிரமணியன், (விகடன் பாலசுப்பிரமணியன் அந்தளவுக்குத் தோன்றவில்லை) இப்படித்தான் பட்டியல் எங்களுக்குத் தெரியும். வாழைப்பாடி, குமரி அனந்தன், பழனியப்பன் சிதம்பரம் என்பவர்கள் இருந்தாலும்கூட மேலே சொல்லப்பட்டவர்கள் இலங்கை அரசுடனும் இந்திய அரசுடனும் முழுக்க முழுக்க இலங்கைத்தமிழர்களின் நிலையை மறைத்து, புலிகளின் கொடுமையையும் இந்திய இராணுவத்தின் பெருமையையும் இராஜீவ்கொலையையும் (திராவிடர்கழகம்=வீரப்பன் விடுதலை=விடுதலைப்புலிகள்=இலங்கைத்தமிழர் என்ற ரீதியிலே மட்டுமே இன்றும் பேசுவதாலேயே,
இருபதாண்டுகளுக்கு முன்னாலே, தமிழ்நாட்டிலே பிராமணர் யார்-அல்லாதார் யார், ஏனிந்த வகைப்பாடு என்றே அறியாமலிருந்த ரும்பாலான "ஈழத்தமிழரிடம் ஒரு மூடமான தமிழகப்பிராமண எதிர்ப்பு உள்ளூர வளர்ந்து வருகின்றது" தவிர்க்கமுடியாமற்போய்விட்டதென்று நினைக்கிறேன். ஆனால், நிச்சயமாக அந்த மூடத்தனம் என்னிடமில்லை; நம்பலாம். ஆனால், எச்சரிக்கையுணர்வு இருக்கின்றது.
கோயம்புத்தூர் நண்பர் உப்பிலியுடன் இலங்கைத்தமிழர்-விடுதலைப்புலிகள் தவிர அத்தனையும் பேசக்கூடியதாக இருக்கின்றது. நண்பர் இணையத்தினை இந்துவோடு திறப்பவர்; நான் கனடியன் தமிழ் உடன் திறப்பவன்.
வெங்கட் (தன் வலைப்பதிவுகளிலே சொல்லியிருப்பது): //கனடாவிலே ஈழத்தமி
ழர்கள் குறைவான எண்ணிக்கையிலே வாழும் இந்தியத்தமிழர்களுக்கு இடமளிப்பதி
ல்லை; தொலைக்காட்சியிலே காணப்படுவதால், என்னை எல்லோரும் அடையாளம்
கண்டுகொள்கின்றார்கள்//. முதலாவது, நீங்கள் சொல்வது முன்னுக்குப் பின்
முரணாக இருக்கின்றது. இந்தியத்தமிழரென்றபோதும் நீங்கள் வானொலியிலும்
தொலைக்காட்சியிலும் தோன்றுகின்றீர்கள். (இதன்படி பார்த்தால், அமெரிக்காவின்
தென்றல் வானொலியிலே எத்தனை இலங்கைத்தமிழர்கள் வருகின்றார்கள் என்ற
கேள்வி மற்றப்பக்கம் எழலாம்) நீங்கள் காலம் சஞ்சிகையிலே எழுதுகின்றீர்கள்;
ஜெயமோகன் எழுதுகிறார்; தேவசகாயகுமார் எழுதுகிறார்; காஞ்சனா எழுதுகின்றார்;
சுந்தரராமசாமி எழுதுகிறார்; இரா. முருகன் எழுதுகின்றார். கனடாவின் பதிவுகள் சஞ்சி
கையிலேயும் பல நாட்டுத் தமிழர்களும் பரந்து எழுதுகின்றனர். சஞ்சிகையிலே
ஆனந்தவிகடன், கல்கி, இணையச்சஞ்சிகை தமிழோவியத்திலே எத்தனை ஈழத்தமி
ழர், மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் எழுதுகின்றார்கள். (உங்கள் நண்பர் முத்துலி
ங்கம், சேரன் போன்றோர் தவிர, தனிப்பட்ட அளவிலே ஊறுகாய் ஈழக்கோட்டா பெயரி
லே தம் தொடர்புகளைக் கணக்கிட்டுச் செயலாற்றும் ஓரிருவர் தவிர மீதிப்பேருக்கு
இப்படியாக இருப்பதில்லை; சொல்லப்போனால், புகலிடத்திலிருக்கும் ஈழத்தமி
ழ்ப்படைப்பாளிகளைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் துப்பரவாகக் கவனிக்காமலிருப்பதில்லை
என்று சொல்லமாட்டேன். விரும்பினால், சொந்தக்காசை ஒரு பதிப்பாலயத்துக்குக்
கொடுத்து, தன் படைப்பினையும் அதற்கான பத்திரிகாலயக்காரரின் விமர்சனநண்பரின்
திறனாய்வு/அறிமுகம் என்பதையும் தன் காசிலேயே விளம்பரமும் போட்டு, நூல்நி
லையங்களின் தலையிலே பதிப்பாளர் புத்தகத்தைக் கட்டிவிடவும் ஏற்பாடு
பண்ணக்கூடிய ஆள், பொருள் வல்லமை இப்போது பல புலம்பெயர்ந்த
ஈழத்துப்படைப்பாளிகளுக்கு உண்டு.) அதே நேரத்திலே, உங்களின் எழுத்துக்களிலே
இருந்த உங்கள் முரணை விட்டு விட்டுப்பார்த்தால், கனடிய நிகழ்வுகள் இரண்டு வி
தமானவை; ஒன்று முழுக்க முழுக்கப் பொழுது போக்கானவை; இரண்டாவது,
முழுக்க முழுக்க அரசியல், இலக்கியம் நோக்குக் கலந்தது. முதலாவது வகைக்கு, தமி
ழ்நாட்டிலிருந்துதான் நடிக நடிகையர் வருகின்றார்கள்; வந்து அரசியல் அறி
க்கைகளும் 'பேட்டி'களும் கொடுக்கின்றார்கள். கவிஞர் வைரமுத்து வேறு, "ஈழத்தி
னை எடுத்த பின்னாலே அதற்குத் தேசியகீதம் எழுதித்தருகிறேன்" என்ற
வேடிக்கையோ வேடிக்கையும் நிகழ்ந்தது. விசு வந்து அம்மா ஜெ பற்றியும் புலிகள்
பற்றியும் பேசக்கூடாது என்று அறிக்கை விட்ட ஒரு கூட்டத்திலேயே குழப்பங்கள் நி
கழ்ந்தன என்று அறிகிறேன். (இதற்கீடாக, பெட்னா நிகழ்ச்சி புலிகளின் நிகழ்ச்சி;
உங்கள் நந்தனார் நாடகத்தினை அதற்குப் பயன்படுத்துகின்றார்கள் என்று அந்நாடக
எழுத்தாளருக்கு அன்பர்கள் சொல்லி, எழுத்தாளரைக் கவலைகொள்ளச் செய்தது நி
கழ்ந்து இங்கே அமெரிக்காவிலே; இது பற்றி தமிழோவியத்திலே, யாஹ¥!குழுக்களி
லே பெட்னா புலிநிகழ்ச்சி=பிராமண எதிர்ப்பு நிகழ்ச்சி என்று ஓலமிட்ட எவரும் குறிப்பி
டவில்லை என்பதை இங்கே கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவோம்:-)) ஆனால்,
இந்த வகைக் கனடியக்கூட்டங்களுக்குத் தமிழ்நாட்டுத்தமிழர்கள் போகாமல் இருக்கி
ன்றார்களா? அல்லது போகாமல் யாராவது தடுக்கின்றார்களா? மற்றைய நிகழ்ச்சிகளி
லே, புலி ஆதரவு நிகழ்ச்சிகளிலே இந்தியத்தமிழர்கள் கனடாவிலே கலந்து
கொள்ளப்போவதில்லை; இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு, தமிழகத்துப்புஹாரியின் கவி
தைத்தொகுதிவிழாவுக்கு நீங்கள், பேரா, பசுபதி, பேரா. அனந்தகிருஷ்ணன்,
இலங்கை க. கந்தவனம் போகின்றீர்கள்; நாடக நிகழ்ச்சி, அமெரிக்காவிலிருந்து
சுந்தரராமசாமியை (இலங்கைத்தமிழர்கள் என்று இந்த இடத்திலே
சுட்டப்படவேண்டியவர்கள்) அழைத்துப் பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னாலும்
நீங்கள் சந்தித்துச் செவ்வி கண்டிருக்கின்றீர்கள். ஜெயமோகன் அழைக்கப்பட்டிருக்கி
ன்றார்; எந்த நிகழ்ச்சிக்கும் வரவேண்டாமென்று தவிர்த்தார்களா? சிவத்தம்பி தமி
ழாராய்ச்சி மகாநாட்டுக்கு வந்து அன்னையின் ஆணையிலே அந்த நேரத்திலே கைது
செய்யப்பட்டபோது, சுஜாதா மட்டும் சிங்களத்தீவினுக்குப் பாலம் அமைப்போம் விகடனி
லே எழுதினார்; அவரின் துணிவும் எழுத்தும் நிச்சயமாக நன்றிக்குரியன. ஆனால்,
இலங்கையிலே இருக்கும் இந்தியத்தூதரகம் கலைநிகழ்ச்சிகளுக்குங்கூட,
இலங்கைக்கலைஞர்களும் படைப்பாளிகளும் இந்தியா வரமுடியாத நிலையையும் வைத்தி
ருந்ததை இங்கு சுட்டவேண்டும். ஐம்பதுகள், அறுபதுகளிலே எழுதிய இலங்கைத்தமி
ழர்களிடம் கேட்டால், தமிழ்நாட்டுச்சஞ்சிகைகளுக்கு எழுதப்பட்டு மறுக்கப்பட்டும்
சத்தம்போடாமலே விடப்பட்டும்போன படைப்புகள் எத்தனை என்று தெரிய வரும்.
இன்றைக்கும் அவதானித்துப் பார்த்தீர்களானால், பணம் பொருந்திய புலம்பெயர்ந்த
நாடுகளிலேயிருக்கும் பெரிய ஈழத்து எழுத்தாளர்/கவிஞர்களின் பழைய
எழுத்துக்களையும் கையிலே காசு புரளும் ஈழத்துக் கத்துக்குட்டிகளின் உப்புச்சப்பற்ற பி
னாத்தலையுங்கூட வெளியிடுகின்ற தமிழகத்துப்பத்திரிகைகளும் பெரும் வெளி
யீட்டகங்களும் சமகால இலங்கைப்படைப்புகளை வெளியிடுவதில்லை. குறைந்தபட்சம்
பாதிப்பக்கம் அறிமுகம் கூடச் செய்வதில்லை.பகீரதன் தொடக்கம் கிவாஜ
போன்றவர்கள் இலங்கை வந்து உப்புச்சப்பற்றதென்ற எழுத்தென்று சொல்லிப்போனது
ஒரு புறமென்றால், ஆண்டுக்காண்டு ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரைப் போய்ப்
பார்த்து வரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா என்பவர் இந்திய இராணுவத்தின்
பொழுதுகளிலே இருபதாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்த மல்லிகை சஞ்சிகையி
னை அச்சடிக்கத் தாளின்றி கோடுபோட்ட பாடசாலைக்குறிப்புப்புத்தகப்பக்கங்களிலே
இதழை வெளியிட்ட நேரத்திலே, காங்கிரஸ் ஜெயகாந்தன் இந்திய இராணுவத்தின்
பெருமையை எங்களுக்கு வானொலியூடாகச் சொல்லி, "சமத்துப்பசங்களா
இருக்கணும்" என்கிறார். கிட்ட வரவில்லை என்கிறீர்கள்; மெய் அதுவல்ல; (நி
ச்சயமாக, ஆனந்தவிகடன் போட்டிக்குக் கதைகள் அனுப்பி, அருள்சுப்பிரமணியத்தின்
மர்மநாவல், சுதாராஜின் சிறுகதை என்ற இரண்டும் விதிவிலக்காக இருபது
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாலே வந்திருக்கின்றன. நான் சொல்வது, ஒரு கி
ரமமாக வெளிவருவது பற்றி) வாசகர்வட்டமே அக்கரை இலக்கியம் என்று ஈழம்,
மலேசியா, சிங்கப்பூர் வெளியீட்டினை வெளியிடும்போது, பத்மநாப ஐயர் போன்றோரி
ன் தூண்டுதலிலேதான் வெளியிட்டிருக்கின்றது. அதன் பின்னாலே, இத்தனை மொழி
களிலே இருந்து பெயர்த்து வெளியிடும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வெளி
யீட்டகங்கள், குறைந்தபட்சம் பத்மநாப ஐயர், சுகன் போன்றோர் போல போன்ற
பரந்திருக்கும் எல்லா நாட்டுத் தமிழ் எழுத்தாளர், ஓவியர் இவர்களின் படைப்புகளைத்
தரவேணும் முயற்சித்திருந்தாலேனும் கொஞ்சம் நிறைவாக இருந்திருக்கும்.
எல்லாவற்றுக்கும்மேலாக, நீங்கள் ரொராண்டோவிலிருக்கும் இலங்கைத்தமிழர் ஊ
டகங்கள் - அவர்கள் கரிசனையிலே அங்கே வாழும் இந்தியத்தமிழர்கள் பற்றி
ய அக்கறை பற்றிய நிலையினைச் சுட்டுகின்றீர்கள்; நிச்சயமாக ஒரே அரசுசார் புவியி
யலெல்லைக்குள் இருந்து ஆளுக்காள் உரசிக்கொள்ளும்போதும் நீங்கள் சொல்வதிலேயி
ருக்கும் மெய்யினை ஏற்றுக்கொள்கிறேன். இந்த நிலையை இங்கேயும் பலரிடம்
கண்டிருக்கின்றேன்; கண்டுகொண்டிருக்கின்றேன். (மறுபக்கக்கதையும் அதுவாகவே
இருக்குமென்று நினைக்கிறேன்). இணையத்திலே தகுதரம் எழுத்துருவிலே எழுதுகி
ன்றவர்களிலே எத்தனை பேர் ஈழத்தமிழர்கள் என்று பாருங்கள்; பாமினி எழுத்துருவி
லே எழுதுகின்றவர்களிலே எத்தனை பேர் இந்தியத்தமிழர்களென்று பாருங்கள். இந்நி
லை இலகுவாகப் புரிந்துவிடும். ஆனால், நான் சொல்வது, இலங்கையிலிருந்த,
இன்றைக்கும் படைத்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் பற்றிய (தனி ஈழமனிதனின்
நாளாந்த அவலம் பற்றியது அல்ல) தமிழக (குறிப்பாக, இணையத்திலே) வாசகர்களி
ன் ஈடுபாடு பற்றியது. தமிழகத்திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சி
கைகள் என்று எல்லாமே இதுவரை ஒரு திசையிலேதான் இருக்கின்றன.
கணையாழியையும் குமுதத்தையும் வரவழைத்துப் படித்த தமிழர்கள்
ஈழத்துப்படைப்புகளைத் தமிழகத்திலே பரப்பத் தவறிவிட்டார்கள் என்றிருக்கின்றீர்கள்;
இது நிச்சயமாக ஒரு புது அணுகுமுறையாக இருந்திருக்கும்; அப்படி ஏதும் முயற்சி
நடந்ததா என்று எனக்குத் தெரியாது; ஆனால், இலங்கையிலிருந்து தமி
ழர்கள் அனுப்பும் படைப்புகளே தமிழக சஞ்சிகைகளிலே தோன்றாதிருந்த நிலையிலே
(இன்னமும் இருக்கும் நிலையிலே) இ·து எந்தளவு வெற்றியானதாக இருந்திருக்கும்
என்றும் தோன்றவில்லை; "வாத்தியாரோடு இன்னிக்கு சாட் பண்ணினேன்" என்று
வாக்குமூலமும் ஆமாமும் கொடுக்கின்ற இலக்கிய வாசகர்கள் பலருக்கு, அவர்
எனக்கும் தோழர் நல்லவர், அவங்கப்பா அவரை விட வல்லவர் என்று தனி
ப்பட்ட அஞ்சல்களைப் பகிரங்கமாக அனுப்பும் இலக்கிய ஆர்வல நண்பர்களுக்கு,
இணையத்திலே ஈழத்தமிழ் எழுத்துகளை வாசிக்க இத்தனை வசதியிருக்கி
ன்றபோதுங்கூட, ஒரு வரிக்கருத்து எழுத முடியவில்லை என்றால், சொல்லக்
கருத்தேதுமில்லையென்றால், எந்த அணுகுமுறையைப் புதிதாகப் புகுத்தி வெல்ல
முடியும்? குறைந்தபட்சம், கணையாழி, காலச்சுவடு, உயிர்மை, மருதம், தீம்தரிகிட
போல ஈழத்திலேயிருந்து வரும் சஞ்சிகைகளிலே ஒன்றுக்கேனும் சந்தா கட்டிய
(குறைந்த பட்சம் பெயரைத் தெரிந்து வைத்துக்கொண்ட) இணையத்துத்தமி
ழ்ழ்வாசகர்கள் ஓரிருவரையேனும் காட்டுங்கள்? மேற்கூறிய தமிழகசஞ்சிகைகளிலே
இரண்டுக்கேனும் சந்தா கட்டிய ஈழத்து வாசகர்களை நான் காட்டுகிறேன் (தற்போது,
நான் இலங்கை, இந்தியா எதுக்குமே சந்தா கட்டவில்லை என்பதை விட்டுவி
டுவோம்:-)).
வெங்கட், //வாதம் இப்படியாகத் துவங்கியிருக்கின்றது; ஒரு குழுமத்தில் இலங்கைத்தமி
ழுக்கென்று அகராதி எதுவும் இருக்கிறதா என்று ஒருவர் கேட்கப்போக, "அ·தென்ன
ஈழத்தமிழென்றால் இளக்காரமா அகராதி தேட, ஐயர் பாஷைமட்டும் நோக்கு புரிஞ்சி
டுமோ" ரீதியாகப் பதிகள் கிடைத்திருக்கின்றன// என்கின்றீர்கள். இது பெரிதும் திரிந்த
கூற்று. நான் அறிந்த வரை வாதம் அப்படித் தொடங்கவில்லை. பரி
மேலழகர், "இலங்கைத்தமிழுக்கென்று அகராதி எதுவும் இருக்கிறதா?" என்று கேட்கவி
ல்லை; "கூடவே அருஞ்சொற்பொருளும் தந்தால் நல்லாயிருக்கும் :-)" என்கிறார்;
இன்னோர் இடத்திலே, "ஜெர்மனியை செர்மனி என்றெழுதினால் இலங்கைத்தமிழ்:-
)" என்று சொல்கிறார். கூடவே, சக்தி வானொலி பற்றிய கருத்தும் உஷா அவர்களின்
கருத்தும் வருகின்றன. அதற்கு, :-) என்பது பகிடியா இல்லையா என்று தெரியாத
சந்தேகத்துடனும் இலங்கைத்தமிழ் என்பது தனியே ஒரு வட்டாரவழக்காகாது என்றும்
சொல்லிய தொடர்ச்சியிலேயே, "போன
எழுபதாண்டுகளாக, அக்ரஹாரத்துப்பாஷையையும் மட்ராஸ் பாஷையையும் மலேசிய, சி
ங்கப்பூர் இலங்கைத்தமிழர்களும் மற்றைய மாநிலத்தமிழர்களும் வாசி
ப்பதற்கு அருஞ்சொல்லகராதி கூடவே கல்கி, விகடன் கொடுத்ததா என்பதைப் பற்றிக்
கொஞ்சமும் யோசிக்காதது ஏனென்று புரியவில்லை" என்றேன். ரீதியென்று நீங்கள்
சேர்த்துக்கொண்டது இதுபோன்ற தொனியென்றாகிவிடுமென்றாலுங்கூட, "அ·தென்ன

டுமோ" என்ற தொனியிலே ஏதும் நான் நிச்சயமாகச் சொல்லவில்லை; (வேறு
யாரும் சொன்னதாகவும் தெரியவில்லை) ஈழத்தமிழென்றால் இளக்காரமென்று
சொன்னவர் நினைத்தார் என்பது என் கருத்தேயல்ல; (நீங்கள்
மறுக்கூடுமென்றாலுங்கூட, இதுவரை நாளும் அக்கறைப்படவில்லை என்பதே என்
கருத்து); "ஐயர் பாஷை மட்டும் நோக்குப் புரிஞ்சுடுமோ?" என்பது மிகவும்
கோணலாகிப் போயிருக்கின்றதாகத் தெரிகின்றது. நீங்களோ, பிரசன்னாவோ,
கண்ணனோ, காசியோ மட்ராஸ் பாஷை என்பதையும் பின்னாலே வந்த உள்ளி
டுகையிலே எழுத்துத்தமிழிலே பேசுவது என்றதையும்பற்றி எதுவுமே கருத்துத் தெரிவி
க்கவில்லை; ஆனால், அதற்காக, "ஐயர்பாஷை மட்டும்" என்று குறைப்படுத்துவது
பொருந்தாது. நான் சொல்ல வந்தது, அக்ரஹாரத்துப்பாஷை, மதராஸ் பாஷை,
ஈழத்துமொழிகளின் உயர்வு இழிவு பற்றிய ஒப்பு நோக்கல் சம்பந்தமானதல்ல; ஆக,
காலங்காலமாகப் பயன்பாட்டிலே இருக்கின்றதை ஒட்டியதையும், அத்தனை
காலமும் அது புரியவில்லை என்று குறையேதும் சொல்லாமலே வாசித்தும் வந்திருக்கி
ன்றோம் என்பதையுஞ் சுட்டமட்டுமே.
அடுத்ததாக, கண்ணனும் (நான் புரிந்து கொண்டதின்படி) காசியும்
சொல்வதன்படி அக்ரஹாரத்துப்பாஷைக்கு ஓர் இலக்கிய அங்கீகாரம் இருக்கின்றதென்று
பார்த்தால், அதற்கு ஒரு பாரம்பரியமும் வரலாறும் இருக்கின்றதென்று சொல்ல வருகி
ன்றார்கள் என்று தெரிகின்றது. தமிழ்நாட்டிலே ஏன் அந்தப்பாஷைக்கு
மட்டும் அப்படியோர் இலக்கிய அங்கீகாரம் இருக்கின்றதென்பதைச் சுட்டத்தான்
எழுபதாண்டுகளாகப் பத்திரிகைத்துறையிலே கோலோச்சியவர்களும் [அதற்கு
முன்னாலும் (குருகுலக்)கல்வி-எழுத்தறிவு யார் கையிலே இருந்ததென்றும்
நோக்கவேண்டும்] அதே பாஷையைத்தான் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்று
சொல்லச் சில உதாரணங்களைச் சுட்டியிருந்தேன். காலத்தினைக் கணக்கிலே
வைத்துப் பார்த்தால், அதேயளவு காலம் சமாந்திரமாக பாக்குநீரணைக்கப்பாலே,
ஈழத்துப்படைப்புகளும் வளர்ந்திருக்கின்றன என்றதையும் சொல்ல விரும்பினேன் (MAD
போல கேலிச்சித்திரத்துக்கென்றே கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக சிரித்திரன் இதழை
நடத்திய சிவஞானசுந்தரத்தினைச் சுட்டாமல் மறந்து விட்டுவிட்டேன்; பாலுமகேந்திரா,
வி. சி. குகநாதன், மனச்சாட்சி நடராஜ், புதிசா கோடம்பாக்கத்திலே நடிக்கத்தொடங்கியி
ருக்கும் தமிழரசுக்கட்சியின் தாபகர் செல்வநாயகத்தின் பேத்தி இவர்களையெல்லாம்
சேர்க்கவேண்டுமா என்று தெரியவில்லை).
ஆளுக்காள் முகம் உரசாமல், இருபது மைல்கள் புவிசார் அரசியல் எல்லைகள் பிரித்த
தன்மையிலே புரியாமலே ஈழத்தமிழ்(கள்) புரியாமற்போனால், தொலைதூர
தென்னமரிக்க மாந்திரீக யதார்த்தச் சிறுகதைகளும் ஆபிரிக்கச்சிறுகதைகளும் கியூபிஸ,
சர்யலிஸப்புதினங்களும் யூலிஸஸ் போன்ற ஐரிஷ் எழுத்துகளும் இத்தனை நாள் புரி
ந்துகொண்டிருந்தன? (பேச்சுவழக்கு என்று காரணம் மட்டும் சொல்லமுடியுமா?)
ஈழத்து எழுத்தாளர்கள் முன்னெடுத்துச்செல்லவில்லை!! ....எதை?! திறமையைத்
தனிப்படுத்திக்கொண்டார்கள்!! ...எங்கே?!
தமிழக இலக்கிய வாசகர்கள் வேண்டுமென்றே ஈழத்துப்படைப்புகளை விட்டுவிடுகி
ன்றார்களென்று நான் சொல்லவில்லை; வேண்டாமென்றே ஈழத்துப்படைப்புகளை
இணையக்குழுக்களிலுங்கூட (சுஜாதா சுட்டிக்காட்டாவிட்டால் :-)) விட்டுவிடுகி
ன்றார்கள் என்றுதான் நினைக்கிறேன்; கடினம், சொற்கள் புரியவில்லை...
ஈழக்கலையிலக்கியச்சுவடிக்குப் போயிருந்தீர்களென்றால், வீரமணி ஐயரின் மறைவு
பற்றிச் சுட்டியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
(ஏ கே ராமானுஜனைப் பற்றி "சிறுவயதிலே என் மாடியறையிலே மொழி ஆங்கி
லம், சமையலறையிலே தமிழ், வீதியிலே கன்னடா" என்றிருக்கின்றீர்கள்; அவர்
கல்லூரிக்கப்பால் இலங்கைக்குப் போய்ப் புத்தசங்கத்திலே பிக்குவாக எண்ணிய இந்திய
எல்லைக்கும் அப்பாலேயான அந்த எண்ணத்தினையும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளி
லே பலர் எண்ணிக்கொண்டார்களானால், தமிழிலக்கிய சமரசம் உலாவுமிடமே என்று
சந்தோசப்பட்டிருப்பேன்:-))
என் உள்ளீடுகள் இலங்கை எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்துவதோ, அல்லது
ஈழத்து எழுத்தாளர்கள் எல்லோருமே சிறப்பானவர்களென்று நின்றாடுவதோ
இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. எது பெரிதென்பதோ அங்கீகாரம் குறி
த்ததோ அல்ல; சொல்லப்போனால், ஆனந்தவிகடன், குமுதம் தொடக்கம் கனடாவி
ன் முழக்கம் இலங்கை பத்திரிகைகள் சிலதின் அங்கீகாரம் கிடைக்காதிருப்பதே நல்ல
எழுத்தாளனின் எழுத்துக்குப் பெரிய அங்கீகாரம் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு
மொழியைப் பொறுத்தமட்டிலே, ஒரு வட்டாரவழக்குக்காரன் இன்னொரு
வட்டாரவழக்குக்காரனுக்கு அங்கீகாரம் கொடுப்பதென்பது இந்தக்கடலிலும் அந்தக்கடல்
உப்பு என்ற அளவிலே குடிக்க நல்ல நீர் தேடுவதுபோலத்தான். ஆனால், மொழி
எங்களுக்குப் புரிகின்ற வகையிலே இருக்கவேண்டும் என்ற வகையிலே மொழியின்
மையத்தினைத் தங்களிலே வைத்துக்கொள்வது போன்ற தொனியிலே பேசுவதாகப்
பட்டால், அதை விட்டுப்போவது, அத்துணை நல்லதல்ல. அந்தளவிலேயே எனது
ஆரம்ப உள்ளிடுகை இருந்தது. தனியே எவரையும் நோக வைப்பதல்ல. அண்மையி
லே counterpunch Alexander Cockburn தான் ஒரு தொகுப்பாசிரியாக இருந்து
இஸ்ரேல் பலஸ்தீனியம் பற்றித் தந்த நூல், The Politics of Anti-Semitism பற்றி
ப் பேசும்போது, சொன்னது இங்கே எனக்கும் ஒரு வகையிலே பொருந்துகி
ன்றதுபோலத் தெரிந்ததால், கடைசியிலே குறிப்பிடுகின்றேன்; "பலஸ்தீனம்
தொடர்பாக இஸ்ரேலின் சில நடவடிக்கைகளை இஸ்ரேலிய இடதுசாரிகளே விமர்சி
த்தால், ஒன்று காத்திரமான விமர்சனமென்பார்கள்; அல்லது தன்னைத்தானே வெறும்
யூதனென்பார்கள்; ஆனால், அமெரிக்காவிலே அதே விமர்சனத்தினை வசனமும்
தவறாமல் அப்படியே நாங்கள் சொன்னால், யூத வெறுப்பாளன் என்று முத்திரை குத்தி
விடுவார்கள்."
Friday, November 28, 2003
From Kasi:
இங்கு அமெரிக்காவில் நாங்கள் தங்கியிருக்கும் அடுக்கு மாடிகளில் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் பெற்றோர் இங்கே சில மாதங்கள் இருந்துவிட்டு கோவைக்குச் சென்றார்கள். என் மனைவி அந்த அம்மாவிடம் தன் பெற்றோரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, குசலம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாள். நேற்று ஊருக்குப் பேசும்போது சொன்னார்கள், 'மாமி உங்களையெல்லாம் பார்த்ததைப் பற்றி சொன்னாங்க' என்று. என் மனைவி சொன்னாள் 'மாமியா, அவங்க மாமியெல்லாம் இல்லை' என்று. 'அவங்களேதான் அப்படிச் சொன்னாங்க'-இது என் மாமியார். நான் சொன்னேன், 'இருக்கும், உனக்குத் தெரிஞ்சிருக்காது' என்று.
ஏனென்றால், கோவை போன்ற இடங்களில் பிராமணரே இந்த 'குமுதம்,கல்கி,விகடன், டிவிசிரியலில்' ஆக்கிரமிக்கும் ஐயர் பாஷை பேசுவதில்லை என்பதுதான் உண்மை. அக்ரஹாரத்துத் தமிழுக்கு அர்த்தம் தேடி பிரசன்னா சொன்னமாதிரி தெருவில் போய் கேட்டால் அங்கெல்லாம் ஒருத்தருக்கும் தெரியாது. அதெல்லாம் சென்னையில் இருக்கலாம். வேறு எங்கெல்லாம் இருக்கலாம் என்று தெரியாது, ஆனால், என்னுடன் பன்னிரண்டு ஆண்டுக் காலம் புரண்டு விளையாடிய என் பள்ளித் தோழன் ராமனுஜன் (பிராமணன் என்றால் என்ன என்றே அன்று எனக்குத் தெரியாது) குடும்பமும் அச்சு அசலாகக் கொங்குத் தமிழ்தான் பேசினர்.
காலம் அக்ரஹாரத்துத் தமிழுக்கு அளித்த கொடை அதற்குக் கிடைத்த அங்கீகாரம். மற்ற சமூகத்தினரை விடவும் அவர்கள் இலக்கியத்திற்கு அளித்த கொடை அதிகம். தமிழகத்தின் அனைத்து மக்களும் அதை ஏற்றுக் கொண்ட மாதிரி, மற்ற வட்டார மக்கள் வளர்ச்சி பெற்று தங்கள் வழக்கில் இலக்கியம் படைக்கும் போதும் அதை ஏற்றுக் கொள்வதுதான் முறை. கடினம் இருக்கும்தான். அதற்காக குறையாகக் கொள்ளாமல் கிண்டல் செய்யாமல் முயற்சித்து அறிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது.
ஒருவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சுட்டும்போது, இயலாமையை, விழைவை வெளிப்படுத்தும் விதமாய் அந்த விளக்கம் இருந்தால் யாருக்கும் மனவருத்தம் இராது, மாறாக ஏதோ ஒரு தரநிர்ணயம் உள்ளது போலவும், அதில் இருந்து வழுவுவதால் கடினமாயுள்ளது போலவும் இருந்தால் வீண் மனவருத்தம் தான். இதை உணர்ந்து, புரியாதனவற்றை தெளிவாக்கக் கேட்டு, மனங்களை இணைக்கும் பாலம் இலக்கியம் என்பதை அனைவரும் நிலை நிறுத்துவோம்.
From Ramanitharan:
//yet to be edited//
அன்பின் பிரசன்னா,
"அக்ரஹாரத்துத்தமிழ் புரியவில்லை என்றால், தெருவிலே போகின்றவரைக் கேட்கலாம்; இலங்கைத்தமிழ் புரியவில்லை என்றால், இணையத்திலேதான் கேட்கவேண்டும்" என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. அதே நேரத்திலே, ஓர் இலங்கை வாசகரும் அதேபோலவே அக்ரஹாரத்து வழக்குக் குறித்து எதிர்பார்ப்பார் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் மற்றப்புறத்திலே இருக்கவேண்டும். நிற்க எனது கருத்து பரிமேலழகரின் கீழ்க்கண்ட மரத்தடி உள்ளிடுகை மேலானது:http://groups.yahoo.com/group/Maraththadi/message/6674 அதனாலேயே, அரும்பொருட்சொற்கள் குறித்துப் பேசவேண்டி வந்தது.
ஒருவரின் எதை வாசிப்பது என்பது குறித்த நாட்டம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச்சார்ந்தது. `இந்தப்பிரதேசத்துப்படைப்பினை வாசித்துத்தான் ஆகவேண்டும், கருத்துச் சொல்லித்தான் ஆகவேண்டும்' என்று தன் விருப்பினை ஒருவர் மற்றவர்களிலே திணிக்க முடியாது; ஆனால், பரந்துபட்ட வாசகர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற பலரிடம் தமிழிலே இலங்கை/மலேசிய எழுத்துக்களையும் வாசிக்கின்ற தன்மையை எதிர்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அப்படியில்லாத நேரத்திலே, அதன்பின்னான ஏமாற்றம் காரணமாக வருத்தமுண்டு; ஆனால், அதற்கு வாசிக்காதவர்களைக் குற்றம் சொல்லமுடியாது. அதேநேரத்திலே, இலங்கையோடு மொழி, எழுத்துப்பிணைப்புத் தேய்ந்துபோன, தமிழக வாசகனையும் உள்ளடக்கவேண்டுமென்ற திட்டத்துடனேயே எழுதும் இரண்டு இலங்கை எழுத்தாளர்கள் / கவிஞர்களை புரிகின்ற இலங்கை எழுத்தாளர்கள் / கவிஞர்கள் என்ற அடையாளங்களுடன் நிறுத்த முயல்வது பொய்த்தன்மை. பல இலங்கை வாசகர்கள் என்னோடு முரண்பட்டாலுங்கூட, அ.
முத்துலிங்கம், செ. யோகநாதன், உ. சேரன், வ. ஐ. ச. ஜெயபாலன் குறித்து என் கருத்து இதுவே. (ஜெயபாலன் தன்னைத் தாக்குவதே என் தொழிலாகிவிட்டதென்று ஒரு முறை பதிவுகள் தளத்திலே வேறு வருத்தப்பட்டிருந்தார்). முத்துலிங்கம் அறுபதுகளிலே எழுதிய கதைகளும் இலங்கைக்கு அப்பாலே வாழ்ந்த நெடுங்காலத்திலே அவர் உலகத்தமிழ், திண்ணை போன்றவற்றிலே எழுதும் கதைகளும் பொருளிலே மட்டுமல்ல, நடையிலேயுங்கூட இலங்கை வாசகர்களைத் திருப்தி செய்வதற்காக மட்டும் எழுதப்படுவதில்லை. அதற்கப்பாலும் பரந்துபட்ட வாசி
ப்புலகத்துக்காக எழுதப்படுவன (ஆப்கானிஸ்தான் ஆடு, சோமாலியப்பெண், பத்மினி ஏன் சிவாஜியினைக் கல்யாணம் செய்துகொள்வதில்லை என்று உலகம் தழுவிய பொருளுக்குப் பேச்சு வழக்கு ஈழத்துவழக்காக இருக்கத் தேவையில்லையே); இது தவறென்று கூறவில்லை; அவர் அருமையான எழுத்தாளர் என்பதை மறுப்பதும் இக்கருத்தின் நோக்கில்லை; ஆனால், அவருடைய நடையைப் புரிந்துகொள்ளும் ஈழத்துநடையாகக் கொள்வது தவறென்பதைச் சுட்டவே இதைப் பயன்படுத்துகிறேன். காஞ்சனா தாமோதரன், கோகுலக்கண்ணன் போன்ற தமிழகத்தினைப் பிறப்பிடமாகக்
கொண்டு இன்று புலம்பெயர் எழுத்தாளர்களானவர்களின் வகையிலேயே இவரையும் சேர்க்கமுடியுமென்பது என் கருத்து. கருணாகரமூர்த்தியின் எழுத்துகளிலேகூட ஆங்காங்கே இலங்கையிலே பயன்படாச் சொற்பயன்பாடுகளுண்டு என்பதொரு பக்கமிருக்கட்டும். ஆனால், கருணாகரமூர்த்தியின் கதைப்பின்புலம் இலங்கைத்தமிழர்களைச்சுற்றியே நிகழ்வது. அதனாலேயே அவருடைய கதைப்பாத்திரங்களின் பேச்சு வழக்கு முத்துலிங்கத்தினதிலும்விடச் சிக்கலாக இருக்க நேர்கின்றது. [உஷா அம்மா என் சென்ற உள்ளிடுகையைத் தவறாக எண்ணக்கூடாது; உங்களை நோக்கியேதும் கிண்டல், கோபம் காட்டவில்லை. ஆனால், முத்துலிங்கம் இலகுவிலே புரியப்படக் காரணத்தினையே சுட்டினேன்] மறுபுறம், தமிழ்த்திரைப்படங்களும் தமிழ்ச்சஞ்சிகைகளும் வெகுகாலம்வரை (புதுமைப்பித்தன், அகிலன் தவிர்த்தால்), முழுக்க எழுத்து நடையி
லும், மீதிக்கு மட்ராஸ் பாஷையாகவும் அக்ரஹாரத்துப்பாஷையாகவுமே இருந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். மெட்ராஸ் நாடகசபாக்களின் நாடகங்கள் (மெரினா, சேகர், ஒய்.ஜி.பி, காத்தாடி ராமமூர்த்தி, கிரேஸி மோகன், சுஜாதா/பூர்ணம் விசுவநாதன் , சோ எவருமே) தொடக்கம் நெடுங்கதைகள், சொல்லப்பட்ட சிறுகதைகள் எல்லாமே (கருணாநிதியின் தோழர் சா.விஸ்வநாதன்கூட, வாஷிங்டனில் திருமணம், டோக்கியோவில் தேர் என்றுதான் எழுதினார்) இந்த வகைக்குள்ளேதான் இருந்தன. (இந்திரா பார்த்தசாரதியின் டெல்கி ஆங்கிலத்தமிழ்; பாலச்சந்தர் படத்திலே
சுந்தரராஜன் தனக்குத்தானே மொழிபெயர்ப்பாளர் வேலை பார்க்கவென்றே, உலகம் சுற்றும் வாலிபன் வேங்கட சுப்பிரமணியன் மாயா ஓவியத்தோடு எழுதிய ஆங்கிலம்-கம்-தமிழ் நியூவேவ் கதைகள் என்பதுகூட, இந்த படித்த அக்ரஹாரத்தின் இன்னொரு கிளையே) ஆக மிஞ்சி மிஞ்சி, எப்போதாவதிருந்துவிட்டு, கொங்கு சிறப்பிதழ், நாட்டுக்கோட்டைச்சிறப்பிதழ் என்று வந்தால், அரும்பதங்களூக்குத் "தமிழ்" (தமிழென்றால், அனு-அக்கா-ஆண்டியை சரளமாக வாசிக்கின்றார்கள் சிரமப்படாத தமிழ்)ஈடு கொடுத்திருப்பார்கள். அப்போதெல்லாம், இலங்கை வாசகர்கள் அரும்பதவுரை கேட்டு, ஐராசுந்தரேசனுக்கும் ராகிரங்கராஜனுக்கும் பின்னாலே, சாவியும் கருணாநிதிக்குங்குமமும் மணியனின் திசைகளும் வளர்த்த இளந்தலைமுறைத்தமிழ்ப்பத்திரிகையாசிரியர்களுக்கும் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கவில்லை
//(**பிரகாஷ் சொல்லியும்** நகுலேஸ்வரதாஸை நீங்கள் எனக்கு அனுப்பாவிட்டாலும் அது எனக்கு வந்து விட்டது) – பிரசன்னா// - இ·தென்னவெனப் புரியவில்லை; பிரகாஷ் என்னிடம் இதுபற்றி எதையும் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எந்த அஞ்சல் முகவரிக்கு எழுதினார் என்று தெரிந்தாலாவது பதில் சொல்ல வசதியாக இருக்கும். குறிப்பாக இந்தக்கதை பற்றி அவர் என்னிடம் எழுதிக்கேட்டிருந்தால், அதை உங்களுக்கு அனுப்பாமலிருக்க என்ன காரணமும் என்னிடமில்லையே ஆக, மரத்தடியிலே ஏதோ ஓர் அஞ்சலிலே, "கண்ணில் தெரியுது
வானம்' தொகுப்பிலே வந்த இந்தக்கதையை மீளப்போய் வாசி" என்று தன் நண்பர் சொன்னதாகக் கட்டுரைச்சுவைக்காகக் றிப்பிட்டிருந்தார். 'கண்ணில் தெரியுது வானம்' நூலிலே இது வரவில்லையே என்று மட்டுமே நினைத்துக்கொண்டேன். மரத்தடியில் பிறகோர் அஞ்சலிலே இந்தக்கதை பற்றி நீங்கள் அவரிடம் கேட்டிருந்தீர்கள். பிறகு, அது தொடர்பான எந்த அஞ்சலையும் நான் மரத்தடியிலே
காணவில்லை. அப்படியிருக்க, "நீங்கள் எனக்கு அனுப்பாவிட்டாலும் அது எனக்குக் கிடைத்து விட்டது" என்றால், என்ன பதில் சொல்லவெனத் தெரியவில்லை.
எனது நடை சோர்வைத் தருவதென்பதையும் முற்றுப்புள்ளியின்று சொற்களைச் தொடர்வண்டியாக இழுத்துப்போவதென்பதையும் உணர்ந்திருக்கின்றேன். அதனால், இலங்கை எழுத்துக்கு இருபத்தேழு கதைகள் அரைகுறையாக எழுதிய என்னை விளக்கம் சொல்ல உதாரணமாக நீங்கள் காட்டுவது பொருத்தமாக இருக்காதென்பதை முதலிலேயே சொல்லிவிடுகின்றேன். எனக்குத் தெரிந்தளவுக்கு இயன்றவரை தமிழி
லே புணர்ச்சிவிதிகளைப் பயன்படுத்த வேண்டிய இடங்களிலே பயன்படுத்துவது நீங்கள் குறிப்பிட்டது போலத்தான் என் வழக்கம். (மேலேயுள்ள பந்தியிலி ருக்கும் "இ·தென்னவெனப்" என்பதை "இ·து என்ன எனப்" என்று எழுவது என் வழக்கமில்லை; கூடவே, `வந்துகொண்டிருக்கிறேன்' என்பதை `வந்து கொண்டு இருக்கிறேன்' என்று எழுதுவதும் நானறிந்த வரையிலே தமிழுற்குப் பொருந்தாது.) அதேபோலவே, `தோல் பை' என்பதைத் `தோற்பை' என்று எழுதுவதுதான் மிகவும் பொருந்துமென்று நினைக்கிறேன்; `தோள் பை' என்று எழுத நேர்ந்தாலும் `தோட்பை' என்றுதான் எழுதியிருப்பேன். தமிழின் புணர்ச்சிவிதி தெரி யாமல், இலங்கைத்தமிழிலே தோற்பை என்றேதாவது இருக்குமென்று ஒரு வாசகன் நி
னைப்பானென்று எண்ணிக்கொள்ள நேரின், எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் நான் நினைக்க வேண்டியிருக்குமே? எழுத்தாளர்களின் நோக்குகள் வேறு வேறாக இருக்கின்றதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களென்று நினைக்கிறேன். ஆனந்தவிகடன், திண்ணை, குமுதம், காலச்சுவடு என்று அனுப்பப்போகும் சஞ்சிகைகளின் வாசகர்களை எண்ணிக்கொண்டு நான் – ஆகி வராத அரிச்சுவட்டு எழுத்தாளனென்றாலுங்கூட-
எழுதுவதில்லை. தோற்பையிலே பேசுகின்ற எழுத்தாளனே என் இலக்கு. ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் என்பவை என் இலக்கல்ல; பெரும்பாலான இலங்கை /இலங்கையிலே பிறந்து புலம்பெயர்ந்த தொழில்முறையற்ற எப்போதாவதிருந்து எழுத்தாளர்களின் இலக்குமல்ல. ஆனாலும், என் வாசகர்களுக்கு `கபரக்கொய்யா' என்றால், உடும்பினை ஒத்த கொஞ்சம் பெரிய ஊர்வன என்று கதையெழுதி முடிந்த பின்னால், அடிக்குறிப்பெழுதச் சம்மதமாக இருக்கிறேன்; ஆக்காண்டி என்றால், ஆட்காட்டி என்று சொல்லி, கூடவே, செங்கையாழியனின் கதையை சுராங்கனி ஏ. ஈ.மனோகரன் கதாநாயகனாக நடித்துக்காட்டிய வாடைக்காற்று படத்திலே, ஆக்காட்டி என்று மீன்பிடிகாலத்து மட்டும் அவ்வூருக்கு வந்துபோகும் மீனவர்களின் குறியீடாகச் சுட்டியதையும் சொல்லி விளங்கப்படுத்தத் தயாராக இருக்கிறேன். சண்முகம் சிவலிங்கத்தின் வாழ்க்கைக்குறிப்பினைக் கேட்டால், கலிபோர்னியாவிலிருக்கும் அவரது மகன் என் இலங்கைப்பல்கலைக்கழக நண்பர் என்றும் பின்லாந்திலே வாழும் `உதயணன்' இராமலிங்கம் சிவலிங்கம் எழுபதுகளிலே எழுதிய வீரகேசரிப்பதிப்பக நூற்பட்டியலிருந்து ஐயோவாவிலே பேராசிரியராகவிருக்கும் அவருடைய ஒரு
மகன் எனக்கு இரண்டாண்டுகள் முன்னாலே இலங்கைப்பல்கலைக்கழகத்திலே படித்த மாணவர் என்று வெட்கத்தைவிட்டு சுயபுராணத்திலிருந்து விபரம் ஈடுபாடான வாசகனுக்குக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் (ஜோதிகா என் பாதிக்குத் தோழிக்கு என்பது தீவிர தமிழிலக்கிய வாசகனுக்கு அவசியமான இலகுவிலே புரியக்கூடிய தகவலென்றான பின்னாலே, எழுத்தாளர் புத்திரர் பரிச்சயமெனக்குண்டென்று
ஆவணப்படுத்தப்படுவது தமிழ் வளர்ச்சிக்கு மிக்க அவசியமாகும்). ஆனால், தோற்பை என்பதை தோல் பை என்று வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியாதவன், என் கதைகளை வாசிக்க மட்டுமல்ல, எந்தத்தமிழ் எழுத்தாளனின் கதையை வாசிக்கவும் அருகதையற்றவன் என்பதையும் அடிப்படை மொழியறிவினையேனும் பெற்றுக்கொண்டு வாசிக்கப் புகவேண்டும் என்பது என் கருத்து. லாசராவின் பதநீர் தெளித்த வசனவோட்டத்தினை இலகுவாக ஏற்றுக்கொண்டு இலயித்துச் சுழித்து மயங்கி முயங்குகின்றவர்களுக்கு தோற்பை என்ற சொல் பல்குத்தி
த்துரும்பு. அப்படிப்பட்ட வாசகர்கள் இலங்கைப்படைப்புகளைப் புரியாமல் ஒதுக்குகின்றார்களென்று நினைக்கவில்லை. இந்தக்கிழமைதான் பாமாவின் கருக்கு, சங்கதி இரண்டினையும் வாசித்து முடித்தேன். அங்கங்கு ஓரிரு சொற்பயன்பாடு நிதானித்து வாசிக்கச்சொன்னது; மிகுதிப்படி, வாசிக்க ஏதும் சிரமமிருக்கவில்லை. அக்கதைப்பின்புலத்திருந்து வராமல், அதை சுவைத்து வாசிக்கமுடிகின்ற எந்த வாசகனுக்கும் இலங்கைத்தமிழ் எழுத்து ஏதும் சிரமம் தராதென்று நினைக்கிறேன். தமிழ்ச்சிறுகதைகள், புதினங்களிலே தமிழகப்படைப்பாளிகளடைந்த உயரத்தை எட்ட இலங்கை
எழுத்தாளர்கள் இன்னும் பாடுபடவேண்டும் என்பதை முழுமையாக ஒத்துக்கொள்ளூம் நேரத்திலே, மீதித்தமிழ்ப்படைப்பு,காட்சித்துறைகளிலே ஈழப்படைப்புகள் குருவி தலைக்கு மேலான பனங்காயைச் சுமந்து காட்டியிருக்கின்றன.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்குமிடையே தூரமெவ்வளவு? பிரித்தானியர் போகுவரைக்கும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் போக வர அனுமதிச்சீட்டுக்கூடத் தேவையிருக்கவில்லை. செட்டிநாட்டாரும் வல்வெட்டித்துறையாரும் பர்மாவரை கப்பலிலே அரிசி வியாபாரம் செய்கின்றார்கள். இராமேஸ்வரம் கோவிலுக்கு நேர்த்தியும் நிதியும் கொடுத்த யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்திகள்காலத்திலிருந்து
(யாழ்ப்பாடி, ஈழத்துப்பூதன் நிறுவமுடியாத ஐதீகங்களை, சம்பந்தன், சுந்தரன் தேவாரங்கள், அருணகிரி திருப்புகழை விட்டுவிட்டாலுங்கூட) பார்த்தாலுங்கூட, இலக்கியப்பரிமாற்றம் நிகழ்கின்றது; போதாக்குறைக்கு பிரித்தானியர் காலத்திலே கூட, சின்னமேளங்கள், நாடகக்குழுக்கள் வந்துபோகின்றன. அண்மையிலே மதுரைத்திட்டக்குழுவிலே / முன்னர் மையமன்றிலே சுட்டிக்காட்டியதுபோல, ஈழத்து இலக்கி
யச்சான்றுகள் உறுதியாக 13 ம் நூற்றாண்டிலிருந்து இருக்கின்றன. உட்புகுந்த இலக்கியவடிவமான புதினங்கூட பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தமிழின் முதலாவது புதினத்தினை எழுதியது யாரென்று கேட்டால், அதிலும் இலங்கைப்படைப்பு தனக்கென்றும் இடம் கேட்கவும் ஒரு வழியுண்டு. பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடியெடுத்துப் பதிப்பித்தவர்களிலே உ.வே. சாமிநாதையரை முன்னிறுத்துக்கின்றவர்கள், சி. வை. தாமோதரம்பிள்ளையை இலகுவிலே தள்ளிவிட்டுப்போகமுடியாது. அண்ணாமலைப்பல்கலைக்கழத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக
இருந்தவர், யாழைப் பற்றி ராய்ச்சி செய்து யாழ்நூலை எழுதிய விபுலானந்தர் எனப்பட்ட காரைதீவு மயில்வாகனர். தமிழகராதியினைத் தொகுக்க முற்பட்டவர்களிலே கதிரவேற்பிள்ளைக்கும் ஓரிடமிருக்கின்றது. இலங்கையர்கோன், சம்பந்தன் கியோர் எழுதிய ஆரம்பகாலச்சிறுகதைகள் ஐம்பதாம் ஆண்டுகளும் முன்னையதெனலாம். பின்னால், வ. அ. இராசரத்தினம் போன்றோர் வருகின்றார்கள். ஆங்கிலத்திலே எழுதிய தமிழர்களை நினைவுறுத்த ஆர்.கே நாராயணினை முன்னிறுத்துகின்றவர்களிலே எத்தனை பேர் அச்சுவேலி தம்பிமுத்தினையும் (இத்தனைக்கும் இறக்கும்போது, இந்தியக்கலாச்சாரத்தை முன்னிறுத்தி நின்றவரானார்), அழகுசுப்பிரமணியத்தினையும் நினைவு கூர்கின்றார்கள்? சிதம்பர நடராஜரின் நடனத்தினைப் பற்றி எழுதி வெளியிட ஆனந்தக்குமாரசாமிதான் தேவைப்பட்டிருக்கின்றது? தமிழிலே மார்க்ஸிய விமர்சனத்தினை முன்னிறுத்த கைலாசபதி, சிவத்தம்பியென்றால், மற்றப்புறம் அதற்கெதிரான மெய்யியற்றினாய்விலே நின்றவர் மு. தளையசிங்கம். இரண்டுக்கும் சாராது தனி மீனாக
தூண்டில் வெட்டிக்கொண்டு இந்தியாவுக்கோடி செல்லப்பாசீடனாகி, வெங்கட் சாமிநாதனோடு சண்டைபோட்டுக்கொண்டேயிருந்து செத்தவர், தருமு அரூப் சிவராமு – பிரமிள். இன்றைக்கு இந்த மூன்று வகையினருமே ஏதோவொரு விதத்திலே தமிழிலே வந்த விமர்சனக்கலை வளர உதவியிருக்கின்றார்கள் என்பதைத் தமிழகத்தொழில்முறை விமர்சகர் எவரும் தமிழ்நாட்டிலும் மறுக்கமுடியாதென நினைக்கிறேன். நான்
சாகமாட்டேன் என்று வங்கக்கதை, லூசூனின் கூனற்பிறை என சீனக்கதை தொடங்கி கணிசமான மொழிபெயர்ப்பும் இலங்கையிலே நிகழ்ந்தன. கூத்து, நவீனநாடகங்கள் என்பவற்றினை குருசீடப்பரம்பரையாகவும் பல்கலைக்கழகத்திலேயும் (வித்தியானந்தன் - மௌனகுரு, குழந்தை சண்முகலிங்கம், தாசீயஸ், இந்திரா பார்த்தசாரதியின் கதைகளை எழுபதுகளிலேயே நாடங்களாகப் போட்ட தற்சமயம் இலண்டனிலிருக்கும் அவைக்காற்று நாடகக்குழுவினர், மண்சுமந்த மேனியர் போன்ற போராட்ட வீதிநாடகங்களை ஏற்றியவர்கள்) உருவாக்கியவர்கள். ஐம்பதுகளிலே தமிழ்மொழிவழி
க்கல்விக்காக பொதுவாக அனைத்து அறிவியற்றுறைகளிலும் அருஞ்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். ஓவியத்துறையிலே, மார்க்கு போன்ற ஓவியத்துக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவரும் அவரிடம் கற்றுப்பரந்திருக்கும் சமகால ஓவியர்களும் சநாதனன் போன்ற புதிய வருகைகளும் தமக்கென்ற பாணியைக் கொண்டவர்கள். கவிதையைப் பற்றி நான் சொல்லவேண்டாம். இலங்கைக்கவிதையின் தனித்துவம் இன்றைக்கு எந்த நிலையிலேயிருந்தாலுங்கூட, சென்ற நூற்றாண்டின் கடைசிக்கால்நூற்றாண்டு எமதே. இசை என்று உதாரணம் காட்டிப் பேச சம்பந்தப்பட்ட இசையாட்கள் தெரிந்த அளவுக்கு எனக்கு அதன் நுணுக்கம் தெரியாது. விட்டுவிடுகிறேன்.இப்படியாக இப்படியாக, அதன் சின்னப்பரப்பிலேயிருந்தும் தமிழின் வளர்ச்சிக்குத் தன் வீக்கத்துக்குமேலாகவும் இலங்கை படைப்பாற்றியிருக்கின்றது. ஏழு நூற்றாண்டுகளாக
தொடர்ந்து பக்கத்திலே இருபது மைல் தொலைவிலியங்கும் ஒரே மொழியின் வட்டாரவழக்கினைப் புரியவில்லை என்று சொல்லிக்கொண்டு, வட்டார
வழக்குக்கு அகராதி கேட்கும்போது, இது கேட்கின்றவர்களின் அறியாமையைக்கூடக்காட்டவில்லை; அலட்சியத்தினை மட்டுமே காட்டுகின்றதென்று நினைக்கிறேன். கோயம்புத்தூர்க்காரனுக்கு நாகர்கோவிலிலே பேசும் தமிழ்புரிகின்றபோதிலே, மட்டக்கிளப்புத்தமிழ், யாழ்ப்பாணத்தமிழ், மலையகத்தமிழ் என்ன புரியாமற்போகின்றனவென்று கேட்கிறேன். வலைப்பதிவுகளிலே, இணையக்குழுக்களிலே கோவைத்தமிழ், குப்பத்தமிழ், ஆங்கிலத்தமிழ், சினிமாத்தமிழ் என்று வாசிக்கும்போது, அப்டியே பஸ்குன்னு உள்ளாற மில்லி ஊத்திக்காமலே ஜோரா மன்ஸிலே ஒட்டிகீதே பிரதர்; அத்து இன்னாங்கிறே? தமிளா? துளுவா? சுண்டலத்தெலுகா? மன்ஸ¤க்கு புட்சிச்சின்னா அல்லாமே புல்லாப் பிரியும் மாமே.
குறைந்த பட்சம், செம்மங்குடி இறந்தபோது வருந்தியவர்கள், அதே காலகட்டத்திலெ இலங்கையிலே இறந்த சங்கீதக்காரர் வீரமணி ஐயரை அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை; இணையத்திலே ஒருவர் இவர் குறித்து எழுதியதாகவும் தெரியவில்லை. வாரா பற்றிப் பேசுகின்றவர்கள், இலங்கையிலே அவர் வீரகேசரியிலே இருந்ததைப்பற்றிக் குறித்துக் கண்டது குறைவு. மகாராஜபுரம் சந்தானம், இந்தியா வந்து பி
ரபலமாகமுன்னால், யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி முதல்வராக நெடுங்காலம் இருந்தது குறித்து ஏதேனும் தமிழ்நாட்டுச்சஞ்சிகை இலங்கையிலே வந்து செவ்வி கண்டதாகவும் அறியேன். இலங்கை வாலிபன் இலங்கைப்பெண்ணைத் தமிழ்நாட்டிலே கொலை செய்தது குறித்து இலங்கையிலெ எவிபரம் தேடி எழுதும் ஜூனியர் விகடனுக்கு இது சுண்டக்காய்ச்சங்கதி. செய்யாமைக்கு, இதிலே அக்கறையின்மையே காரணம்.
என்னைப் பொறுத்தமட்டிலே இன்றைக்குப் பெரும்பத்திரிகைகளிலே, அவ்வப்போது அறைகுறையாகத் தமிழ்ப்படங்களிலே யாழ்மணக்கின்றதற்குக்
காரணம், புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார இருப்பு மட்டுமே. இல்லாட்டி, குமுதம், தொடக்கம் கோடம்பாக்கம் வரைக்கும் ஒரு தம்பியும் சீ நாயே எண்டு கூட எங்களைப் பாக்க மாட்டாங்கள். கலைமகள் கிவாஜ தொடக்கம் பகீரதன் வரைக்கும் குறைமட்டுமே கண்டுபோனாங்கள். க, அண்டைக்கும் இண்டைக்கும் அக்கறையோடகவனிச்சவங்கள், குறிச்ச சில சிறுபத்திரிகைக்காரர்மட்டுந்தான். இண்டைக்கு எஸ்.பொவினைப் பேட்டி காணுற மாலனும் ஐரோப்பிய கனடிய விசயம் செய்யும் ரவி தமிழ்வாணனும் (முத்துலிங்கத்தின் புத்தகங்களையெல்லாம் இப்ப இவர்தான் பதிப்பிக்கி
ன்றாராம்) பத்து வருசத்துக்கு முன்னாலை இலங்கை இலக்கியம் பற்றி என்ன குறிப்பெழுதியிருக்கிறமெண்டு என்று தெரிஞ்சால், எனக்கும் இலங்கைத்தமிழர்களின் தமிழுக்கான பங்கு அங்கீகரிக்கப்பட்டதென்று (தமிழரின் தமிழ்ப்பங்கினை யாரும் அங்கீகரிக்கப்படவேண்டியதில்லை என்பதொரு பக்கமிருக்கட்டும்; ஆனால், புரியாமை என்பது அக்கறையின்மை என்ற அலங்கோலத்தின்மேலே போர்த்துக்கொண்ட
வண்ணத்துகிலாக இல்லை என்பதைக் காட்டவேனும்) மிகச் சந்தோஷமாயிருக்கும்.
ஒருவரின் எதை வாசிப்பது என்பது குறித்த நாட்டம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. இலங்கைப்படைப்பினை வாசித்துத்தான் கவேண்டும், கருத்துச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று தன் விருப்பினை ஒருவர் மற்றவர்களிலே திணிக்கவும் முடியாது; மறுதலையாக நடக்கவும் முடியாது. ஆனால், பரந்துபட்ட வாசகர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற பலரிடம் தமிழிலே இலங்கை/மலேசிய எழுத்துக்களையும் வாசி
க்கின்ற தன்மையை எதிர்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அப்படியில்லாத நேரத்திலே, அதன்பின்னான ஏமாற்றம் காரணமாக வருத்தமுண்டு;
மீதிப்படி, "அக்ரஹாரத்துத்தமிழ் புரியவில்லை என்றால், தெருவிலே போகின்றவரைக் கேட்கலாம்; இலங்கைத்தமிழ் புரியவில்லை என்றால், இணையத்திலேதான் கேட்கவேண்டும்" என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. அதே நேரத்திலே, ஓர் இலங்கை வாசகரும் அதேபோலவே அக்ரஹாரத்துவழக்குக் குறித்து எதிர்பார்ப்பார் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் மற்றப்புறத்திலே இருக்கவேண்டும்.
கவனிக்கின்றோமோ இல்லையோ, மெய்யாக நிற்பதென்னவென்றால், தமிழ்ப்படைப்புலகின் ஆட்சி எங்கும் கற்றை கொள்ளச் சமமெனப் பரந்தது; தனியே ஒரு மத்தியை நோக்கிக் கதிர் குவிந்ததல்ல.
From Kannan:
அன்பு இரமணீதரன்:
நீங்கள் விஸ்தாரமாகப் பதில் தருவீர்களென்று தெரியும். கொஞ்சம் உசுப்பி விடற வேலைதான்:-) வேண்டுமானால் இதை நீங்கள் "ஐயங்கார் குசும்பு" என்று சொல்லிக் கொள்ளுங்கள். செட்டிமார்களுக்கும் ஐயங்கார்களுக்கும் நீண்ட காலத் தொடர்புண்டு. ஒருவருக்கொருவர் பரஸ்பரப்புரிதலுடன் செயல்படுவதால் குமுதம் நிறுவனத்தில் அவர்கள் கை ஓங்கியிருக்கலாம். ஆனால் எதையும் பொதுமைப்படுத்தவியலாது. சுஜாதாவால் ரொம்ப காலம் தாக்குபிடிக்கமுடியவில்லை. இதே போல் தேவர்களுக்கும் ஐயங்கார்களுக்குமிடையில் நல்ல புரிதலுண்டு. சேதுபதி சமஸ்தானத்தின் செல்ல புத்திரரான மு.இராகவய்யங்கார் ஈழ விடுதலை வீரர் பிரபாகரனுக்கு முன்னமே தமிழ்த் தேசியம் பற்றிப் பேசியிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் என்னிடம் பாரிஸில் சொன்னார். எதற்குச் சொல்கிறேன் என்றால் ஈழத்தமிழர்களிடம் ஒரு மூடமான பிராமண எதிர்ப்பு உள்ளூர வளர்ந்து வருகிறது. எல்லோரும் 'இந்து' ராம் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ விடுதலையை முன் வைத்து பல தமிழக இசங்கள் 'உப்பு மூட்டை' சவாரி செய்து கொண்டு இருக்கின்றன. இதை ஈழத்தமிழர்கள் முழுவதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டைப் போலவே இவர்களும் ஈராக்கில் தீப்பிடித்தால், பிடிடா பிராமணன் குடுமியை! என்று பேசி வருகிறார்கள். உங்களிடம் இந்தப் பருப்பு வேகாது என்று தெரியும்!
பிராமண பாஷைக்கு, விரும்பியோ, விரும்பாமலோ ஒரு இலக்கிய சரித்திரமுண்டு. ஆனால் பிற தமிழக வட்டார வழக்கு போல் இதையும் புரிந்து கொள்ளமுடியும். செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அளவில் இலங்கை வட்டார வழக்குகளைப் புரிந்து கொள்ளுவதில் ரொம்ப பிகு பண்ணக்கூடாது (கோமலின் 'தண்ணீர், தண்ணீர்' படமாக வந்த காலத்தில் பாதிக்கதை எனக்குப் புரியவே இல்லை!)
யாழ் மக்கள் வலிந்து தமிழில் இல்லாத da, ta வேறுபாட்டை ஆங்கில உச்சரிப்பிற்காக "ட", "ர" என்று மாற்றுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லண்டனில் ஆறுமுக நாவலரின் ஒரு புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ளும் போது நண்பர், மருத்துவர் இந்திரகுமார் அவர்கள் "இந்தியா டுடே" என்று எழுதுவதைக் கடுமையாக விமர்சித்தார். காரணம் டுடே என்று எழுதினால் அது doday என்று உச்சரிக்கப்படுமாம்! யார் இவருக்கு அப்படிச் சொன்னது? தமிழில் da, ta விற்கு ஒலிக்குறிப்பு இல்லையென்றால், அது அவ்வளவுதான். வலிந்து இப்போது புகுத்த வேண்டிய அவசியமென்ன? ஏனோ இப்படி எழுதாவிட்டால் ஆங்கிலத்தின் புனிதம் கெட்டுவிடும் என்பது போன்ற காலனித்துவ அடிமைக் குணத்தை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை!
மற்றபடி சமிஸ்கிருதத்திற்கு செந்தரமாக்கப்பட்ட ஒலிக்குறிப்புத் திட்டம்தான் கிரந்தம் என்பது. கிரந்தம் ஓரம் கட்டப்படும் போது கிருஷ்ணன், கிருட்டிணன் ஆவது தமிழ் மண்ணில் சகஜம். இருந்தாலும் பாஷையை வலிந்து 'பாடை' என்று எழுதுவதை என்னாலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மொழி என்றே எழுதலாம் என்பதே என் யோசனை!
நா.கண்ணன்
Thursday, November 27, 2003
From Prasanna
அன்புள்ள இரமணீ,
இலங்கைத் தமிழ் ஒட்டுமொத்தமாகப் புரியவில்லை என்பதை நானும் ஏற்கவில்லை. ஆனால் படிக்கும்போது சில இடங்களில் சில வார்த்தைகள், அறுபதாண்டுகளாகப் புழங்கிவரும் அக்ரஹாரத்துப் பாஷைகளிலுள்ள சில வார்த்தைகள் புரியாது போவது போலவே, புரியாமல் போகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. இலங்கைத் தமிழ் ஒட்டுமொத்தமாகப் புரியவில்லை என்று சொல்பவ்ர்களை ஒதுக்கிவிட்டு, நிஜமாகவே சில பதங்கள், சில பிரயோகங்கள் புரியவில்லை என்று சொல்பவர்களைக் கொஞ்சம் கருத்தில் கொள்வது நலம். இலங்கைத் தமிழ் புரியவில்லை என்று சொல்லப்படும்போது, அதை அக்ரஹாரத்துத் தமிழுக்கு அகராதி கொடுக்கப்பட்டதா என்ற எதிர்க்கேள்வியில் சிறையிட முயல்வதில் கூட எனக்கு மாறுபாடு இருக்கிறது.
அக்ரஹாரத்துத் தமிழ் அறுபது வருடங்களாக பத்திரிகைகளிலும் கதைகளிலும் புழங்கிவருதால், இலங்கைத் தமிழ் புரியவில்லை என்று சொல்பவர்கள், அதையும் புரியவில்லை என்று சொல்லாதது ஏன் என எதிர்பார்ப்பது சரியாகாது என்பது என் எண்ணம். மேலும் அக்ராஹாரத்துத் தமிழ் புரியாமல் போனால், தெருவில் யாரையாவது விசாரித்தால் போதும். இலங்கைத் தமிழுக்கு அங்கனம் செய்யவியலாது.
இணையத்துக்குத்தான் வரவேண்டும். இணையத்தின் வழியாகத்தான் இலங்கைத் தமிழ் பெரும்பாலானவர்களுக்குப் பரீட்சயப்பட்டு வருகிறது. (குறைந்த பட்சம் எனக்கு) அப்படி முதன்முறையாகப் பரீட்சயம் நேரும்போது புரியவில்லை என்கிற வாதம் வருவது எதிர்பார்க்கக்கூடியதே. (ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடல்களில் வரிகளே காதில் கேட்கவில்லை எனச் சொல்லிவிட்டு மறுநாளே மனப்பாடமாகச் சொல்லித் திரிந்தவர்கள் நிறையப் பேர். நானும் ஒருவன் ;-) ) அப்படி வாதம் வருகிற போது, இலங்கைத் தமிழ் மட்டும் எப்படிப் புரியாமல் போனது என்கிற கேள்வியோடு (கேள்வி எழுப்புவதில்
தவறில்லை. நிஜமாகவே தவறில்லை) புரியாமல் போனதாகச் சொல்லப்படும் கட்டுரை/கதைகளில் உள்ள கடின, பிரத்யேக வட்டார வார்த்தைகளுக்குப் பதில் சொல்லுதல் கூடுதல் நல்லது. மிக அழகாக, ஆழமாக உள்ளந்தொட்ட கட்டுரைகளில் சில வார்த்தைகள் புரியாமல் போய், விஜயாலயனிடமும் மதியிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறான் இந்தப்"பெடியன்". ;-) உங்கள் கதைகளில் கூட (**பிரகாஷ் சொல்லியும்** நகுலேஸ்வரதாஸை நீங்கள் எனக்கு அனுப்பாவிட்டாலும் அது எனக்கு வந்துவிட்டது. பதிவுகளிலும் கிடைக்கிறது) சில இடங்களில், குறிப்பாக வட்டார வழக்கில்லாத சில இடங்களிலும் கூட, வார்த்தைகளைச் சேர்த்துச் சேர்த்து (புணர்ச்சி விதிகள் மேல் அப்படியரு நாட்டம் போலிருக்கிறது) எழுதிக்
கொஞ்சம் மிரட்டியிருக்கிறீர்கள். தோல்பையைத் தோற்பை என்னும்போது, இலங்கைத்தமிழில் தோற்பை என்றால் வேறு எதாவது இருந்துத் தொலைக்குமோ என்கிற எண்ணம் (அப்படிச் சேர்த்து எழுதுவது, எழுத்தாளரின் தனிப்பட்ட பாணி என்பதை உணர முடிகிறது) முதன்முறையாக இலங்கைத் தமிழை எதிர்கொள்கிறவர்களுக்கு நேர்வது இயல்பு என்பதை இலங்கைத் தமிழர்கள் மனதில் கொண்டு, கொஞ்சம் பொறுமை காத்து, எடுத்துச் சொல்லத்தான் வேண்டும் என்பது என் எண்ணம். கொஞ்சம் கருணை காட்டி, புரியவில்லை என்னும் ஆனந்தவிகட, கல்கி, குமுதத் தமிழர்களுக்குப் புரியவைப்பதும் கூட அந்த
எழுத்தாளரின் முன்னால் இருக்கும் கடமையுமாம்.
அன்புடன்
பிரசன்னா
இன்றைக்கு நவன் வலைப்பூவிற்கு விடுமுறை சொல்லிவிட்டார். ஆனால், இங்கே, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலங்கைத்தமிழ்பற்றி வந்த கருத்துகளுக்கு ரமணிதரன் அளித்திருக்கும் அழகான பதிலை எல்லோரும் படிக்கும்வண்ணம் இயங்கு எழுத்துருக் கொண்ட யூனிகோடில் தருகிறேன்.
- மதி
--------***-----------
ஓரிரு மாதங்களுக்கு முன்னால் மரத்தடியிலும் தொடர்ந்து தமிழ்புளக்ஸிலும் உஷாவின் குறிப்பிலும் பரிமேலழகர் குறிப்பிலும் இலங்கைத்தமிழ் பற்றிய கருத்துகள் பற்றிக்கண்டேன். இவர்கள் புரியாமலேதான் பேசுகின்றார்களா, கிண்டல் செய்கின்றீர்களா அல்லது நகைச்சுவையாகப் பேசுகின்றீர்களா என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை. என்றாலும், கொஞ்சம்:
ஒன்று, இலங்கைத்தமிழிலே எழுதுவதை வாசிப்பதற்கு அகராதியையும் உடன் கேட்கின்றவர்கள், போன எழுபதாண்டுகளாக, அக்ரஹாரத்துப்பாஷையையும் மட்ராஸ் பாஷையையும் மலேசிய, சிங்கப்பூர் இலங்கைத்தமிழர்களும் மற்றைய மாநிலத்தமிழர்களும் வாசிப்பதற்கு அருஞ்சொல்லகராதி கூடவே கல்கி, விகடன் கொடுத்ததா என்பதைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காதது ஏனென்று புரியவில்லை. இந்த கல்கி,
குமுதம், விகடன் காலகாலமாக வாசித்தவர்களுக்கு எண்பதுகளின் மத்திக்குப்பின்னாலே (தீவிரமாக, தொண்ணூறுகளின் பின்னாலே) கிராவின் தமிழும் பாமாவின் தமிழும் செட்டிநாட்டுத்தமிழும் (குமுதம் செட்டியார்களின் சஞ்சிகையாக இருந்தபோதுங்கூட, ஏ. எஸ். பி. அண்ணாமலையை விட்டால், அன்றுமுதல்
இன்றுவரை ஐயங்கார்களே அதன் ஆதிக்கம் மிக்க ஆசிரியர்கள் என்பதையும் காண்க) கன்யாகுமரி, திருநெல்வேலித்தமிழும் அகராதி கேட்காமலே புரிகின்ற எந்தத் தமிழனுக்கும் இலங்கைத்தமிழ் புரிகின்றதிலே அத்தனை சிரமமிருக்காதென்பது என் அபிப்பிராயம். ஜேர்மனியை நான் ஜேர்மனியென்றேதான் எழுதுகிறேன். வடவெழுத்தைத்தவிர்க்கும் ஈழத்தமிழர் செர்மனி என்றும் பழைய திருநெல்வேலி சைவசித்தாந்தக்கழகத்தி
ன் மொழிபெயர்ப்பிலே நாட்டம் கொண்ட ஈழச்செகப்பிரியர்கள் செருமனி என்றும் மொழி பெயர்க்கின்றனர். எல்லாவற்றிலும்விட மோசம், இப்போதைய இலங்கையிலே வாழும் (டொயிச்லாண்ட் சொல்லாத) இளந்தலைமுறை ஜேர்மன் என்றே மொழியையும் நாட்டினையும் குழப்பிக்கொள்கிறது. இதிலே, ஜேர்மனியை செர்மனி என்றெழுதினால், இலங்கைத்தமிழ் என்பது மிகவும் ஒற்றைத்தனமாகஇலங்கையரெல்லாரையும் ஒரே பனைவட்டுக்குள்ளே அடைக்கும் பார்வை.
இலங்கைத்தமிழ் என்பதுகூட தனித்தமிழ் இல்லை; யாழ்ப்பாணத்தமிழ், வன்னித்தமிழ், மட்டக்கிளப்புத்தமிழ், முஸ்லீங்களின் தமிழ், மலையகத்தமிழ் என்று வகைப்படும். யாழ்ப்பாணத்தமிழிலேயே வடமராட்சித்தமிழ், தென்மராட்சித்தமிழ், தீவுப்பகுதித்தமிழ், வலிகாமத்தமிழென்று உடைந்துபோகும்.
ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழின் வித்தியாசத்தைப் பார்க்கவேண்டுமானால்மட்டும், ஜெயபாலன் (தீவு & யாழ்ப்பாணம்), வில்வரத்தினம். மு. பொன்னம்பலம் (தீவு), தா. இராமலிங்கம் (தென்மராட்சி), நட்சத்திரன் செவ்விந்தியன் (வடமராட்சி), சேரன், உருத்திரமூர்த்தி (அளவெட்டி), யாழ்நகர்க்கரையோரப்பகுதித்தமிழுக்கு யேசுராசா தமிழைக் கவனியுங்கள். மட்டக்கிளப்புத்தமிழுக்கு நீலவாணன், கல்முனையிலேயே முஸ்லீம் தமிழர்களின் தமிழ்வித்தியாசங்களுக்கு சோலைக்கிளி, சண்முகம் சிவலிங்கம் இவர்களின் கவிதை. மலையகத்தமிழுக்கு சு. முரளிதரனின் கூடைக்குள் தேசம், தீவகத்து அடிமைகள் கவிதைகளை வாசியுங்கள். கொழும்புத்தமிழுக்கு குஜராத்தி மேமன் வழி வந்த மேமன்கவியின் தமிழ்க்கவிதைகளைக் காணுங்கள்; முஸ்லீம் தமிழ்கூட இலங்கையிலே, வட இலங்கை முஸ்லீம் தமிழ் (மன்சூர்), கிழக்குமாகாணமுஸ்லீம் தமிழ் (சோலைக்கிளி), கொழும்பு முஸ்லீம்தமிழ் (மேமன்கவி), மலைநாட்டு மாத்தளையிலே சைவராக இருந்து இஸ்லாமியரான அல் அஸ்மத், அவர் மகன் இப்னு அஸ்மத் ஆகியோரின் தமிழ், தென்னிலங்கையிலே திக்குவலை கமால் தமிழ் இப்படியாக மிகவும் வித்தியாசமான தமிழைக்காணலாம். தவிர, சிவசேகரம், நு·மான், சிவத்தம்பி இவர்களது தமிழ் "கற்றவர்களின் தமிழாக" எழுத்து நடையிலேயே பெரிதுமிருக்கும் தமிழ் (ஆங்கிலத்திலே பண்ணித்தமிழ் பேசுகின்றவர்களை விட்டுவிடுவோம்; பரிமேலழகர்களுக்குப் புரியாத தமிழா?).
ஆனால், இவை எதுவுமே அகராதி கேட்டுநிற்கும் தமிழில்லை. குறைந்தபட்சம், சுஜாதா, கமல்ஹாசன் போன்றவர்களின் வசன எழுதுகை, உச்சரிப்புகளூடாக இலங்கைத்தமிழைப் பார்க்கின்றதைத் தவிர்க்கமுடியுமானால், நன்றியுடையவனாக இருப்பேன்.
இலங்கையின் சக்தி வானொலி வெட்கக்கேடான தமிழென்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இது ஸன் ரிவி, ஜெஜெ ரிவியினாலே வந்த FM பாதிப்பென்பதை (பண்பலைப் பாதிப்பென (sic)) மெட்ராஸ் ரு பாண்டிச்சேரி பஸ்ஸிலே எமலோகம்வரை துரத்துவார் என்று சொல்லப்பட்ட மயில்வாகனத்தின் காலத்துரேடியோ சிலோனோடு (அதாவது. இலங்கை வானொலி) கேட்டவர்கள் சொல்வார்களென்று உறுதிப்படுத்துகிறேன். கனடிய, ஐரோப்பிய, அவுஸ்ரேலியத் தமிழ் வானொலிகள் (விளம்பரங்களைவிட்டால்) சக்தியைவிட, நல்ல தமிழினைத் தருவன. இலக்கணத்தமிழென்பது எல்லோருக்கும் பொது; அதைவிட்டால், உப்பிலிக்கு அக்கிரஹாரத்துப்பாஷை, கபாலிக்குக் குப்பத்துப்பாஷை மீதிக்கெல்லாம் அகராதி
கொண்டுவா என்ற தொனியிலே வேறு யாரும் பேசலாம்; பரிமேலழகர் பேசலாமா? :-) முத்துலிங்கம் எழுதுவது உஷாவுக்குப் புரியாமலிருந்தாற்றான் வியப்பு. பத்மினி சிவாஜியைக் கட்டிக்கொள்ளாத கவலை எனக்கென்றால் இல்லை; என்னமைக்கோ என் தம்பிக்கோ இல்லை; இருக்கின்றவர்களுக்குப் பிடித்தமாகிப் புரி
ந்துகொள்ளமுடியாமற்போனாற்றான் வியப்பு:-)
முத்துலிங்கம், சேரன், எஸ். பொ(ன்னுத்துரை), ஓரளவுக்கு கருணாகரமூர்த்தி, ஜெயபாலன் போன்றவர்கள் கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலே எங்களுக்கும் இரண்டு இலங்கை எழுத்தாளக்குஞ்சையும் கவிஞர்க்குரும்பட்டிகளையையும் தெரியுமென்று விரல் மடித்துக்கொள்ளும் வாசக, எழுத்தாளருக்கான இலங்கை ஊறுகாய்களாகிவிட்டார்கள்.அவர்களின் முன்னைய இலக்கியத்தன்மைக்கு RIP! :-)
Monday, November 24, 2003
தமிழில் வலைப்பதிவுகளை பிரபலமாக்கியது பத்ரி என்றால், அதை முதன்முதலில் (எனக்குத்தெரிந்து) சோதனையிட்டது நவன் என்னும் நவநீதகிருஷ்ணன். அவருடைய வலைப்பதிவில் ஆங்கிலமும் தமிழும் கலந்து பல சுவாரசியமான விஷயங்களை எழுதுகிறார் இவர்.
இன்றிலிருந்து வரும் முப்பதாம் திகதிவரை இந்த வலைப்பதிவிற்கு ஆசிரியராக நவன்.

மாமி கலக்கோ கலக்கு என்று கலக்கிவிட்டுப் போயிருக்கிறார். மாமிக்கு உற்சாகமா ஒரு 'ஓ' போடுங்கப்பா.
உற்சாகமா 'ஓ' எதுக்கு? மாமியோட பதவிக்காலம் முடிஞ்சதுக்கா'னு விதண்டாவாதமா கேள்வி கேக்கக்கூடாது சொல்லிப்புட்டேன் ஆமா...